கடிதம் : A Hello from Japan-(Vasagan(nanban))

Dear Saravanakarthi,

How are doing my dear friend,

Right from day 1 of your website I am following it,

இவ்வளவு நாள் இல்லாதவன் என்னடா இன்னைக்கு மெயில் அனுப்புறாநேன்னு யோசிக்கிறியா.

ஒண்ணுமில்ல டா, உனக்கு தெரியுமா என்னவோ தெரியாது, உன்னோட வெப்சைட் ஆரம்ப காலத்தில் இருந்து வாசிச்சிக்கிட்டு வரும் வாசகர்கள்ள நானும் ஒருத்தன்.

என்னைக்கும் இல்லாத விதமா உன்னோட உன்னோட ப்ளாக் பேஜில இவ்வளவு கமென்ட் நான் பார்த்ததே இல்ல,

ரொம்ப சந்தோஷமா இருந்துது, எத்தனை பேரு உன்னோட வரிகள வாசிக்கராங்கன்னு !!!!!!!!

என் இனிய வாழ்த்துக்கள் !!!!!!

ஆனா ரொம்ப நாளா உன்ன்கிட்ட ஒரு கேள்வி கேட்கனும்னு எனக்கு ஆசை,
கொஞ்சம் ஓவரா தான் இருக்கும், இருந்தாலும் இந்த சமயத்துல கேட்டா நல்லா இருக்கும்னு யோசிச்சு தான் மெயில் அனுப்புறேன்,

Hope I can get the answer for, why you open this website from your page title,

I am not sure whether I can ask these kind of questions to you,
but as per your website, these are my recent extensions,

What is the main reason or aim or ............ destination of this website?
where do you want to be with this website????!!!!!!!!!

Convey my regards to your family.

Always
with love
Your friend
Sridharbabu M B

###############

டியர் ஸ்ரீதர்பாபு,

சௌக்கியமா? Belated உகாதி வாழ்த்துக்கள்!

பார்த்து எத்தனை காலமாயிற்று. குறைந்த பட்சம் ஐந்து வருடங்களாவது இருக்கும் என நினைக்கிறேன். அங்கு எல்லாம் சுமுகம் என நம்புகிறேன். சரி, விஷயத்திற்கு வருகிறேன். உன்னுடைய கடிதத்தின் மூலக்கேள்வியை "இந்த writercsk.com வலைதளத்தின் நோக்கமென்ன?" என்பதாக புரிந்து கொண்டு பதில் தர முயல்கிறேன்.

முதல் விஷயம் அடிப்படையில் என்னை நான் ஓர் எழுத்தாளனாகவே உணர்கிறேன். அதாவது இச்சமூகத்தில் கணிப்பொறியாளனாக, க்ரிக்கெட் வீரனாக, காதலனாக‌ இருப்பதைக் காட்டிலும் எழுத்தாளனாக அறியப்படுதலையே மிக விரும்புகிறேன். அதை முன்வைக்க நான் நிறைய எழுத வேண்டியிருக்கிறது - தொடர்ச்சியாய், தீவிரமாய்.

பத்திரிக்கைகள், பதிப்பகங்கள் நம்முடைய அத்தனை பரிசோதனைகளையும் எப்போதும் ஏற்கும் என சொல்லவியலாது. இதற்கான சரியான தளத்தைத் தான் வலைப்பூ அமைத்துக் கொடுக்கிறது. இங்கே வானத்திற்குக் கீழான (சட்டம் அனுமதிக்கும்) எதையும் எழுதலாம் - ஏற்பார்களா இல்லையா என்கிற லௌகீகக் கவலைகள் மறந்து.

உண்மையைச் சொல்லப்போனால், இது ஒரு பயிற்சித் தளம்.

அடுத்தது, ஏன் எழுத வேண்டும்? "உலகைத் திருத்த" என்பது மாதிரியான அசட்டுத் தனமெல்லாம் கிடையாது. பகிர்தல். "இதைப் பற்றி என் கருத்து இது" என்று எனக்கான பிரத்யேக சிந்தனைகளைத் தருகிறேன். யாரோடும் ஒத்துப் போக வேண்டும் அல்லது முரண்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. விமர்சன நேர்மையும், கைகூடும் சுவாரசியமும் என் வரையிலான‌ பிரதான முயற்சிகள்.

ஆக, இது ஒரு பயிற்சித்தளம் மட்டுமல்ல, பகிர்வுக்களமும் கூட.

இது தவிர, பாராட்டுக்கள், வசைகள், இன்னபிற எல்லாம் உபரி சங்கதிகள். அவற்றையெல்லாம் நான் பெரிதாய்க் கண்டுகொள்வதில்லை. வரும் பின்னூட்டங்களுக்குக் கூட சொல்ல விடுபட்ட விஷயம் ஏதாவது இருந்தால் மட்டுமே பதில் சொல்கிறேன். "என்னை இப்படிச் சொல்லி விட்டானே" போன்ற உணர்ச்சிவசப்படுதல்கள் பெரும்பாலும் இருக்காது.

புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்தியா வரும் போது சந்திப்போம்.

-CSK

Comments

Athisha said…
பாஸ் கண்ணம்மாபேட்டைக்கு எப்படி போகணும்.. சொன்னீங்கன்னா நேராப்போய் நானே படுத்துக்கறேன். சத்தியமா முடியல!

யப்பா நாராயாணா! பாதிலயே கண்ண கட்டுதே

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்