சில சிந்தனைகள் - 4

'வேலுபிரபாகரனின் காதல் கதை' படத்தை நேற்றிரவு டிவிடியில் பார்த்தேன் (மனைவி ஊரில் இல்லை). எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாய் வே.பா. பேசும் சில வச‌னங்கள், அந்த மூன்று பெண் கதாபாத்திரங்கள் மற்றும் இளையராஜாவின் பின்னணி இசை.

^^^^^^^^^^^^^^^^^
ஏ.வெங்கடேஷின் 'மலை மலை' படத்தையும் டிவிடியில் பார்த்தேன். பரவாயில்லை. பிரபு, அருண்குமார் OK. வேதிகா (வழக்கம் போல்) அழகு. பிரகாஷ்ராஜ் பரவாயில்லை. இது மாதிரி படங்கள் கூட சமாளிக்கலாம். 'துரை' வகையறாக்கள் தான் பிரச்சனை.

^^^^^^^^^^^^^^^^^
பா.விஜய் திரைக்கதை எழுதி நடித்த 'ஞாபகங்கள்' படத்தில் "ஞாபகமில்லையோ தோழி" என்றொரு பாடல் வருகிறது. இசையும், குரலும் ஒரு சூட்சமத்தில் இயைந்து பிரிவெனும் துயரை அத்தனை அழகாய் உணர்த்தி விடுகிறது. குப்பையிலொரு குன்றின்மணி.

^^^^^^^^^^^^^^^^^
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நேற்று வெளியான 'யோகி' படத்தின் பாடல்கள் நல்வரவு. குறிப்பாய் உஸ்தாத் சுல்தான் கானின் சாரங்கி மற்றும் குரலில் ஒலிக்கும் யோகி தீம் ம்யூஸிக் அபாரம். மற்றவை கேட்கலாம்; குற்றமில்லை. I feel this is a come back.

^^^^^^^^^^^^^^^^^
நடிப்பில் என் தற்போதைய ஃபேவரைட் பாரதிராஜாவால் பொம்மலாட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, காந்திகிருஷ்ணாவால் ஆனந்ததாண்டவத்தில் பிரபலமாக்கப்பட்ட ருக்மிணி தான். பிற்காலத்தில் மிகச்சிறந்த நடிகையாக உருவாகப் போகிறார் எனத் தோன்றுகிறது.

Comments

Anonymous said…
100% rite!!her dance movements n vijay awards simply superb.
Anonymous said…
மனைவி ஊரில் இல்லா விட்டால், வேலு பிரபாகரன் படமா ?
இந்த குப்பைக்கு உங்கள் கமெண்ட்ஸ் வேறு...
ஹய்யோ ஹய்யோ (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
MSK said…
'வேலுபிரபாகரனின் காதல் கதை' , இந்த படத்தை பார்ப்பதற்கு பதில், வேற எதாவது பிட்டு படம் பார்த்திருக்கலாம்..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்