படித்தது / பிடித்தது - 63

பார்வைகள்

பெண் தோழிகளுடன்
பேசும்போதும்
வீசாமல் இருக்க முடிவதில்லை
ஒருக்கணமேனும்
மார்புகளை நோக்கி

பெண் கடவுள்களை
வழிபடுகையில் மட்டும்
கொஞ்சம் கூடுதல்
பயத்துடன்

- என்.விநாயக முருகன்

நன்றி: NBlog - என் வலைப்பூ

Comments

நன்றி தங்களுக்கும் இது பிடித்தது
ஆச்சர்யமாக உள்ளது.

எனது அலுவலகத்தில் இந்த கவிதைப் படித்த சகநண்பரொருவர் என்னை செமையாக திட்டினார்.

ஏதாவது ஒரு தருணத்திலாவது நான் பெண் தெய்வத்தின் முலைகளை சற்று சபலமாகவோ, ஆர்வமாகவோ கவனித்துள்ளேன்.மற்றவர்களுக்கு இது நேர்ந்துள்ளதா. தெரியவில்லை. தயவு செய்து தெளிவுப்படுத்தவும். நான் சைக்கோவோ அல்லது சாடிஸ்டா என்று எனக்கு குழம்புகிறது. தெய்வ நிந்தனை செய்துவிட்டேனோ?
//நான் சைக்கோவோ அல்லது சாடிஸ்டா என்று எனக்கு குழம்புகிறது. தெய்வ நிந்தனை செய்துவிட்டேனோ?//

நீங்கள் இயல்பான ஆணாக இருக்கிறீர்கள்.

ஆண் பெண்ணை பார்ப்பது இயற்கை அளித்துள்ள இனப்பெருக்க உத்திகளில் ஒன்று,

அதோடு நிறுத்திக்கொள்ளாமல் சமுதாய ஒழுக்கத்தை மீறினால்தான் தவறு

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்