சென்னை புத்தகக் காட்சி - 2011

BAPASI எனப்படும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் ‌34வது சென்னை புத்தகக் காட்சி சில தினங்களில் தொடங்கவிருக்கிற‌து.

இடம் (வழக்கம் போல்) பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கெதிரே அமைந்துள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி. நேரம் (வழக்கம் போல்) வேலை நாட்களில் மாலை 2 மணி முதல் 8.30 வரை; விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் 8.30 வரை. நாள் (இது மட்டும் வழக்கம் போல் 12 தினங்கள் அல்லாமல் இம்முறை 14 தினங்க‌ள்) ஜனவரி 4, 2011 முதல் ஜனவரி 17, 2011 வரை.


அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்தும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிவேதிதா புத்தகப் பூங்கா ஸ்டாலில் கிடைக்கும். கிழக்கு பதிப்பகம் வழக்கம் போல் மிகப்பிரம்மாண்டமாய் மூன்று ஸ்டால்களை ஆக்ரமித்து நிற்கிறது. கண்காட்சியில் கீழ்கண்ட ஸ்டால்களில் அடியேன் இயற்றியுள்ள இரு நூல்களும் கிடைக்கும்.

பரத்தை கூற்று (கவிதைகள்)
விலை - ரூ.45 (10% கழிவு போக)
நிவேதிதா புத்தகப் பூங்கா
அரங்கு எண் - 274

சந்திரயான் (விஞ்ஞான நூல்)
விலை - ரூ.90 (10% கழிவு போக)
நியூ ஹொரைசன் மீடியா
அரங்கு எண் - F13, F14, F15

இவ்விரு ஸ்டால்களின் இருப்பிடத்தை இடஞ்சுட்டி பொருள் விளக்கி இருக்கிறேன்:


Tentatively, ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் நான் புத்தகக்காட்சிக்கு வருவேன்.

Comments

Anonymous said…
தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய Idiot தமிழ் மொழிபெயர்ப்பு.ஒரு நல்ல முயற்சியை ஊக்குவிப்போம்.முன்பதிவு செய்ய கீழே பாருங்கள்.
.
.
http://www.masusila.com/2010/12/blog-post_11.html

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்