போர்த்தொழில் பழகு
யுத்தம் செய் படம் முழுக்க வியாபித்திருப்பவை மூன்றே மூன்று விஷயங்கள் தாம்:
மிஷ்கின், மிஷ்கின் மற்றும் மிஷ்கின்.
எனக்குப் படம் மிகப்பிடித்திருக்கிறது. நான் தமிழில் பார்த்தவற்றிலேயே ஆகச்சிறந்த த்ரில்லர் திரைப்படம் இது தான். படத்தின் சுவாரசியமான திரைக்கதையினூடாக மிக யதார்த்தமாக, மிகத் துல்லியமாக ஒரு முழு சிபிசிஐடி வழக்கு விசாரணை பதிவாகி இருக்கிறது. To be precise, ஓர் இயக்குநராக மிஷ்கின் காட்சிக்குக் காட்சி ஜெயிக்கிறார்.
எந்தவொரு மர்டர் த்ரில்லரிலும் பொதுவாய் இரு பகுதிகள் இருக்கும். கொலைகாரன் பகுதி, துப்பறிபவர் பகுதி. இப்படத்தில் துப்பறியும் பகுதி அற்புதமாய் மிகையின்றிப் பதிவாகியிருக்க, கொலைப் பகுதியோ ஒரு ராஜேஷ்குமார் க்ரைம் நாவலைப் போன்று இருக்கிறது. தவிர, வேட்டையாடு விளையாடு, அஞ்சாதே, ஈசன் போன்ற படங்களின் சிலபல காட்சிகளும் ஆங்காங்கே நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இதற்கு முன்பு தான் வைத்திருந்த தொழில்நுட்பக்குழுவை (மகேஷ் முத்துசுவாமி & சுந்தர்.சி.பாபு) அப்படியே கலைத்து விட்டு முழுக்கவும் புதியவர்களுடன் கைகோர்த்து இப்படத்தைத் தந்திருக்கிறார் மிஷ்கின். ஆனால் அவரது முந்தைய படங்களில் பார்த்த அதே மாதிரியான இசை (நந்தலாலா தவிர்த்து), ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. அதே ஸ்டைல்; அதே பேட்டர்ன்; அதே மேஜிக். அர்த்தம் - அவை யாவும் அந்தக் கலைஞர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; எல்லாவற்றுக்குமே மிஷ்கினின் சிந்தனை அடிப்படையாக இருந்து இயங்கியிருக்கிறது.
வழக்கம் போல் ஒளிப்பதிவு (சத்யன்) அருமை, வழக்கம் போல் இசை (கே) அருமை, வழக்கம் போல் படத்தொகுப்பு (காகின்) அருமை, வழக்கம் போல் கலை இயக்கமும் (அமரன்) அருமை. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே போல் இதிலும் சேரன் nail-cutterஐ ஆயுதமாக்கிப் போடும் அந்த ப்ரிட்ஜ் சண்டைக்காட்சி (ஆக்ஷன் பிரகாஷ்) பேசப்படும்.
சேரன் கச்சிதமாக அந்த சிபிசிஐடி அதிகாரி கதாபாத்திரத்திற்குப் பொருந்திப்போகிறார். அவருக்கு நடிப்பில் மிக முக்கியமான படமாக இது அமையும். படம் முழுக்க அவருக்கு உதவியாக சப்-இன்ஸபெக்டராக வரும் தீபா ஷா கை பிடித்திழுக்கிறார். ஜெயபிரகாஷ் நடிப்பைப் புகழ்ந்து அலுத்து விட்டது. லக்ஷ்மி ராமகிருஷ்ணனும், வை.ஜி.மகேந்திரனும் நன்றாக செய்திருக்கிறார்கள்; அப்புறம் வேறு சில நடிகர்களும் (பெயர் தெரியவில்லை).
மிஷ்கின் இளையராஜாவின் குரலில் முயன்று பாடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் (எந்தப்படம் என்று சொல்லாது முதல் முறை என் மனைவிக்கு அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் போட்டுக் காட்டிய போது "இளையராஜா தானே!" என்றாள்). அஞ்சாதேவில் வரும் "அச்சம் தவிர்" போல் இதிலும் மிஷ்கினின் குரலில் பாரதியின் புதிய ஆத்திச்சூடி வரிகளைக் கொண்ட ஒரு பாடல் உண்டு - "வேதம் புதுமை செய்". அஞ்சாதேவில் இரு வார்த்தை ஆத்திச்சூடி வரிகள், இதில் மூன்று வார்த்தை ஆத்திச்சூடி வரிகள் என்பது மட்டும் வித்தியாசம். இவை எல்லாம் ஆடியோ கேஸட்டில் மட்டும் இருக்கின்றன. படத்தில் இந்தப் பாடல்களின் இசை மட்டும் பின்னணி இசையாக சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Box (Pandora) ஓர் அற்புதமான பின்னணி இசைக்கோர்வை.
நாவிலினித்துக்கொண்டிருக்கும் அக்காரவடிசலினூடே தட்டுப்படும் சிறுகல் போல் படத்தில் துருத்தி நின்று உறுத்தும் ஒரே விஷயம் "கன்னித்தீவுப்பொண்ணா" பாடல் மட்டுமே. எதிர்பார்த்தது போல் இருட்டடிப்பு செய்து விடாமல் இந்தப்பாடலில் சாரு நிவேதிதாவின் முழு உருவத்தை ஏழெட்டு விநாடிகளும், ஹார்மோனியம் வாசிக்கும் கை விரல்களை பாடல் முழுக்கவுமே ஆங்காங்கேயும் காட்டுகிறார்கள். டைட்டில் கார்டில் கூட அமீருடன் சேர்த்து சாருவுக்கும் நன்றி போடுகிறார்கள். அறம் பாடுதல் போலும்!
இது போக ஜே.கிருஷ்ணமூர்த்தியின் "Observer is the observed", விக்டர் ஃப்ராங்கிள் எழுதிய 'Man's Search for Meaning' என ஆங்காங்கே சில டிபிகல் மிஷ்கின்தனங்கள் தென்படுகின்றன. "Observer is the observed" பற்றி ஓஷா தனது 'Osho Upanishad'ல் ஐந்து பக்கங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். தேவையும், பொறுமையும் ஒருசேர இருப்பவர்கள் வாசித்துத்தெளியலாம்.
சமீபத்தில் வந்த ஆடுகளம் படத்தை விட இது சிறந்த படமா என்று கேட்டால் இல்லை தான். சரி, நந்தலாலா தவிர்த்து மிஷ்கினின் சிறந்த படம் இது தானா என்று கேட்டாலும் பதில் இல்லை தான் (அஞ்சாதே இதை விடச் சிறந்த படம்). அப்புறம் இதில் என்ன தான் ஸ்பெஷல்? அது மிஷ்கின். அவரது இயக்கும் திறனை அணுஅணுவாக இதில் ரசிக்கலாம். ஒரு கலைஞாக இருந்தால் மட்டுமே அதை உணர முடியும். மற்றபடி படத்தின் வியாபார வெற்றியை சாதாரணர்கள் உறுதி செய்வார்கள். அதில் நான் தலையிடுவதேயில்லை.
முன்பொரு முறை மிஷ்கினை அடுத்த மணிரத்னம் எனக் குறிப்பிட்டருந்ததை இப்போது வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஆம். மிஷ்கின் மணிரத்னத்தையும் தாண்டிப்போவார். படததைப் பார்த்து வெளிவரும் போது உடனடியாக ஒரே வாக்கியம் தான் தோன்றியது -
"ஐ லவ் மிஷ்கின்!"

Comments
No doubt Mysskin will excel Maniratnam in terms of delivery. Mysskin has access to tonnes of repository which Maniratnam didn't have during his peak time. But the questions are "Will Mysskin be recognized beyond India? , Will his works be showcased to International Audience?"
Answer : Unlikely, unless he can mix our native sensibilities.
FYI, Chithiram Paesuthadi is one-of-the-favorites of writer Sujatha.
He's been in a shell to defend himself by sayin' 'never imitated any (world) movies so far, however those movies inspired me a hell lot.' Do you believe this ? Grrrrrrrrrr.
@ Rajesh: It ain't a copy of Japanese movie, but Korean. Here is the title for you - Salinui chueok (=memories of murder).