இசையும் அழகும்

M TV, V Channel, Zoom TV, 9x M, Enter 10, Music India, B4U Music, ETC Music, ZEE Music, Sahara One போன்ற இந்தி பாடல்களை தொடர்ச்சியாய் ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல்களை நான் அதிதீவிரமாய் பார்க்க ஆரம்பித்திருந்த காலம் அது. அப்போது தான் அப்பாவியான என் மீது அபாண்டமான அந்த‌க் குற்றத்தினை சுமத்தினாள் என் மனைவி.

நிரபராதிகள் குற்றவாளிகளாய் பார்க்கப்படுவது கோவலன் காலத்துப் பழைய சித்தாந்தம். இதுவும் அது போலத்தான். குற்றச்சாட்டின் மூலக்கதை மிக எளிமையானது. கீழ் வரும் பாடல்களை அதன் இசை மிகப்பிடித்திருந்ததன் காரணமாக அவற்றைத் திரும்பத் திரும்பப் பார்த்ததனால் (அல்லது கேட்டதனால்) வந்த வினை அது.
  • Chakna Chakna (Namastey London)
  • Uncha Lamba (Welcome)
  • Soni De Nakhre (Partner)
  • Zara Zara Touch Me (Race)
  • You’re My Love (Partner)
  • Just Chill (Maine Pyaar Kyun Kiya)
  • Jee Karda (Singh Is Kinng)
அரை குறை ஆடையுடன் கேத்ரினா கைஃப் வலம் வரும் எந்த பாடலைப் போட்டாலும் வாயை பிளந்து கொண்டு பார்க்க உட்கார்ந்து விடுகிறேன் என்பதே அவளின் தார்மீகக்குற்றச்சாட்டு. அப்போது தான் கவனித்தேன், மேற்கண்ட பாடல்கள் அனைத்திலும் கேத்ரினா கைஃப் வருவதை - அதுவும் அவள் சொல்வது போலவே அரை குறையாய்.

எனக்கே கொஞ்ச‌ம் சந்தேகம் வந்து விட்டது. உடனடியாய் சுதாரித்துக்கொண்டு சமாளித்தேன். எனக்கு அந்தப் பாடல்களில் பிரதான‌ம் இசையேயன்றி கவர்ச்சியில்லை என்பது எனது வாதம். திட்டமிடாத விபத்து போல் மிக நுட்பமான ஓர் எதேச்சை சம்பவமே இது என்று புரியவைத்து ஒரு வழியாய் அவளைச் சமாதானம் செய்தேன்.

இப்போது அவளுக்கு அந்த இசை பழகிவிட்டது. கேத்ரினாவும்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்