பக்தனின் சந்தோஷ‌ம்

"ரசி‌கர்‌களுக்‌கு எப்போதும் என்‌னுடை‌ய இசை‌ தா‌ன்‌."

- சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த‌ பத்திரிக்கையாளர் சந்திப்பில் "ரசி‌கர்‌களுக்‌கு என்‌ன சொ‌ல்‌ல நி‌னை‌க்‌கி‌றீ‌ர்கள்?" என்ற கேள்விக்கு பதிலாக 'இசை ஞானி' இளையராஜா சொன்னது (செப்டெம்பர் 15, 2010)

*******

ஒரிசாவிலிருக்கும் அக்ஷய மொகந்தி ஃபௌண்டேஷன் என்கின்ற அமைப்பு 2007 முதல் வருடம் தோறும் இசைத்துறையில் சாதனை புரிந்தோர்க்கு வழங்கும் கௌரவம் மிக்க‌ அக்ஷய‌ சம்மான் விருதுக்கு இவ்வாண்டு இளையராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற வங்காளப் பின்னணிப் பாடகர் ம‌ன்னா டே (2007), ரஹ்மானுடன் ஆஸ்கர் விருது பெற்ற இந்திப் பாடலாசிரியர் குல்சார் (2008) மற்றும் NOTHING BUT WIND வாசித்த புல்லாங்குழலிசைக் கலைஞர் ஹ‌ரிப்ரசாத் சௌராஸ்யா (2009) ஆகியோர் இதற்கு முன்பு இவ்விருதினைப் பெற்றிருக்கிறார்கள். 2010க்கு இளையராஜா.

என்ன நடக்கிறது என்று புரியவில்லை. (மிகத்தாமதமெனினும்) ச‌மீபமாக ராஜாவைத் தேடி இது போன்ற அங்கீகாரங்கள் வரிசை கட்ட‌த் தொடங்கியிருக்கின்றன - முதலில் பத்மபூஷன், பின் பின்னணி இசைக்கான தேசிய விருது, தற்போது அக்ஷய‌ சம்மான்.

விருதுகளெல்லாம் ராஜாவுக்கு அலங்காரமே; மாறாக இசையே அவரது அடையாளம். அந்த வகையில் பார்த்தால், செய்து பார்க்க இன்னமும் சில அலங்காரங்கள் மிச்சம் இருக்கின்றன எங்கள் ராஜாவுக்கு - முதலில் தாதா சாகேப் பால்கே; அப்புறம் பாரத ரத்னா.

அலங்காரம் தீர்மானிப்பதில்லை ஆண்டவனை - அது பக்தனின் சந்தோஷத்துக்கு.

Comments

Unknown said…
வாத்யார், இதிலிருக்கிற அரசியல் இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை.
Anonymous said…
Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet