படித்ததில் ரொம்பவும் பிடித்தது*

*******

இளையராஜா மீதான விமர்சனங்கள்.. - ஜெயமோகன்

*******

* - டைட்டில் உபயம் : சாரு நிவேதிதா

Comments

viki said…
ராஜாவை பற்றி ஷாஜி எழுதிய குப்பையான(இதைவிட கடுமையான வார்த்தையை பயன்படுத்த தோன்றுகிறது)விமர்சனத்தை கண்டித்து நான் ஒரு நீண்ட கடிதத்தை அவருக்கு அனுப்பினேன்.அதற்கு பதில் "I dont know what to say" என்று மழுப்பலான பதிலே வந்தது(தமிழின தலைவரின் மற்றொரு வாரிசு போல!)இசையை பற்றி விமர்சிக்கும் பொது அதைப்பற்றி மட்டும் பேசாமல் அவர் குடமுழுக்கு செய்தாரா ஏழைகளுக்கு கூழ்ஊற்றினாரா வீடு கட்டி கொடுத்தாரா என்பதெல்லாம் வெட்டி பேச்சு.அவரின் கட்டுரை முழுக்க ராஜாவை மட்டம்தட்டும் போக்கே மிகுந்திருந்தது .மேலும் பாப் மார்லி நாலாயிரம் குடும்பத்தை காப்பாற்றினார்.ஆனால் ராஜா என்ன செய்தார் என்கிறார்.ஆப்ரிக்க நாட்டின் சூழ்நிலை என்ன இங்கு நிலவும் சூழ்நிலை என்ன என்பதை குளிர் சாதன அறையில் உட்கார்ந்து கொண்டு விமர்சிக்கும் ஷாஜி போன்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது.சரி இவர் மிகவும் புகழும் ஏ ஆர் ரகுமான் தனது இசைப்பள்ளியில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக இசை பயிற்றுவிக்கிறாரா என்ன?ரகுமான் பத்தாயிரம் குடும்பத்தை வாழவிக்கிறாரா ?
கலைஞ்சன் என்பவன் தனிமையானவன்.அவனுக்கு சமூக கடமை இருக்க வேண்டும் என்று இவர் (சாரு கூட இதையே பிதற்றுகிறார் .அவரிடம் நான் முரண்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று)சொல்வதெல்லாம் குறிப்பது ஒன்றே.இவர் அந்த "நாளைக்கு வருவேன் நாளான்னிக்கு வருவேன்" என்று ஊரை ஏமாற்றிய ரஜினி காந்தின் ரசிகன் என்று. இவர் சொல்வதைபார்த்தால் எம் ஜி ஆர் பல குடும்பங்களை வாழ வைத்தார் .சிவாஜி கணேசன் பலரிடமும் எரிந்து விழுவார் ஆதலால் எம் ஜி ஆரே சிறந்த நடிகர் என்று கூறுவார்,இவர் தொடர்ந்து எழுதிவரும் "ஜான்" வரிசை இசையமைப்பளர்களே கலைஞ்சர்கள் .அல்லது ஆஸ்கார் வாங்கியிருக்க வேண்டும். மற்றவர்களெல்லாம் குப்பை.
இனி இவரின் குப்பைகளை படிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்
Anonymous said…
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் “கண்ணீரிலாமல்” என்று பல குழப்பமான சிக்கலான விஷயங்களை பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதினர்.அதில் அவர் கர்நாடக சங்கீதம் பற்றியும் எழுதினார்.அவர் முதல் பத்தியிலேயே அவர் குறிப்பிட்டது” எனக்கு சாஸ்த்ரிய சங்கீதம் தெரியாது.ஆனால் கேள்வி ஞானம் சிறிது உண்டு.ஆனால் யாராவது இசை மேதைகள் என்னிடம் கேள்வி கேட்டால் காத தூரம் ஓடி விடுவேன்.ஆனால் ராகங்கள் கண்டுபிடிக்க ஓரளவு தெரியும்”இவாறு அக்கட்டுரையின் முன்னுரை செல்கிறது.அதில் அவர் சொல்வது என்னவெனில் தனக்கு இசை பற்றி எந்த அளவு தெரியும் என முன்னமே விளக்கி விடுகிறார்.எனவே படிப்பவருக்கும் இதில் ஏதேனும் தவறிருப்பின் அந்த முன்னுரை ஒரு கழிதல் (Discount) ஆக செயல்படும்.ஆனால் இவர் எழுதுகையில் இவ்வாறு முன்னுரை ஏதும் அளிக்காமல் மேதை போன்று செயல் பட்டதே இவ்வளவு விவாதங்களுக்கு காரணம்.
இந்தியாவில்தான் ஒரு கலையை பற்றி தெரியாமலேயே அதை விமர்சனம் செய்யும் போக்கு நிலவுகிறது.இதைபோல்தான் ஒரு பெண்மணி தொலைக்காட்சியில் ஒரு பட விமர்சனம் செய்யும் போது “இந்த படத்தில் நடிப்பவர்கள் எல்லோரும் Dark ஆக இருப்பதால் இது ஒரு Dark film என்றார்.இதுபோல்தான் இவரின் கட்டுரையும்.
Sanjay said…
plz SeeShaaji's music "God" has done
http://www.youtube.com/watch?v=C8QQMk_il0Q&feature=channel_page
is this what oscar's award for "original" score for?where is the original?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்