பி.ஜே.பி.யும் நானும்
முன்குறிப்பு:
நீங்கள் ஓர் இந்து மத வெறியராக இருந்தால் தயவு செய்து இப்பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டாம்; நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை; நிஜமாகவே சொல்கிறேன். மீறிப்படிப்பது நம் இருவருக்குமே பயனளிக்கப் போவதில்லை என்பதால்.
நான் ஏன் பி.ஜே.பி.யை எதிர்க்கிறேன்?
பி.ஜே.பி. என்றழைக்கப்படும் பாரதிய ஜனதா பார்ட்டியின் நிறம் காவி. அவர்களிடம் ஒற்றை வார்த்தையில் அக்கட்சியின் கொள்கையை சொல்லச் சொன்னால் "இந்துத்துவம்" என்று பெருமை பொங்கச் சொல்வார்கள். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரையிலான அதன் உறுப்பினர்களில் கணிசமானோர் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்.
1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட லால் கிருஷ்ண அத்வானி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர். எல்லாவற்றுக்கும் மேலாக, பி.ஜே.பி.யின் 2009 பாரளுமன்றத் தேர்தல் அறிக்கை மறைமுகமாக அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டித் தருவதாகச் சொல்கிறது. இவையெல்லாம் சில உதாரணங்கள்.
"மக்களின் பாவங்களினால் சாமி குத்தம் ஆகி விட்டது, அதனால் தான் சரியான மழை இல்லை" என்று சொல்லி கடவுளை சாந்தப்படுத்த மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டில் - அதாவது பொது மக்களின் வரிப்பணத்தில் - ரூபாய் 130 கோடி கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஒதுக்கியவர் பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
ஒரு மாநிலத்தில் ஆட்சியைக் கொடுத்ததற்கே, நியூட்டனின் மூன்றாம் விதியை துணைக்கு அழைத்துக் கொண்டு முஸ்லிம்களைக் கொன்று குவித்தவர் நரேந்திர மோடி. அவர் திறமையான ஆட்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஒரு நல்ல தலைவனுக்குத் தேவை நிர்வாகத்திறன் மட்டுமல்ல; பாரபட்சமற்ற நீதி வழங்கும் மனசாட்சியும் கூட. அதில் தான் பிரச்சனை.
கடந்த மாதம், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது பற்றி சர்ச்சை எழுந்த போது, நரேந்திர மோடி மட்டும் போட்டிகளை எந்தப் பிரச்சனையுமின்றி பாதுகாப்புடன் நடத்தித் தர குஜராத் மாநிலம் தயாராக இருப்பதாக அறிவித்தார். இது கூட முஸ்லிம்களுக்கு எதிரான பி.ஜே.பி.யின் அறைகூவலாகவே எனக்குப் படுகிறது.
"If anyone raises a finger towards Hindus or if someone thinks that Hindus are weak and leaderless, if someone thinks that these leaders lick our boots for votes, if anyone raises a finger towards Hindus, then I swear on the Gita that I will cut that hand" என்று பொதுக்கூட்ட மேடையில் முழங்குகிறார் பி.ஜே.பி. கட்சியின் இளம் உறுப்பினரான வருண் காந்தி. என்ன திமிர் பாருங்கள்.
இதற்காக பேச்சுக்காக சிறையிலிருக்கும் வருண் காந்தியை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்வது துரதிர்ஷ்டவசமாது என்று புலம்புகிறார் கட்சியின் தலைவரான வெங்கையா நாயுடு. இது கட்சியின் தலைவரே அப்பேச்சை வெளிப்படையாக நியாயப்படுத்துவதாக இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளாக இம்மண்னில் குடிமக்களாக வாழ்ந்து வரும் ஒரு மதத்தினரைப் பற்றி இப்படிப் பேசுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? இதற்கும் இலங்கையில் சிங்களர்கள் தமிழர்களை கொன்று குவிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அவர்கள் இன்று அங்கே செய்கிறார்கள்; இவர்கள் நாளை இங்கே செய்வார்கள். அவ்வளவு தான்.
பதினைந்து கோடி இந்திய முஸ்லிம்களின் ரத்தம் ஆறாய் ஓடுவதைக் காணும் மனவலிமை உண்டா உங்களுக்கு? யோசித்துக் கொள்ளுங்கள்.
பின்குறிப்பு:
நீங்கள் ஓர் இந்து மத வெறியராக இருந்தும் நான் சொன்னதைக் கேட்காமல் இது வரை வந்து விட்டீர்கள் என்றால், நீங்கள் மனிதனென்ற ஞாபகம் எங்கோ ஓரமாய் உங்களிடம் மிச்சமிருக்கிறது என அர்த்தம். இந்தத் தேர்தலிலாவது அதைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.

Comments
உதாரணமாக :
டேய் நீ அந்த மதக்காரன் அதனால் சாப்பிடக்கூடாது. - நேரடியான தாக்குதல்
சாப்பிடு சாப்பிடு நன்றாக சாப்பிடு என்று சொல்லி விட்டு முன்பே சோற்றில் விஷத்தைக் கலந்து வைப்பவர்கள் - மறைமுக தாக்குதல்.
மிரட்டல் விடும் தீவிரவாதிகள் அவர்களிடம் இருந்து வந்ததாலா ?
தீவிரவாதத்தை நான் எதிர் கொள்வேன் என்று ஒருவர் சொன்னால் அது எப்படி முஸ்லீம்களுக்கு எதிராகும் ?
உங்கள் பின்னூட்டதிற்கான பதிலை (வழக்கம் போல்) தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்.
http://www.writercsk.com/2009/04/blog-post_05.html
அவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்பதால் தான் மோடி இவ்வளவு ஆவேசப்படுகிறார். இந்து தீவிரவாதிகள் என்றால் வாயைப் பொத்திக்கொண்டு உட்கார்ந்திருப்பார். நான் ஜிகாத்தையோ முஸ்லிம் தீவிரவாதத்தையோ ஆதரிக்கவில்லை. ஆனால் தீவிரவாதம் என்கிற விஷயத்தை எதிர்க்க மதத்தை அடிப்படையாகக் கொள்வதும் ஒரு வகையில் தீவிரவாதம் தான். அதைத் தான் அப்படிக் குறிப்பிட்டேன்.
இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை கொல்லவில்லை.. ரானுமம் புலிகளை கொல்கிறது.. எனவே அழிவின் விழிம்பில் இருக்கும் புலிகள் தங்கள் ஆதரவு சக்திகளூடாக தமிழர்கள் கொல்லப்படுவதாக சித்தரிக்கிறார்கள்.
அதே வேளை புலிகள் இந்துத்துவா வெறி கொண்டு யாழ்ப்பாண மண்ணில் இருந்து முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்திருக்கிறார்கள். இதெல்லாம் இந்திய முஸ்லிம்களுக்கு தெரியாது.. (அமீருக்கு கூட தெரியாதது தான் சோகம்..)
பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள்..
இதனால் தான் பி ஜே பி க்கு புலிகளோடு பாசம் பொங்கி வருகிறது..
இன்று வரை தமிழர்கள் இந்த சுத்திகரிப்பு பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பின்வரும் பதிவையும் அதற்கு wantha பின்னூட்டங்களையும் பார்க்கவும்..
http://nhisham.blogspot.com/2008/10/18.html
I think you have to check with doctor immly.
//"If anyone raises a finger towards Hindus or if someone thinks that Hindus are weak and leaderless, if someone thinks that these leaders lick our boots for votes, if anyone raises a finger towards Hindus, then I swear on the Gita that I will cut that hand"//
What was wrong in this statement???
உங்களைப் போன்ற ஆட்களுக்குத் தான் நான் முன்குறிப்பு எழுதியதே. அதையும் மீறிப் படித்து விட்டு ஏன் என் உயிரை வாங்குகிறீர்கள்? சரி பரவாயில்லை - இம்முறை மன்னிக்கிறேன். இதோ என் எதிர்வினை:
//What was wrong in this statement???//
Ask this question to the following 3 persons:
1. Election Commission of India which expressed it's discomfort to BJP for allowing Varun as the MP candidate because of the mentioned hatred speech.
2. Chief Judicial Magistrate of Pilibhit constituency who sent Varun to judicial custody for that speech.
3. Varun Gandhi who surrendered in the court and claimed anticipatory bail in lieu of his speech.
You may get an answer.
//think you have to check with doctor immly.//
Thanks a lot for your concern.
Can you please suggest me a good doctor for this?
Even the one whom you are currently under the treatment for the same issue is also completely OK for me.
Let me know the details soon.
U MYT VE READ A HOGGING OF A TEEN GAL IN SWAT(pAKISTAN)JUST COZ SHE WAS HAVING AN AFFAIR...
EVRY RELGN SUPPRESSES GALS IN PARTICULAR WHICH I HATE 2 DA CORE...
I DON TALK WITH A SECULARISTIC MASK...WHICH DA POLITICIANS THNK OPPOSING HINDU RELGN ND NOT OPPOSING DA MALE CHAUVINISAM IN TOHR RELIGION...
EVRY RELIGON IS A CURSE...
In that statement, he never said anything abt. MUSLIMS, but people like you doing the remaing.
//உங்களைப் போன்ற ஆட்களுக்குத் தான் நான் முன்குறிப்பு எழுதியதே. அதையும் மீறிப் படித்து விட்டு ஏன் என் உயிரை வாங்குகிறீர்கள்? சரி பரவாயில்லை - இம்முறை மன்னிக்கிறேன். இதோ என் எதிர்வினை// If ur thinking like this don't write anything.
I Don't want to waste my valuable time with u.
DON'T read mine if you feel it's waste of time.
Will you tell Kamalhaasan to stop acting in movies if you don't like his movies?
Even if you say like that, will he make attention to that stupid request?
So, you don't have any rights to tell me to stop writing..
I can understand ur frustration..
But Don't be childish..
I am pity on u..
இங்கே ஆள வந்த முஸ்லிம்களும் கிருத்துவர்களும் நம்மளை மத மாற்றம் செய்தார்கள்
இந்தியா சுகந்திரம் அடைத்து விட்டது இப்பொழுது இந்துகள் ஆள்கிறார்கள் ஏன் என்றல் அவர்கள் தான் இப்பொழுது இந்தியாவில் பெரும்பான்மையன்வர்கள்
ஆனால் இப்பொழுதும் மத மாற்றம் நடைபெறகிறது இதை தடுக்காவிட்டால் இது நடை பெற்றால் இந்தியாவில் மருபடிஉம் ஒரு பாக பிரிவினை நடை பெரும்
உலகில் எந்த நாட்டிலும் எந்த இரு மதமாவது சமமாக ஆச்சி செய்தது கிடையாது
இந்தியாவில் யாருக்கு சம உரிமை இல்லை
ஏன் இவர்கள் மதம் மாற்றம் செய்கிறார்கள்
காசுக்காகவா? மத வெறிக்க்காகவா?
இல்லை இந்துகள் _____________________ என்பதனாலா இதை தான் வருன் உணர்ச்சி
மிகுத்யில் இந்துகளுக்கே உண்டான பண்பாடற்ற வார்த்தையில் சொன்னார்
இத்து தவறா?
:))
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா ...
நான் முன்பு கூறியுள்ளது போலவே மத சார்பின்மை என்கிற முகமூடி இருந்தால் தான் ஒட்டு வாங்க முடியும்...அனால் இங்கு மத சார்பின்மை என்பது நீங்கள் கூறியது போலதான்..இந்து மதத்தை இழிவு படுத்தி மற்ற மதங்களை உயர்த்தி பிடிப்பது...அதற்காக நான் ஒரு இந்து வெறியன் அல்ல..நான் எந்த மதத்தையும் சார எனக்கு விருப்பமில்லை..
ya ur article is gud...but u r unaware of da poilitcal drama..
here..drama is staged with da help of BJP(vie Varun)...nd Mayawati(via NSA)...
that is slapping NSA on Varun has brought him unexpected fans(!!??)nd he has gained popularity..
nd Maya wants that only...coz she wants 2 defeat her arch rival Congress which has made da Taj hotel case against Maya a strong one...so Maya wants 2 use BJP 2 betray Congress...even if BJP cumes 2 power(:O...!!!!)dats difficult but if dat happens all cases agnst her ll be withdrawn ...sio shez doing lyk dis...
However, the question now is....other parties have been favoring Muslim (through Haj Subsidy and many others)or other minorities just for votes. How do we go about stopping them?
Its that we are caught between two extremes...One side, hindutva is dominating and on the other extreme favoritism...
Let me know your thoughts on this...
உங்கள் பின்னூட்டதிற்கான பதிலை தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்.
http://www.writercsk.com/2009/04/from-mptyvessel.html