CSK Diet

இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.)

1) இந்த‌ உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:

  • இனிப்புகள் (தின்பண்டங்கள், சாக்லேட், ஐஸ்க்ரீம் முதலியன‌)
  • குளிர்பானங்கள் (சோடா கலந்தவை, அடைக்கப்பட்ட ஜூஸ்கள்)
  • பேக்கரி உணவுகள் (ப்ரெட், பிஸ்கெட், குக்கீஸ், கேக் முதலியன)
  • மைதா உணவுகள் (பரோட்டா, பஃப்ஸ், மேகி முதலியன)
  • எண்ணெயில் பொரித்த உணவுகள் (முறுக்கு, பூரி, சிக்கன் 65 முதலியன‌)
  • எண்ணெய் மிதக்கும் உணவுகள் (பிரியாணி முதலியன) 
  • சிவப்பு மாமிசங்கள் (Red Meat - ஆட்டுக் கறி முதலியன‌)
  • சர்க்கரை மிகுந்த பழங்கள் (மா, பலா, வாழை முதலியன)
  • உலர்கனிகள் (பேரிச்சை, திராட்சை முதலியன)
  • பழச்சாறுகள் (சர்க்கரை போடாவிட்டாலும் கூடாது)
  • அதீத உப்பிட்ட உணவுகள் (அப்பளம், பப்படம், ஊறுகாய் முதலியன)
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் (ஜாம், சாஸ்)
  • துரித உணவுகள் (ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் முதலியன‌) 
  • மேற்கு உணவுகள் (பீட்ஸா, பர்கர் முதலியன) 
  • தீய கொழுப்பு உணவுகள் (சீஸ் முதலியன)
2) தினம் இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்:
  • பாதாம் / வால்நட் 
  • பச்சைக் காய்கறிகள் (தக்காளி, கேரட், வெள்ளரி முதலானவை)
  • எதேனும் ஒரே ஒரு பழம் (உதா: ஆப்பிள்) / பழக் கிண்ணம்
  • ஒரு முழு முட்டை அல்லது இரண்டு முட்டை வெள்ளை (அவித்தது)
  • பயறு வகைகள் (சுண்டல், பட்டாணி, பாசிப் பயறு முதலியன‌ - அவித்தோ முளை கட்டியோ)
  • மோர்
  • க்ரீன் டீ
  • 3 லிட்டர் தண்ணீர்

3) வாரம் ஒரு முறையேனும் இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்:

  • மீன்
  • கீரை
  • காளான்
  • பனீர் / வெண்ணெய் / நெய்

4) தானிய நெறிகள்:

  • இரவு உணவில் எந்த தானியமும் இருக்கக் கூடாது. அது சாத்தியப்படாவிடில் குறைந்த அளவில் (உதா: 10-20%) சேர்க்கலாம். (தானியத்துக்குப் பதிலாக‌ காய்கறிகள், பழக் கிண்ணம், பனீர், பயறு வகைகள், வேக வைத்த அல்லது தவாவில் / நெருப்பில் சுட்ட மீன் / கோழி இவற்றை எடுக்கலாம்.)
  • மதிய உணவில் தானியம் 50%க்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தது 40% காய்கறி இருக்க வேண்டும். மீதத்தைப் பருப்பில் நிரப்பலாம். முடிந்த அளவு வெள்ளை அரிசி குறைத்து, சிகப்பு அரிசி, ஓட்ஸ், கோதுமை, பக்வீட், ப்ரௌன் ரைஸ் போன்றவை எடுக்கலாம். (மறுசோறு கூடாது.)
  • காலை உணவில் அரிசி, கோதுமை ரவை, ராகி, கம்பு, சோளம் போன்றவற்றுடன் பச்சைக் காய்கறிகள் (தக்காளி, கேரட், வெள்ளரி முதலானவை) தவறாமல் இடம் பெற வேண்டும்.

5) தூக்க நெறிகள்:

  • இரவு ஒன்பது மணிக்கு மேல் தண்ணீர் தவிர எதுவும் தின்னவோ பருகவோ கூடாது
  • இரவு உணவுக்கும் உறங்கப் போவதற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவெளி தேவை

6) நேரத்திற்குச் சாப்பிட வேண்டும் (உதா: 9 AM, 1 PM, 5 PM, 9 PM).

7) ஒரு வாரத்தில் ஒரே வேளை மட்டும் மேற்சொன்ன விதிகளை உடைத்து உணவு எடுக்கலாம் (Cheat Meal). அதாவது 20:1 என்ற கணக்கில் ஏமாற்றுவது. இது ஏன் அவசியம் என்றால் மொத்தமாய் அடைத்து வைத்தால் ஒரு நாள் மொத்தமாய் தடை உடைத்துக் கட்டுக்கடங்காமல் உட்கொள்ள நேரிடும்.

 Disclaimer: இந்த‌ diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித‌ உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்நிலை, அலர்ஜி இருப்போர் மருத்துவர் அல்லது டயட்டீஷியன் ஆலோசனையை நாடுவது நல்லது. 

***

Comments

//பா, பலா வாழை// ,மா..
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பரே,
காவி பாசிச பார்ப்பன சக்திகளை வீழ்த்த ஆதரிப்பீர் தளபதியை.மத சார்பின்மை நிலைநாட்டப்பட சாதிவெறி ஒழிய சமத்துவம் பெருக இந்துத்துவா வீழ ஆதரிப்பீர் தளபதியை.உங்களை போன்ற பெரியாரிஸ்ட்கள் இது பற்றி விரிவாக நிறைய எழுத வேண்டும்.நன்றி.
https://www.stalinani.com/song?ss=Google&gclid=EAIaIQobChMInZDh8PSQ7wIVThBoCh3DPQSDEAEYASAAEgJ4EPD_BwE
3 லிட்டர் தண்ணீர் என்பதில் ஒரு டவுட். பொதுவா ஒரு ஆளின் எடையை 20 ஆல் வகுத்து வரும் விடை அளவு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கனுமாம், உதா 80 கிலோ வெயிட் எனில் 4 லிட்டர் தண்ணீர் . இது போக கோடைக்காலம் எனில் கூடுதல் தண்ணீர் தாகத்துக்கு ஏற்ப



பழச்சாறு ஏன் கூடாது ? சுகர் , ஐஸ் இல்லாமல் சாப்பிடலாமே?



மா, பலா ஓக்கே தவிர்க்கலாம், வாழை ஏன் தவிர்க்கனும்?சர்க்கரை சத்து அதிகம் எனினும் அது பெரிய பாதிப்பில்லை என்கிறார்கள்



இரவு உணவுக்கும் , தூக்கத்துக்கும் 3 ,மணி நேர இடைவெளி வேணும்கறாங்க . ஆனா நடை முறை சாத்தியம் இல்லை . பெரும்பாலும் பணிக்குப்போய் வீட்டுக்கு வந்து குளிச்ட்டு ரெடியாகி சாப்பிட 9 டூ 10 ஆகிடுது.



சிறுதானியங்கள் பற்றி அதிகம் சொல்லவில்லை



மாப்பிள்ளை சம்பா அரிசி , கறுப்புக்கவுனி அரிசி நல்லதுங்கறாங்க



வாகை , திணை , குதிரை வாலி வரகு அவ்வப்போது சேர்த்துக்கலாம்



சைவர்களுக்கு முட்டைக்கு மாற்றா என்ன எடுத்துக்கலாம்?
கொழுப்புக்களை அதிகம் கரைக்க உதவும் பப்பாளிப்பழம் பற்றி குறிப்பு இல்லை , உணவு க்கு அரை மணி முன்னும் பின்னும் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் சாப்பிட்டா உடல் எடை குறையும்னு ஹாட் வாட்டர் தெரபில சொல்றாங்க

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்