இருக்கை யுத்தம்

பெங்களூரிலும் தமிழ்நாடு போல் பேருந்தில் பெண்களுக்கென தனி இட ஒதுக்கீடு உண்டு - அதுவும் கிட்டதட்ட ஐம்பது சதவிகிதம். ஒரு முறை நான் ஏறிய பேருந்தில் பொது இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்ததால், காலியாயிருந்த சில‌ 'மகளிர் மட்டும்' இருக்கைள் ஒன்றினில் அமர்ந்தேன்.

அடுத்த நிறுத்தத்தில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் அடித்து பிடித்து பதட்டத்துடன் ஏறியது. குழந்தைகள் காலியாயிருந்த வேறு சில பெண்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அந்தக் கணவன் என்னிடம் வந்து உடைந்த ஆங்கிலத்தில் "This is ladies seat" என்றான்.

நான் எழுந்து கொள்ள, கணவன் மனைவி இருவரும் அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர். என்னை எழுப்பி விட்டு இவ‌ன் உட்கார்ந்து விட்டானே, ஒரு வேளை வேறு பிரச்சனைகள் ஏதுமிருக்குமோ என சந்தேகத்துடன் குழந்தைகள் முகங்களைப் பார்க்க அவன் சாயலில் தான் இருந்தன.

நான் கோபத்துடன் அந்த இருக்கைக்கருகிலேயே நின்று கொண்டேன். அதை அவனும் உணர்ந்திருக்க வேண்டும் - அடுத்த நிறுத்தத்தில் யாரோ ஒரு பெண் இறங்கி விட, காலியான அந்த இருக்கையை எனக்கு காட்டி அமரும் படி சொல்லி புன்னகைத்தான். நான் சாந்தமான முகத்துடன் சொன்னேன் -

"No Thanks. Some other IDIOT will come and make me stand in the next bus stop."

Comments

இது தான் ரிவிட்டோ ?????

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்