G2K2K : இந்துக்கள் மீதான வன்முறை

சுமார் ஒரு வாரம் முன் எனக்கு வந்த மின்னஞ்சல் இது:

Dear author,

I read your book. Its very good. I really appreciate your hardwork in collecting all data related to the topic. Its very impressing about your guts too. And I have a small doubt about your research on this topic. That's U have mentioned only about the Hindus violence at Muslims. U haven't mentioned about Muslims violence at Hindus. What is the reason for it? Awaiting for your response as soon as possible.

By
D.T.Rajasekaran,
Reader for Erode

Sent from my Windows Phone

*

குஜராத் 2002 கலவரம் நூலின் முதல் வாசகனான என் நண்பன் இரா.இராஜராஜன் தொடங்கி பலரும் முன் வைத்திருக்கும் கேள்வி தான் இது. 2002 குஜராத் கலவரங்களில் இந்துக்கள் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து புத்தகம் ஏதும் சொல்லவில்லையே என்பதே அது. கிட்டத்தட்ட நூலின் (அதன் நீட்சியாக என் நிலைப்பாட்டின்) அடிப்படை நேர்மையை அல்லது துல்லியத்தை சந்தேகிப்பது போல் இந்தக் கேள்வி நிற்பதால் அதைப் பற்றி தெளிவாக பதில் சொல்லி விடுவது முக்கியமானதாய்ப்படுகிறது.

2002 குஜராத் கலவரங்களில் மோடிக்கு தொடர்பே இல்லை என்று உறுதியாய் பேசும் தரவுகள் உட்பட நான் இதுகாறும் வாசித்த வரை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தக் கலவரங்களில் இந்துக்கள் முஸ்லிம்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் மிக மிகக்குறைவே. கலவரம் முழுக்க இந்துக்கள் கை தான் ஓங்கி இருந்தது. வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் காயம் ஏற்பட வாய்ப்புண்டு என்ற தர்க்கத்தின் அடிப்படையில் தான் பெரும்பாலும் இந்துக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் அமைந்தன.

பெரும்பான்மையான இந்துக்கள் கொல்லப்பட்டது முஸ்லிம்களால் அல்ல; அது போலீஸின் துப்பாக்கிச் சூட்டிலும், இந்துக் கலவரக்காரர்களாலும் தான். சில இந்துக்களை முஸ்லிம்கள் எனத் தவறாகக் கருதியும், இன்னும் சிலரை முஸ்லிம்களுடன் நெருக்கமாகவோ அல்லது ஆதரவாகவோ இருந்ததால் தெரிந்தேவும் இந்து கலவரக்காரர்கள் கொன்றனர். இந்துக்களின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்களில் போலீஸ் உடனடியாக இறங்கி அதைத் தடுத்து செயலாற்றினர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இவை எல்லாம் பற்றி புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தில் (18) எழுதி இருக்கிறேன். இது போக கோத்ரா ரயில் எரிப்பே இந்துக்கள் மீதான கோரத் தாக்குதல் தானே! அதைப் பற்றி விரிவாக அத்தியாயம் 5ல் எழுதி இருக்கிறேன். 2ம் அத்தியாயம் முழுக்கவே இந்திய வரலாற்றில் முஸ்லிம்கள் இந்துக்கள் மீது நடத்திய வன்முறைகளின் தொகுப்பு தான். இது போக ஆங்காங்கே முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்த தகவல்களை சொல்லி இருக்கிறேன். என் வரையில் 2002 குஜராத் கலவரங்களில் இந்துக்கள் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து அதன் வீச்சின் (degree) அடிப்படையில் தேவையான அளவு என் நூலில் பதிவு செய்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

போலீஸ், லோக்கல் ஊடகங்கள் என அப்போது எல்லாமே இந்துக்களுக்கு ஆதரவாகவே இருந்தன. சிறுசிறு நிகழ்வுகள் தாண்டி ஏதேனும் குறிப்பிடும்படி நடந்திருந்தால் நிச்சயம் ஊதிப் பெரிது படுத்தி இருப்பர். அப்படி ஏதும் சம்பவங்கள் வாசிக்கக் கிடைக்கவே இல்லை. சுருக்கமாகச் சொன்னால் நரோடா பாட்டியா, குல்பர்க் சொஸைட்டி, பெஸ்ட் பேக்கரி போன்ற பிரம்மாண்டமான நினைவுச் சம்பவங்கள் ஏதும் முஸ்லிம்களால் இந்துக்களுக்கு 2002 கலவரங்களைப் பொறுத்தவரை நிகழ்த்தப்படவில்லை.

ஒருவேளை அப்படி ஏதேனும் நடந்து அது பற்றிய போதுமான தகவல்கள் பதிவாகாமல் இருந்தாலோ, அல்லது பதிவாகி இருந்தும் நான் வாசிக்கத் தேர்ந்தெடுத்த தரவுகளில் விடுபட்டிருந்தாலோ பிழையே (2ம் வகையில் ஏதேனும் இருப்பின் சுட்டிக் காட்டினால் தவறைத் திருத்திக் கொள்கிறேன். அடுத்த பதிப்பில் சரி செய்யவும் முயலலாம்).

இது தான் இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் என் பதில். ஏற்கனவே பலமுறை சொன்னது தான்: இது இந்து மதம் அல்லது நரேந்திர மோடிக்கு எதிரான புத்தகமோ இஸ்லாம் அல்லது காங்கிரஸுக்கு ஆதரவான முயற்சியோ அல்ல. நடந்த வரலாற்றை முடிந்த அளவுக்கு மிகத் துல்லியத்துடன் பதிவு செய்வது மட்டுமே நோக்கம்.

நடுநிலைமை என்பது இரு தரப்பையும் சம அளவில் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ அல்ல; எது உண்மையோ அதை ஏற்றாமல் இறக்காமல் சொல்வது. இந்திய சுதந்திரப் போரை நடுநிலைமையாக எழுதுகிறேன் பேர்வழி என்று பிரிட்டிஷாருக்கு காந்தியால் நேர்ந்த இழப்புகள் என்று சோகமாக ஒரு வரலாற்றுக் குறிப்பை எழுத முடியுமா?

*

Comments

நட்டுகுத்துவியாதி said…
எது உண்மையோ அதை ஏற்றாமல் இறக்காமல் சொல்வது./////.....காஷ்மீரில் பண்டிட்டுகளை அடித்து விரட்டிய போது உங்க நடுநிலை எங்கே நட்டுகிட்டு நின்னுச்சு?பங்களாதேசில் ஹிந்துக்கள் பட்ட அவஸ்தைகளை லஜ்ஜா என்று நாவலாக எழுதிய தஸ்லிமா நஸ்ரினை அடித்து உதைத்த இசுலாமியர்கள் அதற்கு உதவிய காம்ரேடுகள் இதை பற்றியெல்லாம் பேசவே கூடாது!காஷ்மீர் சட்டசபையில் மதசார்பற்ற என்ற வார்த்தையை சேர்க்க காம்ரேடுகள் உட்பட காங்கிரஸ் வரை அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தது பற்றியெல்லாம் பேசவே மாட்டோம்..வாழ்க நடுநிலை.வாழ்க இந்தியாவில் மட்டும் பேசப்படும் மதசார்பின்மை!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்