Posts

Pen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்

(1) சில தொழில்நுட்பக் காரணங்களால் போட்டிக்கு வந்துள்ள‌ படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாக ச் சரிவர ப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும். ஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்த்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக‌ மிக மிகக் குறைவு. உண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்...

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

தமிழ் எழுத்தாள நண்பர்களுக்கு, வணக்கம். அமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம். அதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏத...

புத்தம் புதுமைப் பெண்

Image
சுதந்திரமென்பது புணர்தலல்ல; புணர மறுத்தல். ‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல...

Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்

Image
அமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்: 1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்? எத்தனை வேண்டுமானாலும். 2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா? தாரளமாய்க் கலந்து கொள்ளலாம். 3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா? இல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும். 4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா? சில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். 5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி? தமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043016031 தமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043019031 மும்மொழிகளிலும் இரு ...

ஜன கண மன இந்தியா?

Image
தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.டி. ராஜேந்திர பாலாஜி சொன்னதாக ஒரு வாக்கியம் கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்களில் சுற்றலில் இருக்கிறது. "என்னதான் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் எல்லோரும் தேசிய கீதம் பாடித்தான் ஆகனும்" என்று அவர் விளம்பியதாகச் செய்தி. அவர் அப்படிச் சொன்னது நிஜமா பொய்யா என இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை என்னால் உறுதி செய்ய இயலவில்லை என்றாலும் அவர் இத்தகு விஷயத்தைச் சொல்லும் திராணி பெற்றவர் என்பதை முன்னிட்டு அதைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன். தோழர் ஷாலின் மரிய லாரன்ஸ் இந்திய அரசின் அதிகாரப்பூர்வத் தளத்தில் தேசிய கீதம் இந்தியே எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தார்: "The National Anthem of India Jana-gana-mana, composed originally in Bengali by Rabindranath Tagore, was adopted in its Hindi version by the Constituent Assembly as the National Anthem of India on 24 January 1950." ( https://www.india.gov.in/india-glance/national-symbols ) அதாவது சாசனச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய‌ ...

உங்களில் யார் அடுத்த சுஜாதா?

வெகுஜன எழுத்து என்பது ஒரு மொழியின் செழுமைக்கும், அதன் மக்களின் மகிழ்ச்சிக்கும் மிக அத்தியாவசியமானது என்பது என் வலுவான நம்பிக்கை. அதனால் ஒருபோதும் அதை நான் கீழ்மையாக எண்ணியதோ கேலி செய்ததோ இல்லை. (என் எழுத்தே இப்போதைக்கு ஒரு மாதிரி வெகுஜன எழுத்துக்கும் தீவிர இலக்கியத்துக்கும் இடைப்பட்டது தான்.) ஆனால் அதே சமயம் வெகுஜன எழுத்து என்பது ஏனோதானோ என்றில்லாமல் தரமாக வர வேண்டும், அதில் புதுமைகள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேற்கே அப்படித்தான். ஆக, வெகுஜனப் படைப்பொன்றை எழுதுவது பாவமோ கேவலமோ அல்ல. அதற்கும் நல்ல உழைப்பும், எழுத்து நுட்பமும் தேவை. எல்லோருக்கும் அது சுலபமாய் வாய்த்து விடாது. அப்படிப் பார்க்கையில் சுஜாதா வெகுஜன எழுத்துக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். பதின்மத்திலிருந்து விலகும் ஒரு தமிழ் இளைஞனுக்கு வாசிப்பில் சுஜாதா ஒரு மிகச்சிறந்த ஆரம்பப்புள்ளி. சுலபமான அதே சமயம் கவர்ச்சிகரமான துவக்கம். ஆரம்பத்தில் வாசிப்பதற்கான ஒருவித ஊக்கத்தினை / போதையினை சுஜாதாவின் எழுத்துக்களிலிருக்கும் வாசிப்பின்பம் அளிக்கிறது. அது அலுக்கும் போது நிஜமான தேடலை உடையவன் அங்கிருந்து நிச்சயம் அடு...

அமேஸான் போட்டி: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அமேஸான் Pen to Publish - 2019 போட்டி தொடர்பாய் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சில: 1) நான் முன்பு வலைப்பூவில் எழுதிய சில பதிவுகளை ரத்து செய்து விட்டு கிண்டிலில் வெளியிட்டால் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? 2) முன்பு என் நாவலின் சில அத்தியாயங்கள் ஓர் அச்சிதழில் சில அத்தியாயங்கள் வெளியாகின. பின் சில காரணங்களால் நின்றது. அதை முடித்து மின்னூலாக்கி போட்டிக்கு அனுப்பலாமா? 3) எனது ஃபேஸ்புக் பதிவுகளைச் சேர்த்துப் புத்தகமாக்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? மூன்றுக்கும் பதில் "கூடாது" என்பதே. போட்டிக்கு அனுப்படும் படைப்பின் எந்தவொரு பகுதியும் அச்சு, மின் என எந்த வடிவிலும் ஏற்கனவே வெளியாகி இருக்கக் கூடாது. அப்படியானவை நிராகரிப்புக்கு உள்ளாகும். இன்றைய தேதியின் தேடல் தொழில்நுட்பத்தில் அதைக் கண்டறிவது சிரமமல்ல. அதனால் பரிசுத்தமான புத்தம் புதிய படைப்புகளை மட்டுமே போட்டிக்கு அனுப்புவீர். * அமேஸான் Pen to Publish 2019 போட்டி பற்றி வரும் இன்னொரு பரவலான கேள்வி: "நான் எழுதி அதை மின்னூலாய்ப் பதிப்பித்து விடுவேன். ஆனால் அது பரவலாக வாசிக்கப்படவும், மதிப்பிடப்படவும் வேண்டும் என்ப...

அமேஸான் கிண்டில் Pen to Publish போட்டி - 2019

Image
அமேஸான் கிண்டில் (Amazon Kindle) என்பது மின்னூல்க‌ள் (E-books) வாசிக்க உதவும் கருவி (Device). கருவி வாங்கத் தோதுப்படவில்லை எனில் கிண்டிலின் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன் செயலிகளிலும் (apps), வலைதளத்திலும் (website) கூட கிண்டில் மின்னூல்களை வாசிக்கலாம். இது வாசக தரப்பு. அந்தப் புறம் எழுத்தாளர்கள் சுயமாய்த் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடவும் கிண்டில் உதவுகிறது. அதன் பெயர் KDP. கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்! வாசகர்களுக்கு கிண்டிலால் ஏராளச் சகாயங்கள் உண்டு. பணத்தைச் சேமிக்கிறது; குறைந்த இடத்தை அடைக்கிறது. எடுத்துச் செல்வது எளிது; என்ன வாசிக்க வேண்டும் என்பதை முன்பே தீர்மானிக்க வேண்டியதில்லை என்பதால் பயணத்திற்குத் தோது. பெரும் எண்ணிக்கையில் புத்தகங்கள் கிடைக்கின்றன, அதோடு அவற்றைக் கடன் பெறவும் முடியும். கருவியின் தோற்றம் கவர்ச்சிகரமானது என்பதால் அது உங்கள் பற்றிய ஒரு அந்தஸ்தான எண்ணத்தை ஏற்படுத்தும். இறுதியாக, அது ஓர் அறிவுஜீவி பிம்பத்தை உங்களுக்கு அளித்து கூட்டத்திலிருந்து தனித்துக் காட்டும். பல வாசகர்கள், கிண்டில் மின்னூல்களை வாசிக்க சில ஆயிரம் செலவிட்டு கிண்டில் ஈரீடர் கருவியை...

ஒரு புளித்த மாவின் கதை

Image
சமூக வலைதளங்களில் ஜூன் 15 அன்று இப்படித் தான் ப்ரேக்கிங் ந்யூஸ் வந்தபடி இருந்தன. அதையொட்டி ஜெயமோகன் மீதான‌ வசைகளும் பெருகியபடி இருந்தன. அதிகாலை 6: “ ஜெயமோகன் மாவைக் கடையில் திருப்பிக் கொடுத்தார்.” காலை 9: “ஜெயமோகன் மாவைக் கடையில் வீசி எறிந்தார். ” முற்பகல் 11: “ ஜெயமோகன் மாவைக் கடைக்காரப் பெண்ணின் மீது விட்டெறிந்தார். ” நண்பகல் 12: “ ஜெயமோகன் மாவைக் கடைக்காரப் பெண்ணின் முகத்தில் எறிந்தார். ” பிற்பகல் 2: “ ஜெயமோகன் கடைக்காரப் பெண்ணை மாவாலேயே நையப் புடைத்தார். ” மாலை 4: “ ஜெயமோகன் கடைக்காரப் பெண்ணை மாவாலேயே அடித்துக் கொன்றார். ” இரவு 7: “ ஜெயமோகன் மாவாலேயே நாகர்கோயிலை எரித்தார். ” அதாவது புளித்த மாவை கடையில் திருப்பிக் கொடுத்தது என்ற செயல் ஒருவரைத் திட்டப் போதுமானதாக இல்லை என்றதும் குற்றத்தைப்பெரிதாக்கத் தம் கற்பனையில் உதித்ததை எல்லாம் போட்டு செய்தியைத் திரித்துக் கொண்டிருந்தனர். ஜெயமோகன் மீது சமூக வலைதளவாசிகள் இத்தனை பிரியங்கொண்டிருப்பது பேரதிர்ச்சி தான்! ஜெயமோகன் இது பற்றி எழுதியது இது: “ அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புள...

தண்டனையும் குற்றமும்

Image
நரேந்திர மோடியின் ஐந்தாண்டு சாதனைகளுள் ஒன்று முற்போக்கு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்துத்துவ உதிரி அமைப்புகளால் தயக்கமின்றி கொல்லப்படும் நிலையை உருவாக்கி வைத்திருப்பது. பல மரணங்கள் ஒரே மாதிரி இவ்வகையில் நடத்தப்பட்டாலும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகள் தேசத்தின் ஆன்மாவையும் அரசியல் சாசனத்தையும் உலுக்கிக் கேள்வி கேட்டவை. இந்த நால்வரும் எப்படி இறந்தார்கள்? சாகுமளவு அப்படி என்ன பிழை செய்தார்கள்? * நீதிபரிபாலனம் 1 தண்டனை: நரேந்திர தபோல்கர் 20 ஆகஸ்ட் 2013 அன்று காலை 7:20 மணிக்கு தன் காலை நடைப்பயிற்சியில் இருந்த போது பைக்கில் வந்த “அடையாளம் தெரியாத இருவரால்” மிக அருகிலிருந்து நான்கு முறை சுடப்பட்டார். அதில் இரு குண்டுகள் அவர் தலையிலும் மார்பிலும் துளைக்க, அந்த இடத்திலேயே உயிரை விட்டார். குற்றம்: இரு முக்கியப் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியது ஒன்று. அடுத்தது சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து நின்றது. 1989ல் மஹாராஷ்ட்ரா அந்தஷ்ரத்தா நிர்ம...