அரட்டைக்குத் திரட்டியவை

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை நூறு நவீனத் தமிழ் கவிஞர்களின் கவிதைகளை தினம் ஒன்று வீதம் ('அரட்டைகேர்ள்' சௌம்யாவுக்கு மென்ஷனோடு) ட்விட்டரில் போட்டு வந்தேன். அவற்றின் முழுத்தொகுப்பு இது. உடன் அதன் கதையும்.

நூறு என்ற எண்ணிக்கையை மனதில் வைத்துத் தொடங்கவில்லை. ஆரம்பிக்கும் போது எந்த எண்ணிக்கையுமே மனதில் இல்லை. அறுபது கவிதைகள் கட‌ந்த‌ போது தான் நூறு என்ற எண்ணிக்கை மனதில் உதித்தது. தொன்னூறு தொட்ட போது 365 போட்டால் என்ன என்ற எண்ணம் கூட வந்தது. ஆனால் இப்போது இத்தொடர் அதன் உச்சத்தில் இருக்கிறது; எனக்கு ஆர்வமான சவாலாக இருக்கிறது; அது அலுப்பான கடமையாக மாறக் கூடாது. அதற்கு முன்பு நிறுத்தி விட வேண்டும்.

அதனால் தான் நூறோடு நிறுத்தினேன். நிறுத்த மனமில்லாமல், ஆனால் மனநிறைவோடே நிறுத்தப்பட்டது இத்தொடர்.

எந்த நாளும் தடைபடாமல் தொடர்ந்து இது வெளியாக சில பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருந்தது. இந்த மூன்றரை மாதங்களில் பெங்களூரு, சென்னை, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை என் பல ஸ்தலங்களில் ஓரிரு தினங்களைக் கழிக்க நேர்ந்தது. அவ்விடங்களின் பணி அழுத்தங்கள், இணையத் தொடர்பு உள்ளிட்ட அக மற்றும் புற சூழல்களின் நிலையாமைகளை அனுசரித்து இடைவெளி விடாமல் இதைச் செய்து முடித்தது ஒருவித சுவாரஸ்ய‌ சவாலாகவே இருந்தது. இடையில் அலுவலக நண்பர் தன் ப்ராஜெக்ட்டுக்காக என் ஆன்ட்ராய்டைப் பிடுங்கிக் கொண்டார். அவர் மாற்றாகத் தந்த மொபைலில் தமிழ் எழுத்துருக்கள் வாரா. எல்லாவற்றையும் சமாளித்தேன்.

இதை எல்லாம்விட முக்கியமாய் தேடல். நிறைய வாசிக்க‌ நேர்ந்தது - சில மறுவாசிப்பு; பல புதியவை. ஒரு கட்டத்தில் என்னிடமிருந்த நல்ல புத்தகங்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்ட நிலைமை. அடுத்து சஞ்சிகைகளைக் கையிலெடுத்தேன். தனிப்பட்டு முயன்றிருந்தால் இக்குறுங்காலத்தே செய்திருக்கவியலா வாசிப்பு அடர்த்தி சாத்தியப்பட்டது இந்நூறு நாளில்.

எதற்காக இத்தொடர்? அனைவருக்கும் நவீனக் கவிதையை அறிமுகப்படுத்தும் பொதுநலமும், என் வாசிப்பை விருத்தி / புதுப்பிப்பு செய்யும் சுயநலமும் அடிப்படையில் இருந்தாலும் அவற்றைத் தாண்டி ஒரு பிரதான‌ காரணம் இருக்கிறது.

பேயோன், தோட்டா போன்ற வெகு சிலர் ட்வீட் என்பதோடு நின்று விடாமல் வலைப்பதிவு, அச்சு ஊடகம் என முட்டை உடைத்து வெளியே வந்திருக்கின்றனர். ஆனால் திறமைசாலிகள் சிலர் ட்வீட்டரிலேயே தேங்கி விடுகின்றனர். அது அவரவர் ப்ரியம் மற்றும் சுதந்திரம் என்றாலும் அவர்களுக்குச் சொல்ல என்னிடம் சில விஷயங்கள் இருக்கின்றன.

"வெறும் 140 எழுத்துக்களோடு உங்கள் திறமையை சுருக்கி விடாதீர்கள்" என சொல்ல நினைத்தது இருவருக்குத் தான் - ஒருவர் அராத்து; மற்றவர் அரட்டைகேர்ள். ஏதோ ஒரு மனத்தயக்கம் காரணமாக அராத்துவிடம் இதுவரை அதைச் சொல்லியதில்லை. சௌம்யாவிடம் சொல்லி இருக்கிறேன். ஒரு ஜென் சிஷ்யையின் பணிவோடு, சிரத்தையோடு அதைக் கேட்டுக் கொண்டார். அடியேன் ஜென் குரு இல்லை என்ப‌தால் அதன் பொருள் இதுகாறும் விளங்கவில்லை.

எழுத வாசிப்பு முக்கியம். மிக முக்கியம். நான் ஒரு வாசகனாக இருந்திரா விட்டால் எழுத வந்திருக்கவே மாட்டேன். இப்போதும் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதை விட‌ ஒரு நல்ல வாசகன் என்று சொல்லிக் கொள்வதிலேயே கர்வமும் திருப்தியும் கொள்கிறேன். வாசிப்பே எழுத்தின் முதல் படி என்பதே இத்தொடர் உணர்த்தும் சித்தாந்தம்.

சௌம்யா நவீன இலக்கியங்களைப் பரவலாய் வாசித்ததில்லை என்பதை அவரே பொதுவில் சொல்லி இருக்கிறார். அவற்றை அவருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் விளையாட்டாய் ஏப்ரல் 7, 2012 அன்று உயிர்மை - ஏப்ரல் 2012 இதழிலிருந்து கார்த்திகாவின் கவிதை ஒன்றினை மென்ஷன் போடுகிறேன். அது ஒரு திட்டமிடாத‌ துவக்கப்புள்ளி.

பிறகு தான் தினமும் ஒரு கவிதை என்ற ஐடியா தோன்றிய‌து. என் சமகாலப் ப்ரிய கவிஞன் மனுஷ்ய புத்திரனில் தொடங்கினேன் இத்தொடரை. இவற்றில் சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் முக்கியமான படைப்பாளுமைகள். இவர்களை மறுதலித்து விட்டு நவீனத் தமிழ் கவிதையின் விரிந்த‌ வரலாற்றை எவ‌ரும் எழுதி விட முடியாது.

சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என்று போகாமல் கவிதையைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ட்விட்டரின் உடனடித்தன்மைக்கு அது தான் பொருந்தி வரும். மற்றொன்று ஆரம்பிக்க சுகமான இலக்கியப் பாடம் கவிதையே. நேரடியாக எழுதாமல் ஃபோட்டோ எடுத்துப் போட்டதற்கு (நன்றி: LG Optimis One & HTC Wildfire) 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடு ஒரு காரணம். அச்செழுத்தை நேரடியாக வாசிக்கும் நெருக்க உணர்வு வர வேண்டும் என்பது மற்றொன்று.

இத்தொடருக்கான‌ கவிதைகளைத் தேர்ந்தெடுக்க‌ சில விதிமுறைகள் வகுத்துக் கொண்டேன். அவற்றை முடிந்தளவு பின்பற்றியும் இருக்கிறேன்: 1. எனக்கு பிடித்திருக்க வேண்டும் 2. ஒரு கவிஞர் மறுபடி வரலாகா 3. ஒரு புத்தகம் மறுபடி வரலாகா 4. அளவில் சிறிய‌ கவிதை நலம் 5. வன்சொல் தவிர்த்த‌ கவிதை சிறப்பு 6. அறியப் பெறாக் கவிதை சிலாக்கியம்.
இக்கவிதைகளின் தேர்வில் விமர்சனங்கள் இருக்கலாம். சற்றுக் கோணலாய் இருந்தாலும் சரி, இது என் பட்டியல். 

மென்ஷன் சௌம்யாவுக்கு மட்டும் தான் போட்டிருந்தேன் என்றாலும், பொதுவாய் கவிதைகள் வாசிக்கும் / நேசிக்கும் அத்தனை பேருக்குமான‌ ஓர் அறிமுகத் தொடர் என்பதாகவே எண்ணி  இதைச் செய்து வந்தேன். குறிப்பாய் கோகிலா கன்னியப்பன் போன்ற சில நல்ல‌ வாசகர்கள் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பது நிறைவை அளிக்கிறது. 'பால் பாக்கெட்' போன்ற ரசனையான உவமைகள் புன்னகையை வரவழைத்தாலும் ஒட்டுமொத்தமாக இக்கவிதைத் தொடர் கணிசமானோரால் நல்லவிதமாக எதிர்கொள்ளப்பட்டதாகவே தோன்றுகிறது. அவ்வகையில் இது ஒரு ஹிட்.

தொடரின் முடிவில் சௌம்யா நன்றி சொன்னதாக ஞாபகம். அதெல்லாம் வேண்டாம். எழுத ஆரம்பியுங்கள், அது தான் நிஜமான நன்றி. ட்விட்டரில் இருக்கும் எல்லாத் திறமைசாலிகளுக்கும் இதையே தான் சொல்ல ஆசைப்படுகிறேன்.

*******
  1. 10-04-2012 09:26    மனுஷ்யபுத்திரன்    [இதற்கு முன்பும் இதற்கு பிறகும்]
  2. 12-04-2012 07:19    லீனா மணிமேகலை    [ஒற்றையிலையென‌]   
  3. 12-04-2012 20:56    சுகிர்தராணி    [இரவு மிருகம்]   
  4. 15-04-2012 07:02    மகுடேசுவரன்    [இன்னும் தொலையாத தனிமை]   
  5. 16-04-2012 10:14    கனிமொழி    [அகத்திணை]   
  6. 17-04-2012 08:51    குட்டி ரேவதி    [முலைகள்]   
  7. 18-04-2012 07:52    வஸந்த் செந்தில்    [இசைத் தட்டின் மேலொரு முள் விழுந்தது]   
  8. 19-04-2012 08:33    கண்டராதித்தன்    [சீதமண்டலம்]   
  9. 20-04-2012 07:05    பிரமிள்    [கைப்பிடியளவு கடல்]   
  10. 21-04-2012 07:52    சி.மோகன்    [தண்ணீர் சிற்பம்]   
  11. 22-04-2012 07:50    முகுந்த் நாகராஜன்    [அகி]   
  12. 23-04-2012 07:20    தேவதேவன்    [விண் வரையும் தூரிகைகள்]
  13. 24-04-2012 07:53    விக்ரமாதித்யன்    [ஆதி]   
  14. 25-04-2012 07:44    லஷ்மி மணிவண்ணன்    [சங்கருக்கு கதவற்ற வீடு]   
  15. 26-04-2012 08:17    க.நா.சு.    [புதுக்கவிதைகள்]  
  16. 27-04-2012 08:48    யாத்ரா    [மயிரு]   
  17. 28-04-2012 07:52    சங்கர ராம சுப்ரமணியன்    [அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்]   
  18. 29-04-2012 07:35    மு.மேத்தா    [கண்ணீர்ப் பூக்கள்]   
  19. 30-04-2012 07:40    இரவி    [கனவுநிலை உரைத்தல்]   
  20. 01-05-2012 07:17    பா.ராஜாராம்    [கருவேல நிழல்]   
  21. 02-05-2012 07:56    செல்வேந்திரன்    [முடியலத்துவம்]   
  22. 03-05-2012 08:49    ஜோசப்-டி-சாமி    [கனவுகளைப் பேச வந்தவன்]   
  23. 04-05-2012 07:18    கல்யாண்ஜி    [கல்யாண்ஜி கவிதைகள்]   
  24. 05-05-2012 08:28    ரா.பார்த்திபன்    [கிறுக்கல்கள்]   
  25. 06-05-2012 07:34    அப்துல் ரகுமான்    [பித்தன்]   
  26. 07-05-2012 07:29    ஜெயமோகன்    [இரவு]   
  27. 08-05-2012 07:08    சாரு நிவேதிதா    [ஸீரோ டிகிரி]   
  28. 09-05-2012 08:37    வா.மு.கோமு    [சொல்லக் கூசும் கவிதை]   
  29. 10-05-2012 07:37    இளையராஜா    [வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது]   
  30. 11-05-2012 07:41    பவுத்த அய்யனார்    [மேன்ஷன் கவிதைகள்]   
  31. 12-05-2012 07:35    எஸ்டி.விஜய்மில்டன்    [கொலுசுகள் பேசக்கூடும்]   
  32. 13-05-2012 08:04    ராஜா சந்திரசேகர்    [அனுபவச் சித்தனின் குறிப்புகள்]
  33. 14-05-2012 07:59    தாமரை    [ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்]
  34. 15-05-2012 07:39    பாரதி    [கண்ணன் பாட்டு]  
  35. 16-05-2012 10:03    லாவண்யா சுந்தரராஜன்    [நீர்க்கோல வாழ்வை நச்சி]   
  36. 17-05-2012 07:41    பொன்.வாசுதேவன்    [ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை]   
  37. 18-05-2012 07:31    சுகுமாரன்    [வாழ்நிலம்]   
  38. 19-05-2012 07:26    அய்யப்ப மாதவன்    [நீர்வெளி]   
  39. 20-05-2012 07:56    மதன்    [உறங்கி விழித்த வார்த்தைகள்]   
  40. 21-05-2012 07:31    என்.விநாயகமுருகன்    [கோவில் மிருகம்]   
  41. 22-05-2012 07:32    செல்வராஜ் ஜெகதீசன்    [ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்]   
  42. 23-05-2012 07:12    கனாக்கண்ணன்    [வசீகரனும் ப்ரியம்வதாவும்]   
  43. 24-05-2012 07:56    ஸ்ரீநேசன்    [ஏரிக்கரையில் வசிப்பவன்]   
  44. 25-05-2012 07:32    பழமலய்    [குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்]   
  45. 26-05-2012 07:09    கலாப்ரியா    [கலாப்ரியா கவிதைகள்]   
  46. 27-05-2012 08:35    நா.முத்துக்குமார்    [குழந்தைகள் நிறைந்த வீடு]
  47. 28-05-2012 07:54    தபூ சங்கர்    [தேவதைகளின் தேவதை!]   
  48. 29-05-2012 07:27    சே.பிருந்தா    [காலச்சுவடு - மார்ச் 2009]   
  49. 30-05-2012 08:01    ரவி உதயன்    [அகநாழிகை செப். - நவ. 2010]   
  50. 31-05-2012 07:33    நரன்    [உயிர்மை - செப்டெம்பர் 2008]   
  51. 01-06-2012 07:56    ஜெ.பிரான்சிஸ் கிருபா    [மல்லிகைக் கிழமைகள்]   
  52. 02-06-2012 07:37    TKB காந்தி    [கூர்தலறம்]   
  53. 03-06-2012 07:41    பெருந்தேவி    [காலச்சுவடு - ஜூலை 2010]   
  54. 04-06-2012 07:15    மீரா    [கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்]   
  55. 05-06-2012 07:03    பசுவய்யா    [சுந்தர ராமசாமி கவிதைகள்]   
  56. 06-06-2012 07:16    பிரம்மராஜன்    [கடல் பற்றிய 17 கவிதைகள்]   
  57. 07-06-2012 07:17    பாரதிதாசன்    [காதல்]   
  58. 08-06-2012 07:03    பா.விஜய்    [சில்மிஷியே...]   
  59. 09-06-2012 08:33    பத்மபாரதி    [காலச்சுவடு - ஜூன் 2012]  
  60. 10-06-2012 10:28    ஆண்டாள் பிரியதர்ஷினி    [மன்மத எந்திரம்]   
  61. 11-06-2012 06:59    க.சீ.சிவகுமார்    [ஆனந்த விகடன் 11.4.04]   
  62. 12-06-2012 07:33    மாலதி கல்பனா அம்புரோஸ்    [காலச்சுவடு - மே 2012]   
  63. 13-06-2012 07:51    அறிவுமதி    [நட்புக்காலம்]   
  64. 14-06-2012 07:06    அம்சப்ரியா    [காலச்சுவடு - அக்டோபர் 2004]   
  65. 15-06-2012 07:06    எஸ்.நடராஜன்    [தீராநதி - அக்டோபர் 2008]   
  66. 16-06-2012 06:30    ஆத்மநாம்    [ஆத்மநாம் கவிதைகள்]   
  67. 17-06-2012 07:07    தமிழ்நாடன்    [காமரூபம்]   
  68. 18-06-2012 07:20    உமா மஹேஸ்வரி    [காலச்சுவடு - ஆகஸ்ட் 2004] 
  69. 19-06-2012 07:50    வைரமுத்து    [தமிழுக்கும் நிறம் உண்டு]   
  70. 20-06-2012 07:32    சி.மணி    [கொங்குதேர் வாழ்க்கை - 2]   
  71. 21-06-2012 08:08    சங்கரி    [உயிர்மை - மே 2012]   
  72. 22-06-2012 07:10    இவள் பாரதி    [அகநாழிகை : செப். - நவ. 2010]   
  73. 23-06-2012 07:47    சுகிர்தா    [அகநாழிகை :  ஜன.-மார்ச் 2011]   
  74. 24-06-2012 07:32    ராஜசுந்தரராஜன்    [அகநாழிகை :  ஜன.-மார்ச் 2011]
  75. 25-06-2012 07:17    பாலைநிலவன்    [காலச்சுவடு : நவம்பர் - டிசம்பர் 2002]
  76. 26-06-2012 07:38    சேரல்    [அகநாழிகை - அக்டோபர் 2011]   
  77. 27-06-2012 07:28    ச.இராகவன்    [தீராநதி - டிசம்பர் 2008]   
  78. 28-06-2012 07:22    அப்பாஸ்    [காலச்சுவடு : மார்ச் - ஏப்ரல் 2001]   
  79. 29-06-2012 08:15    இராவணன்    [361 டிகிரி : ஆடி - ஐப்பசி 2011]   
  80. 30-06-2012 07:45    ரவிக்குமார்    [அம்ருதா - ஜனவரி 2012]   
  81. 01-07-2012 07:18    இசாக்    [கணையாழி - 2011]   
  82. 02-07-2012 08:08    சவுந்தர மகாதேவன்    [புதுப்புனல் - ஆகஸ்ட் 2011]
  83. 03-07-2012 08:54    தேவதச்சன்    [361 டிகிரி : சித்திரை - ஆனி 2011]   
  84. 04-07-2012 07:35    மாலதி மைத்ரி    [கல்குதிரை - வேனிற்காலங்களின் இதழ்]   
  85. 05-07-2012 10:13    பா.ஜெயக்குமார்    [உயிர் எழுத்து - நவம்பர் 2011]   
  86. 06-07-2012 09:16    உமா ஷக்தி    [குமுதம் தீபாவளி மலர் 2011 - இலக்கியச் சிறப்பிதழ்]   
  87. 07-07-2012 07:19    கே.ஸ்டாலின்    [தீராநதி - ஆகஸ்ட் 2009]   
  88. 08-07-2012 06:52    நா.விச்வநாதன்    [தீராநதி - பிப்ரவரி 2009]   
  89. 09-07-2012 08:25    மெளனன்    [காலச்சுவடு - ஜூன் 2008]   
  90. 10-07-2012 08:27    இளமுருகு    [காலச்சுவடு - ஜனவரி 2005]   
  91. 11-07-2012 09:40    சமயவேல்    [காலச்சுவடு - நவம்பர் 2009]   
  92. 12-07-2012 15:58    சல்மா    [காலச்சுவடு - ஜனவரி 2010]   
  93. 13-07-2012 07:29    ஞானக்கூத்தன்    [உயிர்மை - நவம்பர் 2009]   
  94. 14-07-2012 07:09    அழகிய பெரியவன்    [தீராநதி - அக்டோபர் 2010]   
  95. 15-07-2012 06:45    குவளைக்கண்ணன்    [காலச்சுவடு - மே 2010]   
  96. 16-07-2012 07:20    றஞ்சனி    [உயிர்மை - ஜனவரி 2009]   
  97. 17-07-2012 08:32    தமிழச்சி தங்கபாண்டியன்    [தீராநதி - டிசம்பர் 2010]   
  98. 18-07-2012 09:03    முபாரக்    [உயிர்மை - ஜூலை 2008]   
  99. 19-07-2012 08:17    கண்ணதாசன்    [கண்ணதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதி]   
  100. 20-07-2012 07:20    சி.சரவணகார்த்திகேயன்    [தேவதை புராணம்]  

Comments

Sankar said…
Nice.

Although I followed it everyday, I wondered why you were CCing arattaigirl. I (like a few others) thought it was inappropriate initially, but then stopped being judgmental later on :)

You have an enviable vaasippu anubavam. I can vouch for it (as if my vouching matters ;) )

One small request, in this post, why not use "idam" instead of "sthalam" ?

(Typing in English due to technical issues)
jroldmonk said…
விருப்பங்கள் தான் எத்தனை அழகானது.நாம் நினைத்து பார்க்காதாவற்றை எல்லாம் ரசித்து செய்ய வைக்கிறது.மற்றவர்களின் கிண்டல் கேலிகளை துளியும் பொருட்படுத்துவதில்லை அது.
jroldmonk said…
இதை எல்லாம் நான் எங்கே போய் படிக்க போகிறேன்.உங்கள் அப்டேட்டில் பாதிக்கு மேல் படித்திருக்கிறேன்..அனைத்தையும் ஒரு இரவில் சிஸ்டமில் சேவ் செய்து கொள்ள இருக்கிறேன்.இமேஜ் ஆக அப்லோட் செய்ததில் இப்படி ஒரு வசிதி இருக்கிறது.இந்த பதிவை படிக்கையில் இதற்கு பின் எத்தனை பெரிய உழைப்பு இருக்கிறது என புரிகிறது #மனமார்ந்த பாராட்டுகளும்,நன்றியும்.
jroldmonk said…
"வெறும் 140 எழுத்துக்களோடு உங்கள் திறமையை சுருக்கி விடாதீர்கள்" என் விருப்பமும் இது தான்.நானும் அவரிடம் சொல்லியிருக்கிறேன் இப்பொது இன்னொரு முறை,வழிமொழிகிறேன்.
Nat Sriram said…
இதற்கு பின்னால் இருக்கு உழைப்பு (ட்வீட்டுகளை ‘சேவ்’வுவது முதற்கொண்டு)வியக்க வைக்கிறது..
வாழ்த்துகள்

இக்கவிதைகள்/வாசிப்பு என்ன மாதிரியான மாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியது என்று அறியும் போது இத்தொடர் முழுமையான அர்த்தம் பெறும்.
Vetri said…
வாழ்த்துக்கள்! உங்கள் வாசிப்பனுபவம் பிரமிக்க வைக்கிறது! இடையில் அந்த எழுத்தாளரின் கவிதையையும் கண்டேன்! அவருக்கு எங்கே புரியப்போகிறது?
Baskar said…
அந்த 6 விதிமுறைகளை கண்டு நான் வியக்கிறேன்! உண்மையிலேயே பாராட்டுக்குரியது! வாழ்த்துக்கள் :)
Anonymous said…
ithaiyae oru book-ah podalaamae ?!
சிந்திப்பவன் said…
நல்ல ரசனை+
சரியான குறிக்கோள்+
கடின உழைப்பு
=உங்கள் இந்த தொகுப்பு.
மிக்க நன்றி..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்