என் வேலை இது இல்லை

சொன்னால் புரிந்து கொள்ளாதவர்களை என்ன தான் செய்வது. இதற்காக கோபித்துக் கொண்டு நீங்கள் எனது வலைப்பதிவையே படிப்பதை நிறுத்தினாலும் சரி. எனக்கு அதில் எந்த சுவாரசியமோ, கவலையோ இல்லை. ஹிட்ஸ் வர வேண்டும் என்பதற்காக எழுதிய காலமெல்லாம் (பாரதிராஜாவுக்கு வாலிபமே வா வா மாதிரி) மலையேறி விட்டது. நான் வளர்ந்து விட்டேன் என்று சொல்லவில்லை. புகழ் மாதிரியான‌ ஜிகினா சமாச்சாரங்களின் தேவை மற்றும் இடம் குறித்த புரிதலாக இதைக் கொள்ளலாம்.

இப்போது இது மாற்று சிந்தனைகளைப் பகிரும் ஒரு தளம் மட்டுமே.

ஆக, தயவு செய்து மூன்று விஷயங்களை என்னிடம் பேசாதீர்கள் / கேட்காதீர்கள் / செய்யாதீர்கள். ஒன்று "உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நல்ல படம் இல்லையென்றாகி விடுமா?" என்கிற அறிவுஜீவித்தனமான கேள்வியைக் கேட்பது. இரண்டாவது "அந்த படம் சூப்பர் ஹிட், அதைப் போய் மொக்கை என்று நிராகரிக்கிறீர்களே" என்று ஆதங்கப்படுவது. மற்றொன்று ஏ.ஆர்.ரஹ்மானுக்காக பரிந்து கொண்டு அவரது அருமை பெருமைகளை எனக்கு எடுத்துரைப்பது.

முதலாவது முதலில். அந்த அறிவுஜீவித்தனமான கேள்விக்கு எனது பதில் "ஆம்". எனக்கு பிடித்த படம் தான் என்னைப் பொறுத்தவரை சிறந்த படம். எனக்கு மட்டுமல்ல; எல்லோருக்குமே அப்படித்தான் இருக்கும் - இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, "அடுத்தவன் ஹே ராமை சிறந்த படம் என்கிறான்; அவன் சிறந்த திரை விமர்சகன் என்று வேறு பெய‌ரெடுத்தவன். எனக்கு ஆனால் எப்படிப் பார்த்தாலும் வேட்டைக்காரன் தான் பிடிக்கிறது. அதனால் வே.கா.வை பிடித்த படம் என்றும், ஹே.ரா.வை சிறந்த படம் என்றும் சொல்லிக் கொள்வோம்" என்று முடிவு செய்தீர்களேயானால் அதற்கு மிகச்சுலபமாய் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது. "விபச்சாரம்".

பொதுவாய்ப் பார்த்தால், நீங்களோ நானோ யாருமே அதை செய்ய விரும்ப மாட்டோம். ஆனால் அறிந்தோ அறியாமலோ பலர் அதைத் தான் நேர்த்தியாக‌ செய்து வருகிறார்கள். எனக்கு அப்படி நிலைப்பாடு எடுப்பதில் (அதாவது பிடித்த படம் வேறு; சிறந்த படம் வேறு என்று பிரித்துக் கொள்வது) நிறைய தர்க்க ரீதியான பிரச்சனைகள் இருக்கின்றன. அதனால் தெளிவாக, மிகத்தெளிவாக சொல்கிறேன் - "எனக்குப் பிடித்த படம் தான் என்னைப் பொறுத்த வரை சிறந்த படம்". ஒவ்வொரு படத்தைப் பற்றி எழுதுகையிலும் இதை நான் Disclaimer மாதிரி சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

நேர்மையாய்ச் செயல்படும் எல்லாப் பதிவர்களுமே / எழுத்தாளர்களுமே இதைத் தான் செய்து வருகிறார்கள் - அதாவது அவர்களுக்குப் பிடித்ததைத் தான் சிறந்தது என்று சொல்கிறார்கள்; பிடிக்காததைக் குப்பை என்றும். அவர்களுடன் என்னைக் கேள்வி கேட்பவர்களுக்கு ஒத்துப் போயிருக்கலாம்; அதனால் இந்தப் பிரச்சனை வரவில்லை போலும். தவிர, நான் நினைப்பதைத் தான் - அதை மட்டும் தான் - நான் எழுத முடியும். நீங்கள் நினைப்பதையோ, உங்களுக்குப் பிடித்ததையோ அல்ல.

இரண்டாவது விஷயத்திற்கு வருவோம். ஒரு திரைப்படத்தின் வணிகரீதியிலான வசூல் என்ன, எத்தனை நாள் ஹவுஸ்ஃபுல்லாய் ஓடியிருக்கிறது, பெரும்பான்மையோருக்கு எது பிடித்திருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து எழுத நான் சினிமா பி.ஆர்.ஓ.வோ, சர்வே எடுப்பவனோ அல்ல. அதனால் ஒரு ஹிட் படத்தோடு என்னுடைய விமர்சனம் ஒத்துப் போக வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதே ஒரு விதமான அராஜகமாகப் படவில்லையா? (சாருவின் பாஷையில் ஃபாஸிசம்)

சந்திரமுகி
வெற்றிப் ப‌டம் தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை, அதைப் போன்றதோர் ஆகச்சிறந்த குப்பையை தமிழ் சினிமா சரித்திரத்திலேயே காண முடியாது. இதற்கு அர்த்தம் நான் வெற்றிபடங்களுக்கு அல்லது ரஜினிக்கு எதிரானவன் என்பதல்ல. தில்லுமுள்ளு, தளபதி முதல் பாட்ஷா, படையப்பா வரை பல ரஜினி படங்களை சிலபல விமர்சனங்களுடன் ரசித்த‌வன் தான். இன்றும் முதல் நாள் நாள் முதல் ஷோ படம் பார்க்கும் அதே ரஜினி ரசிகன் தான். ஆனால் அது வேறு விமர்சன நேர்மை வேறு. ஒரு படம் ஹிட்டா இல்லையா என்கிற கவலை என் விமர்சனப் பிராந்தியத்துக்குள் வருவதேயில்லை என்பது தான் நான் சொல்ல வருவதன் மையக்கருத்து.

கடைசியாக ஏ.ஆர்.ரஹ்மான். இப்படி அர்த்தமில்லாமல் கண்மூடித்தனமாகப் புகழப்படுவதில் ரஹ்மானுக்கே உடன்பாடு இருக்காது என நம்புகிறேன். இது தொடர்பாய் என்னைக் கேள்வி கேட்ட எந்த ஆசாமிகளை விடவும் நான் ரஹ்மானின் மிகச்சிறந்த ரசிகன் என்பேன். காரணம், கேள்வி கேட்டவர்களில் 99% பேர் ரஹ்மானின் ஆஸ்கர், கிராமி மற்றும் சர்வதேசத் தன்மைக்காக ஒரு முறை மட்டும் பாடல்களை மேம்போக்காகக் கேட்டு விட்டு அல்லது அதைக்கூட செய்யாமல் "இந்த வருடத்தின் சிறந்த ஆல்பம் வி.தா.வ." என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் புளுகுகின்றனர்.

அது நிஜமாகவே இருக்கும் பட்சத்தில் கூட அதை நேரடியாக ஆராய்ந்து ரசித்து உணராமல் ரஹ்மான் என்கிற ப்ராண்ட் நேமிற்காக ஜல்லியடிப்பது எத்தனை அயோக்கியத்தனமானது என யோசித்துப்பாருங்கள் (பீஸ்ஸா ஹட் அட்டைப் பெட்டிக்குள் பீயை உருட்டி வைத்து விற்றாலும் உண்டு மகிழும் உலகமிது என்று என் நண்பனொருவன் சொன்னது இங்கு நினைவுக்கு வருகிறது). "நான் ரஹ்மானைக் கேட்கிறவன். யூத். புத்திசாலி. சர்வதேச சங்கதிகளின் ஆசாமி" என்கிற அல்பத்தனமான பிரகடனம் தான் அதிலிருக்கிறது. பரிதாபமாக இருக்கிற‌து.

இசைப்பரப்பில் ரஹ்மானின் இடத்தை நான் என்றுமே நிராகரித்தவனில்லை. இளையராஜாவுக்கு அடுத்த நிலையில் அதிக ஆச்சரியங்களைத் தந்தவரும், அவரைத் தாண்டிச் செல்லும் அளவுக்கு இன்றைக்கு இந்தியாவிலேயே திராணியுள்ள ஒரே ஆளும் ரஹ்மான் தான் (ஆனால் ஸ்லம்டாக், வி.தா.வ. போன்ற தரங்களில் அவரது பயணம் தொடர்ந்தால் அது சாத்தியமேயில்லை என்பது வேறு விஷயம்). அவரது அத்தனை திறமைகளும் புரிந்து ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடனேயே முன்வைக்கிறேன் - அதுவும் எதிர்மறை விஷயமெனில் நன்கு யோசித்த பிறகே.

அதனால் புதிதாய் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி யாரும் எனக்கு வகுப்பெடுக்க வர வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். இன்னும் சொல்லப்போனால் அவரைப் பற்றி எழுதுங்கால், என் மொழி லேசாய் கடுமையடைவதற்குக் காரணம் கூட அவரோ அவரது இசையோ அல்ல. அளவுக்கு மீறி அவரைப் புகழும் ஆட்டு மந்தைக் கூட்டத்துக்கு அதைப் படித்தாவது சுரணை வரும் என்பதற்காகத் தான் (இவ்விஷயத்தில் பாலாஜி என்பவர் மட்டும் தான் தர்க்கம் நிரம்பிய ஒரு கூற்றை முன்வைத்திருந்தார்; மற்ற‌ யாவரும் ரஹ்மானின் அடியாள் மாதிரி தான் பேசினார்கள்).

யாரும் என்னை எதிர்க்கக்கூடாது என்பதல்ல என் நிலைப்பாடு. ஒரு வகையில் பாராட்டுக்களைக் காட்டிலும் எதிர்ப்புகள் தான் என்னை யோசிக்க வைக்கின்றன‌. வழிப்படுத்துகின்றன. தவிர என் தனிதன்மையாக நான் எண்ணுவனபவற்றை இந்த எதிர்ப்புகள் தான் உறுதி செய்கின்றன. ஆனால் அடிப்படையில் எந்த‌ எதிர்ப்பிலும் குறைந்தபட்ச நேர்மையும், தொடர்புடைய தர்க்கமும் இருக்க வேண்டும் என்கிறேன். இல்லாவிடில் அது வெறும் பொறாமை, பொச்சரிப்பு, வயிற்றெரிச்சல், வாயுத்தொல்லை சமாச்சாரம் தான். ஒரே வார்த்தையில் சொல்வதானால் அவதூறு.

சில சமயம் சினிமாவைப் பற்றி எழுதுவதையே நிறுத்தி விடலாமா எனத் தோன்றுகிற‌து.

Comments

Anonymous said…
Dear CSK,

Again u r not getting my point or you dont want to get my point.. Anyway I dont reply to these blogs and I dont intend to do that again.. Its not about the merits of the movie.. Even I dont like 'Naan Kadavul' which is praised like anything by that **Enlightened** critics..

My point is not those 3 questions addressed by you.. It is 'How can you abuse people who dont agree with you in terms of movie taste?(which is just an entertainment)' You are entitled to like Vettaikaran and hate VTV and by all means u can write about it.. But abusing the **people** (not the movie)(especially that pannadai comment pulled the trigger)who dont agree with you is not right.. Just because you dont need the people, you need not abuse/demean them..


இப்போது இது மாற்று சிந்தனைகளைப் பகிரும் ஒரு தளம் மட்டுமே.

You said this.. So I am asking you to acknowledge the **mattru sindhanai** (if possible).. or atleast dont demean it..

I said it and I stand by it.. I wanted to point this thing out to you.. If you want to ignore/deny it, its not my business to argue against it or to get angry about that.. I am not going to stop coming to your page and all.. I will not punish myself for somebody else's faults.. But my regards for you will come down a bit, about which anyway you are not going to care.. This is my last comment regarding this issue.. Good luck to you.. *Sigh*..
@திரு.Anonymous
பன்னாடையாய் இருப்பத‌ற்குத் தான் தன்னைத் தானே கோபித்துக் கொள்ள‌ வேண்டும்; அதை அடுத்தவர் சொல்லும் போது அவரிடம் கோபித்துப் பயன் இல்லை.

கோபம் என்பதே இயலாமையின் வெளிப்பாடு தானே!
@திரு.Anonymous
பிரச்சனை அப்படிச் சொன்னவர்கள் பன்னாடைகளா இல்லையா என்ப‌தல்ல. அப்படிச் சொன்னது சரியா தவறா என்பது தான்.
Anonymous said…
Yeah right. ennai porutha varuvaraikkum VTV kuppai nu sonnavan oru Pannadai.. :)
கோவமா இருக்க, அப்புறம் பேசுறேன்!
Anonymous said…
உங்களுடைய கோபம் யார் மீது படம் எடுத்தவர் மீதா அல்ல படம் பார்பவர்கள் மீதா ?
"எனக்குப் பிடித்த படம் தான் என்னைப் பொறுத்த வரை சிறந்த படம்" - நீங்கள் சொல்லும் படத்தை பார்க்காதவர்கள் பன்னடைகளா ?
Dinesh said…
மிக சரியாக சொன்னாய் "CSK" . ஒரு நல்ல விமர்சகர் இவ்வித விமர்சனங்களை ஒரு மிக பெரியதாய் எதுத்துக் கொள்ள கூடாது! உங்கள் வேலையை நீங்கள் தொதர்ந்து செய்யுங்கள் . யாரை பற்றியும் கவலை படாதீர்கள்.

உங்களுடைய பணியை நீங்கள் சிறப்பாக தொடர எனது வாழ்த்துக்கள் :)
Keerthi said…
machi, idhukaaga ellam eluthuradha vidaadha. one correction, u forgot to mention 'Kuselan' in tht kuppai lot. If Chandramukhi is dump, Kuselan is a dump yard. Carry on ur gud work...
Anonymous said…
nee nalla padam illai nu sollu yaaru unna ketta... but dont abuse those who like it....

oru padaipu podhuvil vaikappathum athu pidippathum pidikkamal povadhum avar avar viruppam....

enaku pidithu innoruvaruku pidikkamal ponaal atharkaaga avar rasanai kettavar endru solla mudiyuma...

criticize the product no arguement about that but dont talk about the critics.

i saw the same tone in the Ayirathil oruvan criticism.....

thats none of our business whether someone like it or not... we dont 've to comment on those people...

lets give our thought and opinion on the product...

as simple as that...

its not an advice..... just a suggestion...
Keerthi said…
I feel, after Minnale and Kakka kakka, its kinda downward trend for Gowtham, so monotonous and predictable...Music was ok, 'maga kuppai'....haha...I think u'vent listened to the 'mega kuppai' of ARR in a movie called Parasuram. chk it out
Mohan said…
@ CSK!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும்.இப்போதும் கூட நான் 'பன்னாடை' என்ற வார்த்தையை உபயோகித்திருக்கத் தேவையில்லை என்று சொல்லாமல்,அவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னது சரியா என்று கேட்கிறீர்கள்.எதிர்கால‌த்தில் இந்த‌ மாதிரி வார்த்தைப் பிர‌யோக‌ங்க‌ளைத் தேவையில்லாம‌ல் உப‌யோகிக்க‌ மாட்டீர்க‌ள் என்ற ந‌ம்பிக்கை எனக்கு இருக்கிற‌து.
Anonymous said…
yeanpa... oru book pottathum unaku yean ivlo aanavam.. nee sonna sari aduthavan sonna thavara....

unaku pudikkalai na pudikkalai nu sollitu po... athukkaaga pudichavan ellam pannadai nu solla koodathu.....

nee ye ivlo adamant-a nenaikira podhu... niraya vetri padangalai koduthu, sila pala dramas eluthina oru periya director avaruku pudichiruku nu solrathu ku avaruku urimai irukku ...athukkaaga avaru marai kalandu pochu nu sonna epdi ....
@Anonymous

//oru book pottathum unaku yean ivlo aanavam//

ஆணவம் என்பதை ஏற்கிறேன். திமிர் அல்லது செருக்கு என்று கூட சொல்லலாம். யோசிக்கும் எவனுக்கும் அது இருக்கும்; இருக்க வேண்டும். ஆனால் அதற்கு காரணம் நிச்சயம் நீங்கள் நினைப்பது போல் எனது புத்தக‌ம் அல்ல. புத்தக‌ம் போடுவதெல்லாம் விஷயமே இல்லை, ஐயா (உங்களுக்கு வேண்டுமானால் அது பெரிய விஷயமாகத் தெரியலாம்).

பாராட்டுகளும் வசைகளும் என்னை வழி நடத்துமேயொழிய, உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்யாது. அது போல் தான் புத்த்கம் போஒடுவதும். அது ஓர் அங்கீகாரம். அவ்வளவு தான்.

புத்தகமே எழுதாதிருந்தால் கூட நான் இதே ஆணவத்துடன் இதே சொற்களைத் தான் சொல்லியிருப்பேன். நான் இறுதி வரை ஒரு புத்தக‌ம் கூட‌ போட முடியாமல் போயிருந்தாலும் கூட நான் எழுத்தாளன் தான். அதில் எந்த மாற்ற‌மும் இல்லை. அதாவது புத்தகம் போட்டோ, யாரும் அங்கீகரித்தோ தான் நான் எழுத்தாளன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதைல்லை.

காலம் அதைப் பார்த்துக் கொள்ளும். நீங்களோ நானோ கவலைப்படத் தேவையில்லை.
Anonymous said…
aanavam irukurathellam sari .. first aduthavar meethu anbodum, avargalin karuthuku madhippum kondungal.....

irukka porathu 60 , 70 aandugal thaan.... athil ungal aanavaththai nilai nattuvathai vida nalla visayangal neraya irukku....
@Mr.Anonymous
முட்டாள்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது தான் ஜனநாயகம் என்றால், நான் சர்வாதிகாரியாகவே இருக்க விரும்புகிறேன்.
Anonymous said…
marupadiyum parraa....
BalHanuman said…
>>பாராட்டுகளும் வசைகளும் என்னை வழி நடத்துமேயொழிய, உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்யாது.

மிகவும் அருமை, CSK. விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் பணி தொடரட்டும்.
சாமி said…
திரு சரவணகார்த்திகேயன்,

பன்னாடை என்ற வார்த்தையை உபயோகபடுத்திஇருக்கத்தான் வேண்டுமா ?
சிந்தியுங்கள்..., பதில் தேவை இல்லை, நீங்கள் சிந்தியுங்கள் அது போதும்...
Anonymous said…
என்ன ஒரு கட்டுரை. என்ன ஒரு மொழி. இந்த சரவண கார்த்திகேயன் பிரபலமான எழுத்தாளராக இருக்க வேண்டும். இவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலையும், எங்கே கிடைக்கிறது என்பதையும் யாராவது எனக்கு தெரிவியுங்கள். santhoshram7890@yahoo.co.in
"இந்த வருடத்தின் சிறந்த ஆல்பம் வி.தா.வ." என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் புளுகுகின்றனர்."

உங்களுக்குப் பிடித்த படம்தான் சிறந்த படம் என்று சொல்லும் நீங்கள், அவர்கள் புளுகுகிறார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? அவர்களுக்கு பிடித்த இசை தான் இந்தாண்டின் சிறந்த இசை.

உங்கள் தர்க்கம் புரியவில்லை.
பாசிசத்தை பாசிசத்தால் எதிர்க்கிறீர்களோ?
@சுதர்சன்

எனக்கு பிடிக்காத ஒன்றை பிராண்ட் நேமிற்காக பிடித்திருக்கிறது என நான் பொய் சொல்வதில்லை.. அவர்கள் சொல்கிறார்கள்.. அதைத் தான் எதிர்க்கிறேன். பிடிக்காததை சிறந்தது என்ற் சொல்வதைத் தான் புளுகுகிறார்கள் என்கிறேன்.

உதாரணத்திற்கு 'மன்மதராசா' பாடலை தங்களுக்குப் பிடித்தது என்று சொல்பவர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. அவர்களைப் பொறுத்த வரை அது தான் அந்த ஆண்டின் சிறந்த இசை என்று சொல்வதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. எனக்கு அப்பாடல் பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுடையது மாற்று ரசனை என்கிற அளவில் ஓர் ஓரத்தில் உட்கார்த்தி வைக்க முடிந்தது. ஆனால் வி.தா.வ. பாடல்களைப் பொறுத்த வரை மனசாட்சியை விற்று சொம்பு தூக்குகிறார்கள்.

ஏதாவது புரிகிறதா?
"மனசாட்சியை விற்று சொம்பு தூக்குகிறார்கள்"

அப்படித்தான் சொல்கிறார்கள் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியும் பட்சத்தில், என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வ.தா.வ பாடல்கள் சிறந்தவை என்று சொல்பவர்கள் எல்லோரும் புளுகுகிறார்கள் என்ற அர்த்தமே எனக்கு தொனித்தது

பி.கு: வி.தா.வ பாடல்கள் எனக்கு உண்மையிலே மிகவும் பிடித்திருக்கின்றன
Anonymous said…
Dear CSK,

You are a sophisticated "Vaalpaiyan"

LOL
#ஹேராம் #வேட்டைக்காரன் #விபச்சாரம்

இது Katrina Kaif/deepika padukone/priyanka chopra வை ரசிப்பவர்களால் தங்கள் மனைவி/ காதலி/College Junior மனதார நேசிக்கவே முடியாது என்பதற்கு நிகர்!

எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் இவர்கள் எல்லோரையுமே நேசித்துக் கொண்டு (present/past/future) இருக்கிறான்!

என்னைப் பொருத்தவரையில் ரசனைக்கு தரமோ/ எல்லோரிடமும் (குறிப்பாக உன்னிடம்) ஒத்து போக வேண்டிய அவசியமோ இல்லை!
உன்னை ரசிப்பதற்கு உன்னுடன் ஒத்துப் போக வேண்டும் என்பதில்லை!
@senthilnathan sk

//இது Katrina Kaif/deepika padukone/priyanka chopra வை ரசிப்பவர்களால் தங்கள் மனைவி/ காதலி/College Junior மனதார நேசிக்கவே முடியாது என்பதற்கு நிகர்!//

Exactly! ஆனால் பிரச்சனை என்னவென்றால் சிலருக்கு நிஜமாலுமே தம் மனைவி/ காதலி/College Juniorஐ மட்டுமே பிடிக்கிறது; Katrina Kaif/deepika padukone/priyanka chopra போன்றவர்களைப் பிடிப்பதில்லை . ஆனால் உலகமே அவர்களை அழகிகள் என்று சொல்வதனால், கௌரவம் கருதி (எங்கே "இவர்களைப் பிடிக்கிறது, அவர்களைப் பிடிக்கவில்லை" என்று சோன்னால் பட்டிக்காட்டான் என்று சொல்லி விடுவார்களோ எனப்பயந்தும் கூட) நாமும் அவர்களை அழகிகள் என சொல்லி வைப்போம் என முடிவெடுக்கும் அபத்ததைத் தான் கண்டிக்கிறேன்.

மற்றபடி, எல்லோரும் என்னுடன் ஒத்துப் போய்த் தான் ஆக வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. இன்னும் சரியாய் சொன்னால் என்னைப் படிப்பவர்களில் ஒருவர் கூட என்னுடன் எல்லா விஷ‌யங்களிலும் 100% ஒத்துப் போக முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.
@senthilnathan sk

//உன்னை ரசிப்பதற்கு உன்னுடன் ஒத்துப் போக வேண்டும் என்பதில்லை!//

அதுவும் தெரியும். என்னை உளமார வெறுப்பவன் கூட என் எழுத்தை ரசித்தே தீர‌ வேண்டும் ;)
Balaji K said…
Hi CSK,

I think there is nothing so great about Monalisa painting (and) F1 Race (and) Heavy Metal Music.

There are so many people worldwide who like these things to the core after understanding the finer nuances.

I don't understand the nuances and hence to me those things are not good. And I will never say that they are good because so many people like it.

But, I appreciate the fact that they understand the nuances and like it. I don't blame the people who like it because of the fact they like something that I don't like.

There is a sharp difference between saying, "I don't like this. May be I didn't understand it" and saying "I don't like this. I am sure it is crap. And the people who like it are telling lies".

I can assure you. There is at least one person who likes it from the heart, forgetting the fact that it is from ARR.
(by the way, I am talking only about the music of VTV. I haven't seen the movie yet.)
@Balaji K

May be..

But definitely, I should feel it to accept, even if it is GOD. Simply, I cannot assume that there are some "finer nuances" which I didn't see but "few others" understood.

So, please please please, Let me feel it by myself. If it is true, I will surely accept it and apologize at that time. Till then, I cannot change my stand and I wish to be truthful to what I believe.

Even with atheism, I am taking the same stand.
வலைஞன் said…
இந்த பின்னூட்டங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.இந்தியாவில் ஒருவர் பிரபல்யம் அடைய எல்லாரும் விரும்பி ரசிக்கும் ஒன்றை திட்டவேண்டும்.அல்லது எல்லாரும் வெறுத்து ஒதுக்கும் ஒன்றை புகழவேண்டும்.அவ்வளவுதான் அவர் கவனிக்கப்படுவார்.பேசப்படுவார்.
இதை நன்கு பயன்படுத்துபவர்கள் சாரு நிவேதிதா மற்றும் CSK
VTV CSK க்கு பிடிக்கவில்லை
(பல வருடங்களுக்கு முன் சுப்புடு இதைத்தான் செய்தார் )
இதனால் அவருக்கும் நஷ்டமில்லை VTVக்கும் நஷ்டமில்லை.
இது ஒரு கருத்து அவ்வளவுதான்.
@வலைஞன்

உங்கள் தர்க்கம் சரியானதே. என்னையோ சாருவையோ தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நிச்சயம் அப்படித் தான் நினைக்கத் தோன்றும். இன்னும் சொல்லப்போனால், நிறைய விஷயங்களில் சாரு தன் உண்மையான கருத்தை மறைந்த்து ஷாக் வேல்யூவிற்காக பொய் சொல்கிறாரோ என்று தான் நானே நினைக்கிறேன். அது வேறு விஷயம். விவாதத்திற்குரியதும் கூட. உண்மையை அவரே சொன்னால் தான் உண்டு. இதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இப்போது என் விஷயத்திற்கு வருவோம். எல்லாரும் விரும்பி ரசிக்கும் ஒன்றை திட்டுவதும், எல்லாரும் வெறுத்து ஒதுக்கும் ஒன்றை புகழ்வதும் நான் திட்டமிட்டு செய்வதல்ல. அது ஒரு விபத்து. நான் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே நூறு சதவிகித விமர்சன நேர்மையுடன் முன்வைக்கிறேன். அதன் காரணமாக ரசனையற்றவன், முட்டாள், அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக பொய் சொல்கிறவன் என்கிற அவப்பெயர்களை சம்பாதிக்க நேரிடும் என்று முன்கூட்டியே உணர்ந்து தான் இதற்குத் தயாராகிறேன்.

உண்மையில், இது ஒரு வலி தான். நீங்கள் நினைப்பது போல் வித்தியாசமான ஆசாமி என்று சொல்கிறவர்கள் எல்லாம் மிகச்சொற்பமே. அதனால், அந்த அல்ப ஆசைக்காக, என் கருத்துக்களை மாற்றிப் பொய் சொல்கிறேன் என்று சொல்வது என் விமர்சன நேர்மையைக் கேலி செய்வதாகும்.

மன்னிகவும்! அப்படி கேலி செய்யப்படுவ‌தை நான் தீவிரமாக வெறுக்கிறேன்.
வலைஞன் said…
Dear CSK,
உங்களை கேலி செய்வது என் நோக்கமில்லை.அவ்வாறு தோன்றியிருந்தால் I am very sorry !
[நான் மிகவும் வெறுப்பது "கேலி செய்பவர்களை"]
உங்களுக்கு VTV பிடிக்கவில்லை.
யாருக்கெல்லாம் VTV பிடிக்கவில்லையோ அவர்கள் உங்கள் அலைவரிசையுடன் ஒத்துபோகிறார்கள் என்று அர்த்தம்.[மற்றவர்கள் நீங்கள் வெறுத்து ஒதுக்கும் திரைப்படத்தை உடனே சென்று பார்த்து மகிழ வேண்டும்
என்றும் அர்த்தம்.]
Anonymous said…
Dear CSK,
A small request. If you are as serious as about your words and reviews, Kindly go ahead and execute what you have said...
//சில சமயம் சினிமாவைப் பற்றி எழுதுவதையே நிறுத்தி விடலாமா எனத் தோன்றுகிற‌து//.
Please stop writing the reviews and continue with "sahaa, sila kurippuhal".
ஆண்டாள் said…
எது எப்படியொ வி.தா.வா டிவிடியை(பாடல்கள்) காசு கொடுத்து வாங்கி வயிறெரிந்து கொண்டிருக்கிறேன் :(
Karthik said…
hi,

I dont see any single thing in this movie which you liked - actors, director, screenplay, music etc. - you dont seem to have liked just anything about this movie. So why waste your time in penning down such a big post in your blog?? Its understandable when you write about something you like. but when you dont like about something why write about it in the first place?? I just dont understand the logic.

Further, there are lot more things to write about other than the usual stuff you do -
1.movie reviews (which anyone can write)
2. padithathil pidithathu (again no special 'writer' qualities needed
3. saha sila kuripugal - dont know if there's really a person. If yes, then this also doesn't need a 'writer'. If not, then I would say its good imagination from your part.
4. top ten movies, songs, awards etc. - all tv channels do this.

So if you turn back at your posts so far, you haven't done anything out of your own analysis or imagination. hence it may not be a good option for you to decide not to write movie reviews hereafter (you dont know anything else to write about - accept the fact)

And you may also want to change your writing style which is heavily influenced by Charu. If you dont know to create a style, atleast dont copy others.

Also if your wife/mom likes VTV very much will you address them as you did in your post?

"உதாரணத்திற்கு 'மன்மதராசா' பாடலை தங்களுக்குப் பிடித்தது என்று சொல்பவர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. அவர்களைப் பொறுத்த வரை அது தான் அந்த ஆண்டின் சிறந்த இசை என்று சொல்வதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. எனக்கு அப்பாடல் பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுடையது மாற்று ரசனை என்கிற அளவில் ஓர் ஓரத்தில் உட்கார்த்தி வைக்க முடிந்தது"

Why cant you think the same about VTV songs? Its only because you're overly possessive about Ilayaraja that when ARR moved him from his unanimous throne back in 1992 you were unable to digest the truth. Even Ilayaraja seems to be jealous about ARR (listen to the song from azhagar malai where he sings something in the lines of 'some people go some places but I'm happy with my motherland) Its clearly trying to say that "ARR is getting golden globe, oscars, grammy etc. but even though I can't get it, I'm happy with what I have"

Accept this fact boss "Ilayaraja is history". I myself is a fan of Ilayaraja but not mad like you. I believe I have the 6th sense which makes me to listen to Harris, ARR, yuvan, michael jackson, akon, shakira, beyonce, viswanathan-ramamurthy with equal pleasure.

Ilayaraja 'was' a king during his period. may be it was because there was no competition to him those days ;-) but now ARR has taken that position comfortably, with ease, not just in TN but all over India - that too with loads of competition.

Ilayaraja's golden era ended during the early 90's - from 75. similarly there'll be a period for ARR, harris, yuvan - just everyone. True music lovers will move on to the next music director. but people like you will stick to their own tastes and will treat all others as worst composers. For this reason alone you dont fit to be a reviewer for any album. because if your thoughts are unbiased you would've written a full-fledged review of your favourite composers work in Paa - in which IR's music was not worth mentioning. I'm sure if VTV's songs were composed by somebody else other than ARR your comments wouldn't be the same. This I can tell for sure after reading all your posts regarding ARR and IR. You just hate ARR and his works - this is a undeniable fact.

so next time if at all you intend to write a review - start with a blank mind - forget that you're a great fan of IR or a great hater of ARR and all.

And for God's sake dont you use words like 'pannadai' for people who like something that you dont like. Be careful as these people might also inclue your dear wife, mom or your kid. It would be great fun at end of the day ;-)

Cheers.
valaignan said…
Hi Karthik,

I think all of us are spending too much of time on a non-issue

1.CSK is just one among us (1.1 billion)

2.He does not like VTV.To borrow from 'Nithyananda' "He has NOT done anything wrong legally!"

3.He records his views about VTV in his blog.To borrow from CSK himself "Any pannadai can start a blog"

4.Give him his space and lets mind our space

Thanks
@karthik

[this how I prove myself as developer :)]

/*I dont see any single thing in this movie which you liked - actors, director, screenplay, music etc. - you dont seem to have liked just anything about this movie. So why waste your time in penning down such a big post in your blog?? Its understandable when you write about something you like. but when you dont like about something why write about it in the first place?? I just dont understand the logic. */

[my implementation/copy/rewrite :)]

I don’t see any single thing in his blog which you liked- movie reviews ,padithathil pidithathu ,saha sila kuripugal ,top ten movies, songs, awards etc. you dont seem to have liked just anything about his blog .So why waste your time in penning down such a big comment in his blog?? Its understandable when you write about something you like. but when you dont like about something why write about it in the first place?? Can you understand this logic?.
The thing which made you to post your comment (vent your anger) about something you don't might be the thing for his review .

-sk
viki said…
நான் ஏற்கெனவே திருவாளர் மேதாவி ஷாஜிக்கு அனுப்பிய விஷயத்தை நீயும் உறுதி செய்ததற்கு நன்றி.2000 மாம் ஆண்டுவரை ரகுமானின் பாடல்களில்(தமிழை பொறுத்தவரை) இருந்த அந்த ரம்மியம் ஒருவித காந்த ஈர்ப்பு கேட்டவுடன் இது ரகுமான் இசை என சொல்லவைக்கும் ஒருவித மேதைத்தனம் நிரம்பிய பாடல்களை 2000 திற்கு பிறகு கேட்க முடியவில்லை.(உம,தெனாலியில் இருந்து ,ஸ்டார்,அல்லி அர்ஜுனா,பரசுராம்,கண்களால் கைது செய்,.etc etc...போன்ற மொக்கை இசையைதான் தமிழில் அவர் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.(இப்போது வந்திருக்கும் விண்ணை தாண்டி..அதாவது இன்று வரை ) .ச்லம்டாக் படத்திற்கு எட்டு ஆஸ்கார் வழங்கப்பட்டது இந்த நூற்றாண்டின் இரண்டாவது சிறந்த நகைச்சுவை(முதல் இடத்தை வல்லூறு ஒபாமா வாங்கிய அமைதிக்கான நோபெல் பரிசு.பெறுகிறது..ஹி..ஹி..
டெல்லி 6 ஜோதா அக்பர் ஆகிய இசையை ச்லம்டாக் உடன் ஒப்பிட்டால் புரியும்..(ஆனால் Blue இசை ஒரு குப்பை)
மற்றபடி pizza பொட்டலத்தில் பீ (உன் நண்பன் என்னை போல் இடது சார்பு சிந்தனையாளனாக இருக்கலாம்..hats off to him).
இந்த ரகுமான் வெறி பிடித்து அவரின் அணைத்து இரைச்சல்களையும் (சிலர் அவரை mozart of Madras என சொல்வது காதுகளை கூச செய்கிறது..மொசார்ட் எனகே ரகுமான் எங்கே?) ஏதோ (இல்லாத)கடவுளின் ஓசை போல்மிகைப்படுதுபவர்களை கண்டு கொல்லாதே(அந்த மேதாவி ஷாஜி , "நித்யா புகழ்"சாரு உட்பட )தொடர்ந்து இது போல் நேர்மையான இசை விமரிசனங்களை ஏழுது..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்