கடிதம்: வேர்ல்ட் கிளாஸ் எழுத்தாளர்

சாருவுக்கு நன்றி பதிவுக்கு பாலகிருஷ்ணா இட்ட பின்னூட்டத்திற்கு ப‌திலெழுத ஆரம்பித்து, அது சற்றே நீண்டு விட்டதாலும், அதன் உள்ளடக்கம் என் நிலைபாட்டை தெளிவாக்குவதாய்த் தோன்றியதாலும், அதை தனியொரு பதிவாகவே போட்டு விடத் தீர்மானித்து விட்டேன்.

############

பாலகிருஷ்ணா said...

சரவணன் தங்களின் நன்றியுணர்ச்சியை நான் பாரட்ட விரும்பு அதே வேளையில் தங்களின் தளத்தில் இருக்கும் கருத்துச் செறிவு வாய்ந்த கட்டுரைகளுக்கு இணையாகுமா சாருவின் தளம் என்ற ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்.

வல்லரசு வேறு சாருவை வேர்ல்ட் கிளாஸ் எழுத்தாளர் என்று சொல்கிறார்.

இது எப்படி இருக்கிறது என்று தெரியுமா ? குருடர்கள் யானையைத் தடவி கருத்துச் சொல்லுவது போல இருக்கிறது. கடுமையான விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வேறு வழி இல்லை.

தற்போதைய பிளாக்கர்ஸ் எழுதும் அனுபவக் கதைகளை விட சாருவின் புனைவுக் கதைகள் எந்த வகையில் சிறந்தது என்று சொல்ல முடியுமா?

இலக்கியமென்பது அந்த அனுபவக்கதைகள் மட்டும் தான் என்றால் ஒத்துகொள்கிறேன்.

சாருவின் சில விமர்சனக் கட்டுரைகள் அவரின் பார்வையில் இருந்து எழுதப்பட்டது என்பது தான் சரியானதாகுமே தவிர அவை அனைத்தும் உண்மையான ஒன்றாக இருக்கும் என்று எப்படிக் கருத முடியும். அவரது அனுபவ எழுத்துக்களிடையே கவனித்துப் பார்த்தோமானால் அவரின் கருத்துக்களை அவரே மறுதலித்த இடங்கள் அனேகம் உண்டு. ஆக அவரின் கட்டுரைகள் சந்தர்ப்பவாதமுடையவை என்று எடுத்துக் கொள்ளலாம்.

சாருவை தமிழ் உலகின் மிகச்சிறந்த எழுத்தாளர் என்று எந்தக் காரணத்தை வைத்து ஏற்றுக் கொள்ள இயலுமென்று அவரின் வாசகர்கள் எழுதினால் பரவாயில்லை.

Thursday, April 2, 2009 9:25:00 AM IST

############

பாலகிருஷ்ணா,

நான் சாருவை வேர்ல்ட் கிளாஸ் எழுத்தாளராகவெல்லாம் சொல்லவில்லை. என்னால் அப்படிச் சொல்லவும் முடியாது - காரணம் நான் அந்த அளவுக்கு உலக இலக்கியங்களுடன் பரிச்சயம் கொண்டவனில்லை. அதனால் அப்படிச் சொல்பவர்களையெல்லாம் நான் ஓர் ஆச்சரியத்துடனே பார்க்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை சாரு எனக்குப் பிடித்த சில எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தில் அவர் ஒரு தவிர்க்கவியலாத படைப்பாளுமை என்றே தோன்றுகிறது. எனக்கு முக்கியமாகப்படுபவை அவரது ராசலீலா என்கிற நாவலும், கோணல் பக்கங்கள் தொகுப்புக்களும் தான்.

வெறும் அனுபவங்கள் இலக்கியமாகா. அவ‌ற்றைச் சொல்லும் விதத்தில் தான், அதன் கலைச்செறிவில் தான் இலக்கியம் சூல் கொள்கிறது. அந்த வகையில் சாருவின் அனுபவக்கதைகள் மற்றும் அனுபவம் போன்ற புனைவுகளில் கணிசமானவை இலக்கிய அந்தஸ்தைப்பெறுவதாக நினைக்கிறேன்.

தற்போதைய பிளாக்கர்ஸுடன் சாருவை ஒப்பிடுவது மகா கொடுமையானது. பதிவர்களில் சிலர் (உதாரணம்: R.P.ராஜநாயகம், மாதவராஜ், சுரேஷ் கண்ணன்) எழுத்தாளர்களை மிஞ்சி அற்புதமாக எழுதுகிறார்கள் என ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பிற 99% பதிவர்கள் எழுதுவதெல்லாம் வெறும் குப்பை.

இந்த ஒப்பீட்டை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.

மற்றுமொரு முக்கிய விஷயம் - இளம் எழுத்தாளர்களின் நடையில் புகுந்திருக்கும் அவரின் பாதிப்பு. கொஞ்ச காலம் முன்பு புதிதாய் எழுத ஆரம்பிப்பவர்கள் சுஜாதாவின் நடையைப் பிரதியெடுக்க முயல்வார்கள். இப்போது வலையில் எழுதுபவர்கள் சாருவைப் பிரதியெடுக்க முயல்கிறார்கள்.

ஒருவருடைய எழுத்து பிடிக்காமல் எப்படி இது நிகழும்? இங்கு நான் சுஜாதா மற்றும் சாருவின் எழுத்துக்களை இணை வைப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சமகால இளம் எழுத்தாளர்களிடம் அவர்கள் செலுத்தும் செல்வாக்கை மட்டுமே ஒப்பிடுகிறேன்.

அப்படி நிகழ்வது சரியா தவறா என்பது வேறு விஷயம்.

"சாருவின் சில விமர்சனக் கட்டுரைகள் அவரின் பார்வையில் இருந்து எழுதப்பட்டது" என்பதால் தான் அதன் uniqueness காரண‌மாக, சிலவற்றுடன் வேறுபட்ட போதிலும் அதை மதிக்கிறேன். தவிர முழு உண்மை முழு பொய் என்பதெல்லாம் கிடையாது; எல்லாமே அவரவ‌ர் பார்வை பொறுத்தது.

"அவரின் கருத்துக்களை அவரே மறுதலித்த இடங்கள்" உண்டு. அதை சந்தர்ப்பவாதம் என‌க்கொள்ளாமல், "மாற்றம் மானுடத் தத்துவம்" என்பதைப் புரிந்து, தன்னை மாற்றிக்கொண்டதும், அதை ஒப்புக்கொண்டதுமான படைப்பாளியின் நேர்மையாகவே எடுத்துக்கொள்கிறேன்.

உங்கள் கடைசிப் பாராவுக்கு என்னிடம் பதிலில்லை.

-CSK

Comments

சரவணன் தாங்கள் என் கடிதத்தை வெளியிட மாட்டீர்கள் என்ற தவறான எண்ணம் கொண்டிருந்தேன். உங்களின் தைரியம் பிடித்திருக்கிறது. தேவையற்ற சில சர்ச்சைகளை தவிர்த்து இருக்கலாமென்பது என் எண்ணம். இருப்பினும் பரவாயில்லை.

சாருவின் நடையினை பிளாக்கர்ஸ் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான். இதனை சிம்புவின் கிராஃப் ஸ்டைலை விடலைப் பையன்கள் தொடர்வது போல எடுத்துக் கொள்ளலாம். மேலும் முப்பது வருட எழுத்து அனுபவம் சாருக்கு இருப்பதால் நடை துள்ளலாக வருவதில் வியப்பேதும் இல்லை.

சாருவின் எழுத்துக்கள் இலக்கியமென்றால் பிளாக்கர்ஸின் அனுபவக் கதைகள் உலகின் மிகச் சிறந்த இலக்கிய தரம் வாய்ந்தவை தான் என்பது எனது அசைக்க இயலாத நம்பிக்கை.
Ashok D said…
To Balakrishna

சிம்பும் சாருவும் – What a comparison?

சரக்கடிக்க கிளம்பற்தையும், முக்கி கக்குஸ் போறதையும் கூட இலக்கியமாக்கும் வல்லமை உடையவர் சாரு. அவருடைய serious கட்டுரைகள் அற்புதமானவை. (Kasmir issue, Latin America writers, like that, that is big list)

//Balakrish:முப்பது வருட எழுத்து அனுபவம் சாருக்கு இருப்பதால் நடை துள்ளலாக வருவதில் வியப்பேதும் இல்லை.//
நடை துள்ளல் – No questions


வக்கரம், அவலம், வன்முறை இவ்வற்றால் பீடித்துருக்கும் மனித குலம். அதை அதனுடே பயனப்பட்டு களைவது, கலைஆக்குவது. இவையே சாருவின் தளம்.



//Balakrish: சாருவின் எழுத்துக்கள் இலக்கியமென்றால் பிளாக்கர்ஸின் அனுபவக் கதைகள் உலகின் மிகச் சிறந்த இலக்கிய தரம் வாய்ந்தவை தான் என்பது எனது அசைக்க இயலாத நம்பிக்கை//
எற்கனவே பதில் சொல்லியாற்று.
//CSK:பிளாக்கர்ஸுடன் சாருவை ஒப்பிடுவது மகா கொடுமையானது. பதிவர்களில் சிலர் (உதாரணம்: R.P.ராஜநாயகம்)(மத்த ரெண்டு பேர படிச்ச தில்லை) எழுத்தாளர்களை மிஞ்சி அற்புதமாக எழுதுகிறார்கள் என ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பிற 99% பதிவர்கள் எழுதுவதெல்லாம் வெறும் குப்பை//

Dear Bala Read more… especially Charu… U get all answers through his writtings.

If you think we all are Gandhi's then don’t go to Charu. We drink milk and peanuts. Don’t sight girls in the road. We leave good life like a noble man.

That’s for now.
அசோக், பதிலிட்டமைக்கு நன்றி. சாருவின் எழுத்துக்களை படித்த பிறகு தான் பதிவிடுகிறேன். அனைத்துப் புத்தகங்களையும் படித்து விட்டுத்தானிந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். சைட் அடிப்பது, கடலை சாப்பிடுவது, பால் குடிப்பதெல்லாம் காந்தியவாதிகளுக்கு உரித்தானது என்று எந்த ஆதாரத்தை வைத்துச் சொல்கின்றீர்கள்.

அழகியலைச் சார்ந்த வாழ்க்கை மனிதர்களுடையது என்று நம்புகிறவன் நான். அழகியலைச் சார்ந்தது வாழ்க்கை. உங்கள் சாருவும் அவ்வாறே இருப்பார் என்று நம்புகிறேன். பேண்ட பின்பு நோன்டி முகரும் தன்மைதான் இலக்கியமென்றால் ஒத்துக் கொள்கிறேன். சாருவுமிலக்கியம் படைக்கிறார் என்று.

//வக்கரம், அவலம், வன்முறை இவற்றால் பீடித்திருக்கும் மனித குலம். அதை அதனுடே பயணப்பட்டு களைவது, கலைஆக்குவது. இவையே சாருவின் தளம். //

ஆகா உண்மை.. உண்மை.. இத்தனை நாள் அறிந்து கொள்ளாமல் இருந்த சாரு எழுத்தின் அர்தத்தினை புரியவைத்து விட்டீர்கள் நன்றி.

ஹா....ஹா............
எனது பின்னூட்டத்தை ஆபாச பின்னூட்டம் என்று சாரு எழுதியிருக்கும் அதே நேரத்தில் தாங்களும் ஆமோதித்து எழுதியிருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

வேர்ல்ட் கிளாஸ் எழுத்தாளர் என்று எழுதியவருக்கு தகுந்த பதில் சாருவின் தளத்திலேயே இருக்கிறது. கட்டுரையின் பெயர் : மீண்டும் உலக நாயகன்.

ஆபாசம் : விமர்சித்து எழுதினால் எழுத்தாளர்கள் சொல்வது.

சாருவின் ஜோக் : இனிமேல் பொய் சொல்ல பழக வேண்டும்.

உலகம் குழப்பங்களால் நிறைந்த குழப்பவாதிகளால் சூழப்பட்டது.
தமிழரசன் said…
//பேண்ட பின்பு நோன்டி முகரும் தன்மைதான் இலக்கியமென்றால் ஒத்துக் கொள்கிறேன். சாருவுமிலக்கியம் படைக்கிறார் என்று//

நெற்றி அடி!
ப்ரியதர்ஷிணி said…
//கொஞ்ச காலம் முன்பு புதிதாய் எழுத ஆரம்பிப்பவர்கள் சுஜாதாவின் நடையைப் பிரதியெடுக்க முயல்வார்கள். இப்போது வலையில் எழுதுபவர்கள் சாருவைப் பிரதியெடுக்க முயல்கிறார்கள்.//

சுஜாதாவைப் பற்றி எழுதிய அதே வரியில் சா.நி.யை எழுதி, சுஜாதாவை insult செய்ய வேண்டாம். (அது இருக்கட்டும், “சாநி” மிகச் சரியான பெயர்; இன்னொரு பதிவில் இதைக் குறிப்பிட்டிருந்த அலெக்ஸுக்கு நன்றி!)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்