பேரின்பத்தின் பெருங்கவிஞன்

சமகால நவீன தமிழ்க் கவிஞர்களில் நான் முக்கியமானவர்களாகக் கருதும் இருவரில் ஒருவர் மகுடேசுவரன் (மற்றவர் மனுஷ்ய புத்திரன்). 90களின் மத்தியில் எழுத ஆரம்பித்து, இதுவரை ஆறு கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன.


அவற்றில் முக்கியமானது என நான் கருதுவது 'காமக்கடும்புனல் '. காமத்தைப் பாடுபொருளாகக் கொண்ட நானூறு கவிதைகளின் தொகுப்பு இது. 'பூக்கள் சொல்லும் தகவல்கள்', 'அண்மை', 'யாரோ ஒருத்தியின் நடனம்', 'மண்ணே மலர்ந்து மணக்கிறது', 'இன்னும் தொலையாத தனிமை' ஆகியவை இன்ன பிற கவிதைத் தொகுப்புகள்.

ஏற்கனவே நான் பல இடங்களில் குறிப்பிட்டதைப் போல, எனது உரைநடையில் சுஜாதா மற்றும் சாரு நிவேதிதாவின் தாக்கம் இருப்பதைப் போல், என் கவிதைகளில் வைரமுத்து மற்றும் மகுடேசுவரனின் பாதிப்பு இருப்பதைக் காண்கிறேன். அவ்வகையில் என் மனதிற்கு மிகுந்த நெருக்கத்திற்குரிய சரளமுடைய கவிமொழி அவருடையது.

தற்போது, புதுமுக இயக்குநர் சார்லஸ் இயக்கும் 'நஞ்சுபுரம்' என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுதுகிறார். அவருடைய வலைப்பதிவு http://kavimagudeswaran.blogspot.com/ - சமீபமாக கவிதைகளல்லாத விஷயங்களை அடிக்கடி வலையில் எழுதுகிறார்.‌

Comments

rajasurian said…
அடிக்கடி வலையில் எழுதுகிறார்??? அப்படியா!!!!


எனக்கும் பிடித்த எழுத்தாளர் அவர். வலைத்தள அறிமுகத்திற்கு நன்றி.
@rajasurian
அடிக்கடி என்றால் குறைந்தபட்சம் மாதமொருமுறை எழுதுகிறார்..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்