அது அப்படித்தான்

ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் படம் டிவிடியில் பார்க்க வாய்த்தது. மிகச் சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் குறிப்பிடத்தகுந்த படமாகத் தோன்றுகிறது. வசனகர்த்தாக்களில் ஒருவர் எழுத்தாளர் வண்ணநிலவன்.

அவள் அப்படித்தான் படத்தில் குறிப்பிடத்தகுந்த மூன்று விஷயங்கள் : 1. கமல் எடுக்கும் குறும்படம் சம்பந்தப்பட்ட பேட்டிகள் 2.ரஜினி கதாபாத்திரம் பேசும் வசன‌ங்கள் 3."உறவுகள் தொடர்கதை" பாடல் (இசை: இளையராஜா).

படத்தின் driving force ஸ்ரீப்ரியாவின் நடிப்பு தான். ட்விட்டரில் ட்வீட் செய்வது போல் சுருக்கமான ஆனால் அபாரமான நடிப்பு. இப்படத்தை இப்போது எடுத்தால் என் சாய்ஸ் இந்தியில் ப்ரியங்கா சோப்ரா; தமிழில் அசின் தோட்டும்க‌ல்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்