கூடங்குளம் - சில விளக்கங்கள்

சில‌ தினம் முன் ராகுல் சித்தார்த்தன் என்ற விஞ்ஞானி எழுதிய கூடங்குளம் அணு உலை குறித்த The real questions from Kudankulam என்ற நாளிதழ் கட்டுரையை ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன். இரு தினம் முன் ரகுபதி ராஜா இது குறித்த சில கேள்விகளை முன்வைத்து ஒரு விரிவான ட்விட்லாங்கர் போட்டிருந்தார். அதற்கான பதில்களை இங்கே தருகிறேன்:

*******

நீங்கள் கொடுத்த இந்த கட்டுரை படித்தேன்.

நன்றி, ரகு. முதலில் ட்விட்டரில் இருக்கும் உங்கள் விளையாட்டுத்தனமான பிம்பத்தை உடைப்பது போல் இவ்வளவு விரிவாய்க் கேள்விகள் கேட்டதற்கு kudos. இதைப் பற்றி எழுத எனக்கு சந்தர்ப்பம் அமைத்துத் தந்தமைக்கு வந்தனம்.

மிக நுண்ணியமாக நடுநிலை பேசுவதுபோல் பாசாங்கும் கட்டுரை இது.

இந்தக் கட்டுரை நடுநிலை பேசவில்லை.  அப்படிப் பேசுவதாக claim செய்யவுமில்லை. விஞ்ஞானம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு சமூக பிரச்சனை பற்றி ஒரு விஞ்ஞானி தன் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவே. இரு தரப்புக்கும் பாயிண்ட்ஸ் சொல்கிறார் என்று நாமாக நடுநிலைமை என்று முத்திரை குத்தலாகாது. வேண்டும், வேண்டாம் என்று இரு தரப்புகள் இருப்பது போல் சில விஷயங்களை ஒழுக்கமாகச் செய்தால் கொண்டு வரலாம் என்று சொல்லும் மற்றுமொரு தரப்பு இது.  என் நிலைப்பாடும் கிட்டத்தட்ட இதே தான். நடுநிலைமை என அழைக்க வேண்டாம் இதை. 

George Monbiot was never ardently opposed Nuclear energy(NE),but against it. He also criticized those who oppose Nuclear Energy for false propaganda.

அடிப்படையில் அணு உலைகளை எதிர்த்தவர் என்பது போதுமே! தீவிரமாக எதிர்த்தவராகவே இருக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம் - சரியான தர்க்கங்களை முன்வைத்தாலும் கண்மூடித்தனமாக அதை எதிர்க்க வேண்டும் என்றா? தேவை இல்லையே. என் நிலைப்பாடு என்னவென்று கேட்டால் ஒற்றை வரியில் என்ன பதில் சொல்வேன்? அணுசக்தியை ஆதரிக்கிறேன் என்று தானே! ஆனால் அதைத் தான்டிய ifs and buts இருக்கத் தானே செய்கின்றன. எல்லாத் தரப்பையும் விரிவாக‌ உள்வாங்கிக் கொண்டு மிக நிதானமாக முடிவெடுப்பவரின் முடிவு ஒருபோதும் binaryஆக இருக்க முடியாது. மோன்பியாட்டின் ஆரம்ப அணு உலை conditional எதிர்ப்பு நிலைப்பாட்டை அப்படிப்பட்டதெனக் கொள்ளலாம். 

There are 'n' no of intellectuals who still believe/advocate Nuclear Energy is unsafe by any means.So George's advocacy is not sufficient as he just says that the safety systems in Fukishima worked hence he believes all nuclear plants will fit in to that spectrum.

அப்படிப் பார்த்தால் எந்த வாதத்திலும் expert opinionஐ துணைக்கு அழைக்க‌ முடியாது. கட்டாயம் அதற்கு வேறொரு expert நேர்மாறான opinion சொல்லி இருப்பார். ராகுல் இதில் முக்கியமாய் சுட்டிக் காட்ட விரும்பும் விஷயம்  என்னவென்றால் தர்க்கப்பூர்வமாய் அணு உலைகளை எதிர்த்த ஓர் ஆசாமி இப்போது மனம் மாறி இருக்கிறார் என்பதையே. உதாரணமாய் கிருபானந்த  வாரியர் திடீரென‌ ஒருநாள் ஒரு வலுவான ஆதாரத்தைக் காட்டி நாத்திகம் பேச ஆரம்பித்திருந்தால் கடவுள் இல்லை என நம்பிக் கொண்டிருப்பவன் அதை முக்கிய விஷயமாய் எடுத்துப் பேசுவான் அல்லவா, அது போலத் தான்!

My rationale mind denied to accept that as i believe every accident is unique.

ஒப்புக் கொள்கிறேன். ராகுலுக்கும் அது தெரியும். ஆனால் தர்க்கரீதியாக ஒரு விபத்தை எப்படி தடுக்க முயற்சிப்போம்? முன்பு நடந்த விபத்துக்களை எல்லாம் அலசி என்ன தவறு செய்திருக்கிறோம் என ஆராய்ந்து மேலும் என்னென்ன தவற வாய்ப்புண்டு என நீட்டித்து அவற்றை எல்லாம் திறமையாகக் கையாளும் வழிவகைகளைத் துல்லியமாகப் பின்பற்ற முயல்வோம். அதைத் தான் செய்யச் சொல்கிறார் ராகுல். ஒவ்வொரு விபத்தும் ஒவ்வொரு மாதிரி அதனால் இப்படி ஆராய்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதே வீண் என்று சொல்ல முடியுமா? மனிதனுக்குச் சவால் விடும் எதையும் மனிதன் விட்டு வைப்பதில்லை; பயந்து ஒதுங்கியதில்லை. விஞ்ஞானத்தின் துணையுடன் அதை எதிர்கொண்டு வெற்றி கொள்வதே மனிதகுல வரலாறு. அணு உலைகளின் பாதுகாப்பிலும் அதுவே நிகழும். நீங்களே யோசித்துப் பாருங்கள் நீர் என்பது ஒரு ஸ்லோ பாய்சன்; அதை அருந்துவதால் தான் மனித இனமே இவ்வளவு காலமாக இறந்து கொண்டிருந்தது என ஒரு நாள் விஞ்ஞானரீதியாகக் கண்டு பிடிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அதற்காக என்ன செய்வது? இத்தனை ஆண்டு சரித்திரம் + இன்றைய விஞ்ஞானத்தின் படி நீர் பாதுகாப்பானது. அதை அப்படியே நம்புகிறோம் அல்லவா? அது போல் இன்றைய விஞ்ஞானம் சொல்லும் அணு உலை பாதுகாப்பையும் நம்பித் தான் ஆக வேண்டும். 

Hope you would know the difference between "Fail Safe" and "Fool Proof". No Scientist in this world shall warranty the safety of any Nuclear Plant in the world when a accident occurs but shall only "assure" the safety.

என்றுமே விஞ்ஞானத்தில் fail-safe மட்டும் தான் சாத்தியம். அது தான் யதார்த்தமும் கூட. Fool-proof என்ப‌து ஓர் அற்புதம், ஒரு கனவு, ஒரு ஹீரோயிஸம் மட்டுமே. அதை விஞ்ஞானம் ஒரு போதும் தருவதில்லை. சிக்ஸ் சிக்மா (99.99966%) தான் பேசுகிறது, 100% எப்போதாவது பேசி இருக்கிறதா அறிவியல்? இது வரை கண்டிடாத புதுவகை இயற்கை சீற்றம் உலையை அழிக்கலாம் தான். நமக்குத் தெரியாததை நாம் கற்பனை செய்ய முடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த அசம்பாவித‌ங்கள் நடந்தால் எந்த ஆபத்தும் நேராது இருக்குமளவு பாதுகாப்பு கொடுக்க முடியும். நாமும் அதைத் தான் கேட்க வேண்டும். 

When this article speaks much about global warming and rising sea levels, the author comfortably forget to utter a single word about Reprocessing / safety of the "Used Fuel"? I don't see it an intellectual debate, when you leave the loose ends untied.

அதைப் பற்றி இக்கட்டுரையில் ராகுல் வாய் திறக்கவில்லை. போலவே அணு உலையின் இதர பாதுகாப்புகள் குறித்தும் குறிப்பாய் ஏதும் சொல்லவில்லையே. என் புரிதலின் படி அவை எல்லாவற்றுக்குமே அவர் பதிலாய் NSRAஐத் தான் சொல்கிறார். அது மட்டும் சுதந்திரமாக சரியாக இயங்கும் படி சட்டங்கள் வந்தால் அணு உலைகள் தாமாய் முழு பாதுகாப்பு பெறும் என்கிறார். அணுக்கழிவுகளைக் கையாள்வதும் அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தியாவில் தற்போதைக்கு இயங்கும் அணு உலைகளின் கழிவுகளை deep geological repositoryயில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். அதாவது கொஞ்ச காலம் உலையிலேயே வைத்துப் பாதுகாத்து விட்டுப் பின் பூமிக்கு அடியில் ஆழமாய்க் குழி தோண்டி அங்கே கொண்டு போய் அணுக்கழிவுகளை வைத்து விடுவது. கல்பாக்கத்தில் கூட இப்படிக் குழி தோண்டிப் புதைக்கப்படுவதாக‌க் கேள்விப்பட்டிருக்கிறேன். கூடங்குளத்துக்கும் வழி செய்வார்கள்! 

Regarding the XKCD chart also there are certain questions for me. 1.Eating(Consuming) a banana is equated to living a year 50 miles near a working a Nuclear Plant. A working plant has RUNNING/WORKING safety installations,i hope this calculation is based on International guide-lined / implemented power plant. If you shall gimme so input regarding the same distance radiation emission in India. The question is about failure of such safety installations in a running plant, then what would be the repercussions ?

தற்போதைக்கு இந்திய அணு உலைகளின் கதிர்வீச்சு பற்றி சரியாய்த் தெரியவில்லை. ஒருவேளை, சர்வதேச அணு உலைகளை விட ஒப்பீட்டளவில் சற்று அதிகமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் NSRA அமல்படுத்தப்பட்ட பின் இந்திய அணு உலைகளும் சர்வதேச தரத்திலான பாதுகாப்புடன் இருக்கும். இந்த assumptionஐ அஸ்திவாரமாய் வைத்துத் தான் ராகுலின் மொத்தக் கட்டுரையும் கட்டப்பட்டுள்ளது. அப்படி பாதுகாப்புடன் இருக்கும் பட்சத்தில் அணு உலையின் 50 மைல்களுக்குள் வசிப்பது கூட ஆபத்தில்லை என சொல்ல வருகிறார். அவர் இப்படிச் சொல்வதன் நோக்கம் கூடங்குளம் உலையைச் சுற்றியுள்ள மக்கள் அதன் கதிரியக்கத்துக்குப் பயப்படுவதை அறிவியல் ரீதியாக உடைப்பதே. 

2.the extra dose that Tokyo residents received following Fukushima (about 40 microsieverts([in what duration they received that?])

ஃபுகுஷிமா விபத்து நடந்தற்குப் பிந்தைய‌ "வாரங்களில்" டோக்கியோவை அடைந்த கதிர்வீச்சின் அளவு இது. உத்தேசமாய் 2-4 வாரங்கள் இருக்கலாம். அதை இங்கே காணலாம் - http://www.xkcd.com/radiation/ 

was about a tenth of the yearly dose from natural radioactive potassium in the body (about 390 microsieverts), also for your information Tokyo is roughly 300 KMS from Fukishima and even so it receives 4000msevs.

சரியாய்ச் சொன்னால் டோக்கியோவுக்கும் ஃபுக்குஷிமாவுக்கும் இடையேயான தூரம் 238.34 கிலோமீட்டர்கள். 40 microsieverts என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது. எங்கிருந்து வந்தது இந்த 4000msevs என்ற மேஜிக் நம்பர்? 

Hope you would know the fact that these radiations will increase in exponential way when the distance reduces. I'm right?

ஆமாம், நீங்கள் சொல்வது போல் தூரம் பொறுத்து கதிர்வீச்சின் அளவு மாறும். டோக்கியோ என அவர் சொன்னது ஓர் உதாரணத்திற்காக. கூடன்குளம் அணு உலையினால் தனக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா என கோவையில் வசிக்கும் ஒரு பெண் கவலைப்பட்டால் அவருக்கான பதில் அது என வைத்துக் கொள்ளலாம். ஆனால் ராகுல் அடுத்த வரியிலேயே அமெரிக்காவின் ஆக மோசமான அணு உலை விபத்தான த்ரீ மைல் ஐலேண்ட் பகுதியிலேயே ஒருவர் இருந்திருந்தால் பெறக்கூடிய கதிர்வீச்சு பற்றியும் சொல்கிறாரே. அது தான் கூடங்குளம் மக்களுக்குத் தொடர்புடையது. 

3. As like the author's concern regarding avoiding Chernobyl kind of accident, My question is do we have such perspective in avoiding such failures in Kodankulam? and are we equipped with evacuation mechanism to avert major catastrophes(i avoided the word disaster knowingly) If so, does that plant complaint with all the safety guidelines issued by IAEA or at least AERB?

http://www.abdulkalam.com/kalam/jsp/display_content_front.jsp?menuid=28&menuname=Speeches%20/%20Lectures&linkid=68&linkname=Recent&content=1945&columnno=0&starts=0&menu_image=- - அணு உலையின் தற்போதைய பாதுகாப்பு குறித்து அப்துல் கலாம் ஆராய்ந்து அளித்த அறிக்கை இது. பல கோணங்களில் உலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இது விரிவாய்ப் பேசுகிறது. ஆனால் ராகுலின் கூற்றுப்படி கூடங்குளத்தில் இவற்றை விட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்பது புரிகிறது. இதற்கு பொறுப்பான சர்வதேச அமைப்பான IAEA அணுக் கச்சாப் பொருட்கள் மற்றும் அணுக் கழிவுப் பொருட்களைக் கொண்டு இந்தியா அணு ஆயுதம் செய்து விடாமல் மட்டுமே பார்த்துக் கொள்கிறது, மற்றபடி அணு உலையின் பாதுகாப்பு குறித்து அதற்கு அக்கறை இல்லை. இது சம்மந்தப்பட்ட இந்திய அமைப்பான AERB அரசாங்கக் கைப்பாவையாக இருக்கிறது. அரசின் முடிவே இந்த அமைப்பு ஓர் அணு உலைக்கு அளிக்கும் சான்றிதழில் இருக்கும். அதனால் சுதந்திரமும் தெளிவும் நிரம்பிய NSRAவைக் கொண்டு வருவது தான் ஒரே தீர்வு என்கிறார். 

4. The article very softly touches the rehabilitation part, however i feel happy at least the author concerned to mention that. No insurance / No rehabilation / No emergency evacuation plan and they called it, sorry assures it safe.

எந்த தேசமும் அணு உலை அருகே வசிக்கும் தன் மக்களுக்கு இந்த வாக்குறுதி எல்லாம் தருகிறதா எனத் தெரிந்திலை. அவர்கள் எல்லோரும் உத்தரவாதம் தருவது ஒரே விஷயம் தான். அது அணு உலையின் பாதுகாப்பு. கூடங்குளத்திலும் அதைக் கேட்பதே நியாயம். நிஜமான NSRA வந்தால் அதை உறுதிப்படுத்தும் என்பது ராகுலின் நம்பிக்கை. 

5.The proposed NSRA reminds me the fate of NSA proposed after Mumbai Attacks.

இருக்கலாம். ஆனால் எல்லா விஷயத்திலும் ஒரே தவறு தான் நடக்கும் என எதிர்பார்ப்பது சரியல்ல‌. அடுத்த வீட்டில் பூட்டை உடைத்துத் திருடி விட்டார்கள் எனில் நாம் பூட்டினாலும் பிரயோஜனமில்லை என வீட்டைத் திறந்து போட்டு விட்டுப் போவோமா?  மேலும் வலுவான பூட்டு அல்லது புதிய பாதுகாப்பு ஏற்பாடு ஏதேனும் செய்வோம். அது போலவே NSA போல் ஆகாமல் அரசு NSRAவை சரியாய் செயல்படுத்த வேண்டும் என உலை எதிர்ப்பாளர்கள், ஆதரவாள‌ர்கள்  நிர்ப்பந்திக்க வேண்டும்.  அதை விடுத்து அரசாங்க இயந்திரத்தின் இயலாமையை குத்திக் காட்டுவதில் பயனில்லை.

6.Coal become scarce, Water is dream, wind is optional, solar is costly, then why not Nuclear shall be an acceptable slogan, but when it answers all the questions raised and when the doubts are cleared.

அப்படி அனைத்தையும் தெளிவுபடுத்திய பின்பே அணு உலையை செயல்படுத்த‌ வேண்டும் என்பதே என் விருப்பமும்.

I'm not against science, as an ardent student of science, the first lesson what it teaches me was to question everything.

உங்கள் விவாதத்திலிருந்தே அது நன்கு புரிகிறது. FYI - நானும் அதே ஜாதி தான். ஒரே வித்தியாசம் நான் எதிர்ச்சாரியில் இருக்கிறேன். எப்படி சில சாதகங்கள் புரிந்தும் நீங்கள் அந்தப் பக்கம் இருக்கிறீர்களோ அதே போல் சில பாதகங்கள் தெரிந்தும் நான் இந்தப் பக்கம் இருக்கிறேன். எனக்கும் கேள்விகள் இருக்கின்றன. விடைக்கு நானும் காத்திருக்கிறேன். 

BTW: The author mildly compared "Aeroplane travel with Nuclear power plant" which reminded an argument you had with a women here, when she questions that why shall those miscreant talks can be extended to your kins. I will respond to this "Aeroplane-Nuclear power plant" comparison as you responded to that argument.

இல்லை. ஓர் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. அந்தப் பெண்ணுடையதைப் போல் உணர்ச்சியின் மேலீட்டால் நிகழ்த்தப்பட்ட மேலோட்டமான ஒப்புமையாக இல்லாமல் ராகுலின் விமானம் - அணு உலை ஒப்பீடு கனகச்சிதம். அதாவது நாம் விமானப் பயணத்திற்கே மிகப் பயந்தோம். அதனால் அதன் பாதுகாப்புகள் காலந்தோறும் வலுவடைந்து இப்போது என்ன நிலைமை ஆகி விட்டதென்றால் பைக், கார், பஸ், ரயில், கப்பல் என வேறெந்த மார்க்கமாய்ப் பயணம் செய்வதைக் காட்டிலும் விமானத்தில் பயணிப்பதே மிகப் பாதுகாப்பானதாக ஆகி விட்டது. நடக்கும் விபத்துக்கள் மற்றும் மரணங்களின் எண்ணிகையை ஒப்பிட்டு இதை அடித்துச் சொல்லலாம். அது போல செர்னோபில் என்ற மாபெரும் தோல்விக்குப் பின் அதீத கவனம் செலுத்த ஆரம்பித்து இன்று அணு உலைகளும் பாதுகாப்பின் உச்சத்தில் இருக்கின்றன‌. மோன்பியாட் மனம் மாறியதன் காரணமே இந்த அபாரமான பாதுகாப்பு தானே! இந்திய அணு உலைகளில் இத்தகைய பாதுகாப்பு இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. ஆனால் NSRA மூலம் கொண்டு வந்து விடலாம் என்கிறார் ராகுல்.

*******

இந்தியாவில் அணுசக்தியின் தேவை குறித்து முன்பு அப்துல் கலாம் எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்திருந்தேன்:

அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 1 http://www.tamilpaper.net/?p=4793
அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 2 http://www.tamilpaper.net/?p=4840
அணுசக்தியும் எதிர்காலமும் – அப்துல் கலாம் : 3 http://www.tamilpaper.net/?p=4810


*******

பிற்சேர்க்கை (15/10/2012 அன்று சேர்க்கப்பட்டது):

ரகு இவற்றில் சில விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார் : http://www.raguc.com/2012/10/brainstorming-with-writercsk.html

*******

Comments

hi said…
அணு உலை வேணுமா வேண்டாமா அதுக்கு முன்னாடி அணு உலை ஒரு இடத்தில வைத்தால் என்ன என்ன வழி முறைகள் பின் பற்ற வேண்டும் முதல்ல அதெல்லாம் முடிச்சுட்டு அப்பறமா அணுஉலை ஆரமிங்க
hi said…
ராக்கெட் விஞ்ஞானத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாத ஒன்று. நியூட்டனின் நகர்தல் விதி (law of motion) எனும் அடிப்படை தத்தவத்தை மையப்பொருளாக கொண்டு இயங்குவது ராக்கெட் விஞ்ஞானம்; அணுவுக்குள் அடங்கி கிடக்கும் அணுக்கருவை பிளப்பதால் வெள்ளப்பெருக்கெடுக்கும் கதிரியக்கத்தையும், வெப்பத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்குவது அணுவிஞ்ஞானம். ராக்கெட்டுகளும், அணுகுண்டுகளும் மனித மாமிசம் விற்கும் நர மாமிச கடைகளிலும், நர மாமிச வியாபாரிகளிடமும் ஒன்றாக கிடைக்கும் என்பதைத்தவிர இந்த இரண்டிற்கும் வேறெந்த தொடர்பும் இல்லை. இப்படியாக, அணுவுக்கும், ராக்கெட்டுக்கும் இந்த உலகத்திலே இருக்கும் ஒரே தொடர்பு நமது அப்துல் கலாம் மட்டுமே.
RaguC said…
ரைட்டர் இந்த விளக்கங்களில் பல இடங்களில் உங்களோடு முரண்படுகிறேன். சில இடங்களில் என் வாதத்திற்கு எதிர் வாதம் தேடிய ஆர்வத்தை / அதை நியாயம் என நிரூபிக்க செலுத்திய உழைப்பில் கால் பங்கையேனும் நீங்கள் இம்மாதிரியான எதிர் கேள்விகள் கேட்டு விளக்கம் தேட முற்பட்டிருந்தால் இன்னும் சிறப்பான விளக்கங்கள் கிடைத்திருக்க கூடலாம். எனது கேள்வுகளுக்கு /ஐயங்களுக்கு/ வார்த்தைகளுக்கு/ பதில் தேறியதை விட கேள்வியை நீங்களே கேள்வி தொடுத்து பதிலை கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பான CONVINCING - ஆன விளக்கங்கள் கிடைத்திருக்கலாம். ஒரு இடத்தில் ஏற்பட்டுவிட்ட TYPO ERROR / PRINTERS DEVIL -ஐ (4000msevs ) கூட இத்தனை சிரத்தையோடு கேள்வியாக எழுப்பியதற்கு பதிலாக அது தவறான இடுகை என்று முடிவுக்கு நீங்களே வந்திருக்கலாம்.

இத்தனை சிரத்தை கொண்டு விளக்கமளித்ததற்கு நன்றிகள்.ஆனால் நான் எதிர் தரப்பில் நிற்பதாக முத்திரை குத்திய நகைசுவை அலாதி. நான் ஒரு இடமிலி. எனக்கு நிரந்தர முகவரி இல்லை. சில கேள்விகளுக்கு பதில் சொல்ல இந்த அரசாங்கம் நேரடியாக மறுப்பதன் பொருட்டு அந்த கேள்விகளுக்கான பதில்கள் தேடி அலையும் ஊரோடி நான். கன்வின்சிங் ஆன பதில்கள் கிடைக்குமிடம் நானே கூட முன்னின்று இதை ஆதரிப்பேன். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் நாராயணசாமி / அப்துல் கலாம் என அரசியலும் / வெகுசன ஈர்ப்பையும் தீர்வாக முன்வைக்குமிந்த அரசாங்க கோமாளித்தனத்தை கேள்விக்குள்ளாகுவது என் கல்வி எனக்கு கற்பித்த பாடம். அதை தொடர்ந்து செய்வேன். கூடங்குளத்தில் விஞ்ஞானத்தை நம்பாமல், முல்லை பெரியாறில் விஞ்ஞானத்தை துணைக்கழைக்கும் சாமர்த்தியம் எனக்கு தெரியாது. பாமரனுக்கு எழும் கேள்விகளில் எனக்கு பதில் தேறாத கேள்விகளுக்கான தேடல் தான் என் பயணம்.

உங்கள் விளக்கங்களுக்கு நன்றிகள். நான் முரண்படும் இடங்கள் பாரிய கேள்விகளோடு உங்களை சந்திக்கிறேன். ஆரோக்கியமான NAME CALLING அற்ற விவாதமாக தொடுருவோம்.(உங்களுக்கு நேரமும், நான் பகடியோ செய்கிறேன் என்றோ / மூடனோ என்றோ நம்பிக்கை வராத வரைக்கும்)

(மேற்கண்ட பதிலில் நாகரீகமற்ற வார்த்தைகள் வந்திருப்பின் PLS BLAME MR.Signature - PREMIUM BRAND WHISKEY )
Thanks for the time spent on this reply.

Regards,

Ragupathi Raja C
Yes we have to believe science but can't believe Indian politicians and contractors they will fraud money and will do low quality safety measure like common wealth stadium
medeswaran said…
அடிப்படையில் இரண்டே கேள்விகள் தான் .

1)நாட்டின் மொத்த தேவையில் 2.6 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்யும் இந்த அணு உலைகளை இத்தனை அபாயங்களுடன் அமைத்து இயக்கத்தான் வேண்டுமா ?

2) இவற்றை நிறுவத் தேவைப்படும் அதீதமான தொகையை ( 1000 மெகா வாட்டிற்கு சுமார் 14 ஆயிரம் கோடி) சூரிய ஒளி மற்றும் காற்றாலைகளில் முதலீடு செய்தால் மின் தேவை பல மடங்கு பூர்த்தி செய்யப்படாதா?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்