பரத்தை கூற்று : புத்தக வெளியீடு

Finally, the wait is (almost) over!

கடந்த‌ ஒன்றரை மாதமாய் பல்வேறு காரணிகளால் தாமதமாகிக் கொண்டிருந்த 'பரத்தை கூற்று' புத்தக வெளியீட்டு நிகழ்வு வரும் 16-அக்டோபர்-2010, ச‌னிக்கிழமை அன்று மாலை 5:00 மணி அளவில் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கிறது - எனது ஆதர்சத் த‌மிழில‌க்கியப்‌ பேராளுமைகளுள் ஒருவரான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் அவர்களுக்கு என் ப்ரியங்கள்.


செப்டெம்பர் ஆரம்பத்திலேயே மதுரைப் புத்த‌கக் கண்காட்சியில் வைத்து இப்புத்தக வெளியீட்டு நிகழ்வு அரங்கேறியிருக்க வேண்டும் (அப்படி நடந்திருந்தால், "கற்புக்காக ஊரை எரித்த பெண்ணொருத்தி வாழ்ந்த மண்ணில், ஊருக்காக கற்பையே எரிக்கும் பெண்களைப் பற்றிய புத்தகம் வெளியாவது சுவையான முரண்" என்று என் உரையைத் தொடங்கலாம் என்றிருந்தேன்!). இப்போதும் ஒன்றும் குறையில்லை - மிக‌ அம்சமாய் சரஸ்வதி பூஜையன்று வெளியாகிறது. இதிலெல்லாம் மருந்துக்குக் கூட‌ நம்பிக்கையற்ற என் போன்றோர்க்குத் தான் இதெல்லாம் அமைந்து தொலைக்கிறது - Yet another irony!

சக வாசகர்கள், சக பதிவர்கள் என‌ அனைவரையும் அதிபிரேமையுடன் அழைக்கிறேன்.‌

*******

நிகழ்வு பற்றிய‌ ப‌திப்பாளரின் பதிவு ‌‌: http://www.aganazhigai.com/2010/10/blog-post_11.html

Comments

வாழ்த்துகள். முடிந்தால் அன்று சந்திப்போம்.
:)
வாழ்த்துகள் நண்பா
வந்துவிடுகிறேன்
Kaarthik said…
வாழ்த்துகள். சந்திப்போம்
Unknown said…
வாழ்த்துகள் CSK.
அவசியம் வந்துவிடுகிறேன்.
வாழ்த்துக‌ள் CSK..
ŃąVêέŃ said…
பெருமை அடைகிறேன்
வாழ்த்துக்கள், அழைப்பிற்கு நன்றிகள்.

முடிந்தால் தயவு செய்து சரியான நேரத்திற்கு விழா தொடங்க, நடைபெற ஏற்பாடு செய்யவும்.
shivam said…
Good luck,

come there to meet you and Charu.

Loves
sankar
Sri said…
So happy to see da,

I was in Chennai Last month, little sad that it is impossible for me to attend, :-(

"I am thinking that you have something big to achieve and you started already towards it, anyhow best wishes"

Hope you still remember these lines......

Congratulations on your success and Wishing you all the best for your future.

can you send me the direct link to see your book in online for purchase?? I tried a lot to find a link and also with international shopping in it.

Regards
Your Friend
Sridhar
வாழ்த்துக்கள் நண்பரே
a said…
வாழ்த்துகள்...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்