‪அனு சித்தாரம்


மலையாளப் பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனித்த பிரேமையும் மயக்கமும் உண்டு. இதைப் பற்றி சில ஆண்டுகள் முன் விரிவாய்ப் பதிவு செய்திருக்கிறேன்: http://www.writercsk.com/2017/12/blog-post.html

'யட்சி' என்ற சிறுகதையில் ஜெயமோகன் இப்படி எழுதி இருப்பார்: "எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி." இந்த அளவுகோலின்படி பார்த்தால் மலையாளத் திரைப்பட‌ நடிகை அனு சித்தாரா ஓர் யட்சி; ஒரே யட்சி. அதிரூபசுந்தரி, பெரும்பேரழகி என்பதெல்லாம் தாண்டி இன்றைய தேதியில் இந்த நீலப்பந்தில் வாழும் பெண்டிருள் மிக அழகு யாரெனக் கேட்டால் இந்த வயநாட்டுக்காரியையே கைகாட்ட முடிகிறது.


அப்படியானவருடன் தினமொரு இனிப்புத் தின்பண்டத்தை ஒப்பீடு செய்து அக்டோபர் 2019 தொடங்கி ஜனவரி 2020 வரை சரியாக 100 நாட்கள் ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன். பிள்ளை விளையாட்டாய்த் தொடங்கிய தொடர் அதன் உச்சத்தில் இருந்த சமயத்தில், அலுப்பைத் தொடாத ஒரு நிறைபுள்ளியில் நிறுத்திக் கொண்டேன். அழகை ஆராதிக்க கௌரவம் பார்த்தல் பாசாங்கு. இது ஓர் எதிர்பார்ப்பற்ற உபாசனை தான். ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில் பராசக்தியை ஆராதித்தது மாதிரி.

#‎AnuSitharaSweetSeries‬ என்ற ஹேஷ்டேகில் வெளியான‌ இத்தொடர் எனக்கு நல்கிய அனுபவம் அலாதியானது; அரிதானது. அதற்குப் பின்னுள்ள உளவியல் சுவாரஸ்யமானது. சிலருக்கு இனிப்புப் பண்டம் பிடித்த‌து, சிலருக்கு உடையலங்காரம், இன்னும் சிலருக்கு அனு சித்தாராவின் மீயழகு. மேலும் சிலருக்கு ஒப்பீட்டின் ரசனையும், தொடரும் அர்ப்பணிப்பும் பிடித்த‌து. அரிதாய்ச் சிலர் சகிக்கவில்லை என்று சொல்லி நிறுத்தக் கோரினார்கள். சிலர் உற்சாகமாய் தாமும் களமிறங்கி ஸ்வீட் சீரிஸ் முயன்றார்கள். சிலர் பொதுவெளி பிம்பத்தின் பொருட்டு ரகசியமாய் ரசித்தார்கள். பிற்பாடு வடிவேலு ஸ்வீட் சீரிஸ் ஒன்று கண்ணில் பட்டது. ஃபேஸ்புக்காரன் எனக்கு ஸ்வீட் ஸ்டால்களைச் சிபாரிசு செய்தான்; யார் அனு சித்தாரா படம் போட்டாலும் என் பெயரை ஆட்டோடேக் செய்தான். அந்த 100 நாட்களும் என் மீது பல திசைகளிலிருந்தும் 'அனு'தாப அலை வீசிக் கொண்டே இருந்தது எனலாம்.

"ஒரு கலைஞன், ஓர் எழுத்தாளன் இப்படி ஒரு நடிகையை ஆராதித்துக் கொண்டிருக்கலாமா? உருப்படியாய் வேறு வேலை இல்லையா? அபச்சாரம், தவறான முன்னுதாரணம்." என்றனர் சில அக்கறையான அன்பர்கள். எம்எஃப் ஹுசைனையும், குஷ்வந்த் சிங்கையும் நினைத்துக் கொண்டேன்.

மிக ரசித்த எதிர்வினை மீனம்மாவுடையது: https://www.facebook.com/meenammakayal/posts/373569116859134

சிலர் அனு சித்தாராவுக்குப் போடுவது போல் அந்த நடிகைக்குப் போடு, இந்த மாடலுக்கும் போடு எனக் கேட்டார்கள். இன்னும் சில தோழிகள் தங்களுக்கே இத்தகு சீரிஸ் போட்டால் தான் என்னவாம் என ஆதங்கம் கொண்டார்கள். அப்போது அவற்றுக்கு பதிலளிக்கும் முகமாக‌ இப்படிச் சொல்லியிருந்தேன்: "ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு விஷயம் உகந்தது. அதைக் கொண்டு தான் அர்ச்சிக்க வேண்டும். அதை மாற்றக்கூடாது. உதாரணமாய் சிவனுக்கு வில்வ இலை, காளிக்கு செவ்வரளி, பிள்ளையாருக்கு அருகம்புல். அதை மாற்றி சிவனுக்கு அருகம்புல் கொண்டு பூஜிக்கக்கூடாது, பிள்ளையாருக்கு செவ்வரளி மாலை சாற்றக்கூடாது. அப்படித்தான் அனு சித்தாராவுக்கென ஸ்வீட் சீரிஸ் அமைந்து விட்டது. அதை இன்னொருவருக்கு நீட்டிக்கக்கூடாது. செய்தால் அது ஆகம விதிகளை மீறியதாகி விடும். வரலாறு நம்மை மன்னிக்காது. ஆனாலும் பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல், ஒரு காரம் சீரிஸோ, சூப் சீரிஸோ அவரவர் வசதிக்கேற்பச் செய்யலாம்."

ஸ்வீட் சீரிஸில் படம் போட முயற்சிப்போருக்கு சில விதிமுறைகளைச் பின்பற்றச் சொல்லியிருந்தேன்: "1) இரண்டு படங்களுமே HD படங்களாக இருக்க வேண்டும் - குறைந்தது 1000 x 1000 ரெசலூஷனில். 2) இரண்டு படங்களிலுமே வாட்டர்மார்க் இல்லாமல் இருக்க வேண்டும் - ஓரமாய் லோகோ அல்லது புகைப்படக்காரர் பெயர் இருக்கலாம், தவறில்லை. 3) அனு சித்தாராவின் படம் எப்படியும் அழகாய்த் தான் இருக்கும், அதில் ஏதும் மெனக்கெடல் அவசியமிராது. ஆனால் உணவுப் பண்டத்தின் படம் பார்த்தவுடனே ருசிக்கத் தூண்டுவதாய் இருக்க வேண்டும். 4) ஆபாச ஒப்புமைகள் கூடவே கூடாது. மாமாங்கம் போன்ற ஒரு பெரிய நடிகரின் பட இசை வெளியீட்டு நிகழ்வுக்கே சாதாரணமாய் சுடிதார் அணிந்து பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் எளிமையாய் வந்தவர் அனு - இம்மாதிரி நிகழ்வுகள் புது திரை வாய்ப்புக்கள் பெற நடிகைகள் பயன்படுத்திக் கொள்பவை என்பதை நினைவில் கொள்ளவும். 5) வெறும் ஆடையின் நிற ஒற்றுமை தாண்டி இரண்டும் ஒன்று என்று ஆழ்மனதில் திருப்தியெழ வேண்டும். சதா தியானிப்பதன் மூலமும் தொடர்பயிற்சியின் வழியாகவும் தான் அது சாத்தியப்படும். தமிழ்ச் சூழலில் இது ஒரு முன்னோடியான open source முயற்சி. ஊர் கூடித் தேர் இழுப்போம். தேரை இழுத்துத் தெருவில் விடாமல் முயற்சிப்போம்.". இவ்விதிமுறைகளை மிகப் பெரும்பாலும் நானும் ஒழுக்கமாய்க் கடைபிடித்தேன். (ஆபாசப் பார்வை பற்றிய ஒரு நிரூபணம்: 46ம் நாளின் படத்தில் அந்தக் கண்ணாடி பிம்பத்தை நண்பர்கள் சொல்லும் வரை நான் கவனிக்கவில்லை.)

மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என இசையமைப்பாளரைக் கேட்பது போல் அனு சித்தாராவின் படத்துக்கு ஈடான தின்பண்டத்தின் படத்தைத் தேடிப் போடுகிறேனா அல்லது பண்டத்துக்கு இணையான அனுவின் படமா என ஆர்வலர்கள் வினவினார்கள். இரண்டும் தான். அது அந்தந்த நாளின் 'அனு'க்ரஹம்! (இது தொடர்பான ஷ்ருதி டிவி குறும்பேட்டி ஒன்றுமுண்டு.)

அனு சித்தாரா ஸ்வீட் சீரிஸ் எப்போது முடியும் என அச்சத்துடன் - இரு அர்த்தத்திலும் ‍ வினவிய சில நண்பர்களிடம் வேறு யாராவது அனு சித்தாராவை விட அழகாய்த் தென்பட்டால் இத்தொடரை நிறுத்திக் கொள்ளத் திட்டம் எனச் சொல்லி வைத்திருந்தேன். நல்லவேளை, அதை நிஜமாய்க் கடைபிடித்திருந்தால் இப்போது வரையிலும் கூட இத்தொடரை நிறுத்தியிருக்க முடியாது!

நிச்சயம் இத்தொடரின் நோக்கம் அனு சித்தாரா என்ற நடிகையை தனிப்பட்டு நான் நெருங்குவதல்ல. உண்மையில் அவருக்கு இச்செய்தி போயிருந்தால் அத்தினத்துடன் தொடரை அப்படியே நிறுத்துவதாக இருந்தேன். சரி, அப்படியெனில் இதன் மைய‌நோக்கு தான் என்ன? உண்மையில் இது ஓர் ஆட்டம். அவ்வளவு தான். இதன் சவால் சுவாரஸ்யமாக இருந்தது. தன்முனைப்பைச் சீண்டுகிற உற்சாகத்தைத் தாங்கியிருந்தது. மற்றபடி, இதற்கு நான் உத்தேசிக்காத சில‌ பலன்கள் இருக்கலாம் தான். இனி புதிதாய் உருவாக்கப்பட இருக்கும் ஓர் இனிப்புப் பண்டத்துக்கு அனு சித்தாரா என்று பெயர் வைக்கலாம். அல்லது யாராவது ஒருவர் அனு சித்தாரா தீமில் ஒரு பிரம்மாண்ட இனிப்பகம் தொடங்கலாம் (குறைந்தபட்சம் தன் வழக்கமான இனிப்புக் கடைக்கு அனு சித்தாராவின் பெயரை வைக்கலாம்). பார்ப்போம், எதிர்காலம் என்ன ஆச்சரியத்தை ஒளித்து வைத்திருக்கிறதென!

இத்தொகுப்பைப் புத்தகமாக வெளியிடச் சொல்லி கேலியாகவும், நிஜமாகவும் நிறையப் பேர் சொன்னார்கள். அச்சுப் புத்தகமாக வந்தால் அழகாகத்தான் இருக்கும். வழவழ, பளபள தாளில் தரமாய் ஒரு காஃபிடேபிள் புத்தகம் போல். ஆனால் நம்மிடம் அதற்கான சந்தையில்லை என நம்புகிறேன். (எனக்கும் அது குறித்த, என் எழுத்தாள பிம்பம் சார்ந்த தனிப்பட்ட தயக்கங்கள் இருக்கின்றன.) மின்னூல் செய்யலாம். கிண்டிலில் வைத்தால் இலவசமாகத் தர முடியாது. இதை விற்றுச் சம்பாதிக்க விருப்பமில்லை. அதனால் எதிர்காலத்தில் சமயம் கிடைக்கையில் இலவச பிடிஎஃப் வெளியிடுவேன்.

அதுவரை ஆறுதலாக‌ இத்தொடர்பதிவுகளின் சுட்டிகளை இந்நன்னாளிலே இங்கு தொகுத்தளிக்கிறேன்:
  1. அட பிரதமன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156548487747108
  2. செர்ரி பழம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156550734692108
  3. குலாப் ஜாமூன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156553785317108
  4. மினி ஜிலேபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156556128557108
  5. மோத்தி லட்டு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156558132077108
  6. ஸ்வீட் பீடா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156562931037108
  7. ரோஸ் மில்க் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156565325592108
  8. ஜிகர்தண்டா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156567962002108
  9. பட்டர்ஸ்காட்ச் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156570452667108
  10. திருநெல்வேலி அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156573283532108
  11. பிஸ்தா பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156575147367108
  12. தேன் மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156577691307108
  13. குழிப் பணியாரம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156580426847108
  14. ஸ்ட்ராபெர்ரி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156582892122108
  15. ஜவ்வு மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156585334297108
  16. தீபாவளி பட்சணம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156588416642108
  17. காஜு கத்லி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156591582962108
  18. தர்பூசணி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156593325317108
  19. சம் சம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156595746357108
  20. ஜவ்வரிசிப் பாயாசம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156598308747108
  21. சர்க்கரைப் பொங்கல் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156602286277108
  22. தேங்காய் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156603850227108
  23. எள்ளுருண்டை - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156607553992108
  24. ப்ளூபெரி ஐஸ்க்ரீம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156610258032108
  25. மின்ட் லைம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156612025412108
  26. பால் கொழுக்கட்டை - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156615164567108
  27. ஆக்ரா பேதா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156618957107108
  28. ரெட் வெல்வ்ட் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156621072952108
  29. ரசகுல்லா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156621995977108
  30. குபானி கா மீத்தா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156624833317108
  31. கராச்சி பிஸ்கெட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156627783602108
  32. அசோகா அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156630432417108
  33. மட்டர் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156633179907108
  34. பாதுஷா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156635735752108
  35. பூதரேகுலு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156638395837108
  36. பக்லவா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156641110092108
  37. திராமிசு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156643968192108
  38. பாவ்லோவா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156646823662108
  39. பால்கோவா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156650476797108
  40. அதிரசம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156652186997108
  41. சாக்லேட் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156654695457108
  42. ஆரஞ்சு மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156658462922108
  43. மேக்ரான் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156661035187108
  44. சக்க வரட்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156662836912108
  45. நெய்யப்பம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156665376322108
  46. சோன் பப்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156668944512108
  47. மூங் தால் அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156670697182108
  48. பஞ்சாமிர்தம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156673294512108
  49. தேங்காய் லட்டு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156675750267108
  50. காலா ஜாமுன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156678449867108
  51. டோனட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156681099427108
  52. அச்சப்பம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156683789397108
  53. கேரமல் கஸ்டர்ட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156686288612108
  54. மில்க் பேடா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156689117217108
  55. ப்ளூ ரேஸ்ப்பெரி லாலிபாப் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156692007082108
  56. ஃபில்டர் காஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156695328612108
  57. கோதுமை லட்டு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156697870057108
  58. பருப்பு போளி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156700500477108
  59. பாதாம் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156703574562108
  60. ஆப்பிள் பை - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156706121887108
  61. டபுள் கா மீட்டா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156708914327108
  62. பாம்பே ஹல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156712276862108
  63. ரசமலாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156713871182108
  64. கடலை மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156717693122108
  65. க்ரே ஸ்டஃப் மூஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156719210752108
  66. கேரட் அல்வா -https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156722809987108
  67. தம்ரூட் அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156724543322108
  68. பீட்ரூட் அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156727825577108
  69.  பஞ்சு மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156729723572108
  70. ஓரியோ பிஸ்கெட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156732306642108
  71. தேங்காய் பன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156736232052108
  72. லிட்டில் ஹார்ட்ஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156737801587108
  73. மேங்கோ பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156740492837108
  74. காஜா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156743389422108
  75. ப்ளம் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156746987327108
  76. ப்ளூ வெல்வெட் கப்கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156748946212108
  77. ப்ளூ மொஹீட்டோ - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156751811262108
  78. க்ரீன் டீ ஐஸ்க்ரீம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156754292072108
  79. லைம் ஜெலடின் சாலட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156756829762108
  80. ராயல் ஃபலூடா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156759737102108
  81. சீஸ் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156762703747108
  82. ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156765726572108
  83. ஐஸ் கோலா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156768951222108
  84. சோர் ப்ளூ ஸ்டார்ஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156772636142108
  85. ஜெல்லி கேண்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156774259602108
  86. பிங்க் வெல்வெட் ரோல் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156778164012108
  87. பனானா கேரமல் டெஸர்ட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156779448397108
  88. ரவா கேசரி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156782068522108
  89. ரம்புட்டான் பழம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156784291882108
  90. யக்சிக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156786892432108
  91. ரெட் & ப்ளாக் ஜெல்லி பெர்ரீஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156790099742108
  92. ஐஸ் & ஃபயர் குக்கீஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156791973897108
  93. ஃபட்ஜ் ப்ரௌனி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156794744627108
  94. ஷாகி துக்டா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156797827057108
  95. செம்பருத்தி டீ குச்சி ஐஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156801222097108
  96. கரும்பு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156803757637108
  97.  ஹம்பக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156805442892108
  98. ரேஸ்ப்பெரி மூஸ் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156808935832108
  99. ஸ்பைருலினா ஸ்மூத்தி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156810751292108
  100. லிக்கரிஸ் ட்விஸ்ட்ஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156813357637108
  101. வெல்லக் கட்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156813384922108

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி