மோடியை முன்வைத்து பத்ரிக்கு சில கேள்விகள்

டியர் பத்ரி,

இட்லிவடை தளத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து பார‌திய ஜனதா கட்சி மற்றும் நரேந்திர மோடியைப் பற்றி (அவர் பெயர் மோடி அல்ல, மோதி என்று உங்கள் பதிவிலிருந்து அறிய நேர்ந்தது. நான் மோடி என்றே உச்சரித்துக் கொள்கிறேன், தமிழில் கேலி செய்ய அது தான் வசதி!) நீங்கள் எழுதிய‌ மூன்று கட்டுரைகளையும் (1, 2, 3) வாசித்தேன்.

அவற்றில் முதல் இரண்டு பற்றி - நரேந்திர மோடியை ஹீரோவாய் முன்னிறுத்தியது தவிர‌ - பெரிய ஆட்சேபங்களோ, விலகலோ இல்லை. சொல்லப் போனால் அந்த அலசல் பிடித்திருந்தது (அதை நேற்று ட்விட்டரில் பதிந்தும் இருந்தேன்). நரேந்திர மோடி பாஜகவின் பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை justify செய்தும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சார்ந்து பாஜகவின் லாப நஷ்டக் கணக்கு பற்றியும் எழுதி இருந்தது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் இந்த தேர்தல் பரிட்சையில் வெற்றி பெறுவார் என மோடி Vs Rest of BJP, மோடி Vs Rest of All Indian Parties அடிப்படையில், அவரது ஆளுமையின் மீதான ப்ரியத்தில் சொல்லி இருந்தது வரையிலும் கூட பிரச்சனையில்லை.

ஆனால் இன்றைய பதிவில் சில நெருடல்கள் இருக்கின்றன. அதைத் தெளிவு செய்து கொள்ளும் முகமாகவே இப்பதிவு.

அதில் மதச்சார்புள்ள கட்சி என்பதைத் தாண்டி அல்லது அந்த பிம்பத்தைத் தாண்டி நீங்கள் மோடி தலைமையிலான பாஜகவை ஏன் ஆதரிக்கிறீர்கள் எனச் சொல்லி இருக்கிறீர்கள். அதில் விடுபட்ட ஒரு முக்கிய‌ விஷயம் பற்றியே நான் உங்கள் கருத்தை அறிய‌ விரும்புகிறேன். நீங்கள் இந்து, அதிலும் பிராமணர் என்ற மேலோட்ட அடையாளப்படுத்தலில் எழும் சந்தேகம் அல்ல இது. அரசியலில் உங்கள் கருத்துக்களை அவ்வப்போது கவனித்து வருபவன் என்ற முறையில் இங்கே அரசியல் விமர்சனம் செய்யும் எந்த சமகால எழுத்தாளர்களை / கவிஞர்களை விடவும் உங்களின் கருத்துக்களில் சமரசமற்ற‌ நேர்மை இருப்பதாக நம்புவதால் அதில் நுழையும் உறுத்தலைப் புரிந்து கொள்ளும் எளிய‌ முயற்சியே இது.

இந்தக் கேள்விகளை நீங்கள் இதற்கு முன்பும் எதிர்கொண்டிருக்கக்கூடும், பதில் கூடத் தந்திருக்கலாம். தேடி விட்டேன். கண்களில் படவில்லை. அதனால் கேட்கிறேன். தவிர, ஏற்கனவே சொல்லி இருந்தாலும் கூட இத்தருணத்தில் அழுத்தம் திருத்தமாக இதற்கு மறுபடி பதில் சொல்லி விடுவதே உங்கள் கருத்தை முழுமையானதாக ஆக்கும் எனத் தோன்றுகிறது.

"பிரதமர் பதவிக்கு வாய்ப்பு இருப்பவர்களில் ஒப்பீட்டளவில் நல்ல நிர்வாகி, ஊழல் அற்றவர். அதனால் தேச‌ வளர்ச்சியில் மட்டும் வலதுசாரிக் கருத்துடையவனாக, கட்சியின் குறைகள் தாண்டி, மோடியை ஆதரிக்கிறேன்" என்பதே இன்றைய உங்கள் கட்டுரையின் பிற்பகுதியின் ஒன்லைனாகப் புரிந்து கொள்கிறேன் (என் புரிதல் தவறெனில் தெளிவுபடுத்த‌வும்).

இதில் ஒரு விஷயத்தை நீங்கள் விளக்க‌ வேண்டியது உங்கள் கடமை என்று எதிர்பார்க்கிறேன். பெரும்பாலானோர் பாஜகவை எதிர்ப்பது உடை, நாகரிகம், காதல், ஒழுக்கம் போன்ற விஷ‌யங்களில் அக்கட்சியும் அதன் கூட்டாளிகளும் கொண்டிருக்கும் அடிப்படைவாதக் கருத்துக்களுக்காக மட்டும் அல்ல. அவை வெறும் சித்தாந்தரீதியான முரண்கள் தாம். அதனால் நேரடி வாழ்வில் பாதிக்கப்படும் மக்களும் பாதிப்பின் அளவும் பார்த்தவரை பெரிய அளவில் இல்லை. ஆனால் அந்த விஷயங்களின் கவர்ச்சி காரணமாக (பப்களில் பெண்களை அடிப்பது, பொம்மைகளுக்கு உள்ளாடை அணிய வைத்து விளம்பரம் செய்யக் கூடாது, ஆணும் பெண்ணும் பேசினால் தாலியோ ராக்கியோ கட்ட வேண்டும், வருண பகவானுக்குப் பூஜை செய்தால் மழை வரும்) அவை மீடியாக்களால் பெரிதாக்கப்பட்டு பாஜக உள்ளிட்ட கட்சிகளிடமிருக்கும் பிரதான பிரச்சனையே பிற்போக்குத்தனமும் மாரல் போலீஸிங்கும் தான் என்ற பிம்பத்தை சமீபங்களில் உருவாக்கி விட்டனர்.

(கொள்கைக் கோளாறு பிரச்சனையே அல்ல என சொல்லவில்லை. பாஜக உள்ளிட்டோர் மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் இருக்கிற பிரச்சனைகளில் இவை முக்கியமல்ல என்கிறேன். மற்றபடி சித்தாந்தங்களில் நேரிட்ட குளறுபடிகளால் மோசமான படுகொலைகளும் கலவரங்களும் சரித்திரம் கண்டிருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தே இருக்கிறேன்.)

ஆனால் இவற்றைத் தாண்டி பாபர் மசூதி இடிப்பு போன்ற மத துவேஷ நிகழ்வுகள், 2002 குஜராத் போன்ற‌ மதக்கலவரங்கள் இரண்டும் தான் நடுநிலையாளர்கள் பாஜகவை - குறிப்பாய் மோடியை - அஞ்ச முக்கியக் காரணங்கள் என்பது என் புரிதல். இங்கே தான் உங்கள் விளக்கம் தேவைப்படுகிறது. மூன்று முக்கியமான கேள்விகள் இது தொடர்பாய் இருக்கின்றன:

1) சிறப்பு புலனாய்வுக்குழு அளித்த clean chit தாண்டி, 2002 குஜராத் மதக்கலவரத்தில் மோடியின் நேரடி பங்கு குறித்து எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. பெரும்பாலானோருக்கு அப்படித் தான். நேரடி பங்கு என நான் சொல்வது என்னவெனில் முஸ்லிம்கள் கலவரத்தில் இறந்ததை கோத்ரா ரயில் எரிப்புடன் சம்மந்தப்படுத்தி நியூட்டனின் மூன்றாம் விதி என வீராவேசமாய்ப் பேசியதை அல்ல; "அடுத்த சில நாட்களுக்கு இந்துக்கள் முடிந்த அளவு முஸ்லிம்களைக் கொன்று குவிப்பார்கள், அரசாங்கமும் போலீஸூம் அதைக் கண்டு கொள்ளத் தேவை இல்லை, வேண்டுமானால் நீங்களும் அதற்கு உதவலாம்" என்ற வாய்மொழி உத்தரவை ஐஏஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கும் அளவுக்கு மதவெறியுடன் நடந்து கொண்டிருக்கிறார் என்பதே என் நம்பிக்கை. மோடியின் நேரடி ஆதரவு இருக்கிறது என்று நன்கு தெரிந்த பின்பே கலவரங்கள் இன்னமும் தைரியமாக தீர்க்கமாக பரவலாக நடந்தப்பட்டன என்பதே என் புரிதல். இதில் உங்கள் கருத்து என்ன? பங்கு இல்லை எனில் ஏன் அப்படிக் கருதுகிறீர்கள்? பங்கு உண்டு எனில் எந்த வகையில்? 

முதல் கேள்விக்கு பங்கு உண்டு என்று சொல்லி இருந்தால் அடுத்த இரண்டு கேள்விகளுக்குப் போகவும். Else ignore them.

2) இப்படி செயல்பட்டது எந்த அளவிலான குற்றம் என நினைக்கிறீர்கள்? அதற்கான தண்டனை என்ன? நீங்கள் தேச நலனை முன்னிட்டுக் கவலைப்படும் ஊழல் குற்றங்களுடன் ஒப்பிடுகையில் இது பெரியதா சிறியதா? இந்தக் குற்றம் செய்தவர் முதலில் தேர்தலில் நிற்கலாமா? சிலபல‌ கொலைகள் செய்த பேட்டை ரவுடிகளே இப்போதெல்லாம் தேர்தலில் அனுமதிக்கப்படுவதில்லை. இது போன்ற செயலில் இறங்கியவரின் உளவியல் என்ன? அவர் எவ்வளவு சிறந்த நிர்வாகி எனினும் ஆபத்தானவர் இல்லையா? ஹிட்லர் கூட சிறந்த நிர்வாகி, பெரிய போர்தந்திரி, மிகுந்த புத்திசாலி என்று தான் வரலாற்றறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால் யூதர்கள் மட்டும் அவரை எதிர்க்கவில்லை, உலகமே தான் இன்று அவரை உமிழ்கிறது. பிரச்சனை யூதர்களைக் கொன்றது அல்ல; மனித உயிர்களை இப்படிக் கையாண்ட ஒருவன் ஒட்டுமொத்த‌ மனித குலத்துக்கே தான் எதிரி என்பதே இங்கே புரிதல். அவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அவனை ஆதரிக்கத் தேவையில்லை என்பது இதன் நீட்சி. ராஜபக்ஷேவுக்கும் இதே விதி தான். மோடிக்கும் இதே விதி தானே?

3) அப்படி முஸ்லிம்களைக் கொன்று குவித்த ஒருவரை ஏன் ஆதரிக்கிறீர்கள்? அவர் செய்தது பிழை தான், இப்போது திருந்தி விட்டார், இனி செய்ய மாட்டார் என்ற அடிப்படையிலா? இனி செய்ய மாட்டார் என நம்புகிறீர்கள் எனில் எந்த அடிப்படையில்? இனிமேல் செய்யக்கூடாது என முடிவெடுத்திருந்தால் அது ஆட்சியைப் பிடிக்கும் / நீடிக்கும் நோக்கிலா அல்லது நிஜமாகவே தன் குற்றத்தை உணர்ந்து எடுத்த முடிவா? அல்லது இனிமேலும் செய்ய வாய்ப்புண்டு, ஆனால் நாட்டுக்கு நல்லது நடக்கும் போது இது போன்ற சிறிய இழப்புகளைப் பொறுத்துப் போக வேண்டும் என்ற நிலைப்பாடா?

எல்லாக் கேள்விகளிலும் குஜராத்துக்குப் பதில் அயோத்தியையும் மோடிக்கு பதில் அத்வானியையும் போட்டு நிரப்பினால் பொருந்தத் தான் செய்யும். ஆனால் ஒப்பீட்டளவில் அத்வானி ஆபத்து குறைவானவர் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர் கலவரத்தை முன்னின்று நடத்தவில்லை. அவர் செய்த ஒரு விஷயம் கலவரங்களுக்கு வித்திட்டது. அவர் மோடி அளவு திறமைசாலியும் கிடையாது என்பது தான் அடுத்த பயம். எல்லாக் குற்றங்களையும் நாசூக்காக நிகழ்த்தி விட்டு அதிலிருந்து நேக்காக தப்பிக்க மோடிக்குத் தெரியும். அதனால் தான் அத்வானியைப் பற்றி இங்கே பேசவில்லை. தவிர இப்போது அவர் சீனிலேயே இல்லை என்பதால் அவரைக் குற்றம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

குஜராத்தின் வளர்ச்சியே ஒரு மாயை என்ற conspiracy-ஐத் தாண்டி என் வரையிலும் வாய்ப்புள்ளவர்களில் மோடி அளவுக்கு நல்ல‌ நிர்வாகி வேறு எவரும் இல்லை தான். ராகுல் பிரதமர் என்பதை நினைத்துப் பார்த்தாலே வாந்தி வருகிறது. அவர் இல்லையென்றால் மீண்டும் மன்மோகன் தான். நிதீஷ், முலாயம், மம்தா, மாயவதி, ஜெயலலிதா எல்லாம் ஒருவரை மற்றவர் ஏற்க மாட்டார்கள். மோடி பெட்டர் தான். ஆனால் அவரது ஒழுக்கச் சரிதம் அவ்வளவு சிறப்பாக இல்லை. "Incompetency can be tolerated but not indiscipline" என்பதால் மோடியை வேறுவழியின்றி நிராகரிக்க வேண்டியதாகிறது.

அந்த ஒரு மோசமான‌ துன்பியல் நிகழ்வுக்காகவே நரேந்திர‌ மோடியை என் மனதில் அடியாழத்திலிருந்து வெறுக்கிறேன். அவர் நாளை இந்தியாவை வல்லரசு ஆக்கினாலும் அந்த அபிப்பிராயம் மாறப் போவதே இல்லை என்று தோன்றுகிறது.

உங்கள் கட்டுரையின் ஒரு பகுதியில் தென்பட்ட (என் வரையில் மிகப்பிழையான) ஒரு தொனி பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். முஸ்லிம்களின் வீட்டோ பாஜக ஆட்சிக்கு வரத் தேவையில்லை என்பது உண்மையே. அதாவது எந்த முஸ்லிமும் ஆதரிக்காவிட்டாலும் பாஜகவால் ஆட்சிக்கு வர முடியும் என்பதை பலமுறை ரிபீட் செய்திருக்கிறீர்கள். நிதர்சனம் அதுவென்றாலும் அதை அட்வான்டேஜ் ஆக‌ நினைப்பதே தவறு தானே? எந்த ஒரு சிறுபான்மையினர் மீதான பார்வையும் இப்படி இருந்தால் அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று தானே அரசு முடிவெடுக்க முடியும்? இதை அப்படியே எடுத்துக் கொண்டு பாஜக செயல்பட்டால் முஸ்லிம்கள் எப்படி அவர்கள் ஆட்சியில் நன்றாக இருக்க முடியும்?

நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை தான். ஆனால் எல்லா உண்மையையும் சொல்லி விட்டீர்களா என்பதே கேள்வி.

-CSK

*******

பிற்சேர்க்கை:

இந்திரா காந்தி படுகொலையை ஒட்டி சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய 1984 கலவரங்களை மறந்தது ஏன் என நீங்கள் கேட்கலாம். சர்வநிச்சயமாய் அது மதத் துவேஷம் தான். கண்டிக்கத்தக்கது தான். அதில் சம்மந்தப்பட்டவர்கள் யாரையும் ஆதரிக்ககூடாது என்பதே என் கருத்தும். அவர்களில் பலர் தொடர்ந்து எம்எல்ஏக்களாகவும் எம்பிக்களாவும் கேபினெட் மந்திரிகளாகவும் தொடர்ந்தார்கள் / ஆனார்கள் என்பது உண்மையே. ஆனால் அதை செய்தவர்கள் யாரையும் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் நிற்க வைக்கவில்லை. தவிர, இப்போது அவர்களில் பெரும்பாலானோர் உயிரோடும் இல்லை. கொலைகாரர்கள் இருந்த கட்சி தான் காங்கிரஸ். அதன் தற்போதைய தலைமுறை உறுப்பினர்களுக்குள்ளும் அந்த விஷம் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடும். ஈழத்தமிழர்களைக் இலங்கை கொன்றதிலேயே அவர்களுக்கு மறைமுகப் பங்கு இருக்கிறதே. நான் அதை மறுக்கவே இல்லை. ஆனால் மோடி போல் இங்கே வாழும் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மீது காழ்ப்பு கொண்டு  நேரடியாக கொலைகளைத் தூண்டியர்கள் எவரும் அதில் உயர்பொறுப்பில் அல்ல. தவிர, என் மோடி எதிர்ப்பென்பது காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு என்பலிருந்து வந்ததல்ல‌ என்பதையும் இங்கே உணர வேண்டும்.

-CSK

Comments

Sankar said…
> ஜராத் மதக்கலவரத்தில் மோடியின் நேரடி பங்கு குறித்து எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை

எனக்கு உண்டு. அவருடைய நேரடிப் பங்கு என்ன என்பது சாட்சியங்களின் மூலமாக நிறுவப்படாத ஒன்று.

> அரசாங்கமும் போலீஸூம் அதைக் கண்டு கொள்ளத் தேவை இல்லை, வேண்டுமானால் நீங்களும் அதற்கு உதவலாம்" என்ற வாய்மொழி உத்தரவை ஐஏஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கும் அளவுக்கு மதவெறியுடன் நடந்து கொண்டிருக்கிறார் என்பதே என் நம்பிக்கை.

இதற்கும் எந்த நேரடி சாட்சியமும் எனக்குத் தெரிந்து இல்லை.

தவிர, அரசாள்பவர்கள் அனைவருக்கும் இது போல குற்றச்சாட்டுகள் உண்டு. இந்திரா காந்தி இறந்த போது ராசீவ் நடந்து கொண்ட முறையை விட மோதி சிறப்பாகவே, நடுநிலைமையுடன் செயல்பட்டார் என்பது என் கருத்து. அக்காலத்தைப் போல பல நாட்களுக்கு ரத்த ஆறு ஓடவில்லை. இதில் இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நான் வருந்துகிறேன். ஆனால் இதில் மோதிக்கு நேரடித் தொடர்பு உண்டு என்று சொல்வது ஊடகங்களின் பொய் பரப்புரையே அன்றி உண்மை அல்ல என்பது என் கருத்து (இப்போதைக்கு).

> எல்லாக் குற்றங்களையும் நாசூக்காக நிகழ்த்தி விட்டு அதிலிருந்து நேக்காக தப்பிக்க மோடிக்குத் தெரியும். அதனால் தான் அத்வானியைப் பற்றி இங்கே பேசவில்லை.

இதில் நானும் ஒத்துப் போகிறேன். தன்னை எதிர்த்த காவல்துறையினரை அவர் செயலலிதா அவர்களே வெட்கப்படும் அளவுக்கு அலைக்கழித்தார் என்று அறிகிறேன்.

என்னுடைய நிலைப்பாடு:
நான் மோதி ஆதரவாளன் இல்லை. ஆனால் எனக்கு காங்கிரசு ஆட்சிக்கு மீண்டும் வருவதிலும் விருப்பம் இல்லை. மூன்றாவது அணியிலும் விருப்பம் இல்லை. தேவேகவுடா போன்ற தூங்கு மூஞ்சிகளுக்கெல்லாம் பிரதமர் பதவியைத் தூக்கிக் கொடுத்த நாம் மோதி போன்ற திறமையானவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் நமக்குதான் நட்டம். தவிர அவருடைய மதவாத முகம் வெளிப்பட்டால், பத்திரிக்கைகளும், மக்களும் தெருவில் இறங்கிப் போராடத் துணிய வேண்டும். இருப்பதிலேயே ஓரளவு நல்ல, திறமைசாலியான வில்லன் என்றுதான் மோதியை தேர்தலில் ஆதரிக்கிறேன். ஆனால் யாருமே நல்லவர் இல்லை என்பதே என் எண்ணம்.

என்னதான் மோதியை ஆதரிப்பதாகக் கூறினாலும், ஓட்டுப் போடப் போவது [அ]திமுக விற்குத்தான். தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டைக் கண்டு கொள்ளாது என்பது என் கருத்து. இசுலாமியர்கள் பாசக வைத் தவிர்ப்பது போல நான் அனைத்து தேசியக் கட்சிகளையும் தவிர்க்கிறேன் (மாநில நலனுக்காக) ஆனால் மோதி பிரதமர் ஆவதே சிறந்தது என்று கருதுகிறேன்.

இது தவிர, பிரதமர் பதவிக்கு மன உறுதி கொண்ட ஒருவர் தேவை. நரசிம்ம ராவ் என்ற உறுதியான மனிதர் இருந்ததால்தான் மன்மோகன் என்ற பொருளாதார மேதையால் செயல்பட முடிந்தது. அதைப்போல உறுதியானவர் மோதி என்பது என் கருத்து.

பிகு: பத்ரிக்கு உரிய பதிவை என் விளக்கத்துக்கு, மொக்கைப் போட எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்கவும்.
Anonymous said…
மிகச் சிறந்த கேள்விகள். நானும் உங்களைப்
போலவே பத்ரியை மதிக்கிறவன். cho போன்று
முதலில் பாஜக ஆதரவாளராக இருந்து பிறகு
பாஜகவின் தீவிர ஆதரவாளராக பத்ரியும்
மாறமாட்டார் என்றே நினைப்போம். ஆனால்,
சுஜாதா மனைவியின் பேட்டிக்குப் பிறகு எழுத்துக்கும்
உண்மை எண்ணத்துக்கும் இடைவெளி பெரும்பாலோரிடம்
இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. தந்தை பெரியாரின்
கண்ணாடி சுஜாதாவிடம் தோற்றது என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் அவருடைய கண்ணாடி இந்த சமூகத்துக்குத்
தேவைப்படாத நாள் எப்போது வரும் என ஏங்குகிறேன். மத்திய
வயதுடையோரின் காலம் வரை ஈரோட்டுப் பார்வைக்குத்
தேவை இருக்கும்போலத் தான் தெரிகிறது.
Anonymous said…
Again and again you people are centering around Godhra issue... Of course, it is a condemnable violence... No doubt in it. But, which govt/leader didnt do such violences? Even the now Congress govt doesnt care abt tribes, farmers, low income people, etc. If your claim is BJP/Modi doesnt care about minority people, how can you classify congress's activities? (Even Left are not the exception.. remember Nandhigram?) So, whichever party comes to power, if the leader doesnt like someone, his/their survival will be difficult. This applies even for corporate companies/any govt around the world as well. You cant sit comfortably, if the mgmt doesnt like you... (Two recent eg: Snowden & BOM Ex-director)

If you show me one such selfless capable leader, then we can compare him with Modi then will decide on whether he can come or not.

P.S: I hope you know the no constituencies won by Modi, where muslims are higher in population, were substantially higher in every elections. If you think it is an election stunt, then also there shouldnt be an issue, as he has to face election once in every 5 yrs which makes him to do the (highly needed) stunt again and again.
சி.எஸ்.கே அவர்களே.......

பொதுவாகவே தமிழகத்தில் சற்று பிரபலமாகும் பெரும்பாலான எழுத்தாளர்களிடம் காணப்படும் பொதுவான‌ அம்சத்தை [ ஹிந்து மதத்தையும் , ஹிந்துக்களையும் . ஹிந்துத்வ இயக்கங்களையும் ஒரு குத்து குத்துவது....அப்போதுதானே இதர [ தமுஎச, மக இக வகையறா ] அறிவு ஜீவிகளிடம் அங்கீகாரம் பெற முடியும்? ] மோடி அவர்கள் மீதான உங்கள் காழ்ப்பில் காண்கிறேன்......

கோத்ரா கலவரத்தை மட்டுமே குறிப்பிடும் உங்களைப்போன்றவர்கள் , அதற்கு காரணமான ரயில் எரிப்பைப்பற்றி மறந்தும் மூச்சு விடுவதில்லை.....அந்த கலவரம் ஒரு எதிர்வினை மட்டுமே.......அப்போது யார் முதல்வராக இருந்தாலும் அதுதான் நடந்திருக்கும்......குஜராத்துக்கு மதக்கலவரங்கள் புதிதல்ல......பாகிஸ்தானின் எல்லைப்புற மாநிலம் என்பதாலோ என்னவோ சுதந்திரத்திற்கு பிறகு அங்கு மதக்கலவரம் நடக்காத வருடமே அநேகமாக கிடையாது.....பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாபவர்கள் ஹிந்துக்கள் தான்....காரணம் கலவரத்தை ஆரம்பிப்பவர்கள் பாகிஸ்தானால் தூண்டப்பட்ட ஒரு சில முஸ்லீம்களாகத்தான் இருக்கும்......கலவர‌ம் பரவியதும் முதலில் தாக்கப்படுபவர்கள் ஹிந்துக்களாகத்தான் இருக்கும்......உடனே காவல்துறையோ , துணை ராணுவமோ குவிக்கப்படும்......ஹிந்துக்கள் பதிலடி கொடுப்பதற்குள் கலவரம் கட்டுப்படுத்தப்படும்....ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஹிந்துக்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பர்.....காலம் காலமாக அங்கு இதுதான் நடந்து வந்தது........

கோத்ரா ரயில் எரிப்பு ஹிந்துக்களின் நீண்டகால வன்மத்தை தூண்டிவிட்டது........ இந்திரா காந்தி கொலையை அடுத்த சீக்கியர்கள் கொல்லப்பட்டது முழுக்க முழுக்க காங்கிரசாரால் செய்யப்பட்டது......குஜராத்கலவரம் அப்படிப்பட்டதல்ல......அதை யாரும் தூண்டிவிடவும் இல்லை..........முன் நின்று நடத்தவும் இல்லை........[உடனே மாயாபென் கோட்னானி யை குறிப்பிடுவீர்கள்.........அவரும் பொது மக்களில் ஒருவர்தான் ....] கலவரம் வெடித்த‌வுடன் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது...... துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியானார்கள்........ அதில் 250 பேர் ஹிந்துக்கள்........ ஒரு முதல்வர் வேறு என்ன செய்ய முடியும்?

சபர்மதி express இல் S -6 coach இல் 59 கர சேவர்களை கொன்ற 31 குற்றவாளிகளில் 11 பேருக்கு மரணதண்டனை 20 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி ஸ்பெஷல் ஜட்ஜ் P .R படேல் தீர்ப்பு அளித்தார். இதில் 31 பேரும் முஸ்லிம்கள் ஆவார்கள். இவர்கள் அப்பாவிகளா?ஒன்றும் தெரியாதவர்களா? வாயில் விரல் வைத்தாலும் கடிக்க தெரியாத பச்சை குழந்தைகளா?
11.5.2005 இல் பார்லிமெண்டில் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் 2002 குஜராத் கலவரத்தில் 790 முஸ்லிம்கள் மற்றும் 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்று அறிக்கை வாசித்தார். 790 முஸ்லிம்களை கொன்றது இந்துக்கள் என்றால் 254 இந்துக்களை கொன்ற பாவிகள் யார்? அவர்கள் அப்பாவிகளா?
1.11.1984 அன்று நடந்த சீக்கியர்கள் படுகொலை குறித்த “Ahuja committee அறிக்கையின்படி டெல்லியில் மட்டும் 2733 பேர் கொல்லப்பட்டனர். மொத்தமாக 3 நாளில் எல்லா இடங்களிலும் சேர்த்து சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர். அந்தக்கலவரத்தை ராஜீவ் எப்படி நியாயப்படுத்தினார் என்பதை மற‌ந்துவிட்டீர்களா?

உங்கள் வாதப்படியே மோடி ஒரு மதவெறியன்.....திட்டமிட்டே இஸ்லாமியர்களை படுகொலை செய்தார் என்றா வைத்துக்கொள்வோம்....... அதற்குப்பின் அங்கு ஏன் எந்தக்கலவரமும் வெடிக்கவில்லை? இஸ்லாமியர்களை ஒழிப்பதுதான் அவர் நோக்கமென்றால் , தொடர்ந்து பல கலவரங்களை தூண்டிவிட்டு மேலும் மேலும் பல முஸ்லீம்களை கொன்று குவித்திருக்கலாமே?


ஹிந்துவாகட்டும் , முஸ்லீமாகட்டும் , அனைவருக்கும் தேவை நல்ல நிர்வாகம் ,சட்டம் ஒழுங்கு , தொழில் வளர்ச்சி, மற்றும் அரசின் இதர் கடமைகளான குடீ நீர் , வினியோகம் , மின்சாரம் போன்றவை......அதில் மோடி எவ்வள‌வு சாதித்துள்ளார் என்பதை உலகம் அறியும்...அங்குள்ள இஸ்லாமியர்களும் அறிவர்........குலாம் முகமது வஸ்தான்வி , மதானி போன்றோரும் ஒப்புக்கொண்டுள்ள‌னர்........

அதையெல்லாம் விட்டுவிட்டு மோதி அவர்களை ஹிட்லரோடு ஒப்பிடுவதும் ,கொடும்கோலன் என்பதும் கண்ணை மூடிக்கொன்ட பூனைகளின் விமர்சனங்கள்..........கொஞ்சம் கண்ணைத்திறங்க சார்..........
Anonymous said…
CSK - good questions for Badri. Let him answer.

On a different note,
you may not have lived in Bangalore or in Mysore region during 1991 Cauvery riots. Many tamils in cities, villages near border areas got significantly affected. Every tamilian used to live in fear due to 1991 riots. Bangarappa was CM then who was allegedly abetting those incidents. He could never come back to power or position within Cong later.
kumaran said…
You just talked my heart..I asked the same question in Badhri's blog.

kumaran said…
திருவாளர் சிஎஸ்கே,

சில சம்பவங்கள்..சிறிது நீண்டதுதான்,பரவாயில்லை படியுங்கள்..

சம்பவம் 1:

நான் எங்கள் ஊரில் ஓரளவு அறியப்பட்டதும் மதிக்கப் படுவதுமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன்.இந்த மதிப்பு எனது தாத்தா மற்றும் அப்பாவின் குணம் தங்கள் தொழிலில் நடந்து கொள்ளும் முறை எளியவர்களிடம் இயன்ற அளவு இரக்கத்துடன் நடந்து கொள்வது போன்றவற்றால் கிடைத்தது.

சென்ற வாரத்தில் ஒரு நாள் ஒரு மருத்துவரைக் காண்பதற்காக நானும் எனது அம்மாவும் சென்றோம்;மருத்துவர் இன்னும் கிளினிக்கிற்கு வந்திருக்கவில்லை.முதலில் நான்தான் சென்றிருந்தேன்,அங்கு காத்திருந்தோம்,எனக்குப் பின்னர் சில பெண்கள் வந்தார்கள், கிட்டத்தட்ட கடைசியாக ஒரு 60 வயது மதிக்கத் தக்க நபர் சுமார் 13 வயது மதிக்கத் தக்க ஒரு பெண்ணுடன் வந்தார்.

எல்லோரும் மருத்துவருக்குக் காத்திருக்க, மருத்துவர் வந்து கிளினிக்கில் நுழைந்தார். அவர் அறையின் கதவைத் திறக்க எல்லோரும் காத்திருக்க,கதவைத் திறந்து கொண்டு அவர் உள்ளே செல்ல, கடைசியாக வந்த பெரியவர் பின்னாலேயே நுழைந்தார்.

காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்த நான், நான் காத்திருப்பதையும் வரிசைப் படி வருவதை மறந்து அவர் செல்கிறார் என்று நினைத்து அந்தப் பெரியவரைக் கூப்பிட்டேன். அவர் திரும்பவே இல்லை. எழுந்து ஒரு எட்டு எட்டி முன்னால் சென்ற அவரது தோளைத் தொட்டுக் கூப்பிட்டேன்;அப்போதும் அவர் திரும்பவில்லை.திரும்பவும் தோளைத் தட்டும் நோக்கத்தில் அவரைக் கூப்பிட்ட போது எனது இரண்டு விரல்களால் அவரது முதுகுப் பக்கம் சட்டையை சிறிது பிடித்தவுடன் அவர் நின்று திரும்பினார்.

நான் காத்திருக்கிறேன் என்பதைச் சுட்டியவுடன் முறைத்துக் கொண்டே, சரி சரி போங்க என்றார். மருத்துவரும் இந்தப் பேச்சைக் கவனித்தவர், சரி வாருங்கள் சார்..என்று என்னைக் கூப்பிட்டு கவனித்த பின் அனுப்பி விட்டார்.

நானும் அம்மாவும் இன்னும் சில இடங்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினோம்.வீடு திரும்பியவுடம் என்னுடைய தந்தை மிகுந்த பதட்டத்துடன் 'கிளினிக்கில் என்ன பிரச்னை' என்று என்னைக் கேட்டார்..எனக்கோ ஒன்றும் புரியவில்லை. விசாரித்ததில் அந்தப் பெரியவர் அரைமணி நேரத்திற்குள், இன்னும் ஒருவரைக் கூட்டிக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டிருக்கிறார்!
வந்தவர் 'உங்க மகன் என் சட்டையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தி விட்டார்.அவரைக் கூப்பிடுங்கள்,அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று குதித்திருக்கிறார். என்னுடைய தந்தை, நான் அப்படிச் செய்பவன் இல்லை என்றும், பொதுவாகவே நாங்கள் அனைவரிடமும் மரியாதையுடனே நடக்கும் குடும்பத்தவர் என்பது அவருக்கும் தெரியும்தானே என்றும் சமாதானப் படுத்தியிருக்கிறார்-உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாத நிலையிலும்.சமாதானம் அடைந்தது போலத் திரும்பியிருக்கிறார் பெரியவர்.
நாங்கள் வீட்டுக்கு வந்த பின்னர் நான் விளக்கிய பின்னர்,அப்பாவும் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை என்று சமாதானாமடைந்தாலும், எவரிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும், ஊரில் பெரும்பாலோருக்குத் தெரிந்த குடும்பமாக இருக்கும் நிலையில் நம்முடைய நடவடிக்கைகள் மேன்மையாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் பத்து நிமிடப் புத்திமதி சொன்னார்.
நான் அன்றைய பொழுது விடிந்த விதத்தை எண்ணியபடியே நொந்து போனேன்.

மறுநாள் காலை 6.30 மணிக்கு கதவடித்த சப்தம் கேட்டு எழுந்து திறந்தால், மூன்று நடுவயது நபர்கள் நிற்கிறார்கள். என்னவென்றால்,'உங்கள் மகன்,'கைக்குழந்தை(?)'யை டாக்டரிடம் கூட்டிப் போன என் அப்பாவை, சட்டையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்.அவரைக் கூப்பிட்டுங்கள்..இந்த விவகாரத்தை பைசல் செய்யத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்' என்கிறார்கள்.

பின்னர் எனது பெற்றோர் கால் மணி நேரமும் நான் பத்து நிமிடமும் பேசி, அவர்கள் வருந்த வேண்டாம் என்று சமாதானம் செய்து அனுப்பினோம்.

அந்தப் பெரியவர் ஒரு முஸ்லீம்!

இதுதான் இன்றைய இந்தியாவில் 'இந்துப் பெரும்பான்மை' இருக்கும் நாட்டில் 'சிறுபான்மை முஸ்லீம்களின்' வாழ்க்கை முறை !

-continued
kumaran said…
சம்பவம் 2:
இன்னொருவர், எங்கள் நிறுவனத்தில் பணியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிவர், திருமணம் செய்து கொள்ளவிருந்த சமயத்தில் ஏதோ பிரச்னை என்றும் அவசரமாக 5000 ரூபாய் வேண்டும் என்றும்,இல்லாவிட்டால் திருமணம் நின்று விடும் என்றும் கெஞ்சி ப்ரோநோட்டு எழுதிக் கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டு சென்றார்(சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னரான 5000 ரூபாய்).திருமணமும் நடந்தது. பிறகு ஒரு வருடம் கழிந்து அவர் எங்கள் நிறுவனத்தை விட்டு விலகி வேறு பணியிடம் சென்று விட்டார்.
பிறகு பலமுறை கேட்டும் அந்தப் பணம் வரவில்லையாதலால், அவர் மேல் வழக்குத் தொடுத்து போது, அந்த ப்ரோநோட்டில் கையெழுத்துப் போட்டது அவரேயில்லை என்று சாதித்து வழக்கு தள்ளுபடியானது!

அந்தப் பணியாளர் ஒரு முஸ்லீம்.!

சம்பவம் 3:

எங்களுக்குச் சொந்தமாக ஒரு தங்கநகை நிறுவனம் உண்டு.எங்களையும் எங்கள் குடும்பத்தையும் சுமார் 30 வருடங்களாகத் தெரிந்த ஒருவர் தனது மகள் திருமணத்திற்காக சுமார் 15 சவரன் நகை ஆர்டர் கொடுத்திருந்தார். கிராம் 500 ரூபாய்க்கும் குறைந்த விலையில் தங்கம் இருந்த அந்த நேரத்தில் மொத்த ஆர்டரான 60000 ரூபாயில் 30000 கொடுத்து விட்டு மீதம் நகையை வாங்கும் போது கொடுத்து விடுவதாக உறுதி கூறிச் சென்றார்.திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர் வரைக்கும் நகையை வாங்க வராத அவர், திருமணத்திற்கு முதல் நாள் வந்து நகையைக் கொடுக்கும் படியும்,எதிர்பார்த்த பணம் வரவில்லையாதலால்,திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குள் பணத்தை அளித்து விடுவதாகவும், நாங்கள் நகையைக் கொடுக்க மறுத்தால், திருமணம் நின்று போகும் நிலைகூட வரும்,பெரியமனதுடன் நகையைத் தந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டியவுடன், என்னுடைய தந்தை நகையைக் கொடுத்து விட்டார்.
அதற்குப் பின்னர் கடந்த 9 வருடங்களில் பலமுறை கேட்டும் அந்தப் பணம் வரவில்லை; சென்ற முறை கேட்கச் சென்ற போது இனிமேல் பணம் கேட்டு அவரைப் பார்க்கச் சென்றால்,மரியாதை கெட்டுப் போகும் என்கிறார் அந்த மனிதர்.

அவரும் ஒரு முஸ்லீம்..
_______________________________

இந்த சம்பவங்கள் தனி மனித முஸ்லீம்களின் யோக்கிய தாம்சங்கள், குணநலன்கள், சமூகத்தில் புழங்கும் விதம் குறித்த அனுபவங்கள்..

இந்த முஸ்லீம்கள் கூட்ட மனோபாவத்தில் என்னென்ன செய்ய வல்லவர்கள் என்று சிறிது நீட்டித்துச் சிந்தியுங்களேன்..

மோடி போன்ற ஒருவர் செருப்பாலடித்ததால்தான் இந்த அளவாவது முஸ்லீம்கள் அடங்கி இருக்கிறார்கள். அவர்களை அடக்கி வைப்பது பொது சமூகத்தின் அமைதியான வாழ்வுக்கான அவசியத் தேவைகளில் ஒன்று.!!!!!!!!
BalajiS said…
Si Sa,

Request you to read complete ModiNama series in www.manushi.in by MadhuKishwar.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்