குஜராத் 2002 கலவரம் என்பதை இனி சுருக்கமாக G2K2K எனக் குறிப்பிடலாம். ஜனவரி 2014 ஆழம் இதழில் மோடி / குஜராத் பற்றிய மருதன், அரவிந்தன் நீலகண்டன் நூல்களுடன் G2K2K பற்றியும் ஓர் அறிமுகக் கட்டுரை வந்துள்ளது.
தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட
சாகஸ ராத்திரி! அந்தப் பெயரே ஜிலீர் என்றிருந்தது சில்வியாவுக்கு. ADVENTURE NIGHT என்று காப்பர் ப்ளேட் கோத்திக் எழுத்துருவில் அச்சிடப் பெற்ற அந்த நுழைவுச் சீட்டை எடுத்தாள். முகமூடி, மதுக்கோப்பை, வாண வேடிக்கைக்கிடையே Happy New Year’s Eve – 2018. ₹ 1,00,000 என்றிருந்த பொன்ஜிகினாப் புடைப்பை விரல்களால் ஆதூரமாய்த் தடவினாள். பார்த்திபன் முதலில் அதைச் சொன்ன போது விளையாடுகிறான் என்றே நினைத்தாள். “ச்சீய்… போடா பொறுக்கி!” அவன் எப்போதும் அப்படித்தான். ஆபாசமாய்ப் பேசிச்சிரிக்க வைப்பதில் அசகாயசூரன். சில்வியா திருமணமாகி இவ்வூருக்கு வந்து இரண்டரையாண்டுகள் ஆகின்றன. மொழி தெரியாத மிலேச்சர்கள் சூழ வாழும் அந்த அந்நியப் பிரதேசத்தில் ஒவ்வொரு பகலும் ஒவ்வொரு ராத்திரியும் அத்தனை அனுபவித்து, அத்தனை ரசித்து நகர்த்த முடிகிறது அவளுக்கு. சண்டைகள் ஏராளம். அதன் பின்பான கொஞ்சல்கள் அதினினும் தாராளம். பார்த்திபனுக்கு எல்லாமே த்ரில்தான். பெய்யும் மாமழையில் நனைந்தபடி சில்ட் பியர் அருந்துவதாகட்டும், கோடைக்கானல் ‘குணா’ பாறையினுள் அவள் கையை இறுகப் பற்றியபடி இறங்குவதாகட்டும், தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 150 கில
இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்
Comments