ராஜேஷ்குமார் style

Karthikeyan G என்பவரின் பின்னூட்டமும் அதற்கான எனது பதிலும்.

############

Karthikeyan G has left a new comment on your post "தமிழ்நாடு : சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள்":

அட நீங்களும் இளைஞர் தானா, உங்கள் சில இடுகைகள் பல வருடங்களுக்கு முந்தைய ராஜேஷ்குமார் styleல் இருப்பதால் உங்களை கிழவனார் என நினைத்து விட்டேன்.. :-)

############

Karthikeyan G,

என்னைக் கிழவன் என்று நினைப்பதில் / அழைப்பதில் பிரச்சனையே இல்லை. ஆனால் ராஜேஷ்குமாருடன் ஒப்பிடுவதில் மாற்றுக்கருத்து இருக்கிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒன்று நீங்கள் ராஜேஷ்குமாரை இதுவரை படித்ததில்லை; அல்லது என்னை இதுவரை படித்ததில்லை. தமிழில் எழுதுகிறோம் என்பதைத் தவிர வேறு ஒற்றுமை எதுவும் எங்களுக்குள் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை (மற்றொரு ஒற்றுமை ஊர் - இருவரும் கோயமுத்தூர்காரர்கள் - ஆனால் அது இங்கு அவசியமில்லை).

எனது ஆதர்சமான‌ சுஜாதாவுடன் என் எழுத்தை ஒப்பிட்டாலே எனக்கு கோபம் வரும். அப்படியிருக்க, போகிற போக்கில் நீங்கள் ராஜேஷ்குமாருடன் என்னை ஒப்பீடு செய்திருப்பது கிட்டதட்ட ஒரு கொலைக்கு சமானம். ஆம். “தினமலரில் கிசு கிசு எழுதும் நபருக்கெல்லாம் இலக்கியக் கருத்தரங்கில் என்ன வேலை?” என்று ஜெயமோகன் கேட்டதை, “இந்த வாக்கியத்தை நான் ஒரு கொலை என்று சொல்வேன்” என்று சாரு நிவேதிதா குறிப்பிட்டதைப் போல் இதுவும் நிச்சயம் எனக்குள்ளிருக்கும் எழுத்தாளனை கொலை செய்யும் முயற்சி தான்.

மற்றொரு விஷயம். உண்மையில் ராஜேஷ்குமாரைப் படித்துத் தான் நான் எழுதவே தொடங்கினேன். அதை வெளியே சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அப்போது எனக்கு அறிமுகமாயிருந்ததெல்லாம் ராஜேஷ்குமார், சுபா, ஆர்னிகா நாசர், சுப்ரஜா, கோட்டயம் புஷ்பநாத், எண்டமூரி வீரேந்திரநாத், பி.டி.சாமி, பாக்கியம் ராமசாமி, ரமணிச்சந்திரன், தேவிபாலா மற்றும் இன்னபிற குமுதம், வாரமலர், மாலைமதி எழுத்தாளர்கள். அவர்களில் அன்றைக்கு ராஜேஷ்குமார் தான் எனக்குப் பிடித்திருந்தார்.

அது ஒரு விதமான calf-love. ராஜேஷ்குமாரின் பாதிப்பில், அதே பாணியில், அதே மாதிரி ஒரு க்ரைம் நாவல் எழுதினேன் - 'ப்ரியமுடன் கொலைகாரன்' என்ற பெயரில் (கவனியுங்கள்! நாவலின் பெயரில் கூட ராஜேஷ்குமாரின் பாதிப்பு). கவிதைகளைத் தாண்டிய என் முதல் படைப்பு அது. அப்போது எனக்கு பதினான்கு வயது. அதற்குப் பிறகு தான் சுஜாதா முதல் சுந்தர ராமசாமி வரை அறிமுகமானார்கள். அப்படி மெல்ல மெல்ல‌த்தான் இப்போதிருக்கும் நிலையை என் எழுத்து அடைந்திருக்கிறது. அந்த வளர்ச்சி எனக்கு பிடித்துமிருக்கிறது.

இப்போது என் மனதில் அவருக்குரிய இடம், என்னுடைய ஆரம்ப கட்ட ஏகலைவன் என்கிற வகையில் மட்டுமே; ஒரு எழுத்தாளனாக அல்ல‌. அந்த ஆரம்ப கணங்களைத் த‌விர எனக்கும் ராஜேஷ்குமாருக்கும் எந்த ஒற்றுமையும் இருப்பதாக எனக்குத் தோன்ற‌வில்லை. எழுத்துக்கான‌ அவருடைய நோக்கமும் என்னுடைய‌தும் வேறு வேறு என்பது தான் அடிப்படை வித்தியாசம். பிறகு நடை, வடிவம், உள்ளடக்கம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். தவிர அவரை மாதிரியே எழுத நிறையப்பேர் இருக்கிறார்கள். நான் தேவையில்லை.

'இல்லை. நீங்கள் எழுதுவது ராஜேஷ்குமார் மாதிரி தான் இருக்கிறது' என்று உறுதியாக சொல்ல‌த் தோன்றினால், அப்படி உங்களை நினைக்க வைத்த என்னுடைய ஒரே ஒரு பதிவையாவது உதாரணம் தந்து, அது எவ்வாறு ராஜேஷ்குமாருடையதைப் போல் இருக்கிறது என விளக்கமும் தாருங்கள். 'அட! சும்மனாச்சி விளையாட்டுக்குச் சொன்னேன்' என்றால் இதற்கு நீங்கள் பதில் அளிக்க‌ சிரமப்படத் தேவையில்லை. உங்கள் கூற்றை நீங்கள் வாபஸ் பெற்றுக் கொண்டு அதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்.

Now, the ball is in your court.

-CSK

Comments

மதன் said…
தல.. (நீங்க இப்படி யாரையும் கூப்ட மாட்டீங்க.. எனக்கென்னமோ இதான் தல சட்னு வருது!) பிரச்சினைகள் வேணாங்க.. இதுக்கு ஆகற நேரத்துக்கு வேற எதாவது நல்ல பதிவெழுதலாமே.. அரதப் பழசான ஒரு தமிழ்ப்பட டையலாக் மாதிரி ‘நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க..’ ஃப்ரீயா விட்ரலாங்க..
Karthikeyan G said…
சரவணகார்த்திகேயன், ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களின் உள் அட்டைகளை படிப்பதை போன்ற உணர்வைத் தருகிறது உங்கள் இடுகைகள். காரணம், வேறென்ன அலுக்க வைக்கும் சுயபுராணம்தான். Example (As u requested) :: இந்த இடுகையே.

//நீங்கள் ராஜேஷ்குமாருடன் என்னை ஒப்பீடு செய்திருப்பது கிட்டதட்ட ஒரு கொலைக்கு சமானம்.//

சுஜாதாவை அவ்வளவு உயர்வாகவும் ராஜேஷ்குமாரை அவ்வளவு மோசமாகவும் நீங்கள் நினைக்கும் காரணம் புரியவில்லை. Do u have any reason to justify?

சாரு மிக சிறந்த படைப்புகளை கொடுத்த பிறகே இவ்வாறெல்லாம் கூறினார். hmm..இருந்தாலும் உங்கள் confidence ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

//'அட! சும்மனாச்சி விளையாட்டுக்குச் சொன்னேன்' என்றால் இதற்கு நீங்கள் பதில் அளிக்க‌ சிரமப்படத் தேவையில்லை. உங்கள் கூற்றை நீங்கள் வாபஸ் பெற்றுக் கொண்டு அதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்.

Now, the ball is in your court.
//

இது ரெம்ப சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு...
(ஏய், நீங்க Bowling போடாம போனா மேட்ச்ல நாங்கதான் வின்னு, ஆமா)
Anonymous said…
http://vedikai.blogspot.com/2009/07/blog-post.html
Ashok D said…
//உங்கள் கூற்றை நீங்கள் வாபஸ் பெற்றுக் கொண்டு அதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்.

Now, the ball is in your court.//
:(

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்