அவ்வப்போது கிறுக்கியவை
எனக்கு பெண்களின் புத்திசாலித்தனத்தின் மேல் எப்போதுமே அத்தனை பிரமாதமான மரியாதையில்லை என்பதை (அதற்கான நியாய தர்க்கங்களும், வரலாற்றுக் காரணங்களும் ஆந்த்ரபோலஜியில் ஒளிந்திருக்கின்றன என்ற போதிலும்) ஆங்காங்கே நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவு செய்து வந்திருக்கிறேன். விதிவிலக்குகள் உண்டு - ஒருவர் அம்பை; மற்றவர் பெயர் சொல்லவியலாது.
ஆனாலும் அவர்களைப் பிடிக்கவே செய்கிறது.
*******
ரோட்டில் எச்சில் துப்புபவர்களைப் பார்த்தால்
சிகரெட்டால் சுட வேண்டுனெத் தோன்றுகிறது;
பொதுவிடத்தில் புகைப்பவர்களைப் பார்த்தால்
நன்கு காறி உமிழ வேண்டுனெத் தோன்றுகிறது.
*******
அவன் சிற்றிதழ்களுக்கு ஆயுள் சந்தா செலுத்துபவன் போல் இருந்தான்.
*******
விளையும் பயிர் முளையிலே தெரியும்;
விளையும் உயிர் முலையிலே தெரியும்.
*******
ஆண் ஒரு பெண்ணை ஒன்று அம்மனாய்ப் பார்க்கிறான்; அல்லது அம்மணமாய்.
*******
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச்செய்தியால் (கவனிக்கவும் மரணம் அல்ல; மரணச்செய்தி) மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இதுவும் கடந்து போகும்.
*******
முகம் பார்த்துப் புணரும் உயிரினம் மனிதனைத் தவிர வேறு என்ன இருக்கிறது?
*******
எப்போதாவது என்னை நினைத்துக்கொள்.
காதலில் சுகமே நினைவில் நனைந்து கிடப்பது தான். பிரிவின் வலிக்கு ஒத்தடம் தருவதே நினைவுகளே. புற்று நோய்க்கு கதிரியக்கம் மாதிரி. மிதமான காதல் தீவிரம் அடைவதெல்லாம் மூளை நரம்புகளில் மின்சாரமாய் ஓடும் நிசப்த நினைவுகளில் தான்.
*******
நம் கடைசி சந்திப்பிற்குப்பின் உன் வெட்கத்தை தான் திட்டிக்கொண்டிருக்கிறேன். நீயும் அப்படியே என்று நினைக்கிறேன் - வெட்கப்பட்டுக்கொண்டே திட்டிக்கொண்டிருப்பாய். வெட்கத்தை ஒத்திப்போட்டால் கொஞ்சம் கடவுள் தெரிவார் கூடவே கவிதையும்.
*******
சோம்பலை முன்னிட்டு தைரியமான செயல்கள் செய்திருக்கிறேன்;
பயத்தை முன்னிட்டு சுறிசுறுப்பான செயல்கள் செய்திருக்கிறேன்.
*******
தமிழின் மிகச்சிறந்த ஒரு திரைக்காவியத்தைப் பற்றி மின்வெட்டும் அதைச்சார்ந்த கொசுக்கடியும் மிகுந்த ஓர் இரவில் எழுத நேர்ந்தது துர்பாக்கியமே.
*******
அப்படி இப்படி என்று எட்டு வருடங்களாய் எனக்கு போக்கு காட்டிய பிரமிள் கவிதைகளை இந்த விஜயதசமியன்று மெல்ல ஸ்பரிசித்தேன். தமிழின் ஆகச்சிறந்த கவிஞர்கள் என யார் பட்டியலிட்டாலும் அதில் மாறிலியாய் இருப்பவை இரண்டு பெயர்கள் -
ஒன்று பாரதி; மற்றது பிரமிள்.

Comments
வழிமொழிகிறேன்!
மிளிரும் கலை சிலையிலே தெரியும்
இரையும் வயிர் இலையிலே தெரியும்
ஒளிரும் குணம் கதரிலே தெரியும் உறையும் தயிர் உறியிலே தெரியும்
விளையும் மயிர் தலையிலே தெரியும்