ம்டப ப்ழ்மித
Parody film என்பார்கள் ஆங்கிலத்தில். கொஞ்சம் dilute செய்தால் spoof movie எனலாம். ஏற்கனவே வந்திருக்கும் படம் / படங்களின் கதை, திரைக்கதை, வசனம் முதற்கொண்டு சகலத்தையும் சகட்டு மேனிக்கு நையாண்டியாய் இமிட்டேட் செய்து படம் எடுப்பது. நகைச்சுவை தான் அதன் ஆதார ஸ்ருதி. அதாவது அங்கதச்சுவை. காட்சிக்குக் காட்சி முழுப்படமே இப்படித் தான்.
காலவரிசைப்படி முதலாவது அல்ல என்ற போதிலும், ஹாலிவுட்டைப் பொறுத்தவரை 1948ல் வெளியான Abbot and Costello முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது (1947ல் வெளிவந்த My Favorite Brunette முதலாவதாக இருக்கக்கூடும்). ஆங்கிலத்தில் 1940களில் தொடங்கி இதுவரை இது போல் குறைந்தபட்சம் நூறு ஸ்பூஃப் படங்களாவது வெளிவந்திருக்கும்.
அவற்றில் நான் பார்த்திருக்கும் ஒரே படம் ஜேம்ஸ் பாண்ட் படங்களை நக்கலடித்து Rowan Atkinson நடிப்பில் (இந்த Mr.Beanஆக நடிப்பாரே ஒரு முட்டைக்கண் ஆசாமி அவரே தான்) 2003ம் ஆண்டு வெளிவந்த Johnny English. அடுத்த வருடம் இதன் இரண்டாம் பாகம் வரும் எனத் தெரிகிறது.
தமிழில்?
இதுவரை ஸ்பூஃப் படமே வந்ததில்லை என்று தான் சொல்வேன். அதாவது முழுமையான ஸ்பூஃப் படம். நடிகர் விவேக் நிறைய படங்களில் தான் வரும் சிலபல தனி காமெடி ட்ராக் காட்சிகளில் இதை முயற்சித்திருக்கிறார். அப்புறம், தொலைக்காட்சிகளில் வந்த / வரும் லொள்ளு சபா (விஜய் டிவி), சூப்பர் டென் (சன் டிவி) போன்றவை குறிப்பிடத்தக்கவை. வெங்கட் பிரபு தனது மூன்று படங்களிலுமே கணிசமான காட்சிகளில் இதைத் தொட்டிருக்கிறார் (கோவா அதன் உச்சம்). ஆனால் முழுப்படமுமே ஒரு professional spoofஆக?
ம்ஹூம்.
இந்த வெற்றிடத்தில் தான் தமிழ்ப்படம் மிகச்சுலபமாய் சம்மணமிட்டு அமர்கிறது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் கண்ணன், வசனகர்த்தா சந்துரு, படத்தொகுப்பாளர் சுரேஷ், கலை இயக்குநர் சந்தானம் ஆகிய என்கிற சக்தி வாய்ந்த பஞ்சபாண்டவர்களை வழிநடத்தி யுத்தத்தை வெற்றிகரமாய் முடித்து வைத்திருக்கிறார் இயக்குநர் C.S.அமுதன் (அவர் தான் கிருஷ்ணன் என மகாபாரதத்தை கரைத்துக் குடித்தவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது கரைக்காமல் குடித்தவர்களுக்கு).
டைட்டில் கார்ட் முதல் டைட்டில் கார்ட் வரை (முதலாவது டைட்டில் கார்ட் ஆரம்பத்தில் வருவதையும், இரண்டாவது டைட்டில் கார்ட் கடைசியில் வருவதையும் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது) அத்தனையுமே ஸ்பூஃப் தான். எல்லாவற்றிலுமே நகைச்சுவை தெறிக்கிறது.
ஹீரோ இண்ட்ரோ, பட்டப்பெயர் பில்டப், திரைக்கதை ட்விஸ்ட், டூயட் பாடல், கேமெரா ஆங்கிள், பஞ்ச் டயலாக், செண்டிமென்ட் காட்சி, ஸ்டன்ட் சீக்வென்ஸ், க்ளைமேக்ஸ் சஸ்பென்ஸ், எடிட்டிங் ஜிம்மிக்ஸ், ஃபேமிலி சாங், மேக்அப் காமெடி, பாடல் வரிகள், அரங்க அமைப்பு, சென்சார் வெட்டு, லாஜிக் மீறல் என்று எல்லாவற்றையுமே ஒரு கை பார்த்து விட்டார்கள்.
காதல், நட்பு, கிராமம், நகரம், கள்ளிப்பால், பஞ்சாயத்து, நாட்டாமை, ரவுடி, போலீஸ், கோர்ட், அம்மன் என எதுவுமே விதிவிலக்கில்லை. சூப்பர் ஸ்டார் முதல் லிட்டில் சூப்பர் ஸ்டார் வரை யாருமே தப்பவில்லை.
நடிப்பில் சிவாவும், எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா வரை தேவையானதை அளவு மீறாமல் தந்திருக்கிறார்கள். S Pictures (ஷங்கர்), Duet Movies (பிரகாஷ்ராஜ்) போலவே Cloud Nineம் நம்பிக்கையளிக்கிறது. முன்பு வாரணம் ஆயிரம், பின்னர் தமிழ்ப்படம், இப்போது தூங்காநகரம் என்றொரு படத்தைத் துவங்கியிருக்கிறார்கள். என் கல்லூரி ஜூனியர் தயாநிதி அழகிரியை பெருமையுடன் வரவேற்கிறேன் (ஜாக்கிரதை : Red Giant & Sun Pictures).
படம் பார்த்தவர்கள் க்ளைமேக்ஸை வெளியில் சொல்லிவிடாதீர்கள் என படத்தின் டிவி ட்ரெய்லர்களில் தயாரிப்பாளர் பேசுவது கூட ஸ்பூஃப் தானோ எனத் தோன்றுகிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழ்ப்பட வரலாற்றில் மிக மிக முக்கியமான மைல்கல் தமிழ்ப்படம் (இந்த வரி மட்டும் ப்ளாகர்கள் செய்யும் சினிமா விமர்சனங்கள் தொடர்பான என்னுடைய ஸ்பூஃப். அட, நம்மாளுங்க எதையுமே இப்படி வெளிப்படையா சொன்னாத் தான் புரிஞ்சுக்கறாங்க).
Rather than spoof, I'll call it as SCOOP!
*******
Verdict: கண்டிப்பாக பாருங்கள் (நான் வேண்டாம் என்றாலும் நீங்கள் கண்டிப்பாகப் பார்ப்பீர்கள். பெட் வைத்துக் கொள்ளலாமா?)

Comments
நானும் அதே பலகலையில் படித்தவன்தான் என்பதில் வெட்கி தலை குனிகிறேன் ..ஆனால் நான் படித்து அங்கு சென்றேன் ஆனால் அவனும் உதயநிதியும் "தாத்தாவின்" ஆசியில் அங்கு சென்றார்கள்(இன்றைக்கும் அவனுக்கு அல்ஜீப்ரா கூட தெரியாது..இப்படி சிபாரிசில் சேத்துதான் அண்ணா பல்கலை என்பது ஒரு சாக்கடை ஆகிப்போனது(இந்த பதிவை நீ சென்ஸ்சார் செய்தாலும் எனக்கு கவலையில்லை)..
But, this seriously raises my eye-brows about the creativity of the director. I guess, everything is present in the movie, but the director's creativity is missing. So, my question is, "Do we really need to promote/encourage these kinds of flims in our industry????"
In fact, Venkat Prabhu's Goa is much much better than "Tamil Padam"!!!!
’ஆஹா என்ன பொருத்தம்?’ என்ற பெயரில் 90களின் மத்தியில் ஒரு முழுமையான ஸ்பூஃப் படம் வந்திருக்கிறது. ராம்கி, கவுண்டமணி கதாநாயகர்கள். சங்கவி நாயகி. செந்தில் கொடூரமான வில்லனாக நடித்திருந்தார் என்பதை வைத்து படத்தின் தராதரத்தை உணர்ந்துக் கொள்ளலாம்.
எஸ்.ஏ.சி.யின் உதவியாளர் ரங்கநாதன் இயக்கியிருந்தார். டிவிடி கிடைத்தால் வாங்கிப் பார்க்கவும்.