புதிய தலைமுறை

"I am a New Generaion Girl!!! Any thing for my Country to get Home the World Cup So INDIA Cheer with me That we need 1983 BACK" - ட்விட்டரில் பூனம் பாண்டே, மார்ச் 31, 2011 மதியம் 2:39

*******

பூனம் பாண்டே - 72 மணி நேரத்துக்கு முன் இந்தப் பெயரை உச்சரித்திருந்தால் நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்காது; ஆனால் இக்கணம் இப்பெயர் பிரபஞ்ச பிரசித்தம். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்லும் நாளைய பொன் நிகழ்வில் இந்த ஐந்தடி ஏழங்குல உயர 19 வயது மும்பை மாடலின் தூய நிர்வாண அழகியலை பேரார்வத்துடன் எதிர்நோக்கியிருக்கின்றன‌ சுமார் 242 கோடி இந்தியக் கண்கள். வாழிய, நம் நாட்டுப்பற்று!


உலகக்கோப்பை போன்ற பிரம்மாண்ட விளையாட்டு நிகழ்வுகளில் இது போன்ற அதிர்ச்சி மதிப்பீட்டு அறிவிப்புகள் வெளியிடப்படுவது புதிதல்ல. கடந்த 2010 உலகக்கோப்பை கால் பந்துப் போட்டியில் கூட இது நடந்தது. அர்ஜெண்டினா கோப்பை வென்றால் அந்நாட்டின் தலைநகரான Buenos Airesல் நிர்வாணமாக ஓடுவதாக Luciana Salazar என்ற 29 வயது மாடல் அறிவித்தார். பதிலுக்கு பேரகுவே கோப்பை வென்றால் அதன் தலைநகரான Asunciónல் நிர்வாணமாக ஓடுவதாக Larissa Riquelme என்ற 25 வயது மாடல் அறிவித்தார். கடைசியில் இந்த இரு நாடுகளும் இல்லாமல் ஸ்பெயின் கோப்பையை வென்றது (துரதிர்ஷ்டவசமாக ஸ்பெயின் தேசத்தின் சார்பாக யாரும் எந்தவொரு ஓட்டத்தையும் திட்டமிடவில்லை)‌.

poonam pandey கடந்த‌ மூன்று நாட்களாக இந்திய ட்விட்டரின் டைம்லைனில் trending topic. கூகுள் தேடலில் poo என்று டைப்பினால் poonam pandey என்று தான் முதலில் காட்டுகிறது. தவிர‌, இந்த மூன்று தினங்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்களில் முதலிடம். இணையத்தில் அதிக முறை டவுன்லோட் செய்யப்பட்ட மாடல்களின் பட்டியலில் இடம். இரண்டு பேர் பேசிக்கொண்டால் விஷயம் எதைப் பற்றியதாக இருந்தாலும் கடைசியில் பூனம் பாண்டேவுக்கு வந்து ஏளனமும் ஏக்கமும் கலந்ததொரு பெருமூச்சுடன் நிற்கிறது.

Kingfisher, ibibo போன்றவற்றின் ஸ்விம் சூட் கேலண்டர்களுக்கு டூபீஸ் டிரெஸ்களில் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் எந்த மாடலுக்கும் ஒற்றை இரவில் இப்படியொரு புகழ் கிடைப்பதரிது. தீபிகா படுகோனும் Kingfisher calender girl தான். ஆனால் அவர் இந்த உயரத்தை அடைந்தது காத்திருப்புக்களும், கஷ்டங்களும் நிறைந்த பாட்டையின் வழி.

பூனம் பாண்டேவைப் பொறுத்தவரை அடிப்படையில் இது ஒரு பப்ளிஸிட்டி மட்டுமே. அவரே சொல்வது போல் அவரது லட்சியக்கனவு நடிகையாவது. அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம் யாராவது இந்தி இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் பூனம் பாண்டேவிற்கு கூடிய சீக்கிரம் அழைப்பு விடுப்பார் (படத்தில் ந‌டிக்க). அவரது கதையையே படமெடுத்தாலும் ஆச்சரியமில்லை.

பப்ளிஸிட்டிக்காக என்றாலும் இதை நிச்சயம் ஸ்டன்ட் என்று சொல்ல மாட்டேன். அவர் சொன்னதைச் செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கிரிக்கெட் ஸ்டேடியம் போன்ற‌ பொதுவிடத்தில் இல்லையெனினும் வலைதளத்தில் நேரடி காணொளிபரப்பாக அல்லது ஏதாவது ஸாட்டிலைட் தொலைக்காட்சியின் மூலம் அவர் தன் வாக்கை நிறைவேற்றிட சாத்தியங்கள் அதிகம். தற்போதைய காஸ்ட்யூம்களிலிருந்து அவர் சொல்லியிருக்கும் நிலைக்கு மாற சில மில்லிமீட்டர்கள் துகலுரிந்தாலே போதுமானது என்பதால் அவருக்கு அது ஒரு பெரிய மனத்தடையாக இருக்காது என்றே தோன்றுகிற‌து. தவிர பாண்டேவின் பெற்றோர்களும் ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பதாக‌வே செய்திகள் தெரிவிக்கின்றன.

(வழக்கம் போல்) சிவசேனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மகாராஸ்ட்ர பிஜேபி ம‌களிர‌ணி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது. போபால் நீதிமன்றம் ஒன்றில் பிராமண சமூகத்தைப் பற்றி பூனம் தப்பபிப்பிராயம் ஏற்படுத்தி விட்டார் என அவ்ர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதை எழுத ஆரம்பிக்கும் சற்று நேரம் முன்ன‌தாக‌ உத்திரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் காவல் நிலையத்தில் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவின் பேரில் பூனம் பாண்டேவின் மீது எஃப்ஐஆர் ப‌திவு செய்திருக்கிறார்கள்.

மறுபக்கம் PETA இயக்கம் (People for the Ethical Treatment of Animals) கிரிக்கெட்டுக்காக அல்லாமல் பிராணிகள் நலனுக்காக பூனம் பாண்டே நிர்வாணமாக ஓட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பாலிவுட் இயக்குநர் சுபார்ன் வர்மா (Ek Khiladi Ek Haseena, Acid Factory) பூனம் பாண்டேவின் நிர்வாண நிகழ்படத்தைத் தான் ஏற்கனவே எடுத்திருப்பதாகச் சொல்லி ஏப்ரல் ஃபூல் செய்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.

"விமர்சன‌ங்களுக்கும், மிரட்டல்களுக்கும் நான் அஞ்சவில்லை. இது கிரிக்கெட் எனும் விளையாட்டின் பால் கொண்ட காதலால் இந்திய அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில் செய்வது. நாட்டின் சட்டத்தையோ, கிரிக்கெட் வாரியத்தையோ மீறி எதையும் செய்யும் எண்ணமில்லை" என்று சொல்லியிருக்கிறார்  பூனம் பாண்டே. இதற்கிடையே நாளை மும்பையில் நடக்கும் மேட்ச்சைப் பார்க்க பூனம் டிக்கெட் வாங்கி விட்டதாகத் தெரிகிறது. "எதுவுமே முடியாவிட்டால், குறைந்தப‌ட்சம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ட்டெஸ்ஸிங் ரூமிலாவது இக்கட்டவிழ்ப்பு நடந்தே தீரும்" என சூலுரைத்திருக்கிறார் பூனம் பாண்டே.

ஒரு மனமுதிராப் பதின்மச்சிறுமியின் எளிய‌ சினிமா மோகம் தாண்டி இதில் வேறேதும் புலப்படவில்லை. இந்தியச் சமூகம் தன் அத்தனை அரிஷ்டவர்க்க உளச்சிக்கல்களோடும் அவளைக் களப்பலியிடக் காத்திருக்கிறது. எனக்கு பூனம் பாண்டே என்ற பெண்ணின் கம்பீரம் வீசும் நிர்வாண தேகத்தை மீறிய‌‌ சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. பார்க்கலாம்.

Comments

தியாகு said…
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகளைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்!
இந்த எலக்சனில் கருணாநிதி ஜெயித்தால் நான் கூட முண்டக் கட்டையாக ஓடுவதாக இருக்கேன். அவர் ஜெயித்தால் நம்மிடம் எஞ்சி இருக்கும் கோவணத்தையும் உருவி விடுவார் என்பது வேறு விஷயம்
Baski said…
even typing "where" in google.co.in, shows the relevant result as "where is poonam pandey"!! how the world 've changed??!!!
வசந்த் said…
அதென்ன "......கம்பீரம் வீசும் நிர்வாணத்தை மீறிய சில எதிர்பார்ப்புகள்......"? எனக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று விளக்குகிறீர்களா?
Natraj.P said…
ஏன்சாமி, கோப்பையை பார்த்து ஜெயிச்ச காலமெல்லாம் போச்சா?
இது தெரியாம அத்தனை பரிசும் போச்சே!, வருசா வருசம் நானும் முண்டக்கட்டையா ஓடியிருப்பேனே!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்