வியர்க்கும் உதடுகள்

ஒன்றரை வருடம் முன்பு, குங்குமம் வாசகர் கவிதைத் திருவிழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் முத்திரைக்கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது 'ஒருத்தி நினைக்கையிலே' என்கிற கவிதையில் "பயத்தில் பிரசவிக்கும் உதட்டு வியர்வை" என்று ஒரு வரி வரும்.

இத்தனை நாட்கள் கழித்து, இன்று ஆர்குட்டில் ஸ்வாதி என்பவர் (சுப்ரமணியபுரம் படம் நினைவுக்கு வந்து, நிஜப்பெயரா என்று கேட்டால், Yes என்று சொல்லி ஸ்மைலியில் கண்ணடிக்கிறார்) அந்தக்கவிதைக்கு ஓர் எதிர்வினையாற்றி இருக்கிறார் - மிகச் சுவாரசியமான எதிர்வினை.


இது நாள் வரை இந்த விஷயம் எனக்குத் தெரியாது; கவிதையைப் படித்த வேறு யாரும் இதை கண்டுபிடிக்கவில்லை (அல்லது என்னிடம் சொல்லவில்லை). சட்டென்று நாக்கால் ஒரு முறை உதட்டை - எனது உதட்டை - ஈரப்படுத்திப் பார்த்தேன்; ம்ஹூம் - வியர்த்த மாதிரி தெரியவில்லை.

ஆனாலும் சந்தேக புத்தியுடன் வலையில் தேடியதில் Chummy S. Sinnatamby மற்றும் Raymond Jack Last என்கிற உடலியலாளர்கள் தங்களின் Last's Anatomy: Regional and Applied புத்தகத்தின் பதினொன்றாவது பதிப்பின் இரண்டாம் பக்கத்தில், பூச்சி பூச்சியான எழுத்துக்களில் தெளிவாக சொல்லிவிட்டனர்.


இரண்டு கைகளையும் தூக்கி விடுகிறேன்; ஒப்புக்கொள்கிறேன். பிழை தான்; முழுக்க முழுக்க என்னுடைய பிழை தான் - பொருட்பிழை. ஆனாலும் திருத்துவதாய் இல்லை; அப்படியே இருக்கட்டும். நான் சொல்ல வேண்டிய பதிலை அடைப்புக்குறிக்குள் ஸ்வாதியே சொல்லி விட்டார். வேலை மிச்சம்.

ஸ்வாதிக்கு நன்றி!

Comments

Anonymous said…
last anatomy ellam padikireenga... kalakunga boss...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்