போலி சூழ் உலகு

ஜோ டி க்ரூஸ் உழைக்கும் வர்க்கமான மீனவர்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு தான் ஆழி சூழ் உலகு நாவலை எழுதி இருக்கிறார் (நான் இன்னும் நாவலைப் படிக்கவில்லை. நூல் மதிப்புரைகளின் வழி இதைச் சொல்கிறேன்). அதை ஒரு பதிப்பகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட விரும்புகிறது. அந்தப் பதிப்பகமும் மொழிபெயர்ப்பாளரும் அடிப்படையில் இடதுசாரி சந்தனை கொண்டவர்கள் அல்லது குறைந்தபட்சம் இந்துத்துவம் போன்ற விஷயங்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் அந்த நாவலின் இலக்கியத் தரத்தை விட, அது முன்வைக்கும் அரசியலுக்குத் தான் முக்கியத்துவம் தந்து அதை ஆங்கிலத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இப்போது  ஜோ டி க்ரூஸ் முழுக்க முழுக்க வலதுசாரிப் பின்னணி கொண்ட ஒரு கட்சியை நேரடியாய் ஆதரித்து அறிக்கை விட்டிருப்பதால் புத்தக வெளியீடை நிறுத்தி வைத்திருப்பது நிச்சயம் நியாயமானது தான். இதை அந்த பதிப்பகமும் மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளரின் எழுத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராக முன்வைக்கும் அடையாள எதிர்ப்பாகவே நான் பார்க்கிறேன். என்வரையில் இதில் எந்த துரோகமோ ஏதேச்சதிகார போக்கோ தென்படவில்லை.


நான் மோடி எதிர்ப்பாளன் என்பதால் இப்படிச் சொல்லவில்லை. பொதுவாகவே இவ்விஷயத்தில் என் நிலைப்பாடு இது தான்.

நான் ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதில் பெண்ணிய எழுத்துக்களைப் பதிப்பிப்பது வழக்கம். ஓர் ஆண் எழுத்தாளரின் பெண்ணியம் பேசும் படைப்பை நான் வெளியிட ஒப்பந்தம் போடுகிறேன். பிறகு அவர் மனைவியை அடிப்பவர் எனத் தெரிய வருகிறது என்றால் அவர் தன் எழுத்துக்கு முரணாக வாழ்கிறார் என்று அர்த்தம். அதைக் கண்டிக்கும் பொருட்டு நான் அவரைப் பதிப்பிக்க மறுப்பேன். இதே கதை தான் க்ரூஸுக்கும். மொழிபெயர்ப்பாளர் கணிசமான உழைப்பைச் செலவிட்டு புத்தக மொழிபெயர்ப்பு வேலையில் பாதி வேலையை முடித்திருக்கிறார். அப்படி இருந்தும் இப்போது அதைத் தூக்கி எறிய முடிவு செய்திருக்கிறார் எனில் அவர் கொள்கைரீதியாக க்ரூஸுக்குத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இன்னொரு விஷயம் இது கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறை என்பதாகக் கட்டமைப்பது. இது மிக தவறான புரிதலின் விளைவு. அல்லது சுத்தமான திரித்தல் வேலை. நான் ஒருபோதும் கருத்து சுதந்திரத்தை எதிர்த்தவன் அல்ல. இனம், டேம் 999 போன்ற விஷ முயற்சிகளைத் தடை செய்வதைக்கூட எதிர்ப்பவன். ஒரு படைப்பிற்கான எதிர்ப்பை கருத்தாகவோ இன்னொரு படைப்பாகவோ தான் முன்வைக்க வேண்டும், தடையாக அல்ல என்று நம்புபவன்.

ஆனால் இங்கு கருத்துரிமையே பாதிப்புறவில்லை. அரசு ஒரு விஷயத்தைத் தடை செய்தாலோ, பதிப்பகமே படைப்பை வெளியிடாமல் முடக்கி வைத்தாலோ தான் அப்படி எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இங்கே அப்படி ஏதும் நிகழவில்லை. இது ஒப்பந்த ரத்து மட்டுமே. இப்போது ஜோ டி க்ரூஸ் வேறு பதிப்பகம் / மொழிபெயர்ப்பாளரிடம் போய் புதிதாய் மொழிபெயர்ப்பைத் துவங்க எந்தத் தடையும் இல்லை. அதனால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதே கட்டமைக்கப்படும் பொய் பிம்பம் தான். இருக்கும் நூறு கதவுகளில் ஒரு கதவு மட்டும் அடைத்திருக்கிறது, அவ்வளவு தான். இந்த நிராகரிப்பு ஒருபோதும் தடையாகாது.

ஒப்பந்தத்தை ரத்து செய்தது அரசியல் வேலை என்றால் அதை அடக்குமுறை எனக் கட்டமைப்பதும் அரசியல் வேலை தான்.

 இதற்குப் பின்னணியில் அரசியல் கட்சிகளின் அழுத்தம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி இருக்காது என்பதே என் அபிப்பிராயம். இந்தியா முழுக்க சாரு நிவேதிதா, சேத்தன் பகத் உள்ளிட்ட எத்தனையோ பேர் மோடிக்கு ஆதரவாய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வராத பிரச்சனை க்ரூஸுக்கு மட்டும் ஏன் வர வேண்டும்? சொல்லப்போனால் சேத்தன் பகத் இவரை விட பல மடங்கு பிரபலம். அவர் பேச்சைக் கேட்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள். தமிழக அளவில் கூட க்ரூஸை விட சாருவுக்கே வாசகர்கள் அதிகம். அரசியல் அழுத்தம் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் பார்த்தால் சேத்தன் பகத்துக்கும், சாரு நிவேதிதாவுக்கும் தான் முதலில் வர வேண்டும். ஆனால் அப்படி ஏதும் வந்ததாய்த் தெரியவில்லை. க்ரூஸுக்கு மட்டும் வந்திருக்கிறது. எனில் இது நிலைப்பாட்டு முரண் காரணமாய் எழுந்த தனிப்பட்ட பிரச்சனையே எனத் தோன்றுகிறது. மாறாக, ஒருவேளை அரசியல் அழுத்தங்கள் இருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது தான்.

தான் சொல்லும் கருத்து தரக்கூடிய நல்வினைகள் கேடுகள், இரண்டையும் எதிர்கொள்ளும் திராணி வேண்டும் ஓர் எழுத்தாளனுக்கு. உலகம் முழுக்கவே எழுத்துக்காக சிறை சென்றவர்கள், நாட்டை விட்டுத் துரத்தப்பட்டவகள், உயிரை விட்டவர்கள் பலர் உண்டு. க்ரூஸுக்கு ஒரு பதிப்பகம் வெளியே போ என்று சொன்னது மட்டும் தான் நடந்திருக்கிறது. இதில் ஏதும் ஃபாஸிசமே இல்லை. அணுகும் போதே க்ரூஸுக்குத் தெரியாதா அது ஒரு இடதுசாரி பதிப்பகம் என? புத்தகத்தை வெளியிட மட்டும் இடதுசாரி பதிப்பகம், அரசியலுக்கு இந்துத்துவமா? க்ரூஸ் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் என்றால் இதற்கு ஒப்பாரி வைக்காமல் இது தன் நிலைப்பாட்டின் இயல்பான பக்கவிளைவு என்பதைப் புரிந்து கொண்டு அடுத்த பதிப்பகம் / மொழிபெயர்ப்பாளரைப் பார்க்க வேண்டும்.

இதைத் தவறென்பவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? அவரது எழுத்துக்கெதிராக நிஜ வாழ்வில் அவர் என்ன அரசியல் நிலைப்பாடு எடுத்தாலும், பதிப்பாளருக்கு அதில் சிறிதும் உவப்பில்லை என்றாலும் கண்டு கொள்ளாமல் படைப்பை மட்டும் வெளியிட வேண்டுமென்றா? பதிப்பாளருக்கு / மொழிபெயர்ப்பாளருக்கென்று ஒருபோதும் ஓர் அரசியல் நிலைப்பாடு என்பதே இருக்கக்கூடாது என்கிறார்களா? புத்தக வெளியீடை வெறும் வியாபாரமாக மட்டும் தான் பார்க்க வேண்டும் என்கிறார்களா? அப்படி இருப்பதில் நிச்சயம் தவறில்லை. ஆனால் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறல்லவா!

யோசித்துப் பார்த்தால் உண்மையில் அது தானே கருத்துத் திணிப்பு! அது தானே சுதந்திரப் பறிப்பு! அது தானே ஃபாசிஸம்!

Comments

kathir said…
சாருவுக்கு பரந்துபட்ட வாசகர் பரப்பு இருந்தாலும், அவரின் அரசியல் நிலைப்பாட்டை, மோடி ஆதரவு நிலையை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் வாசகர்கள் யாரும் இல்லை என்பதுதான் உண்மை.எனவே அவரை இங்கு உதாரணமாக குறிப்பிட்டுருக்க வேண்டியதில்லை.. மற்றபடி ஜே.டி குரூஸ் விஷயத்தில் எனக்கு ஒரு குழப்பம். ஒருவரின் பர்சனல் இண்ட்ரஸ்டை, அவரின் தொழிலுடன் முடிச்சி போடுவது முறையா? எழுத்தாளர்- பதிப்பகம் என்று பார்க்காமல் வேறு தொழில் துறையில் இவ்வாறு நடக்க வாய்ப்புள்ளதா? பர்சனலை புரபெஷனில் கலப்பது எவ்வகையில் நியாயமாகும்..

மற்றபடி உங்கள் இந்த பதிவு ஜே.டி குரூஸ் விஷயத்தில் ஒரு மாற்று சிந்தனை..

-கதிர்
@iKathir_
Anonymous said…
தல பதிப்பளர் தான் அவர் காலில் விலுந்து ஆங்கில மொழி பதிப்பை வாங்கி உள்ளர்
Anonymous said…
முழுமையாகத் தங்களோடு ஒத்துப்போகிறேன்.... தான் கொண்ட கொள்கைக்காகத் தான் உழைப்பைத் துறக்கத் தயாராக இருந்த எழுத்தாளரை(மொழிபெயர்ப்பாளரை) நாம் கொண்டாட வேண்டும்... அதேபோல் அந்த பதிப்பகமும் தனக்குப் பிடிக்காத கருத்துள்ள புத்தகத்தை வெளியீட்டு பணம் பார்க்க எண்ணாமல் புத்தகம் வெளியிடும் செயலையே கைவிட்டதும் கைதட்டவேண்டிய செயலாகும்... அவர் வேறொரு பதிப்பகம்/மொழிபெயர்ப்பாளர் மூலம் வெளியிடத் தடை இல்லை என்ற பிறகு இது ஒரு விவாதப் பொருளே இல்லை... உங்கள் கருத்து மெத்தச்சரி...
@ kathir

//ஒருவரின் பர்சனல் இண்ட்ரஸ்டை, அவரின் தொழிலுடன் முடிச்சி போடுவது முறையா?//

நிச்சயம் கூடாது. ஆனால் இந்தக் கேஸில் இரண்டுமே ஒன்று தானே. பதிப்பகமே இடதுசாரி சார்பு கொண்டது என்றாகி விட்ட பிறகு அவர்கள் க்ரூஸை எதிர்க்கத் தானே செய்வார்கள்! ஒரு ஹோட்டலில் வேலை செய்பவர் இன்னொரு ஹோட்டல் உணவு தான் சிறந்தது என்று பேசினால் ஓனருக்குக் கடுப்பாகி வேலையை விட்டுத் துரத்துவார் தானே! சரி இல்லை என்பீர்களா?
Anonymous said…
அய்யா சாமி ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றொழித்த காங்கிரசை ஆதரிக்கும் அனந்தமூர்த்தியின் புத்தகங்களை அச்சிட மாட்டோம் என்று எந்த இடது saree பதிப்பகமும் ஏன் பொங்கி எழவில்லை?ஏன் அவர் காங்கிரசை ஆதரித்த போது நீங்கள் இதே அளவு அறச்சீற்றம் காட்டவில்லை?
புழுத்த கம்யூனிசம் said…
பதிப்பகமே இடதுசாரி சார்பு கொண்டது என்றாகி விட்ட பிறகு அவர்கள் க்ரூஸை எதிர்க்கத் தானே செய்வார்கள்!///
.
.
அதான...இடதுசாரி என்றாலே மாற்று கருத்து கொண்டவனை நசுக்கு என்னும் தத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்த அமைப்புதானே..மிகச்சிறந்த உதாரணம் சோவியத்து யூனியன்.அங்கு மாற்று கருத்து கொண்டோர் gulagகொழுந்துகளாக்கபட்டு ராப்பகலாக பிழிந்து வேலை வாங்கப்பட்டு கடைசியில் தலையின் பின்புறத்தில் துப்பாக்கி வைத்து சுட்டு கொல்லபட்டார்கள்.அதானே உண்மை.அப்படி இருக்கும் போது இடதுசாரி பதிப்பகங்கள் எப்படி சகிப்புத்தன்மையோடு இருக்கும் என்று எதிர்பார்க்க இயலும்?இதே இடதுசாரி ஆட்சி நடந்த போது தஸ்லிமா நஸ்ரின் அடித்து உதைக்கபட்டபோது மூடிகிட்டு இருந்தது என்று ஊருக்கே தெரியும்.
பூட்ட கேசு கம்யூனிசம் said…
ஒரு ஹோட்டலில் வேலை செய்பவர் இன்னொரு ஹோட்டல் உணவு தான் சிறந்தது என்று பேசினால் ஓனருக்குக் கடுப்பாகி வேலையை விட்டுத் துரத்துவார் தானே! சரி இல்லை என்பீர்களா?///
.
.
அப்போ இந்த பதிப்பகம் இடதுசாரி புளித்த உணவை மட்டும் தருதா?சீ இந்த உணவு புளிக்கும்!
viki said…
திப்பகமே இடதுசாரி சார்பு கொண்டது என்றாகி விட்ட பிறகு அவர்கள் க்ரூஸை எதிர்க்கத் தானே செய்வார்கள்! ஒரு ஹோட்டலில் வேலை செய்பவர் இன்னொரு ஹோட்டல் உணவு தான் சிறந்தது என்று பேசினால் ஓனருக்குக் கடுப்பாகி வேலையை விட்டுத் துரத்துவார் தானே! சரி இல்லை என்பீர்களா?///
.
.
self announced intellectual சி எஸ் கே உங்களின் அறிவுத்திறன் புல்லரிக்க வைக்கிறது.நீங்கள் சொல்வது எப்போது சரி?ஒருவேளை இந்த ஆழி சூழ் உலகில் மோடி புகழ் பாடப்பட்டிருந்தால் அல்லது அந்த நூலில் வலதுசாரி கருத்துக்கள் இருந்தால் நீங்கள் சொல்வது சரி.ஆனால் அந்த புத்தகத்தில் அப்படி எதுவும் இல்லை என்ற பின்னர் தானே இந்த பதிப்பகம் இவரை அணுகியது?அந்த புத்தகத்தின் கன்டென்ட் தான் அச்சிடப்பட வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுமே ஒழிய புத்தகம் எழுதுபவரின் கருத்துக்கள் doesnt matter.அப்படி பார்த்தால் பார்ப்பன ஆதரவாளரான சுஜாதாவின் புக் ஒன்றுகூட இங்கு அச்சிட பட்டிருக்க கூடாது.
நண்பர் லாண்டரி கடை வைத்துள்ளார்.துணிகளை திரும்ப பெற்றபோது வெற்று பேப்பரில் கணக்கெழுதி கொடுத்தார்.ஏன் பில் புக் இல்லையா?என்று கேட்டேன்."எனது அரசியல் நிலைப்பாட்டை காரணம் காட்டி பில் புக் அச்சிட மாட்டோம்" என்று பதிப்பகங்கள் சொல்லிவிட்டனவாம்.பிறகு தனது மனைவியோடு தம்பதியாக சென்று பதிப்பகத்தில் பேசியிருக்கிறார்.இடதுsaree ஆதரவாளர் என்று பிறகுதான் நம்பிக்கை உண்டாகி பில் புக் இப்போது அச்சாகி விட்டதாம்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்