Posts

பரத்தை கூற்று : கல்யாண்குமார்

கல்யாண்குமார் ' புதிய தலைமுறை ' வார இதழின் உதவி ஆசிரியர். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை விவாதக்குழுவில் பணியாற்றுகிறார். ' பரத்தை கூற்று ' தொகுப்பு குறித்து அவர் எழுதியிருந்த மின்னஞ்சல் இங்கே: ******* அன்பான சரவண கார்த்திகேயன், இனிய வணக்கம். நான் கல்யாண்குமார். புதிய தலைமுறையில் உதவி ஆசிரியராக உள்ளேன். நண்பர் அதிஷா மூலமாக உங்களின் பரத்தை கூற்று படிக்கக் கிடைத்தது.ஆழமான அழுத்தமான விஷயங்களை உங்களின் எளிய சொல்லாடல் மூலம் அற்புதமாக பதிவு செய்து, பரத்தையரின் உலகிற்காக ஓங்கிக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். அவர்களுக்குக் குரல் கொடுக்க எழுத்தாளர்களாகிய நம்மைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் பாவம். இது அவர்களுக்கான ஒரு சிறப்பிதழ் என்றே சொல்லலாம். நகைச்சுவையையும், சிந்தனையையும், அவர்களின்பால் பரிதாபத்தையும் அந்தக் கவிதைகளை படிக்கிற தருணத்தில் தூண்டி விடுகின்றன, உங்களின் வீரியமிக்க வரிகள். உங்களுக்கு எழுத்துத் துறையில் வெளிச்சம் நிறைந்த எதிர்காலம் இருப்பதை உணர்கிறேன். வாழ்த்துகள், அன்புடன் கல்யாண்

மாநகர யுவதிக‌ள்

சிலிக்கன்களால் பேடட் ப்ராக்க‌ளால் மழுப்பும் டிஷர்ட்களால் அரிதாய்ச் சில சமயம் கொழுப்பின் திரட்சியால் களிப்புச்சம் எய்துகிறதிந்த‌ கண்களின் தீராப்பெருங்காமம்.

படித்தது / பிடித்தது - 101

என் கைகளில் துப்பாக்கி தந்தவன் எதிரி. - கவிஞர் காசி ஆனந்தன் நன்றி : காட்சி வலைப்பதிவு

சிரைக்க முளைத்தவை

* காவித்துகிலுடுத்த‌ சுவாமித்தலைக்கு அணை REBOKபை. * புற்றற்ற பாம்பின் வக்கற்ற விடமே பற்றற்ற வாழ்வு. * காலப்பெருவெளி தூவிய ஒரு துளி - ரெயில் பிரயாண‌ தூரத்து விருட்சம். * முதல் முறையெனில் தைரியம் என்று பெயர்; அடுத்த‌டுத்ததெல்லாம் வெறும் பழக்கதோஷ‌ம். * கடவுளும் காமமும் சிரைக்க முளைக்கும் சிங்காரத்தாடிமுட்கள். *

பாலாவின் COME-BACK

Image
ஆரண்ய காண்டம் படத்திற்குத் தான் விமர்சனப்பதிவு எழுதுவதாய் ஆரம்பத்தில் திட்டம். ஆனால் அவன் இவன் படம் பற்றிய என் ஒற்றை ட்விட் டிற்கு வந்த பரவலான எதிர்வினைகள் திட்டத்தை திசை திருப்பி விட்டது. ஆனால் குறையொன்றுமில்லை. ஆரண்ய காண்டம் பற்றி நான் சொல்ல‌ நினைத்திருந்த கிட்டதட்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் பதிவுலகமே ஒன்று கூடிக் கொண்டாடித் தீர்த்து விட்டது. போதாதற்கு சாரு வேறு ஜூலை மாத உயிர்மையில் பாராட்டவிருப்பதாய்த் தெரிகிறது. அதன் வியாபார வெற்றி பற்றித் தெளிவில்லை. ஆனால் அதை விட ஆக முக்கிய சங்கதியொன்று உண்டு - அது தமிழகத்தில் அறிவுஜீவிகளென அறியப்படுபவர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய மதிப்பீடு. இவ்விஷயத்தில் ஆரண்ய காண்டம் எகோகபித்த ஆதரவைப் பெற்று‌ நல்ல போஷாக்கான குழந்தையாக‌த் தான் வலம் வருகிறது. பாவம், அவன் இவன் தான் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சவலைப்பிள்ளை. இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். அவன் இவன் பட‌த்தை நான் எதிர்மறை எதிர்பார்ப்பினோடு தான் அணுகினேன். பத்து வருடங்கள் முன்பு அவர் எடுத்த இரண்டு நல்ல படங்களை மனதில் கொண்டு பாலா படம் பார்ப்பது ஒரு கடமை போல் என்ற அளவிலான மதிப்...

தற்கொலை முன்குறிப்பு

ஒரு தற்கொலையைப் போல் எளிதான சங்கதி ஏதுமில்லை ஒரு முத்தத்தைக் காட்டிலும் ஒரு முகச்சுழிப்பை விடவும் பைத்தியத்தின் மனம் போல் தர்க்கமற்ற‌ தர்க்கத்திலிருந்து கிளைக்கிறது அத‌ன் மீதூறும் நம் கருணையும் பிரேமையும் அடுத்தவரை எதிர்கொள்ளும் பேர‌வஸ்தையது மறைவதில் ரகசியமென ஒளிந்திருக்கிறது மரணித்தலின் சூட்சமச்சுவை மெல்லிய ஆன்மவலியோடு சாஸ்வத விடுதலை பெறும் அக்கண ஆனந்தத்தின் நிகர் புணர்ச்சியிலும் சாத்யமன்று சுய‌கொலையின் சுகந்தத்தை சில்க் ஸ்மிதாவிடம் அல்லது நாம் மிக‌ விரும்பும் பிறிதொரு நடிகையிடம் கேட்டறியலாம் உறுத்தலின்றிய‌தை நிகழ்த்த‌ கொஞ்சம் முட்டாள்தனமும் பிரபஞ்சம் துறந்த மறதியும் உடனடி தைரியமும் போதும் நாளை மறுநாள் நிச்சயமாய் உலகம‌ழியும் என்பது போல‌ அர்த்தம் களைந்த அவசரம் இருப்பின் இன்னமும் நன்று அதை விட மிக முக்கியமாய் நம் ப்ரிய‌த்திற்குரியவர்களை ஒருபோதும் அக்கணங்களில் மனதினுள் அனுமதிக்கலாகா *  என் வேண்டுகோள் எல்லாம் தற்கொலை செய்யும் முன்பு இக்குறிப்பினை ஒரு முறை துலங்கப் படித்து விடுங்கள்.

கவுச்சி வாடை

* மீண்டும் மீண்டும் வேண்டும் உப்புப் பொரிந்தபடி மிதக்கும் சதைத்திரட்சியின் ஈர‌ வாசம். * சொற்களில் இல்லை கலவி காட்சியில் இல்லை கலவி கலவியிலும் இல்லை கலவி. * கொழுத்த மீன் பிடிக்கத் தலை குனியும் கொக்கு கணக்காய்த் துடிக்கிறது வெட்கங்கெட்ட வேட்கை. * எள்ளி நகைத்திடலாம் அள்ளித் தூற்றிடலாம் கொள்ளியும் வீசிடலாம் - காறியுமிழ் காமம் தானே! * எல்லாம் முடிந்து களைத்த‌ ஒற்றைப் பெருமுச்சுடன் மல்லாக்கப் படுக்கையில் துளையிட்ட பலூன் போல் சிறுத்துப் போய்க்கிடக்கிறது உடம்புரசுமிந்த ஆதிய‌ரிப்பு. *

பெயர‌ற்ற வரிகள்

* சற்று முன்பு எழுதப்பட்ட இந்த‌ வரி என்னுடையதா? * பதில்களால் வெட்ட வெட்ட‌ கேள்விகளில் கிளைக்கிறது வாழ்க்கை. * அதிஅற்புத‌ங்கள் பல்கிப்பெருகிட அருகிக்குறுகின‌ சாதாரணங்கள். * எப்போதும் எங்கும் எவ்விஷயத்திலும் தேவைப்படுகிற‌து - துளி தூய விஷம். * நேற்றே வந்திருப்பேன் நாளை கிளம்பி விடின்; இப்போது இன்றாகிறது. *

கண்ணீரும் புன்னகையும்

* நிறைய சிரிக்கிறார்கள் - நானோ புன்னகையை யாசித்துக் கிடக்கிறேன். * எத்தனை சிரிப்பும் மறைந்து விடும்; சிறுகண்ணீரதை மறக்கவியலுமா? * மற்றவரின் உதட்டுக்கு நினைவூட்டும் பொருட்டு செயற்கையாகவேனும் புன்னகை செய்யுங்கள். * கண்ணீருக்கென்றுண்டு வலிகள் போக்குமொரு விநோதக்கவுச்சி வாசம். * புன்னகையிலிருக்கிறது ஒரு முத்தத்தின் ஈர‌ ருசி; சிறுகண்ணீரிலிருக்கிறது புணர்ச்சியின் உலர் பசி. *

(தமிழ்) தேசிய விருதுகள்

முதலில் செய்திகள் வர ஆரம்பித்த போது சந்தேகமே வந்து விட்டது. மாநில திரைப்பட விருதுகளா, தேசிய திரைப்பட விருதுகளா என்று. பின் ராஜீவ் மசந்த் முதல் சொக்கன் வரை மயக்கம் தெளிவித்தார்கள். தமிழுக்கு மட்டும் இம்முறை மொத்தம் 15 விருதுகள்: வெற்றிமாறன் (இயக்கம் & திரைக்கதை - ஆடுகளம் ), தனுஷ் (ந‌டிகர் - ஆடுகளம் ), கிஷோர் (படத்தொகுப்பு - ஆடுகளம் ) தினேஷ் குமார் (ந‌டன அமைப்பு - ஆடுகளம் ), வ.ஐ.ச.ஜெயபாலன் (சிறப்பு குறிப்பு - ஆடுகளம் ), (சிறந்த தமிழ் படம் - தென்மேற்குப் பருவக்காற்று ) சரண்யா (ந‌டிகை - தென்மேற்குப் பருவக்காற்று ), வைரமுத்து (பாடல் - தென்மேற்குப் பருவக்காற்று) ), ஸ்ரீநிவாஸ் மோகன் (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - எந்திரன் ), சாபு சிரில் (கலை இயக்கம் - எந்திரன் ), சுகுமாரி (துணை நடிகை - நம்ம கிராமம் ), இந்திரான்ஸ் ஜெயன் (ஆடை அலங்காரம் - நம்ம கிராமம் ), தம்பி ராமையா (துணை நடிகர் - மைனா ) மற்றும் ஓவியர் ஜீவா (சினிமா எழுத்து சிறப்பு குறிப்பு - திரைச்சீலை ). சென்ற வருடத்தைய என் பட்டியலில் ஆடுகளம் படம் கணக்கில் கொள்ளப்படவே இல்லை (சென்னையில் படம் வெளியாகும் நாளே எனக்கு கணக்கு; தணிக்கை சான்றிதழ் தே...