தமிழ்நாடு : சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள்

  1. Indian Institute of Technology, Chennai
  2. College of Engineering - Guindy, Chennai
  3. National Institute of Technology, Trichy
  4. P.S.G. College of Technology, Coimbatore
  5. Madras Institute of Technology, Chennai
  6. Coimbatore Institute of Technology, Coimbatore
  7. Government College of Engineering, Coimbatore
  8. Thiagarajar College of Engineering, Madurai
  9. Alagappa College of Technology, Chennai
  10. S.S.N. College of Engineering, Chennai
பின்குறிப்பு:
சொந்த தேவைக்காகவும், கொஞ்சம் ஆர்வத்தினாலும் கிட்டதட்ட கடந்த‌ பத்து வருடங்களாக இந்திய - குறிப்பாய் த‌மிழக - பொறியியல் கல்லூரிகளை நுட்பமாகக் கவனித்து வருகிறேன். மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை கல்லூரிகளிலும் படித்தவர்களில் தலா ஒருவருடனாவது எனக்கு நேரடியாய்த் தொடர்புண்டு. வேலைவாய்ப்பு, கல்வித்தரம் மற்றும் சமூக மதிப்பு ஆகியவை சார்ந்து என் அனுமானத்தின் அடிப்படையில் இவ்வரிசையை அமைத்துள்ளேன். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தொடங்கியுள்ள இந்நேரத்தில், முதல் நான்கு நாட்களுக்கான கலந்தாய்விலாவது மாணவர்களுக்கு இவ்வரிசை (சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி. தவிர) பயன்படக்கூடும். கவனிக்க வேண்டிய விஷயம், இப்படியலிலிருக்கும் ஒரே தனியார் கல்லூரி பத்தாவதாய் இருக்கும் சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மட்டும். மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தனியார் சுயநிதி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பல்கிப் பெருகிய இன்றைய தேதியிலும், எட்டு வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரியில் சேர்கையில் என்ன வரிசை வைத்திருந்தேனோ அதில் பெரிய மாற்றம் ஏதுமில்லை!

Comments

Karthikeyan G said…
அட நீங்களும் இளைஞர் தானா, உங்கள் சில இடுகைகள் பல வருடங்களுக்கு முந்தைய ராஜேஷ்குமார் styleல் இருப்பதால் உங்களை கிழவனார் என நினைத்து விட்டேன்.. :-)
@ Karthikeyan G
replied u at
http://www.writercsk.com/2009/07/style.html
tshankar89 said…
சரவணகார்த்திகேயன் சி. said...
"இப்படியலிலிருக்கும் ஒரே தனியார் கல்லூரி பத்தாவதாய் இருக்கும் சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மட்டும்"

PSG Tech, Coimbatore Inst. of Technollgy also run by private institutions....

Please inform about the ranking of "Amrita University's School of Engineering" in Coimbatore.

Regards,
Sankara N.Thiagarajan
The Netherlands
முகமது பாருக் said…
என்னங்க நம்ம ஊரு (காரைக்குடி) அழகப்பா தொழிநுட்ப பொறியியல் கல்லுரியை சென்னை என்று எழுதியுள்ளீர்கள், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது (ha ha ha ha)..

தயவு செய்து திருத்தி விடுங்கள் தவறான தகவல் கொடுத்தது போல ஆகிடும் தோழா ...

தோழமையுடன்

முகமது பாருக்
@tshankar89
PSG Tech & CIT, though run by private folks, the seats of these colleges are coming under DOTE-1 list as they are government aided colleges. Also they are autonomous by nature. That's why they cannot be simply termed as "private".
And regarding Amrita, I heard that as they become deemed, their quality is not as before. But still, it is one of the best engineering colleges in cbe next only to PSG, CIT and GCT.
Hope that clarifies.
@முகமது பாருக்
இல்லை. நீங்கள் தான் தவறாக சொல்கிறீர்கள்.
Alagappa College of Technology என்பது கிண்டியில் சென்னை ஐ.ஐ.டி. எதிரே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள கல்லூரியே (அதே வளாகத்தினுள் உள்ள College of Engineering - Guindyயில் தான் நான் பொறியியல் படித்தேன்). காரைக்குடியிலுள்ள கல்லூரியின் பெயர் Alagappa Chettiar College of Engineering & Technology ('தவமாய்த் த‌வமிருந்து' படத்தில் சேரனும் பத்மப்ரியாவும் படிப்பது இங்கே தான்). இரண்டையுமே துவக்கியவர் காரைக்குடி அழகப்ப செட்டியார் தான்.
ஏற்கனவே சொல்லியிருப்பது போல் இத்துறையை நான் கடந்த பத்து ஆண்டுகளாக கவனித்து வருபவன் என்பதால் இது போன்ற சில்லறை தவறுகள் எல்லாம் இழைக்க மாட்டேன் எனத் தாராளமாக நம்பலாம். இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றால் அண்ணா பல்கலைக்கழகத்தின் வலைதளமான www.annauniv.eduல் சரி பார்த்துக்கொள்ளலாம்.
ACT, Chennai - http://www.annauniv.edu/act/
ACCET, Karaikudi - http://www.accet.net/
Unknown said…
Dear sir,
Plz give some details abt AMIE and procedure to apply it.
It will be more useful to persons like me who completed diploma and had intrest to continue ENGG.
I mean like part time engg college.
Due to our family situation v cannot go to regular colleges.
So only i am asking details abt AMIE or any other colleges offering B.E in week end..
So if u know abt tat kindly write a blog.
Thanks in advance.
Take care.
முகமது பருக் said…
தவறுதானுங்க. நம்ம ஊருனு ஒரு கொஞ்சம் குதுகலம் ஆகிட்டேன்.. என்னோட தகவலுக்கு வருந்துகிறேன்..

உங்கள் தகவலுக்கும் தவறை சுட்டியதிற்கும் மிக்க நன்றி

தோழமையுடன்

முகமது பருக்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்