I AM BACK!

தலைப்பை பில்லா (2007) ஸ்டைலில் சொல்லிப் பார்த்து, அல்டிமேட் ஸ்டாரை அவமானப்படுத்தாதீர்கள். உடன் என்னையும். I mean it!
*******

Marjolein Katsma என்ற ஆசாமியின் iamback.com என்ற வலைதளத்தை மேய்ந்திருக்கிறீர்களா? சரியான ஊர்சுற்றி போலிருக்கிறது.
*******

எதனால் பதிவெழுத முடியாதிருந்ததோ, அதே காரணத்தால் பழசிராஜா, 2012, Jail, யோகி படங்களை இன்னும் பார்க்கவில்லை. Have to.
*******

இந்நாட்களின் ஒரே ஆறுதல் இளையராஜாவின் Paa. அதுவும் 'Mudhi Mudhi Ittefaq Se' பாடல். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் Scintillating.
*******

33வது சென்னை புத்த‌க கண்காட்சி இம்முறை கொஞ்சம் முன்னதாகவே நடக்கிறது (30‍ டிசம்பர் 2009 - 10 ஜனவரி 2010, அதே இடம்).
*******

ஆம்! அகநாழிகை வெளியீடாக பதிவர் நர்சிமின் முதல் புத்தகம் இந்தப் புத்தகக் காட்சிக்கு வருவதாக அறிகிறேன். மகிழ்ச்சியும் வாழ்த்தும்!
*******

பூக்களிலிருந்து சில புத்த‌கங்கள் : மாதவராஜ், பவா. செல்லத்துரை முயற்சியில் பதிவர்களின் படைப்புகள் 3 தொகுப்புக்களாக‌ புத்தக்காட்சிக்கு வருகிறது.
*******

ப்ளாக் எழுதாம‌ல் இருந்தது அவஸ்தையாகத் தான் இருந்தது. It's really really an addiction. ஆபத்பாந்தவனாக‌‌, Twitter தான் கைகொடுத்தது.
*******

And Twitter too is an addiction. இன்னும் கொஞ்சம் வலுவான நேரக்கொல்லி. But still, it's wonderful! இந்தப் பதிவைப் பார்த்தாலே புரிந்திருக்குமே.
*******

ஒரு மாதம் காத்திருந்து, இத்தள(ல)த்திற்கு அடியேனைத் தேடி வந்திருக்கும் அனைவருக்கும் என் புனிதம் கெடாத பிரத்யேக காதல் உரித்தாகுக.

Comments

Anonymous said…
welcome...& congrats!
welcome back...
by the way, once i read a 'mazhai kavithai' with the negative aspects of rain in some website...have u ever come across that? if so, pl inform..i want to read it again..
Victor said…
We are starving! Please feed us asap!
Victor
viki said…
2012, Jail, யோகி படங்களை இன்னும் பார்க்கவில்லை////

jail திரைப்படம் The Shawshank Redemption படத்தின் தழுவல்..ஆனால் மதுர் பண்டார்கர் போன்ற படைப்பாளியின் முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்கது (இதற்கு முன் Fashion திரைப்படம் )..ஹிந்தியில் நிறைய யதார்த்தமான படங்கள் வருகின்றன..கமினே,ஜெயில்,பா போன்ற படங்கள் உதாரணம்..ஆனால் இங்கோ யதார்த்தம் என்ற பெயரில் அபத்தங்கள் (சாரு கூறுவது போல்)தான் அரங்கேறு
கின்றன..உம..சுப்ரமணியபுரம்..என்ற மிகை படுத்த பட்ட ஒரு திரைப்படம்..ஏற்படுத்திய விளைவு ..இது வரை ஒரு பத்து திரைப்படங்கள்..தாடி வைத்த நாலு தறுதலைகள் ஒரு தாவணி போட்ட நாயகி..என கழுத்தை அறுக்கிறார்கள்..இல்லையேல் சுடுகாட்டில் படம் பிடிப்பார்கள்..கொடுமை..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்