கடிதம்: from mptyvessel

எனது பி.ஜே.பி.யும் நானும் பதிவுக்கு mptyvessel என்பவர் (என்னங்க பேர் இது!) எழுதிய பின்னூட்டதுக்கு எனது பதில் (வழக்கம் போல்) தனிப்பதிவாக.

############

mptyvessel
said...

Nice post. I have always been proud that I am born in Tamilnadu, where these religious fanaticism have not been allowed as much it is allowed in other states. Thanks to Periyar and his followers(correct me if I am wrong) for bringing in awareness among people...
However, the question now is....other parties have been favoring Muslim (through Haj Subsidy and many others)or other minorities just for votes. How do we go about stopping them?
Its that we are caught between two extremes...One side, hindutva is dominating and on the other extreme favoritism...
Let me know your thoughts on this...

Thursday, April 9, 2009 7:44:00 PM IST

############

mptyvessel,

அதுவும் தவறு தான். என்னைப் பொறுத்தவரை சாதி மற்றும் மத ரீதியான சலுகைகள் போன்றவற்றை அறவே தவிர்த்து, பொருளாதார ரீதியான ஒதுக்கீடுகள் மட்டும் செய்யப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்தே கிடையாது. இட ஒதுக்கீடு இல்லாத இந்தியா சாத்தியமே இல்லை. அப்படி இல்லாமல் செய்வது ஒலிம்பிக் சாம்பியனை கால் ஊனமுற்றவனுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளச் செய்வது போன்றது. இங்கு ஊனம் வறுமை.

ஆனால் இதை செயல்படுத்துவதில் மிகப்பல நடைமுறைச்சிக்கல்கள் வரும் (மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் சொந்த நிலம் வைத்துள்ள ஒரு விவசாயி தன் வருமானம் வருடத்திற்கே ஐம்பதாயிரம் தான் என எளிதில் ஸ்தாபிக்க முடியும். விவசாயிகள் கடனை ப.சிதம்பரம் ரத்து செய்ததை நான் எதிர்ப்பது இந்த காரணத்துக்காகத் தான்). தவிர, அது போன்றதொரு ஒதுக்கீட்டை கொண்டுவரும் துணிவு இங்கு எந்தக் கட்சிக்கும் இல்லை.

அப்படிக் கொண்டு வந்தால் தேசம் முழுக்க போராட்டங்கள் வெடிக்கும். உடனடியாக அல்லது அடுத்த தேர்தலில் அதைக் கொண்டு வரும் கட்சி ஆட்சியிழக்கும். பின் அது மீண்டும் ஆட்சிக்கு வருவதே சிரமம். இதையெல்லாம் உத்தேசித்து தான் நம் அரசியல்வதிகளும் ஆட்சியாளர்களும் இதைச் செய்யாமல் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்குத் தரப்படும் தனிச்சலுகைகளும் இதில் தான் அடக்கம்.

அப்புறம் பி.ஜே.பி. தமிழகத்தில் காலூன்ற முடியாததைப் பற்றி..

நீங்கள் சொல்வது மாதிரி பெரியார் ஒரு முக்கிய காரணம். மற்றொரு முக்கிய காரணம் மக்களிடையே திமு.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கு. இது போன்ற பிராந்தியக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும், காங்கிரஸ் சவலைப்பிள்ளையாக இருக்கும் எந்த மாநிலத்திலும் பி.ஜே.பி. போன்ற தேசியக்கட்சிகள் தலையெடுக்கவே முடியவில்லை (உதாரணம்: ஆந்திர பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர்) .

மற்றபடி, காங்கிரஸ் சுமாராய் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் பி.ஜே.பி. மெல்ல வளர்ந்து அதற்கு இணையாகவோ அல்லது ஒரு படி மேலாகவோ பலம் கொண்டிருக்கிறது (கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மட்டும் விதிவிலக்கு; காரணம் கம்யூனிசம்). பி.ஜே.பி.க்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கும் ஆளுமையாக (குஜராத்தில் மோடி மாதிரி) ஒருவர் கூட தமிழகத்தில் இல்லை என்பது மற்றொரு காரணம் ('சோ'வை எல்லாம் கணக்கு சேர்க்காதீர்கள்).

"bringing in awareness among people" என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி நண்பரே. ஆராய்ச்சிக்கட்டுரை எழுதுவதாலும், மேடையில் முழங்குவதாலும் மக்களை சென்ற‌டைந்து விட்டதாக அர்த்தமில்லை. பெரியார் படைப்புகள் நாட்டுடைமை ஆவதைக் கூட அவரின் பிரதம‌ சிஷ்யர்கள் தடுத்து வைத்திருக்கிறார்கள். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் - பெரியாரின் கருத்துக்கள் மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது என உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா?

வெங்காயம்.

-CSK

Comments

Pradeep said…
mptyvessel என்பது ஜஸ்ட் wordpress ID. என் பெயர் ப்ரதீப். சரி,விஷயத்துக்கு வருவோம்....
பொருளாதார ரீதியான ஒதுக்கீடுகள்:
என்னுடய விருப்பமும் இது தான். ஆனால் அதை செய்வதற்கு subsidy சரியான வழி ஆகாது.
subsidy கொடுத்தால் கொடுத்திக்கிட்டே தான் இருக்கணும்.(Something fundamentally wrong) So, எகநாமிக் ஸிஸ்டம்மில் மாற்றம் வேண்டும்.
அதற்கு தான் free market principlesஐ நான் ஆதரிக்கிறேன்.
அரசியல்வதிகளும் ஆட்சியாளர்களும்:
நமது அரசியல்வாதிகள் மாற வேண்டும் என்றால் மக்களிடத்தில் மாற்றம் வேண்டும். அதற்கு நல்ல கல்வி தான் ஒரே வழி.. I wish the political system is made more transparent and accountable. நான் codingல் ஒரு சிறு பிழை செய்தால் கூட team leader பிடித்து விடுவார். ஆனால் இந்த அரசியல் வாதிகள் பல கோடிகளை சுருட்டி விட்டு சுலபமாக எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்...
தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக இருப்பதற்கு பல காரணங்கள்...
I would like you to read this
http://vikramvgarg.wordpress.com/2008/08/09/can-uttar-pradesh-catch-up-with-tamil-nadu/

இப்பவும் சொல்கிறேன் பெரியார் ஒரு முக்கிய காரணம்.
PS தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்