AFTER A SHORT-BREAK...

ஐந்தாம் படை என்றொரு ப‌டத்தை பெங்களூர் - ஈரோடு பேருந்து பயணத்தின் ஐந்தரை மணி நேர இடைவெளியில் பார்க்க வாய்த்தது (உபயம் : கேபிஎன்). ச‌ற்றே சுவாரசியமாய்த் தான் இருந்தது. பேரரசு, சுந்தர் சி., ஏ. வெங்கடேஷ் பாணியிலான ‌லோ க்ரேட் மசாலா. வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு போன்ற அசம்பாவிதங்களை நிகழ்த்திய பத்ரி தான் இயக்கம். ஏலேய், டோண்ட் வொர்ரி, பீ ஹேப்பி.

*******

காலச்சுவடு, உயிர்மை அக்கப்போர்களிடையே அகநாழிகை ஒரு மாற்றுத்தளம். புதியவர்களுக்கு நிறைய வாய்ப்புத் தருகிறது என்பது தான் இதன் தற்போதைய தனித்துவம் (ஆனால் புதியவர்கள் அனைவரும் பதிவர்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை என்பது எனது அபிப்பிராயம்). சிற்றிதழ் நடத்தும் போது குழு சேராமல் பார்த்துக் கொள்வது சிரமம் தான். பொன்.வாசுதேவன் தனி மனிதனாக இதை இழுத்துச் செல்லும் வரையில் பிரச்சனையில்லை எனத் தோன்றுகிறது.

மேலதிக விவரங்களுக்கு - http://www.aganazhigai.com/p/blog-page.html

*******

நித்யானந்தர், ஐபிஎல் பற்றியெல்லாம் பேச நிறைய விஷயமிருக்கிற‌து. நேரம் கிடைக்கும் போது முயற்சிக்கலாம். தற்போதைக்கு நித்யானந்தர், லலித் மோடி இருவரின் மேலாண்மைத்திறன் குறித்து வியந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கெட்டவன் இருக்கிறான் என்பதால் வில்லன்களைக் கொண்டாடும் கலி முற்றிய காலமிது (உதாரணம் : மணிரத்னத்தின் ராவணன்).

*******

சுஜாதா இணைய விருது - 2010 பெற்றிருக்கும் யாழிசை லேகாவுக்கு வாழ்த்துக்கள்.

*******

மென்பொருளாளன், காதலன், மகன் போன்ற லௌகீக வாழ்வின் பல பொறுப்புக்களோடு புதிதாய் மற்றொன்றும் சேர்ந்து கொண்டுள்ளது. தந்தை என்பது அதன் பேர். ஈரோடு மகாநகரத்தை நல்ல வெயில் கொளுத்திய பங்குனி இறுதி பிற்பகலில், தாயைப் பிளந்தோர் உச்சஸ்தாயி அழுகையின் முன்னுரையோடு தன் வருகையை நிகழ்த்தினான். அன்றிரவு கோடை மழை பெய்து பூமி நனைந்தது. குடும்பத்தினர் நம்ப விரும்பும் நட்சத்திரம், எண் கணிதம் போன்ற நகாசு வேலைகளுக்கு வழிவிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன் பெயர் தேடிக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

Comments

Anonymous said…
வாழ்த்துகள்!

- என். சொக்கன்,
பெங்களூரு.
வாழ்த்துகள் da!
வலைஞன் said…
அப்பா என்ற உயர்வு பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.குழந்தை ஒரு மிகச்சிறந்த மனிதனாக பரிமளித்து, பல்லாண்டு வாழ, இறைவன் அருள் புரியட்டும் !
வாழ்த்துகள் தோழர்!
Parthi_MC said…
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!
parthiban,dxb
Unknown said…
வாழ்த்துகள் CSK.
மதன் said…
வாழ்த்துக்கள்!
BalHanuman said…
வாழ்த்துக்கள் !!

புதிய பொறுப்புகளுக்குத் தயாராகுங்கள் :-)
சரவணன்,
இன்றுதான் பார்த்தேன். அகநாழிகை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.
0
தந்தையானதற்கு மீண்டும் வாழ்த்துகள்,

நேரில் சந்திப்போம்.

- பொன்.வாசுதேவன்
Athisha said…
வாழ்த்துகள் நண்பா!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்