கமலின் பதினேழு

"The Tamil films below are not to be compared with the above list of international films unless you like self flagellation. These films dared to go against the pundits opinion of how films should be. They fought the market to create new trends. Some were made in a shoestring budget and some at great financial risk. Mumbai Express was made with a 3CCD camera and Pushpak with Rs.30 lakhs"

ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இண்டர்னேஷனல் சார்பில் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆங்கில வழியில் நடத்தப்பட்ட ச‌ர்வதேச திரைக்கதை பயிற்சிப் பட்டறையின் official siteல் மேற்கண்ட குறிப்புடன் கமல்ஹாசன் தந்திருக்கும் பதினேழு தமிழ் படங்களின் பட்டியல் இது:
  • என்ன தான் முடிவு - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
  • சாது மிரண்டால் - திருமலை / மகாலிங்கம்
  • காவல் தெய்வம் - ஜெயகாந்தன் / கே.விஜயன்
  • யாருக்காக அழுதான் - ஜெயகாந்தன்
  • அவர்கள் - கே. பாலசந்தர்
  • மன்மத லீலை - கே. பாலசந்தர்
  • அவள் அப்படித்தான் - அனந்து / ருத்ரையா
  • நாயகன் - மணிரத்னம்
  • கல்லுக்குள் ஈரம் - செல்வராஜ் / பாரதிராஜா
  • தேவர் மகன் - கமல்ஹாசன் / பரதன்
  • மகாநதி - கமல்ஹாசன் / சந்தான பாரதி
  • அலைபாயுதே - மணிரத்னம்
  • ஹே ராம் - கமல்ஹாசன்
  • அன்பே சிவம் - கமல்ஹாசன் / சி. சுந்தர்
  • மும்பை எக்ஸ்பிரஸ் - கமல்ஹாசன் / சிங்கிதம்
  • விருமாண்டி - கமல்ஹாசன்
  • பருத்தி வீரன் - அமீர்
இனி கேள்விகள்:
  1. இவற்றில் ஆறு படங்கள் நான் பார்த்ததில்லை (என்ன தான் முடிவு, சாது மிரண்டால், காவல் தெய்வம், யாருக்காக அழுதான், மன்மத லீலை, அவள் அப்படித்தான்). அவை பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது.
  2. இவை தவிர‌ பிற படங்கள் கணிசமான அளவில் இப்பட்டியலில் இணையும் தகுதியுடன் கமலின் தேர்வுக்கு நியாயம் சேர்ப்பவையே. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க‌ வேண்டிய படங்கள் என்பேன்.
  3. இந்தப் பதினேழு படங்களில் ஒன்பதில் - அதாவது பாதிக்கு மேல் - கமல் ஒரு நடிகராகவோ, திரைக்கதையாசிரியராகவோ, இயக்குநராகவோ பங்காற்றியிருக்கிறார். அதனால் இப்பட்டியல் biased ஆக தோன்றுகிறது.
  4. எல்லாப் பேட்டிகளிலும் கலைஞரின் திரைக்கதை கைப்பிரதிகளைப் பார்த்து வளர்ந்தவன் என்று சொல்லும் கமலின் பட்டியலில் கலைஞரின் ஒரு படம் கூட இல்லாமல் போனது ஆச்சரியமில்லை.
  5. மும்பை எக்ஸ்பிரஸ் இப்பட்டியலுக்கிழைக்கப்பட்ட‌ ஓர் அநியாயம் (என் நண்பனொருவன் இப்படத்தை பதினைந்து முறைக்கு மேல் பார்த்து விட்டு அற்புதமென்கிறான். எனக்கு அவ்வளவு மன தைரியமில்லை).
  6. அன்பே சிவமும் அப்படியே (நிறையப்பேர் அதன் concept நன்றாயிருந்தது என்கிறார்கள். மன்னிக்கவும். நான் திரையரங்கு செல்வது பாடம் கற்க அல்ல. அதற்கு புத்தகங்களும் அனுபவங்களும் இருக்கின்றன).
  7. பட்டியலின் ஆச்சரியம் அலைபாயுதே. அது எனக்கும் மிகப்பிடித்த படம். அவரது படைப்புகளிலிருந்து நோக்குங்கால் கமலுக்குள் இது போன்றதொரு மென்ரசனைக் கலைஞன் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
  8. மிகுந்த சந்தோஷத்திற்குரிய விஷயம் பருத்திவீரன் படத்தை சேர்த்திருப்பது. அமீர் போன்ற இளம் தலைமுறை படைப்பளிகளுக்கு கமல் தரும் அங்கீகாரத்தின் குறியீடாகவே இதைப் பார்க்கிறேன்.

Comments

Keerthi said…
I differ with u on Anbe Sivam...I wud hav gladly included Kurudhi Punal instead of that poor Mumbai Express...Infact I enjoyed it better than Khakka Khakka
@Keerthi,
I replied u at http://www.writercsk.com/2009/06/blog-post_13.html
Anonymous said…
kandhasamy padathai.sirantha padam.endru kuriya mudal alum kadasi alum......nenkal dan endru ninaikren.....!!! matrum unkal sirantha 10 thirai padankal patiyalil mozhi.illamal ponadil irunthey...unkalain taste purikiradhu!!!...melum.vtv..sirantha padam illai dan.anal...adil ulla..songs lam...nandraga ulladhu.entray.slven....melum.v kuwater cutting.vida vum nalla padam..angadi theru enpadhai.oppu kondu dan aga vendum.....!! mudalaligal varakadhin adhikathai...thol urithu katiya thirai padam adu..!!!! idu ella vatrikum melaga...iyakunar gailn.thirai padathai...tharam parthu piripadhu.nandraga illai endray thondru girathu!!!!!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்