சகா : சில குறிப்புகள் - 7

இத்தொடரின் பகுதி நான்கில் சன்ன மார்புக்காரிக‌ளின் மீதான சகாவின் பிரேமை குறித்து பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில், சம்பந்தப்பட்ட லோக்கல் நடிகைகளின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு முடித்துக் கொண்டதில் சகாவுக்கு திருப்தியில்லை. அதனால் அவன் வேண்டுகோளின் படி, இந்த இயலின் சர்வதேச சங்கதிகளையும் கொஞ்சம் ஜல்லியடிக்கிறேன் (முக்கிய‌ எச்சரிக்கை : இது சகாவின் விருப்பப் பட்டியல் மட்டுமே. மார்பளவு வாரியான quantitative வரிசைக்கிரமப் பட்டியல் அல்ல).

Nicole Richie, Alicia Silverstone, Michelle Pffeifer, Rachel Bilson, Ashley Olsen, Lucy Liu, Evangeline Lilly, Bai Ling, Julia Stiles, Jennifer Garner, Debra Messing, Kristin Cavallari, Cameron Diaz, Dominique Swain, Claire Danes, Sandra Oh, Dido, Cristina Ricci, Ellen Pompeo, Catherine Keener, Joan Allen, Erin O'Connor, Judy Greer, Calista Flockhart, Maggie Q, Eva Longoria, Natalie Portman, Kate Hudson, Zoe Saldana, Julianne Moore, Cate Blanchett, Alicia Witt, Devon Aoki, Mena Suvari, Milla Jovovich, Anne Heche, Kate Bosworth, Charlize Theron, Evan Rachel Wood, Naomi Campbell, Nicky Hilton, Jennifer Carpenter, Ali Larter, Paris Hilton, Rihanna, Jill Hennessy, Selma Blair, Jena Malone, Leslie Mann, Shakira, Gwyneth Paltrow, Sienna Miller, Sarah Michelle Gellar, Zhang Ziyi, Thandie Newton, Mischa Barton, Vanessa Hudgens, Kirsten Dunst, Julia Roberts, Rachel McAdams, Gwen Stefani, Jennifer Esposito, Kate Moss, Piper Perabo, Bridget Moynahan, Keira Knightley, Kristin Kreuk, Lily Allen, Maria Bello, Mary Kate Olsen, Lara Flynn Boyle, Jessica Alba, Alicia Keys, Yunjin Kim மற்றும் Jennifer Lopez (நன்றி: www.listaholic.com).

ஆர்வமுள்ள‌ வாசகர்கள் இதே போன்றதொரு விரிவான பட்டியலை அன்னைத் தமிழ்நாட்டிற்கு தயாரிக்க முயற்சிக்கலாம் - வரலாறு நினைவிற் கொள்ளும் (பெண்ணிய அமைப்புகள் போராட்டம் நடத்தினால் அடியேன் பொறுப்பல்ல).

**********************

எல்லாம் சரி. "அது என்ன ஓ.ஹென்றி சிறுகதையின் கடைசி வரி போல் பட்டியலின் கடைசியில், சம்பந்தமில்லாமல் ஜெனிஃபர் லோபஸை சேர்த்திருக்கிறாய், What is lacking with her boobs?" என‌ என்று சகாவிடம் கேட்டேன். அதற்கு அவன் சொன்ன பதில், "It's remarkably small compared to her butt! சும்மாவா ஜெனிஃபர் தன்னுடைய சூ...தை 27 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இன்ஸ்யூர் செய்திருக்கிறாள்?". அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'Salon' என்கிற பத்திரிக்கை ஜெனிஃபர் லோபஸின் பிருஷ்ட மகத்துவத்தை விளக்கி ஒரு தனிக் கட்டுரையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

**********************

எழுத்தாளர் அம்பையின் 'பிரசுரிக்கப்படாத கைப்பிரதி' என்ற சிறுகதையின் நாயகி (பெயர் : செந்தாமரை) தன் முலைகளுக்கு 'அங்கவை - சங்கவை' எனப் பெயரிட்டிருப்பாள். அதே பாணியில் சகாவும் தனது அத்யந்த தோழியொருத்தியின் முலைகளுக்கு செல்லப்பெயர்(க‌ள்) வைத்திருந்தான் (பெயர் சொல்லி அழைத்தால் அவை வருமா என்பதை அடியேன் அறியேன்). 'Laurel - Hardy' என்பது தான் நம்ம ஆள் சூட்டிய நாமகரணம். வழக்கம் போல் விளக்கம் கேட்டேன். "Stupid! It's self-explanatory, yaar. பார்த்தால் தான் உனக்குப் புரியும்" என்று சலித்துக் கொண்டான். புரிந்து கொண்டேன்.

**********************

பெங்களூரில் ஹ‌ல்சூர் ஏரிக்கரையோரமாய் 'நாச்சியார்' என்றொரு செட்டிநாட்டு உண‌வகம் உண்டு. மதுவருந்த அனுமதியில்லை என்ற போதிலும், போதை நாக்குக்கு இதமாய்க் காரமாக சிக்கன் வறுவல் தருவார்கள், ‍அறுபது வாட்ஸ் மந்த விளக்கொளியின் பின்னணியில் மெல்லிய சப்தத்தில் எண்பதுகளின் இளையராஜாவை வழிய விட்டிருப்பார்கள். சகாவுக்கு கோழி வறுவல், இளையராஜா இரண்டுமே ஆதர்சங்கள் என்பதால் அவனை அங்கே ஒருமுறை அழைத்துச் சென்றேன். இப்போது விஷயம் உண‌வையோ இசையையோ பற்றியதல்ல; அங்குள்ள‌ கைகழுவுமிடத்தைப் ப‌ற்றியது.

அங்கே பெண்ணொருத்தி நின்ற வாக்கில் குடத்தில் தண்ணீர் ஊற்றுவதைப் போல் ஆளுயர மண்சிலை வைத்திருப்பார்கள் (நீங்கள் எதிர்பார்ப்பது போல் எடுப்பான மார்பகங்களுடன், முந்தானை முக்கால்வாசி விலகிய நிலையில் இருக்கும் அச்சிற்பம்). அதன் இட‌து ஓரத்தே தண்ணீரை திறக்க / மூட - சற்றே மறைத்த மாதிரி - ஒரு கைப்பிடியை வைத்திருப்பார்கள் - அதைத் திருகினால் குடத்திலிருந்து தண்ணீர் ஊற்றும். முதன் முதலாக அங்கே வருபவர்களுக்கு எப்படி தண்ணீரைத் திறப்பது என ஊகிப்பது சிரமம் தான்.

சாப்பிட்டு முடித்து சகா கை கழுவச் செல்கையில் நடந்தது அந்த விபரீதம் (சாப்பிடும் முன் அவன் கை கழுவியதாக சரித்திரமில்லையென்பதால் அப்போது தப்பித்து விட்டான்). சகா எச்சில் கையுடன் கொஞ்ச நேரம் நின்று அந்த சிற்பத்தையே வெறித்தான். பின் என்ன நினைத்தானோ, அந்த சிற்பத்தின் மார்புகளைப் பிடித்துத் திருக முயற்சித்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த‌ ஹோட்டல் சிப்பந்திகள் சிரிப்பை அடக்கிக் கொண்டே வந்து எப்படித் திறதெப்பதெனச் சொல்லிக் கொடுத்தனர். எனக்கென்னவோ அந்த சிற்பத்தை வடிவமைத்தவன் இந்நிகழ்வைப் பார்த்திருந்தால், அதன் டிசைனை மாற்றி, நம் சகா முயற்சித்த பாணியில் செய்திருப்பான் எனத் தோன்றுகிறது.

**********************

ஒரு பெண்ணின் ஸ்தங்களை சகா வர்ணிப்பதை நீங்கள் கேட்க வேண்டுமே. கம்பனும், காளிதாசனும் தோற்றுப் போவார்கள். அட‌டா! அதுவன்றோ இலக்கியம். One should really look into the superlatives he used to narrate - that's persuading. அப்படி ஒரு முறை அவன் பயன்படுத்திய உவமை - Pimple.

Comments

அதரங்கள் என்பது மார்புகள் அல்ல; உதடுகள் என்பதை நினைவுறுத்திய நண்பர் கார்த்திக்கு நன்றி.
//எண்பதுகளின் இளையராஜாவை வழிய விட்டிருப்பார்கள்//
நாச்சியார் உணவகத்திற்கு மீண்டும் சென்றால் ராஜாவின் இரண்டாயிரத்து பாடல்களையும் வழிய விட சொல்லுங்கள்.உதாரணதிற்கு
1.கேட்கலியோ கேட்கலியோ
2.குண்டுமல்லி குண்டுமல்லி
3.ஏதோ ஒன்ன நெனச்சிருந்தேன்
4.ஒளியிலே தெரிவது
5.அந்த நாள் ஞாபகம்
6.கைவீசி நடந்திடும்
7.கண்ணை படித்தேன்
8.கருகமணி கருகமணி
9.மனசோரம் நிலா வந்து
10.பூவக்கேளு காத்தக்கேளு
பாடல்களும்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்