சக்கரவர்த்தியும் சிற்றரசும்

"இது எனக்கான அங்கீகாரம் இல்லை; என் இசைக்கு கிடைத்த பாராட்டு."

- இளையராஜா [பத்மபூஷன் விருது பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில்]

*******

மத்திய அரசுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

காலந்தாழ்ந்து தரப்படும் எந்த விருதுக்கும் அதற்குரிய நியாயமான மதிப்போ, பெருமையோ இருப்பதில்லை. ஆனால் துரதிஷ்டவசமாய், மத்திய அரசின் பெரும்பாலான பத்ம விருதுகள் இப்படித் தான். இந்தப் பின்னணியில் தான் இளையராஜாவுக்கு தற்போது பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற பயனற்ற, காலம் கெட்ட பிறகான சூரிய நமஸ்காரத்தில் ஈடுபடும் மோசமான நோய் வாய்ப்பட்ட நிலையில் இருப்பதனால் தான் ஆரம்பத்தில் என் அனுதாபங்களை மத்திய அரசுக்கு உரித்தாக்கியிருந்தேன். மற்றப‌டி, இந்த விருது அறிவிப்பால் இளையராஜாவுக்கு ஒரு ரோமம் கூட பிரயோஜனமில்லை.

ஒரு மஹாசக்கரவர்த்திக்கு சிற்றரசு எனப் பட்டம் சூட்டுவதால் என்ன பயன்?

தனிப்பட்ட முறையில் ராஜா இதை எப்படி எடுத்துக் கொள்கிறார் என்பதில் எனக்கு அக்கறையில்லை (தன் சிஷ்யனுக்கும் தனக்கும் ஒரே நேரத்தில் ஒரே விருது என்ற ஒரு விஷயத்தை மட்டும் தவிர்த்து, அவர் இதற்கு மகிழ்வதாகத் தான் தெரிகிறது). "இளையராஜா தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டார்", என்று ஷாஜி குறிப்பிட்டது உண்மையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

இரண்டு விஷயங்கள் இங்கு முக்கியமாகிறது. ஒன்று தரப்பட்டிருக்கும் காலம் (How To Name It?, Nothing But Wind போன்ற அற்புதங்களை ராஜா நிகழ்த்திய போது இந்த பத்மபூஷன் தரப்பட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம்). மற்றொன்று தரப்பட்டிருக்கும் விருது (பத்மபூஷனுக்கு மேலான விருதுகளைப் பெற்றிருக்கும் எம்.எஸ்.சுப்புல‌க்ஷ்மி, ல‌தா மங்கேஸ்கர், ஆஷா போஸ்லே போன்றவர்களை விட அதிக சாதனைகளை அதே துறையில் நிகழ்த்திக் காட்டியவர் ராஜா).

ஆனால் இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. தற்போது கூட மத்திய அரசு தனது அறியாமையை உணர்ந்து கொண்டு பிராயச்சித்தம் தேடிக் கொள்ள ஒரு வழி இருக்கிறது. அதாவது, இசை ஞானி இளையராஜாவுக்கு தந்து நாமெல்லாம் ஆறுதல் பட்டுக் கொள்ளக்கூடிய உயரிய‌ விருது ஒன்று உண்டு.

அதன் பெயர் பாரத ரத்னா.

Comments

Agree;Too late; Any way these awards really don't matter given it is given to people with questionable aspects. I guess he has won people's heart by people singing/humming his tune. In the end those things count..

I guess Govt works for Dadha Saheb Phakle award soon for him as a course correction.

Many things about Tamil I stay away, but his music (Till 1985 when I left)and Thiruvasagam is not one.
Karthik
Bangalore.
Dinesh said…
Really its a very sad news to hear that Mr.Raja has been awareded after these many decades of his musical work. But as u mentioned:
"இது எனக்கான அங்கீகாரம் இல்லை; என் இசைக்கு கிடைத்த பாராட்டு."
Mr.Raja is right in his attitude. He is always great.

தன் சிஷ்யனுக்கும் தனக்கும் ஒரே நேரத்தில் ஒரே விருது என்ற ஒரு விஷயத்தை மட்டும் தவிர்த்து, அவர் இதற்கு மகிழ்வதாகத் தான் தெரிகிறது)

regarding the above quote, i feel like, Raja should be very happy in deed, because A.R.R was his student, two decades back, but nowm he has grown up well & he is @ his best.

I'm not trying to justify that A.R.R is the BEST. But, i would like to say A.R.R is one among the BEST in the industry:)
viki said…
சரியான நெத்தியடி CSK !பலருக்கும் அதே கோபம மற்றும் ஆதங்கம் தான் .நான் நினைத்து கொண்டது கமலுக்காவது பத்ம ஸ்ரீ விருதை தொண்ணூறில் வழங்கினார்கள் என்பதே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது (அவ்வளவு விரைவு!!)
மற்றபடி குருவுக்கும் சிஷ்யனுக்கும் ஒன்றாக வழங்கப்பட்டதற்கு காரணம் ஒன்றுதான்.ஏ ஆர் ரகுமானுக்கு அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைத்தபடியால் அமெரிக்காவின் கைக்கூலியானமத்திய அரசு(இதை விட கடுமையாக மத்திய அரசு பற்றி நான் பல முறை ஆர்குட்டில் எழுதியிருக்கிறேன்)உடனே தானும் அங்கீகாரத்தை வழங்கி விட்டது.நான் ரகுமான் தகுதி இல்லாதவர் என்று சொல்லவில்லை .அவருக்கு விரைவாக பத்ம விருது வழங்கப்பட்டதற்கு காரணம் இதுவே.
கமல் ஒரு முறை கூறும் பொது "ஆஸ்கார் என்பது அவர்களின் அளவுகோல்.எனக்கு அவர்களுக்கு கமலஹாசன் விருது வழங்கத்தான் ஆசை" என்று போட்டாரே ஒரு போடு.
மற்றபடி ரகுமான் ஆஸ்கார் வாங்கவில்லைஎனில் அவருக்கும் அறுபது வயதில் போனால் போகிறதென்று பத்ம விருதை வழங்கியிருப்பார்கள்
***********
///இசை ஞானி இளையராஜாவுக்கு தந்து நாமெல்லாம் ஆறுதல் பட்டுக் கொள்ளக்கூடிய உயரிய‌ விருது ஒன்று உண்டு.

அதன் பெயர் பாரத ரத்னா. ////

நானும் ஆமோதிக்கிறேன்
//அதன் பெயர் பாரத ரத்னா//
அது இளையராஜாவிற்கு நிச்சயம் கிடைக்காது.
காரணம் அவர் பிறந்தது தாழ்த்த பட்ட இனம்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்