தமிழ் சினிமா: இளைஞர்கள் சித்தரிப்பு

புதிய தலைமுறை இதழில் இன்றைய தமிழ் சினிமாவில் ந‌ம் இளைஞர்கள் முன்வைக்கப்படும் முறை குறித்து கருத்து கேட்டிருந்தார்கள். அது பற்றி நான் சொன்னவற்றின் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகி இருக்கிறது. முழு வடிவம் இது:

சினிமா என்பது இன்ன பிற‌ கலை வடிவங்களைப் போல் சமூகத்தைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாய்த் தான் இருக்க வேண்டும். பெரும்பாலும் தமிழ் சினிமா அதைச் செய்வதில்லை. எந்தவொரு நிலவியலையும் போல் தமிழ்ச் சூழலிலும் இளைஞர்களில் ரவுடிகளும் பொறுக்கிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையின் குணம் அதுவல்ல. பெரும்பான்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான‌ படங்களே வருகின்றன. தங்க மீன்கள் சமீபத்திய‌ உதாரணம். மற்ற அனைத்துமே வெகுஜன ரசனையைக் குறி வைத்து அல்லது அப்படி நினைத்துக் கொண்டு சில டெம்ப்ளேட் கதாநாயக பிம்பங்களை உருவாக்கி எடுக்கப்படுபவை. கற்பனை வறட்சி மற்றும் புதியவற்றை முயற்சிக்கத் தயங்கும் வணிக‌ அழுத்தம் காரணமாக இது நடக்கிறது. மசாலா படங்களில் மட்டும் அல்லாமல் யதார்த்த சினிமாக்களிலும் கூட இது நிகழ்கிறது. ஆனால் சமூகம் அதைப் பார்த்து கெடுகிறது என்றால் அது சமூகத்தின் பிரச்சனை தான். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே என்று பார்வையாளன் உணர்ந்திருக்க வேண்டும்.

Comments

சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே என்பதை நன்றாக இன்றைய படித்தவர்கள் உணர்ந்து உள்ளார்கள் என்பது மட்டும் உண்மை...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்