தமிழ் : சிறந்த 10 வலைப்பதிவுகள்

  1. R P ராஜநாயஹம் [http://rprajanayahem.blogspot.com/]
  2. திணை இசை சமிக்ஞை [http://nagarjunan.blogspot.com/]
  3. தீராத பக்கங்கள் [http://mathavaraj.blogspot.com/]
  4. பிச்சைப்பாத்திரம் [http://pitchaipathiram.blogspot.com/]
  5. அர்த்தமண்டபம் [http://sudesamithiran.blogspot.com/]
  6. மொழி விளையாட்டு [http://jyovramsundar.blogspot.com/]
  7. மொழியும் நிலமும் [http://jamalantamil.blogspot.com/]
  8. வீணாப்போனவன் [http://veenaapponavan.blogspot.com/]
  9. சிதைவுகள் [http://naayakan.blogspot.com/]
  10. ராஜா சந்திரசேகர் கவிதைகள் [http://raajaachandrasekar.blogspot.com/]
குறிப்புகள்:
  1. இது முழுக்க முழுக்க என் சொந்த ரசனையை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டு காறாராய் அமைத்த பட்டியல். இவை அனைத்தையுமே நான் கூகுள் ரீடரில் பின்தொடர்கிறேன். கிட்டதட்ட தினமும் படிக்கிறேன்.
  2. பிரபலமான பதிவர், அதிகமான‌ பின்தொடர்பவர்கள், நிறையப் பேர் பார்க்கும் தளம் போன்ற நொண்டிச்சாக்குகளை எல்லாம் கணக்கில் கொள்ளவில்லை. எழுத்தின் தரம் மட்டுமே இதன் வரையறை.
  3. எற்கனவே மிகப் பிரபலமாய் எழுதிக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஞாநி, பா.ராகவன் போன்றவர்களின் வலைதளங்களை இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
  4. நவீன விருட்சம் போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுத்து வெளியிடும் தளங்களையும் கண‌க்கில் கொள்ள‌வில்லை. தனி நபர் வலைதளங்களை மட்டுமே பட்டியலுக்கு எடுத்துக்கொண்டேன்.
  5. தமிழில் 5000 பேர் பதிவெழுதுகிறார்கள். அவர்களில் கிட்டதட்ட முந்நூற்று சொச்சம் பேரை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன். அதனால் இதை முழுமையான அல்லது நிரந்தரமான பட்டியலாக கொள்ள இயலாது.
  6. இதில் விட்டுப்போன‌ ஆனால் மிகத்தரமான பதிவென நீங்கள் எதையாவது கருதினால் பின்னூட்டத்தில் சொல்லலாம். அதைச் சார்ந்து இதன் நீட்டிக்கப்பட்ட ஒரு பட்டியலை வெளியிடும் எண்ணமிருக்கிறது.

Comments

நன்றி,சரவண கார்த்திகேயன். என்னுடைய வலைப்பூவை தொடர்ந்து வாசிப்பதற்கும்,பட்டியலில் தேர்வு செய்தமைக்கும்.
அய்யானாரின் தனிமையின் இசை வந்திருக்கலாம்!
Anonymous said…
I read following line by u today once again...

//தமிழில் 5000 பேர் பதிவெழுதுகிறார்கள். அவர்களில் கிட்டதட்ட முந்நூற்று சொச்சம் பேரை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன். அதனால் இதை முழுமையான அல்லது நிரந்தரமான பட்டியலாக கொள்ள இயலாது.//


அவ்வப்போது நாம் நம்மை பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதை நம்மை அறியாது சில வார்த்தைகள் வழியாக வெளியிட்டு விடுவோம். மேலே உள்ளதில் நீங்கள் மட்டுமே என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தினீர்கள்? அது ரைட்டர் ஜெயகாந்தன் சொன்னது போல் அடக்கம் போன்றதொரு அகம்பாவம். என்னோடு படித்த ஒருவன் பெங்களூரில் இன்று ஹச்.சி.எல்லில் மென்பொருள் துறையில் இருக்கிறான். அவனை எதேச்சையாக நான் சந்திக்க என்னடா செய்ற என்றேன். அதற்கு அவன்,"பெங்களூர்ல ஹச்.சி.எல் ங்குற கம்பெனியில் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொன்னான். ஹச்.சி.எல் என்ற கம்பெனியை நாடே அறியும். ஆனால் அவனோ ஒன்னும் தெரியாதவனைப் போல் ஹச்.சி.எல் என்ற கம்பெனியில் என்று பேசுகிறான். அதுதான் அடக்கம் போன்றதொரு அகம்பாவம்.

எனக்கு நீங்கள் பயன்படுத்தும் அடியேன் என்பதற்கும் சுஜாதா பயன்படுத்திய அடியேனுக்கும் வித்தியாசம் உண்டு என்றே தோன்றுகிறது. சுஜாதவின் அடியேனில் உண்மையாகவே ஒரு பணிவு தெரிந்தது. உங்களது அடியேனில் அடக்கம் போன்றதொரு அகம்பாவமே தெரிகிறது...d...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்