பெங்களூரில் கூத்து

மணல் வீடு சிற்றிதழின் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் கூத்து முதலிய கலைகளுக்கென தனிப்பள்ளி ஒன்று தொடங்க முயற்சிகள் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாளை பெங்களூரில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


இந்தத் தொல்கலைகள் குறித்த சில‌ வீடியோக்களை இங்கு காணலாம் : http://www.youtube.com/user/manalveedu/videos
களரி என்ற இந்த அமைப்பு பற்றி இங்கு அறியலாம் : http://www.tamilhindu.com/2012/06/kalari-center-for-folk-arts-appeal

நான் பெங்களூர்வாசி என்பதால் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய உதவும்படி அவர் என்னை சில மாதங்களாகவே கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் என் தினசரிகளின் நெருக்கடிகளால் என்னால் அதில் பங்கேற்க இயல‌வில்லை. அவருக்கு சரியாக பதில் கூட சொல்ல முடியாமல் ஓடிக் கொண்டிருந்தேன். சூழ்நிலைகள் ஒத்துழைக்காத போதும் எடுத்து செய்ய விரும்பியதால் என்ன பதில் சொல்வதென புரியாமல் இழுத்தடித்தேன். பின் என்னால் தாமதம் ஆகிறதென உணர்ந்த போது அவரிடம் வெளிப்படையாக எனது நிலையை எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்டு விலகிக் கொண்டேன்.

எல்லாவற்றையும் தாண்டி இப்போது வேறு நண்பர்களின் ஆதரவில் இந்நிகழ்வு ஏற்பாடு ஆகி இருக்கிறது. நிகழ்ச்சிக்கு இரண்டு நோக்கங்கள்: 1. இக்கலைகளின் உதாரணம் ஒன்று நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டு இவை குறித்த பெரியோர்களின் உரைகள் இடம்பெறும். இது பார்வையாளருக்கு இக்கலைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை நல்கும் என்பது எதிர்பார்ப்பு 2. பார்வையாளர் கூத்துப்பள்ளி கட்டுவதற்கென தன் பங்களிப்பை செய்தல். ஹைடெக் சிட்டி, ஸ்பெண்டிங் க்ரௌட் போன்று நம்ம பெங்களூரு பற்றி நிலவும் எல்லா பிம்பங்களுக்கும் பீற்றல்களுக்கும் நாம் பணத்தால் பதில் சொன்னால் நல்லது.

ஒரு முன்னாள் எழுத்தாளர் எழுதிய‌ குப்பை நாவலின் முதல் பிரதியை 50,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கும் முகம் காட்ட விரும்பாத செல்வந்தர்கள் வாழும் தேசத்தில் நம் முன்னோர்கள் நிகழ்த்திய / ரசித்த இந்த மாபெரும் கலைகள் அழியாது காப்பாற்றவும் சில்லறை விழும் என நம்புகிறேன். பணம் மனம் படைத்த‌ நண்பர்களையும் உடன் அழைத்து வாருங்கள்!

Comments

Ramadoss Magesh said…
Hi,

I got to attend this visit knowing about it through your tweet/blog post. It was interesting to know of the art form that was presented.

While it was impressive to see the passion demonstrated to keep a tradition/art-form alive, did not quite well understand the rationale for having a building(real estate space) and the consequent fund raising directed towards it.

Also wanted to register something that i felt was in bad taste. It was about the dialogues of the brahmin characters in the play. While such a thing might have been relevant in the social milieu(like in their villages) to evoke some laughter it was quite unwarranted in a cosmopolitan place like Bangalore(It is another story that a significant crowd present there laughed at those distasteful utterances was unfortunate).

Thought might be worth registering the message so that it reaches the show organizers.

Best regards,
Magesh
@Ramadoss Magesh

நிகழ்வுக்குச் சென்றதற்கு நன்றி!

(என் புரிதலில்) நிரந்தரக் கட்டிடம் வேண்டுமென முயற்சிக்கக் காரணம் இக்கலைகளுக்கான பள்ளி ஒன்றை அமைத்து இவற்றைப் பரவலாய்க் கற்பிப்பதே. வாடகைக் கட்டிடத்தில் இதே விஷயத்தைச் செய்தால் ஒவ்வொரு முறையும் சிலப்ல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். பாதியில் நின்று கூட போகலாம். இப்படிச் செய்தால் பொதுமக்கள் பணத்தில் நிறுவப்பட்டது என்ற காரணத்திற்காகவேனும் தொடர்ந்து செயல்படும் அழுத்தம் இருக்கும்.

நான் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் நீங்கள் குறிப்பிடும் பிராமண வழக்கு கேலி குறித்து பதிலிறுக்க முடியாத சூழலில் இருக்கிறேன். அதாவது அது எடுக்கப்பட்ட உள்ளடக்கத்திற்குத் தேவைப்படும் பட்சத்தில் நிகழ்த்தப்படும் இடம் கிராமமா நகரமா என்பதை எல்லாம் தாண்டி அப்படியே வைக்கப்பட வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அல்லது அது சம்மந்தபட்ட விஷயம் தாண்டி மேலோட்டமாய் முன்வைக்கப்படும் பகடி எனில் நீங்கள் சொல்வது போல் தவிர்த்திருக்கலாம்.

எப்படி இருப்பினும் உங்கள் கருத்தை மு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு சேர்ப்பித்து விடுகிறேன்.
Ramadoss Magesh said…
Thanks for your response and offering to communicate the feedback.

Regards,
Magesh
மாம்ஸ் நீயும் கூத்தடிப்பியா?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்