G2K2K @ CBF2014

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது குஜராத் 2002 கலவரம் புத்தகம் நல்ல வரவேற்பினைப் பெற்றிருப்பதை அறிகிறேன். கிழக்கு பதிப்பகத்தின் முதல் ஒன்பது நாட்களின் விற்பனையில் டாப் 10 இடங்களுக்குள்ளும் புத்தகக் கண்காட்சியின் முடிவில் 16வது இடத்திலும் வந்திருக்கிறது. புத்தகக் கண்காட்சி விற்பனை அடிப்படையில் இது வரையிலான என் ஐந்து புத்தகங்களுள் இது தான் பெரிய‌ ஹிட். இது மகிழ்வையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.

முதல் ஒன்பது நாட்களின் கிழக்கு டாப் 10 பட்டியல்: http://www.badriseshadri.in/2014/01/10.html
மொத்த புத்தகக்காட்சியின் கிழக்கு டாப் 25 பட்டியல்: http://www.badriseshadri.in/2014/02/2014-25.html
புத்தகக்காட்சியில் நடந்த விற்பனை பற்றிய கட்டுரை: http://www.aazham.in/?p=3820

பொதுவாய் என் புத்தகங்களின் மார்கெட்டிங் பற்றியோ அதில் வரும் ராயல்டி குறித்தோ பெரிதாய் அக்கறை என்று ஏதும் இருந்ததில்லை இதுவரை. சமீபத்தில் நான் போயிருந்த The Times of India Literary Carnival என் எண்ணத்தை சற்றே மாற்றி இருக்கிறது. மேற்சொன்னவற்றில் முறையே என் கடமையும் உரிமையும் இருப்பதை எனக்கு நினைவுறுத்தி இருக்கிறது.

ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு பதிவு மீண்டும் தொடரும்.

*

குஜராத் 2002 கலவரம் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-168-9.html


*

இந்தப் புத்தகத்தை நல்ல முறையில் எடிட் செய்த கிழக்கு அசிரியர் மருதனை இந்தத் தருணத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். புத்தகம் பற்றிய என் ப்ரப்போசலை நான் சொன்னதிலிருந்தே அவர் காட்டிய ஆர்வமும் ஆதரவும் அளப்பரியது. நான் சொன்ன தேதிக்கு மிகவும் தாமதித்தே புத்தகத்தின் இறுதிப் பிரதியை அவருக்குக் கையளித்தேன். குறைந்த அவகாசத்தைக் கையில் வைத்துக் கொண்டு அவர் சிறப்பாக புத்தகத்தை எடிட் செய்தார்.

அப்போதே புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் டாப் செல்லர்களில் ஒன்றாக இது வரும் என்று ஆரூடம் சொன்னார். ஒரு வளரும் எழுத்தாளனை ஊக்குவிக்கும் சொல்லாகவே அதை எடுத்துக் கொண்டேன். அதற்காகவே புத்தகக் காட்சியின் முதல் நாளிலிருந்தே புத்தகம் தயாராகி ஸ்டாலுக்கு வந்து விட வேண்டும் என்றெண்ணித் தனிப்பட்ட‌ பிரயத்தனங்கள் மேற்கொண்டார். அவரது அம்முயற்சிகள் காரணமாகவே இரண்டாம் நாளிலிருந்து புத்தகம் கிடைக்கத் தொடங்கியது.

அதனால் புத்தகத்தின் வணிக வெற்றிக்கு அதன் உள்ளடக்கம் தாண்டி மருதனின் அக்கறை ஒரு முக்கியமான‌ காரணம்.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி