ஆப்பிளுக்கு முன் - ஒரு மின்னஞ்சல்


அன்பின் சரவணகார்த்திகேயன் அவர்களுக்கு,

நான் இதற்கு முன், என் உற்ற தோழி ஒருத்திக்கு, என் அம்மாக்கு, "அவனுக்கு" (அப்புறம் எனக்கு) மட்டும் தான் கடிதம் எழுதி இருக்கேன். உங்களுக்கு இப்போ எழுதுவதில் காரணமோ அல்லது காரியமா பெருசா எதுவும் இல்லை. ஏதோ உங்க கிட்ட கேட்கணும் போல இருக்கு, அதான் எழுதறேன். அவ்வளவு தான். Before going into this, let me also get this straight - எனக்கு காந்தி பற்றியும் சரி காமம் பற்றியும் சரி முழுமையான புரிதல் நிச்சயம் இல்லை. ஏன், அடிப்படை புரிதல் கூட ரொம்ப ரொம்ப கம்மி தான்.

ஆப்பிளுக்கு முன் படிக்க நேர்ந்தது. வாழ்த்துக்கள். நல்ல படைப்பு. காந்தி எனக்கு புதுசு இல்ல. But I have never ventured beyond the contours of Gandhian economics and political thoughts (வேறுப்பாடுகலும் மரியாதையும் நிறைய உண்டு). அப்டி இருக்கற அப்போ, உங்க புனைவின் (புனைவாக மட்டும் பார்க்க கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துது) மூலம், I came to know about another facet of Gandhi ன்னு தான் சொல்லணும். Sex, Gender, sexuality இப்டி எதை பற்றியும் புரிதல் மறுக்க படர இந்த sexist தமிழ் சமூகத்துல வளர்க்கப்பட்ட சாதாரண பெண் நான். அதனால் தானோ என்னமோ காமம், பாலுணர்வு போன்ற விஷயங்களில் காந்தி எப்படி பட்டவராக இருந்து இருப்பார் என்று அரசல் புரசலாகக் கேள்விப்பட்டு இருந்தாலும், அதை பற்றி படிக்க சிரத்தை எடுத்துக் கொண்டதே இல்லை. And then, I read your book.

ஒரு வருடம் முன்பு வரையில், காமம் என்பது ஒரு அடிப்படை தேவையாகத் தான் இருக்கும் என்ற எண்ணம் இருந்துது. என்னைப் பொறுத்த வரையில், காமம் ஒரு உடல், உளம், உளவியல் சார்ந்த ஒரு தேவையாவே இருந்துது. ஒரு சராசரி பெண்ணாக, என்னால் உடலற்ற ஒரு உறவை (a romantic relationship devoid of physical propinquity) கற்பனை செய்து கூட பார்க்க முடியாமல் இருந்துது தான். ஆனாலும், ஏனோ என்னால் மநுவுடன், you know, I was able to relate. இந்த எடத்துல, உங்க கிட்ட கொஞ்சம் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன். எனக்கு 25 வயசு ஆகுது and I am still a virgin. Ever since my late teens, I have fantasized the idea of sex and I have heard my friends saying how the whole thing is awesome as such. அதை - அதாவது அந்த உணர்வை - including showing your naked self to someone which being the highest form of acceptance of your own body and soul - எவ்வாறு பிரம்மச்சரியம் என்ற அடிப்படையில் மறுக்க முடியும்? காந்திய விடுங்க, அந்த வயசுக்கு மநுக்கு அது எப்படி சாத்தியமாகும்? இந்த கட்டத்தில், மநுவிற்கும் பாபாவிற்கும் நடந்த உரையாடல் முக்கியமானதாக கருதுகிறேன். மநுவை பொறுத்த வரையில் பிரம்மச்சரியம் பற்றியோ, காந்தியின் யாகத்தை பற்றியோ, ஏன் காந்தி கூறியப் படி - அவர் பிரம்மச்சரிய பரிசோதனைகளைக் கைவிட்டதால் தான் மக்களின் மனதை மாற்றும் சக்தி அவருக்கு இல்லாமல் போனது - அதைப் பற்றியோ பெரிதாக கவலை இருந்ததாக தெரியவில்லை . அவளின் தேவை அன்பாகத் தான் இருந்தது. காந்தியின் மீதான ஈர்ப்பு தான் அவளின் உந்துதலாக இருந்தது. என் புரிதல் என்னவென்றால் - For her, what was important is being with Gandhi, loving him in her own way and masking it by calling him, her mother. ஒருவர் மீது ஒருத்தி காதல் பற்று (அத எந்த எழவுனாலும் கூப்டுக்கோங்க) வைத்து விட்டால், அவளால் அவனை மீறி உடலளவில் (உடலளவில் கூட) வேறு எவரையும் நினைக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை என்று எடுத்து கொள்ளலாமா?

இதையே - அதாவது ஒருவர் மீது ஒருத்தி காதல் பற்று வைத்து விட்டால், அவளால் அவனை மீறி உடலளவில் (உடலளவில் கூட) வேறு எவரையும் நினைக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை - இந்த hypothesis, 96 ராம் க்குமே பொருந்தும் தானே? அவனுக்கு ஜானு மீதான ஈர்ப்பு தானே அவன் மற்ற பெண்ணோடு உடலுறவு மறுத்ததற்கு காரணம்? காந்தியின் மநு and 96 ராம் - Is it okay to draw parallels between them?

மநு யாரையாவது திருமணம் செய்துக் கொண்டால் உடலுறவு வைத்து கொண்டால், அவள் காந்தியின் மீது வைத்த காதல் இல்லை என்று ஆகிவிடுமா? ராம் இன்னொரு பெண்ணிடம் உடலுறவு வைத்து கொண்டால் தான் அவன் ஜானுவின் மீது வைத்த காதல் பொய்யாகி விடுமா?

எனக்கு ஒருவன் மீது அலாதி ஈர்ப்பு / காதல், அவனை தாண்டி என்னால் சிந்திக்கக்கூட முடிந்ததில்லை. கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. Even after he said no to me. இது பரவசமாகவும், பாரமாகவும், பயமாகவும் இருக்கிறது. ஆனால், இது எதார்த்தம் ஆகாது தானே? இல்லை, இயல்பாகவே இப்படி தான் இருக்குமா?

இப்படிக்கு,
இனியா

*

டியர் இனியா,

இன்றைய இளம் பெண்கள் காந்தி பற்றிய ஒரு நாவலைப் பொறுமையாகப் படிக்கிறார்கள் என்பதே ஆச்சரியம் தான். அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிக் கொள்வோம். இது ஒரு நாவல் தான்; வரலாறு அல்ல. காந்தி எப்படி இவ்விஷயத்தைப் பார்த்தார் என்பதற்கு அவரது எழுத்துக்களிலேயே தரவுகள் உண்டு. நாவல் அதை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அதைக் கேள்வி கேட்கிறது. ஆனால் மநு இதை எப்படி எதிர்கொண்டிருப்பாள் என்பதற்குப் போதுமான‌ நேரடித் தரவுகள் இல்லை. மநு காந்தி பற்றிய எழுதிய நூல்களில் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பேசப்படவே இல்லை. மநுவின் டைரிகள் குஜராத்தியில் இருக்கின்றன. அவை இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. (அவற்றில் நான்கைந்து கடிதங்களை மட்டும் இந்தியா டுடே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.) ஆக, அதில் ஒரு புனைவுக்கான சாத்தியம் இருப்பதை உணர்ந்ததால் தான் இதை நாவலாக எழுதினேன். நாவலில் மநுவின் எண்ணங்கள் பெரும்பாலும் என் புரிதல். தர்க்கம் மீறாத என் விருப்பம் என்றும் சொல்லாம். ஆக, எனது இந்தப் புனைவுச் சட்டகத்திலிருந்தே நான் உங்கள் கேள்விகளை எதிர்கொள்ள முயல்கிறேன். அதனால் இதில் நான் சொல்வது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல; ஒரு கோணம்.

காமம் / உடல் சாராத எதிர்பாலின உறவு என்பது மிக அரிதானது என்றாலும் சாத்தியமே. அது காமமற்ற உறவு என்று சொல்வதை விட காமத்தைக் கடந்த உறவு எனச் சொல்லலாம். இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் தான் நாம் காந்தி மநு உறவைப் பார்க்க வேண்டும். நீங்கள் புரிந்து கொண்டது சரியே. மநுவுக்கு காந்தியுடன் இருப்பதும், அவரது அன்புமே முக்கியம். அவரது பிரம்மச்சரியப் பரிசோதனைகள் அதற்கான பாதை அல்லது சாக்கு மட்டுமே. அதில் அவர் வெல்ல வேண்டும் என அவள் விரும்பி இருந்தால் அது அவரது மகிழ்ச்சிக்கும், திருப்திக்கும், நிம்மதிக்கும் தான். மற்றபடி, நேரடியாய் அவளுக்கு அந்தப் பரிசோதனைகள் மீது நம்பிக்கை இருந்தது என்பதற்கு நம்மிடம் ஆதாரங்கள் ஏதுமில்லை. அது ஒரு வகையில் காதல் தான். ஆனால் மநு அப்போது பதின்மங்களில் இருந்த பெண். அதனால் அதை ஓர் ஈர்ப்பு எனக் கொள்ளலாம். கண்மூடித்தனப் பிரியம். அது பலருக்கும் எதிர்பாலினத்தின் மீது வருவது தான். ஆனால் இங்கே அவள் தன்னையே அவரிடம் ஒப்புவிக்குமளவு இறங்கினாள் என்பது தான் அவளைத் தனித்துவம் ஆக்குகிறது. அது ஒரு சரணடைதல் தான். கண்ணனிடம் மீராவும் ஆண்டாளும் சரணடைந்தது போல்.

மநுவுடனான உங்கள் '96' ராம் பாத்திர ஒப்பீடு Brilliant! எனக்கு இதற்கு முன் இது தோன்றவில்லை. எனக்கு '96' பிடித்துப் போனதுக்குக் கூட இந்த விஷயமே உள்ளூர ஒரு காரணமாய் செயல்பட்டிருக்கலாம்.

உங்கள் அடுத்த கேள்வி இன்னொரு பெண்ணிடம் / ஆணிடம் உடலுறவு வைத்து கொண்டால் அவன் / அவள் கொண்ட‌ காதல் பொய்யாகி விடுமா என்பது. ஆகாது. இரண்டும் வேறு. காதலையும் உடலுறவையும் ஒன்றெனவே ஆக்கி வைத்திருக்கும் நம் சமூகத்தின் பார்வைச் சிக்கல் அது. திருமணம் செய்யவில்லை, உடலுறவு கொள்ளவில்லை என்றாலும் வேறெந்தப் பெண்ணையும் மனதால் கூட எண்ணவில்லையா? சுயஇன்பம் செய்யவில்லையா? அது இயற்கைக்கே விரோதமாக இருக்கிறது. காதல் தோற்றதற்காக உணவு, மற்ற தேவைகளை, இயற்கை உபாதைகளைத் தவிர்க்கிறோமா? தள்ளிப் போடுகிறோமா? அது போல் தான் காமமும்.

ஆனால் நான் சொல்வது ஒரு Universal கருத்து. தனிப்பட்ட நபர்களுக்கு அது மாறலாம். ஆக, '96' ராம் திருமணம் செய்யாமல் இருந்தது அவனது தனிப்பட்ட முடிவு. அது தவறு என்றோ அது தான் சரி என்றோ முடிவாக ஏதும் நாம் சொல்ல முடியாது.

உதாரணமாய் ஜானு ராம் பிரிந்த பின் மணம் செய்து கொள்கிறாள். இன்னொருவனுடன் கலவி கொள்கிறாள். குழந்தை பெறுகிறாள். அதனால் அவள் காதல் உண்மை இல்லை என்றாகி விடுமா? மநுவே கூட பிற்பாடு திருமணம் செய்து கொண்டாள் என்று அறிகிறேன். ஆனால் இளமையிலேயே இறந்து போனாள். இவ்விரு கதைகளிலுமே அவர்களின் முந்தைய காதல்/ பிரியம் எவ்வகையிலும் குறையவில்லை என்றே சொல்வேன். ஆனால் அதைத் தாண்டி அவர்கள் சூழலின் அழுத்தங்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டி இருக்கிறது. அது தான் திருமணம். காதல் கைகூடாத பெண்களுக்குப் பொதுவாய் அப்படித்தான் நிகழ்கிறது. ஆண்கள் போல் காதலை எண்ணி தாடி வளர்த்து, தண்ணியடித்துத் தனிமையில் அமிழ்தல் சாத்தியப்படுவதில்லை.

என் வரையில் காதல் இல்லை என்று ஆன பிறகும் அதிலேயே தேங்கி நிற்பது ஒரு முட்டாள்தனமான முடிவற்ற காத்திருப்பு மட்டுமே. அதற்கு எந்த உணர்ச்சிகர மதிப்பும் இல்லை. அதனால் யாருக்கும் பயனும் இல்லை. அது ஓர் அர்த்தமற்ற‌ சுயவதை தான். அதிலிருந்து ஒருவர் வெளிவருவதே எல்லோருக்கும் நன்மை பயக்கும் விஷயமாகும்.

பிரச்சனை என்னவென்றால் வயதில் இதைச் சொல்லும் போது புத்திக்கு ஏறாது. மத்திம வயதில் த‌லையிலடித்துக் கொள்ள வேண்டி இருக்கும். அப்போது தனிமை சகிக்க முடியாததாய் இருக்கும். உங்கள் கதையில் பையனும் மறுத்து விட்டான் என்ற போது அப்போது அவனும் கூட சொல்லளவிலேனும் ஆறுதலாய் அருகிலிருக்கப் போவதில்லை. அதனால் அதிலிருந்து வெளியே வருவதே சரியான முடிவு. எவ்வளவு மனம் அறுபட்டாலும் அதைச் செய்வதே முறை.

'96' ராமைத் திரையில் கொண்டாடினாலும் நடப்பில் அதை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் அவனைக் கொண்டாவதே அதனால் தான்.

- CSK

***

(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)

Comments

என்ன தம்பி சவுக்கியமா?என்ன நியாபகம் இருக்கா?2014 ல இதே பேர்ல கமன்ட் பண்ணனே!அப்புறம் தம்பி எனக்கொரு வருத்தம்.நீங்க வழக்கம் போல பாசிச பார்ப்பன காவி பயங்கரவாதி மோடி ஒழிக கோஷத்தை இப்பவே ஆரம்பிக்காம இருக்குறீங்க.இப்ப ஆரம்பிச்சாத்தான களை கட்டும்.2013 லையே நீங்க மோடிக்கு எதிரா பேச ஆரம்பிச்சதுல தான் அவர் பிரதமராகி நல்லாட்சி குடுத்தாரு.அதேமாதிரி இப்பவே கடுமையா விமர்சிக்க ஆரம்பிங்க.கூட்டம் ஆர்ப்பாட்டம் போராட்டம் எல்லாம் களை கட்டணும்!அப்புறம் ரெண்டு லட்சம் தமிழனை மேல அனுப்புன காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு சொம்படிச்சும் ரெண்டு பதிவு போடுங்க.அதுவும் நட்டுகிட்டு போகும்.வர்ட்டா!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்