சகா : சில குறிப்புகள் - 6

இன்று Love Aaaj Kal வெளியாகியிருக்கிறது. மனைவி ஊரில் இல்லாததால் இரவுக்காட்சிக்கு Fame Lido போகலாமென்று சகாவிடம் கேட்டேன். எனக்கு இந்தி தெரியாது - contextual understanding தான்; சகா என்னை விட மோசம். அப்படியிருந்தும் நான் அப்படத்திற்கு போக நினைத்தது சகாவின் ஹாட் ஃபேவரைட்டான தீபிகா படுகோனிற்காக. ஆனால் சகா மறுத்து விட்டான். தீபிகாவின் எந்த படத்தையும் அவன் இதுவரை பார்த்ததில்லையாம்; இனி மேலும் பார்க்கப் போவதில்லையாம். அதற்கு அவன் சொன்ன காரணம் தான் விசித்திரமானது. "She is stunningly erotic such that முழுப்படமும் பார்த்தா நான் அவ அழகுல மயங்கிடுவேனோன்னு பயமா இருக்கு".

**********************

பெண்கள் யாரும் சகாவை சகோதரன் என்று அழைக்கும் திராணியற்றிருந்தனர் என்பதை முன்பே பார்த்தோம். ஆனால் "Exception that proves the rule" என்பது போல் வந்து சேர்ந்தாள் மீரா. ஆம். சகா கல்லூரி முடித்தவுடன் வேலைக்கு சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தின் ட்ரெய்னிங் தினங்களின் போது அறிமுகமான மீரா அவனை பாசத்துடன் (?!) "அண்ணா" என்றழைக்கத் துவங்கினாள். ஆச்சரியமாய் சகாவும் இதை ஆட்சேபிக்கவில்லை. பின்னர் காலம் சுழன்ற போழ்து மீராவின் "அண்ணன்" மெல்ல மெல்ல தேய்ந்து இப்போது short-n-sweet ஆக‌ "சக்" மட்டும் தான் (சகா என்பதன் சுருக்கமாம். ஆங்கிலத்தில் எழுதுகையில் suck என்று விவகாரமாய் transliterate செய்வாள்). "ஆமாம். மீரா என்னோட கூடப்பிறந்தவ தான்" - 'கூட' என்பதை அழுத்துவான்.

**********************

பெயர் சகா என்ற போதிலும் அவன் என்றுமே எனக்கு ஒரு சினேகிதனாகத் தோன்றியதே இல்லை. ஒழுக்கம் என்கிற போலித்தனத்தை மட்டும் கொஞ்சம் மறந்து விட்டுப் பார்த்தால் அவன் எப்போதும் எனக்கு ஒரு குருவின் ஸ்தானத்திலேயே தோற்றமளித்திருக்கிறான். வாழ்க்கைக்கான அவனது சூத்திரம் மிக எளிமையானது. "பிடிச்சிருக்கு, செய்யறேன்" அவ்வளவு தான். அவனது சுதந்திரம் என்பது அவனே உருவாக்கிக் கொண்டது. அதனால் அதன் எல்லைகளையும் அவனே வரையறுத்துக் கொண்டான். எல்லையே இல்லை என்பது தான் அவனது எல்லை. அவன் இன்னது செய்ய மாட்டான் என்று ஏதேனுமொரு விஷயம் இருக்கிறதா என்பதே எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம் - அவன் மட்டும் பெண்ணாய்ப் பிறந்திருந்தால் உலகையே ஆண்டிருப்பான்.

**********************

ஒரு வழியாக சகா தன் மின்‍-அஞ்சல் முகவரியை வாசகர்களுக்குத் தர சம்மதித்து விட்டான். ஆனால் அவனது பிரத்யேக முகவரியைத் தராமல் நமது writercsk.com டொமைனிலேயே ஒரு மின்-அஞ்சல் உருவாக்கித் தருமாறு கேட்டிருக்கிறான். நல்லது. செய்துவிடலாம். இனி சகாவிடம் குசலம் விசாரிக்க விரும்புபவர்கள் அவ‌னையே நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். நாளொரு முறை, மாதமொரு முறை அல்லது வருடமொரு முறை என்று சகா தனக்கு தோன்றும் போது படிப்பான்; தேவைப்பட்டால் பதிலும் எழுதுவான். பெண்கள் எழுதினால் அல்லது பெண்கள் பெயரில் எழுதினால் ஒரு வேளை பதில் வர‌க்கூடும் (இது ஒரு clue மட்டுமே. மற்றபடி அதற்கெல்லாம் அடியேன் பொறுப்பல்ல). வரக்கூடிய திட்டுக்களுக்குப் பயந்து தான் மின்‍-அஞ்சல் முகவரியைத் தர யோசிக்கிறானோ என்று தான் ஆரம்பத்தில் நினைத்தேன். இல்லையாம். "I hate to spam my mailbox with more and more vaginas" என்றான்.

**********************

சகாவின் மின்-அஞ்சல் முகவரி: saka@writercsk.com

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்