Posts

ஒரு புளித்த மாவின் கதை

Image
சமூக வலைதளங்களில் ஜூன் 15 அன்று இப்படித் தான் ப்ரேக்கிங் ந்யூஸ் வந்தபடி இருந்தன. அதையொட்டி ஜெயமோகன் மீதான‌ வசைகளும் பெருகியபடி இருந்தன. அதிகாலை 6: “ ஜெயமோகன் மாவைக் கடையில் திருப்பிக் கொடுத்தார்.” காலை 9: “ஜெயமோகன் மாவைக் கடையில் வீசி எறிந்தார். ” முற்பகல் 11: “ ஜெயமோகன் மாவைக் கடைக்காரப் பெண்ணின் மீது விட்டெறிந்தார். ” நண்பகல் 12: “ ஜெயமோகன் மாவைக் கடைக்காரப் பெண்ணின் முகத்தில் எறிந்தார். ” பிற்பகல் 2: “ ஜெயமோகன் கடைக்காரப் பெண்ணை மாவாலேயே நையப் புடைத்தார். ” மாலை 4: “ ஜெயமோகன் கடைக்காரப் பெண்ணை மாவாலேயே அடித்துக் கொன்றார். ” இரவு 7: “ ஜெயமோகன் மாவாலேயே நாகர்கோயிலை எரித்தார். ” அதாவது புளித்த மாவை கடையில் திருப்பிக் கொடுத்தது என்ற செயல் ஒருவரைத் திட்டப் போதுமானதாக இல்லை என்றதும் குற்றத்தைப்பெரிதாக்கத் தம் கற்பனையில் உதித்ததை எல்லாம் போட்டு செய்தியைத் திரித்துக் கொண்டிருந்தனர். ஜெயமோகன் மீது சமூக வலைதளவாசிகள் இத்தனை பிரியங்கொண்டிருப்பது பேரதிர்ச்சி தான்! ஜெயமோகன் இது பற்றி எழுதியது இது: “ அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புள...

தண்டனையும் குற்றமும்

Image
நரேந்திர மோடியின் ஐந்தாண்டு சாதனைகளுள் ஒன்று முற்போக்கு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்துத்துவ உதிரி அமைப்புகளால் தயக்கமின்றி கொல்லப்படும் நிலையை உருவாக்கி வைத்திருப்பது. பல மரணங்கள் ஒரே மாதிரி இவ்வகையில் நடத்தப்பட்டாலும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகள் தேசத்தின் ஆன்மாவையும் அரசியல் சாசனத்தையும் உலுக்கிக் கேள்வி கேட்டவை. இந்த நால்வரும் எப்படி இறந்தார்கள்? சாகுமளவு அப்படி என்ன பிழை செய்தார்கள்? * நீதிபரிபாலனம் 1 தண்டனை: நரேந்திர தபோல்கர் 20 ஆகஸ்ட் 2013 அன்று காலை 7:20 மணிக்கு தன் காலை நடைப்பயிற்சியில் இருந்த போது பைக்கில் வந்த “அடையாளம் தெரியாத இருவரால்” மிக அருகிலிருந்து நான்கு முறை சுடப்பட்டார். அதில் இரு குண்டுகள் அவர் தலையிலும் மார்பிலும் துளைக்க, அந்த இடத்திலேயே உயிரை விட்டார். குற்றம்: இரு முக்கியப் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியது ஒன்று. அடுத்தது சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து நின்றது. 1989ல் மஹாராஷ்ட்ரா அந்தஷ்ரத்தா நிர்ம...

இளையராஜாவும் மனுஷ்ய புத்திரனும்

‘96' படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது போல் இப்புத்தகத்தில்* மனுஷ்ய புத்திரன் கவிதைகளை ஆங்காங்கே பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் உள்ளடக்க ஆற்றொழுக்கு குலைந்து விடக்கூடாதென்பதற்காக தனியே தருகிறேன். 1. வரும்வரை போய் வா எவ்வளவு நேரமானாலும் இங்கேயேதான் இருந்துகொண்டிருப்பேன் 2. இருப்பு காணாமல் போய்விட்டேன் என்பதற்காக இல்லாமலேயே போய்விட்டேன் என்றாகி விடுமா சொல்? 3. வேறெங்கோ நினைப்புகளில் துருவேறிவிட்டது வெற்று ஏக்கங்களில் பெருமூச்சுகள் காலத்தை அரித்துத் தின்னுகின்றன வாழ்க்கை வேறெங்கோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது 4. ஒரு பாதை, ஒரு பிரார்த்தனை இருப்பதிலேயே கடினமான பாதையைத் தேர்வு செய்கிறேன் இந்தப் பயணம் எந்தவிதத்திலும் இலகுவாகிவிடக் கூடாது என்பதற்காக கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்கிறேன் இவ்வளவு பிரயாசையுடன் உன்னைத் தேடி வரும் நாளில் நீ அங்கே இருக்கக் கூடாது என்பதற்காக 5. கேட்காததும் சொல்லாததும் கேட்பாய் கேட்பாய் என சொல்லாதிருந்தவை சொல்வாய் சொல்வாய் என கேட்காதிருந்தவை வேறொன்றுமில்லை இரகசியமென்றும் இடைவெளியென்றும் 6. மீன...

Let the cat out of the bag

Image
இது என் இரண்டாம் சிறுகதைத் தொகுதி. ஒன்பதென்பது போதுமான எண்ணிக்கையா எனத் தெரியவில்லை. போன தொகுப்பில் பதினோரு கதைகளிருந்தன. எண்ணிக்கை பொருட்டில்லை என எண்ணிக் கொள்கிறேன். (இதில் பல கதைகள் நீளமானவை.) இவற்றில் முதலிரண்டு கதைகளும் நெடுங்காலம் முன் எழுதியவை. ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என் முதல் சிறுகதை. சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன் எழுதியது. அப்போது குமுதம் நடத்திய ஒரு சிறுகதைப்போட்டிக்கும் பின் ஆனந்த விகடனுக்கும் அனுப்பிய நினைவு. குமுதத்தில் ஜெயிக்கவில்லை. ‘தொடர்ந்து எழுதவும்’ என்று ஒரு துண்டுச் சீட்டு விகடனிலிருந்து வந்தது. அக்கதையைத் திருத்திச் சேர்த்திருக்கிறேன். ‘மியாவ்’ சிறுகதை ‘சகா: சில குறிப்புகள்’ என்ற தலைப்பில் சுமார் பத்தாண்டுகள் முன் சாரு நிவேதிதாவின் ‘ராஸலீலா’, ‘காமரூபக் கதைகள்’ நாவல்களின் உந்துதலில் அதே பாணியில் என் வலைதளத்தில் எழுதிய குறுங்கதைகளின் செம்மையூட்டிய வடிவம். மற்ற ஏழு கதைகளும் 2017 மத்தி முதல் 2018 மத்தி வரையிலான ஓராண்டில் எழுதப் பெற்றவை. இதே காலகட்டத்தில் தான் ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலையும் எழுதினேன். அந்த ஒரு வருட இடைவெளியை படைப்பூக்கம் வெடித்துப்பொங்கிய...

தனிப்பெருந்துணை

Image
மணி ரத்னத்தின் ‘நாயகன்’. தமிழில் எனக்கு மிகப் பிடித்த படம். தமிழில் ஏதேனும் ஒரு படம் பற்றி நான் ஒரு நூல் எழுதுவதாய் இருந்தால் அது ‘நாயகன்’ குறித்தே இருக்குமென நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது ஓர் இளம் இயக்குநரின் முதல் படம் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியம் தான்! எழுத்தாளர் முகில் தான் தன்னையறியாமல் இப்புத்தகத்துக்கான விதையை இட்டது. நவம்பர் மத்தியில் ஒரு நாள் ‘96’ படம் பற்றிய என் தொடர் ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்த்து விட்டு “இது 96 குறித்த உங்களது 95-வது ஸ்டேட்டஸ். இன்னும் ஒன்றுடன் முடித்துக் கொள்ளவும்.” என்று விளையாட்டாய்க் கமெண்ட் செய்திருந்தார். அப்போது வரையில் ‘96’ படம் பற்றி சிறிதும் பெரிதுமாய் சுமார் 25 பதிவுகள் எழுதி இருப்பேன். அவர் சொன்னதும் தான் உண்மையிலேயே ‘96’ பற்றி 96 பதிவுகள் எழுதி அவற்றைத் தொகுத்து நூலாக்கினால் என்ன எனத் தோன்றியது. மறுநாள் மனுஷ்ய புத்திரனிடம் உயிர்மையில் இப்புத்தகம் சாத்தியமா என ஃபேஸ்புக் சாட்டில் கேட்டேன். மறுகணம் “கொண்டு வரலாம். தயார் செய்யுங்கள்” என்று பதில் வந்து விழுந்தது. ஆனால் பிறகு ஒரு கட்டத்தில் எனக்கே நூலளவுக்...

விஷ்ணுபுரம் விழா - 2018: சில குறிப்புகள்

Image
1) விஷ்ணுபுரம் விழா - 2018 கடந்த வார இறுதி இரு தினங்கள் கோவை ஆர்எஸ் புரத்தின் ராஜஸ்தானி சங் அரங்கில் (நாயுடு ஹால் அருகே) நடந்தது. எனக்கு விருந்தினராக அழைப்பு இருந்தது. எழுத்தாளர் அமர்வு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்ற முறையே கலந்து கொண்டிருக்க வேண்டியது. 'ஆப்பிளுக்கு முன்' முறித்துப் போட்டு விட்டது. அதனால் இம்முறை எதுவென்றாலும் ஒத்திப் போட்டு விட்டு இதற்குப் போய் விடலாம் என்று தீர்மானித்திருந்தேன். 2) ஆண்டாண்டுகளாய் எதிர்பார்த்திருந்த ஆசானுடனான முதல் சந்திப்பு இப்படியா இருக்க வேண்டும்! வெண்பொங்கல் நக்கிய எச்சில் கையுடன் பந்தியிலிருந்து பாதி எழுந்து நின்று அவருக்கு அரை வணக்கம் சொன்னபடி! 3) விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்த சிலர் (ஃபேஸ்புக்கில்) புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் நான் இளமையாகத் தெரிவதாகச் சொன்னார்கள். புகைக்கும் நெருப்புக்கும் வித்தியாசம் உண்டல்லவா! 4) விழாவின் முதல் அமர்வில் நானும் கலைச்செல்வி என்பவரும் வாசகர் கேள்விகளை எதிர்கொண்டோம். செல்வேந்திரன் ஒருங்கிணைத்து நடத்தினார். விஷ்ணுபுரம் எழுத்தாளர் அமர்வுகள் பற்றி ஜெயமோகன் எழுதியிருந்தது: "எழுத...

ஆப்பிளுக்கு முன் - ஒரு மின்னஞ்சல்

அன்பின் சரவணகார்த்திகேயன் அவர்களுக்கு, நான் இதற்கு முன், என் உற்ற தோழி ஒருத்திக்கு, என் அம்மாக்கு, "அவனுக்கு" (அப்புறம் எனக்கு) மட்டும் தான் கடிதம் எழுதி இருக்கேன். உங்களுக்கு இப்போ எழுதுவதில் காரணமோ அல்லது காரியமா பெருசா எதுவும் இல்லை. ஏதோ உங்க கிட்ட கேட்கணும் போல இருக்கு, அதான் எழுதறேன். அவ்வளவு தான். Before going into this, let me also get this straight - எனக்கு காந்தி பற்றியும் சரி காமம் பற்றியும் சரி முழுமையான புரிதல் நிச்சயம் இல்லை. ஏன், அடிப்படை புரிதல் கூட ரொம்ப ரொம்ப கம்மி தான். ஆப்பிளுக்கு முன் படிக்க நேர்ந்தது. வாழ்த்துக்கள். நல்ல படைப்பு. காந்தி எனக்கு புதுசு இல்ல. But I have never ventured beyond the contours of Gandhian economics and political thoughts (வேறுப்பாடுகலும் மரியாதையும் நிறைய உண்டு). அப்டி இருக்கற அப்போ, உங்க புனைவின் (புனைவாக மட்டும் பார்க்க கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துது) மூலம், I came to know about another facet of Gandhi ன்னு தான் சொல்லணும். Sex, Gender, sexuality இப்டி எதை பற்றியும் புரிதல் மறுக்க படர இந்த sexist தமிழ் சமூகத்துல வளர்க்கப்ப...

பொச்சு

Image
“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்கிருத வேர்ச்சொ...

எரிநட்சத்திரம்

Image
18ம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் ஃப்ரெஞ்சு ராணுவத் தலைவர் நெப்போலியன் இந்தியாவில் ப்ரிட்டிஷ் பிடித்து வைத்திருக்கும் பகுதிகளைக் கைபற்றும் திட்டத்தை வகுத்தார். ஆங்கில எதிர்ப்பின் காரணமாக தந்தையைப் போலவே திப்பு சுல்தானும் ப்ரெஞ்ச் ஆதரவாளர். இக்கணக்கீடுகள் நான்காம் மைசூர் போருக்கு இட்டுச் சென்றன. உலகின் இரு பெரும் போர் வீரர்களின் தலைவிதி அந்தப் போரில் கிறுக்கப்பட்டது. திப்பு சுல்தானுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் இடையே நான்காம் மற்றும் கடைசி மைசூர் போர் உச்சமாய் நடந்து கொண்டிருந்த சமயம். ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிடும் நோக்கில் ப்ரிட்டிஷ் துருப்புக்கள் முன்னேறிக் கொண்டிருந்தன. ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டைக்கு 1.6 கிமீ முன்பாக மரங்கள் அடர்ந்த சுல்தான்பேட்டை தோப்பு அமைந்திருந்தது. அங்கே திப்பு சுல்தானின் படை ஒன்று முகாமிட்டிருந்தது. கம்பெனியின் படை ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிட இவர்களை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி தலைமையிலான ஒரு படையை அந்தக் காரியத்தை முடிக்க அனுப்பி வைத்தார்கள். 5 ஏப்ரல் 1799 அன்று இரவு தன் படையினருடன் தோப்புக்குள் நுழைந்...

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

Image
பண்டித ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பியாகக் கருதப்படுகிறார். 1947ல் சுதந்திரம் கிடைத்த போது சிதிலமடைந்து கிடந்த ஒரு பிரம்மாண்ட தேசத்தை அவர் தன் தொலைநோக்குப் பார்வையின் மூலம் - விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு துறைகளிலும் மேம்பாட்டை ஏற்படுத்தி - புத்துயிர்ப்புடன் நிர்மாணித்தார். அதன் மூலம் சமூக, பொருளாதார வளர்ச்சியை நாடெங்கிலும் சாத்தியப்படுத்தினார். அவர் மறைந்த போது ஒரு நவீன தேசத்தை உருவாக்குவதற்கான மிக வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துப் போயிருந்தார். நிதானமாய் யோசித்தால் நேரு அவர்கள் இந்திய நாட்டிற்கு எதைச் செய்தாரோ அதையே தமிழ் நாட்டிற்கு கலைஞர் செய்தார். ஆனால் கலைஞரின் நவீனச் சிந்தனை கொஞ்சம் வேறுபட்டது. அது சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) உத்தேசித்தது. இன்றைய நவீன ஆட்சி என்பதில் இரண்டு விஷயங்களை நோக்கி இருப்பதாகக் கருதுகிறேன். 1) வளர்ச்சி 2) சமத்துவம். அதாவது முரட்டுத்தனமாய் நாடு வளர்கிறது எனப் பொருளாதாரக் குறியீடுகள் மூலம் காட்டுவதோ, குறிப்பிட்ட துறைகளில் மட்டும் பெருவளர்ச்சி காண்பதோ, சமூகத்தில் சில பிரிவினர் மட்டும் செல்வச் ச...