மதியப்பூனை முதல் மயிரு வரை

புத்தகக்காட்சியை மையமிட்டு வழக்கம் போல் இந்த வருட‌க்கடைசியிலும் நிறையப் புத்த‌கங்கள் கௌரவமான‌ நிகழ்வுகள் மூலம் வெளியிடப்படுகின்றன. இந்த‌ ஆண்டு சற்றே பிரத்யேக கவனத்துடன் இந்நிகழ்வுகளை எதிர்பார்க்கிறேன். இவற்றுள் சில பாசத்திற்குரியவர்களுடையவை; இன்னும் சில ப்ரியத்துக்குரியவர்களுடையவை.


எனது பதிப்பாளர் அகநாழிகை பொன்.வாசுதேவனின் முதல் கவிதைத்தொகுப்பான 'ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை', நான் சமீபத்தில் வியந்து வியந்து படித்து வரும் எழுத்துக்குச் சொந்தக்காரராகிய விமலாதித்த மாமல்லனின் கதைகள் முழுத்தொகுதி, இதுகாறும் என் மன‌திற்கு நெருக்கமான கவிதைகளை மட்டுமே எழுதி வரும் முகுந்த் நாகராஜனின் நான்காவது கவிதைத்தொகுப்பான 'K அலைவரிசை', ஆரம்பம் முதலே நான் கவனித்துச் சிலாகித்து வரும் கார்த்திகாவின் கன்னிக் கவிதைத்தொகுப்பான‌ 'இவளுக்கு இவள் என்றும் பேர்', சக பதிவுலக நண்பர்களான‌ நர்சிம், நிலா ரசிகன் ஆகியோரது கவிதைத்தொகுப்புகள் - முறையே 'தீக்கடல்', 'வெயில் தின்ற மழை' - ஆகியன வரும் டிசம்பர் 26, 2010 அன்று (மாலை 5.30) உயிர்மை பதிப்பகம் சார்பில் தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலக அரங்கில் வெளியிடப்படவிருக்கிறது.

மனுஷ்ய புத்திரனின் ஏழாம் கவித்தொகுப்பான 'இதற்கு முன்னும் இதற்குப் பிறகும்' கிறிஸ்துமஸ் அன்றும், நான் மிக எதிர்பார்க்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் நாவலான 'துயில்' புத்தாண்டு அன்றும் அதே அரங்கில் (மாலை 6 மணி) வெளியிடப்படுகின்றன‌.

இவை தவிர, கவிஞரும் நண்பருமான‌ யாத்ராவின் முதல் கவித்தொகையான 'மயிரு' (தலைப்பைப் பார்த்தால் பொறாமையாய் இருக்கிறது - என்ன தைரியம்!) அகநாழிகை பதிப்பகம் சார்பில் டிசம்பர் 29, 2010 அன்று வெளியிடப்படுகிறது (Venue not yet unveiled).

இந்நிகழ்வுகளுள் எதிலெதிலெல்லாம் ஆஜர் ஆகி அட்டென்டன்ஸ் போடுவேன் என்பது இன்னமும் உறுதியாகா நிலையில் (அடியேன் Positioning பெங்களூர் எனக் குறிப்பறிக‌), இப்போதைக்கு தொடர்புடைய நண்பர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

*******

An Update: யாத்ராவின் புத்த‌க வெளியீட்டு ரகசியம் now unveiled - அழைப்பிதழ் இங்கே:

Comments

நன்றி CSK. யாத்ராவின் புத்தக வெளியீடு தற்போது புதிய மாற்றங்களுடன், குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக அரங்கில்தான் நடைபெற உள்ளது.
தங்களின் இனிய பதிவுக்கு மிக்க நன்றி நண்பா, விரைவில் தொடர்பு கொள்கிறேன் :)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்