இருளில் ஒளிரும் கவிதை


i was a helpless girl

against the brutal world of
bottom-patting-and-breast-pinching.

-Meena Kandasamy, Apologies for living on. . . (Touch)

*********************

தமிழகத்தின் இளைய தலைமுறை தலித்திய‌, பெண்ணிய இலக்கியப் படைப்பாளுமைகளுள் மிக முக்கியமானவராகத் தென்படுகிறார் மீனா கந்தசாமி. கிண்டி பொறியியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையில் பி.ஹெச்.டி. செய்து கொண்டே கற்பிக்கும் இணை ஆராய்ச்சியாளயாக பணிபுரியும் மீனா எழுதுவது ஆங்கிலத்தில் தான் என்றாலும் அவற்றில் தமிழ்ச்சூழலின் ஆதாரக்கூறுகள் ஊடு பாவாய் இழையோடி நிற்கின்றன.


கவிதைகள், மொழிபெயர்ப்புகள், புனைவிலக்கியம், வாழ்க்கை வரலாறு என்று பரந்த தளங்களில் பரவியிருக்கும் இவர் எழுத்துக்கள் தலித் மற்றும் பெண்களின் பிர‌ச்சனைகளை மையமாகக் கொண்டு மெல்லிய அங்கதத்துடன் அவை முன்வைக்கும் அரசியலை நோக்கி கேள்வி யெழுப்புபவை. மீனாவின் படைப்புகளுள் முக்கியமானதாக நான் கருதுவது அவரது முதல் புத்தகமான Touch என்கிற கவிதைத் தொகுப்பைத்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் உரைகள் மற்றும் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அதே போல் தமிழீழக் கவிஞர் காசி அனந்தனின் கவிதைகளையும், சிறுகதைகளையும் மொழி பெயர்த்திருக்கிறார். அதோடு, பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" புத்த‌கத்தையும், 18 த‌மிழ் தலித் கவிஞர்களின் கவிதைகளை ஒரு தொகுப்பாகவும் பெயர்த்திருக்கிறார்.

கேரளாவின் த‌லித் தலைவர் அய்யன்காளியின் வாழ்க்கை வரலாற்றை எம்.நிஸாருடன் இணைந்து எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியாகும் புத்தகங்களுக்கு மதிப்புரையும், முக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களும் எழுதியிருக்கிறார். இவை தவிர கொஞ்சம் சிறுகதைகளும், நிறையக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். வலைதளங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். வலைப்பதிவு ஒன்றும் வைத்திருக்கிறார்.

*********************

Touch தொகுப்பிலிருந்து என்னைக் கவர்ந்த சில கவிதைகள்:

1.Ekalaivan

This note comes as a consolation:

You can do a lot of things
With your left hand.
Besides, fascist Dronacharyas warrant
Left-handed treatment.

Also,
You don't need your right thumb,
To pull a trigger or hurl a bomb.

2.Becoming a Brahmin

Algorithm for converting a Shudra into a Brahmin

Begin.

Step 1: Take a beautiful Shudra girl.
Step 2: Make her marry a Brahmin.
Step 3: Let her give birth to his female child.
Step 4: Let this child marry a Brahmin.
Step 5: Repeat steps 3-4 six times.
Step 6: Display the end product. It is a Brahmin.

End.

Algorithm advocated by Father of the Nation at Tirupur.
Documented by Periyar on 20.09.1947.

Algorithm for converting a Pariah into a Brahmin

Awaiting another Father of the Nation
to produce this algorithm.

(Inconvenience caused due to inadvertent delay
is sincerely regretted.)

3.This wired world

This world never understood poems or poets.

Why, even my computer can understand
Nike Picasso Pepsi Gucci Motorola
But she thinks
I am misspelling
When I write
Pablo Neruda.
She suggests
I try Nerd, Nerds or Nerdy
Instead of Neruda.

I leave her and her choice of alternate spellings.
I vow to discard these bizarre suggestions.

I am convinced

This world never understood poems or poets.
I pray it remembers the greatest of them.
Or, at least their names

*********************
தன் எழுத்துக்கள், மொழிபெயர்ப்புகள் ம‌ற்றும் செயல்பாடுகள் வழி பெண்ணிய, தலித்திய, தமிழிய பிரச்சனைகளை எதிர்ப்பதே தன் வழி எனக் குறிப்பிடுகிறார் மீனா. மறைந்த எழுத்தாளர் கமலாதாஸ், மீனாவின் Touch புத்த‌கத்தின் முன்னுரையில் இவரது எழுத்துக்களைப் பற்றி "dark cynicism of youth" என்று குறிப்பிடுகிறார். உதாரணமாய், காந்தியைப் பற்றி மீனா எழுதியிருக்கும் இக்கவிதையை கவனியுங்கள்:

Mohandas Karamchand

(written after reading Sylvia Plath's Daddy)

"Generations to come will scarcely believe that such a one as this
walked the earth in flesh and blood."
—Albert Einstein

Who? Who? Who?
Mahatma. Sorry no.
Truth. Non-violence.
Stop it. Enough taboo.

That trash is long overdue.
You need a thorough review.
Your tax-free salt stimulated our wounds
We gonna sue you, the Congress shoe.

Gone half-cuckoo, you called us names,
You dubbed us pariahs—"Harijans"
goody-goody guys of a bigot god
Ram Ram Hey Ram—boo.

Don't ever act like a holy saint.
we can see through you, impure you.
Remember, how you dealt with your poor wife.
But, they wrote your books, they made your life.

They stuffed you up, the imposter true.
And sew you up—filled you with virtue
and gave you all that glossy deeds
enough reason we still lick you.

You knew, you bloody well knew,
Caste won't go, they wouldn't let it go.
It haunts us now, the way you do
with a spooky stick, a eerie laugh or two.

But they killed you, the naked you,
your blood with mud was gooey goo.
Sadist fool, you killed your body
many times before this too.

Bapu, bapu, you big fraud, we hate you.

கமலாதாஸ் சொல்வது சரியென்றே தோன்றுகிறது.

பின்குறிப்பு:
தன் புகைப்படங்களைப் பயன்படுத்த முன் அனுமதி பெற வேண்டும் என அவரது வலைதளத்தில் செல்ல எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மீனா. தவிர அப்படிப் பயன்படுத்தும் போது, புகைப்படம் எடுத்த அவரது கேமெரா நண்பர்களான என்.ஜெய்சிங் மற்றும் எஸ்.எல்.சாந்த் குமார் பற்றிக் குறிப்பிட மறக்க‌ வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். செய்தாயிற்று.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்