தமிழ் PLAYBOY

தீராத விளையாட்டுப் பிள்ளை படம் நன்றாக வந்திருக்கிறது.


திரைக்கதையும் (சிறிய அளவிளான க்ளைமேக்ஸ் சொதப்பல் தவிர), நிறைய இடங்களில் வசனமும் பளிச். மற்றபடி, எல்லோரும் சொல்லும் "பெண்களை போகப்பொருளாக காண்பித்திருக்கிறார்கள்" என்கிற சொத்தைப் புடலங்காய் விமர்சனத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு பார்த்தால், காதலித்து கைவிடுதல் என்கிற கலாசாரம் தொடர்பாய் தமிழ் சினிமா இதுவரை பேசாத சில முக்கிய விஷ‌யங்களை, அதன் இரு பக்கங்களின் வாதங்களை ஜனரஞ்சகத் தளத்தில் இப்படம் முன்வைக்கிறது.

அறிமுக இயக்குநர் திரு ஜெயித்திருக்கிறார் என்று தான் சொல்வேன். யுவன் ஷங்கரும், அரவிந்த் கிருஷ்ணாவும் வழக்கம் போல். சந்தானம், மயில்சாமி, சத்யன் கூட்டணி நன்று. குறிப்பிடத்தகுந்த இன்னொரு நடிப்பு மௌலியுடையது. பிரகாஷ்ராஜ் தான் பாவம். மூன்று ஹீரோயின்களில் நீது சந்திரா மட்டும் தேறுகிறார். இரண்டு மிஸ் இந்தியாக்களும் பனால். மற்றபடி, சினேகா, மல்லிகா கபூர் வந்து போகிறார்கள்.

விஷால்? வழக்கமான அடிதடி (ம‌ட்டும்) இல்லாமல், யுவதிகளைக் குறிவைத்திருக்கும் சாக்லேட் பாய் கேரக்டர் (அவர் நிறத்துக்கு சாக்லேட் பொருத்தம் தான்!). ஆச்சரியமாய், இப்படத்திலிருந்து அவரை எனக்குப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பார்க்கலாம்.

சன் பிக்ச்சர்ஸ் வினியோகம் என்கிற பயமின்றி தாரளமாகப் பார்க்கலாம்.

Comments

Balaji K said…
A decent story spoilt due to the weak logicless scenes and impractical dialogues. Weak characterization, people change their characters very often for small reasons(from revenge taking women to softhearted, from intelligent to fool). Logical flaws - heroine proposes to hero in the first half, but later in second half she asks hero "what you would have done if i haven't accepted your proposal?". (hero never proposes). Lot of continuation flaws - when hero takes heroine in bicycle, it is morning. and in a few seconds(they are still in bicycle), it becomes night and they take dinner. In another scene, the alarm shows 6 o clock, the heroine's cellphone rings, she picks up and gets up from bed, the same clock shows 6:25 and in next shot again time shows 6:05.. A lot of flaws.. and impractical dialogues that will be spoken only in a movie..

I am truly saying, I see atleast one Tamil movie per month in theatre. And this is the worst Tamil movie I have ever seen.
Anonymous said…
What is good in dialoges!!!
Bullshit!!!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்