கூகுளும் சில அறிவுஜீவிகளும்
ஒவ்வொரு வருடமும் உலக அளவில், "முட்டாள்கள் தினம்" என்று சிறப்பித்துக் கொண்டாடப்படும் (?!) ஏப்ரல் ஒன்று அன்று, தமது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட applicationகளில் ஏதாவது விளையாட்டான, சுவாரசியமான ஏமாற்று வேலை செய்கிறார்கள் google நிறுவனத்தார்.
கிட்டதட்ட பத்து வருடங்களாக வையக விரிவு வலையுடன் பரிச்சயமுள்ள எனக்கு, இந்த விஷயம் எப்படி தெரியாமல் போனது எனத் தெரியவில்லை (போன வருடம் புதிதாய்த் திருமணம் ஆகியிருந்ததால் ஏப்ரல் ஒன்று relativeஆக பெரிதாய்த் தெரியவில்லை என்பதை மட்டும் மன்னிக்கலாம்).
Google MentalPlex (மனதில் நினைப்பதை தேடித்தருவது), Luna/X (நிலவில் அமைக்கப்படும் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு), Google Gulp (இதைக்குடிப்பவரின் புத்திசாலித்தனம் அதிகரித்து தேடுதல் எளிமையாகும்), Google Romance (ஏற்ற ஜோடியை தேடிப்பிடித்து அனுப்புவது), Gmail Paper (இலவச காகித அச்சு சேவை), Google TiSP (இணையத் தொடர்புக்கு கழிப்பறைக் குழாய்களை பயன்படுத்துவது), gDay (புதிய தளம் துவக்கப்படும் 24 மணி நேரத்திற்கு முன்பு அதைத் தேடித் தருவது), Google Manpower Search (மனிதர்களைக் கொண்டு நேரடியான தேடுதல் சேவை) என்று கடந்த வருடங்களில் இஷ்டத்துக்கு ஜல்லியடித்திருக்கிறார்கள்.
இந்த முறை google வந்திருப்பது Cognitive Autoheuristic Distributed-Intelligence Entity என்ற CADIEயுடன். It's an "artificial intelligence" tasked-array system. அதாவது கிட்டதட்ட ஒரு ரோபோ; bloggerல் பதிவெழுதத் தெரிந்த, ஜப்பானிய சென்ரியூ எழுதத்தெரிந்த ஒரு புத்திசாலி ரோபோ (ஷங்கர் கவனிக்கவும்!).
"CADIE யார்?" என்று அதே கேட்டால், மிக அலுப்புடன் ஆனால் ஸ்டைலாக "is the entity" என்கிறது (என்னவொரு அழகான பதில்!). மேலும் விசாரித்தால், "im a girl, 2 minutes old, just hanging out in da C.A." என்கிறது. கணிப்பொறி, வானவில், மட்டக்குதிரை, பாண்டா கரடி, மனிதர்கள் ஆகியவற்றைப் பிடிக்குமென்கிறது.
அதையும் நம்பிக் கொண்டு உலகம் முழுக்க கோடிக்கணக்கில் இதற்கான வலைப்பக்கங்களை மேய்ந்து தள்ளியிருக்கிறார்கள் (அடியேன் உட்பட). Alexa Hot URLsல் இன்று முதல் இரண்டு இடங்களுமே இப்பக்கங்களுக்குத் தான். CADIEயின் வலைப்பூவில் அதை கிட்டதட்ட 5000 பேர் பின்தொடர்கிறார்கள்.
ஐந்து வருடம் முன்பு இதே நாளில் Gmail என்ற தனது 1GB இலவச மின்-அஞ்சல் சேவையை துவக்குவதாக google அறிவித்த போது, இது ஏப்ரல் ஒன்றிற்கான புதிய hoax என்று தான் - வழக்கமாய் ஏமாறுபவர்கள் தவிர - நிறையப்பேர் நினைத்திருக்கிறார்கள். பின்னர் நடந்தது சரித்திரம்.
முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த ஷேக்ஸ்பியரின் மேற்கோள் உண்மை தான்.

Comments