பெங்களூர் = பெண்+கள்+ஊர்

தலைப்பிலிருப்பது போல் பெங்களூருக்கு பகுபத உறுப்பிலக்கணம் எழுதியவன் நிச்சய‌ம் மிகுந்த ரசனைக்காரனாக இருக்க வேண்டும். அதுவும் கள்ளுண்டு முயங்கும் பெண்களைப் பார்க்க வேண்டுமே - பெங்களூர் குளிருக்கு இதமாய் ("இவளுங்களை எல்லாம் வரிசையாய் நிறுத்தி வெச்சு ஒவ்வொருத்தரா ...க்கனும் மச்சி" என்பான் என் நண்பன். எனக்கு அதெல்லாம் ஒத்து வராது - இவ்விஷயத்தில் நான் சுத்த சைவம்).

பெங்களூர் வந்த புதிது. புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவைக் கொண்டாடும் முகமாய் நண்பர்களோடு பிரிகேட் ரோடு போயிருந்தேன். மிகுந்த கூட்டம் - ஜனம் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. எல்லோரிடமும் செயற்கையான ஒரு உற்சாகம் கொப்பளித்தது - ஏதோ செலுத்தப்பட்டவர்கள் போலிருந்தார்கள். பொதுவாய் மிகப்பல கணங்களில் நாங்கள் நடக்கவே இல்லை - கூட்டமே எங்களை நகர்த்திச்சென்றது.

ஜோடியாய் உரசியபடி, எங்களுக்கு பக்கவாட்டில் நடந்து கொண்டிருந்த அந்த இளைஞனையும் இளைஞியையும் அப்போது தான் கவனித்தேன். அவ‌ளுக்கு எத்தனை வயதென‌ துல்லியமாய்ச் சொல்ல முடியவில்லை - முந்தைய நிமிஷம் தான் ருதுவானவள் மாதிரி இருந்தாள். மிகச்சன்னமான மார்புகளும் அதற்கு சற்றும் பொருத்தமில்லாத பருத்த பிருஷ்டங்களும் அவளை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தின.

ஊதினால் உதிர்ந்து விடக்கூடிய அபாயத்துடனிருந்த‌ ஒரு டாப்ஸை மேலேயும், நீங்களோ நானோ உள்ளாடையாய் அணியவே கூச்சப்படும் ஒரு வஸ்துவை கீழேயும் அணிந்திருந்தாள் (ராம்சேனாக்கள் பரவலாகப் பரவாத காலகட்டம் அது). Farrukh Dhondy எழுதி HarperCollins பதிப்பித்த‌ The Bikini Murders நாவலின் அட்டைப்படம் ஞாபகம் வந்தது. அவன்? பொதுவாய் நான் ஆண்களை வர்ணிப்பதில்லை; அல்லது கவனிப்பதில்லை.

அவள் எதிரே வந்த ஆண்களின் ஸ்பரிசத்திலிருந்து மிகத்திறமையாகப் பதுங்கி ஒதுங்கிச் சென்றாள். மீறி இடித்துச்சென்ற ஒருவனை "விலைமகள் மகன்" என நுனிநாக்கு ஆங்கிலத்தில் சப்தமாகத் திட்டினாள். அதற்குள் கூட்டம் சேர ஆரம்பிக்க, நாங்கள் அவர்களிடமிருந்து தூரமாய் வந்திருந்தோம். கருடா மாலில் தொடங்கிய எங்கள் பாத‌யாத்திரை ப்ரிகேட் ரோடு வழியாக‌ எம்.ஜி.ரோடு வந்து சேர ஒரு மணி நேரம் பிடித்தது.

மதுக்கூடமிணைந்த‌ ஒரு சைன சைவ உணவகத்துக்கு நாங்கள் வந்த‌மர்ந்து மெனு பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்த போது அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். அதே ஜோடி. அதே பெண். அதே ஆணாகத் தானிருக்க வேண்டும். காலியாயிருந்த ஒரே மேஜையான எங்களுக்கு அருகில் இருந்த‌தில் வந்து அமர்ந்தார்கள். எங்களைக் கடந்து போகையில் அவளிடமிருந்து Midnight Poisonனின் அழுத்தமான‌ சுகந்தம் வீசியது.

ஆர்டர் செய்த பின் ஒரு மணி நேரம் காத்திருக்கவேண்டும் என்பது சுலபமாய்ப் புரிந்தது. நான் எனது நண்பர்களின் அசட்டு அரட்டைகளிலிருந்து விலகி (அவ்வப்போது "ஆம்", "இல்லை" அல்லது "இருக்கலாம்" மட்டும்) அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். அவள் எனக்கு எதிரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாள் (இங்கு நீங்கள் அவளது ஆடையலங்காரத்தை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்).

பேரர் ஆர்டர் எடுத்தச்சென்ற‌ பின், அவன் நகர்ந்து அவள் அருகே, மிக அருகே, மிக மிக அருகே அமர்ந்து கொண்டான். அவளை விட வடிவான ஒரு கோப்பையில் அவர்களுக்கு மது வந்தது. அவன் புகட்ட‌, அவள் ஆரம்ப‌ மறுப்புடன் உதடு சுழித்துப் பின் மெல்ல‌ உறிஞ்சத்தொடங்கினாள். மதுவும், சில நிமிஷங்களும் கணிசமாய்க் கரைந்திருந்த பொற்கணமொன்றில் அவன் அவள் தோளில் மெதுவாய்க் கை போட்டான்.

சாலையில் இடித்தவனைத் திட்டிய அதே வசையால் அவனையும் திட்டினாள் - இம்முறை செல்லமாய். ஏதோ பாராட்டு மொழி கேட்டது போல் அவன் முகம் நிறைய சிரிப்புடன் தன் முயற்சிகளில் சற்றும் தளராது கருமமே கண்ணாக இருந்தான். அவள் ஆடை மறைத்திருந்த கால்வாசிக்கும் குறைவான பிரதேசங்களில் அவன் கைகள் அலைபாய்ந்து எதையோ நுட்பமாய் ஆனால் பதட்டத்துடன் தேடிக் கொண்டிருந்தன‌.

அவள் அடிக்கடி அவன் கைகளைத் தட்டிவிட்டதில் எந்த‌ எதிர்ப்பும் இருந்ததாகத் தெரியவில்லை. மதுவின் உபயத்தில் அவள் அடிக்கடி அர்த்தமின்றி சிரித்தாள். கண்களில் கொஞ்சம் போதையும் கொஞ்சம் தாபமும் வழிந்தது. அந்த மந்த விளக்கொளியில் ஒரு கிரேக்க தேவதை போல் தெரிந்தாள். வெள்ளைத்தாளோ மடிக்கணிணியோ அப்போது இருந்திருந்தால் எனது ஆகச்சிறந்த கவிதையை அப்போது நான் எழுதியிருக்கக்கூடும்.

அவன் பொதுவிடங்களில் அனுமதிக்கப்பட்ட செய்கைகளுக்கான எல்லைகளைத் தாராளமாய் மீறியிருந்தான். அவள் மெல்ல மெல்ல தன்னை இழந்து கொண்டிருந்தாள். சுற்றிலும் சில அப்பாவி உயிரினங்கள் இருப்பதை அவர்கள் தற்காலிகமாய் மறந்திருந்தார்கள். பேரர்கள் அவர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள்; என் நண்பர்க‌ள் அவர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள்; எல்லோரும் அவர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

அதையுணர்ந்தாளோ என்னவோ சட்டனெ தன்னை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டாள். அவனிடம் மிகக்கடுமையாக ஏதோ சொன்னாள். சிறுநீரை பாதியில் நிறுத்தியவன் போல் அவன் முகத்தை வைத்துக்கொண்டான். அவள் அவனை சமாதானப்படுத்த முயன்றாள். எப்படியும் அன்றிரவு அவளை அவன் புணர்ந்து விடுவான் எனத்தோன்றியது. அதுவே அவளுக்கு முதல் முறையாக இருக்கக்கூடும் என நம்ப விரும்பினேன்.

அப்போது அவள் தன் கால்களை மாற்றிப்போட்டு அமர்ந்தாள். ஒரு கணம் - ஒரே கணம் தான். Basic Instinct திரைப்படத்தில் போலீஸ் விசாரணையின் போது Sharon Stone கால்க‌ள் மாற்றிப்போடும் காட்சி நினைவுக்கு வந்தது. பேச்சின் நடுவே நண்பர்களிலொருவன் அவளைச் சுட்டிக்காட்டி கூப்பிட்டால் சுலபத்தில் கூட வந்துவிடுபவள் மாதிரி இருப்பதாய்க் குறிப்பிட்டான். எங்களுக்கு சூப் வந்தது. அவர்களுக்கு அடுத்த கோப்பை மது.

ஓர் இனம் புரியாத இரக்கம் அவள் பால் ஏற்பட்டது.

Comments

Santhosh said…
Jus got the link while browsing...

பலே... என்னே யோசனை!!!
"பெங்களூர் = பெண்+கள்+ஊர்"

Your writing is good :-)
- Santhosh
Anonymous said…
orae majaavo? ==))
Unknown said…
நன்றாக இருந்தது நடை உங்கள் எழுத்தில்தான்,

அத்தனை சுகம்
Anonymous said…
//ஓர் இனம் புரியாத இரக்கம் அவள் பால் ஏற்பட்டது.//

எனக்கும் ஏற்பட்டது. ஆனால் அவள் மீதல்ல..
Joe said…
//ஓர் இனம் புரியாத இரக்கம் அவள் பால் ஏற்பட்டது.//

இந்த இடத்திலே ஏன் பின்னணியிலே "நம்ப முடியவில்லை... இல்லை"-ன்னு பாட்டு கேக்குது?
Unknown said…
bangalore ku vantha puthithu?
eppo sir bangloreku vanthinka???
reply avasyam....
ippo puthandu pirakkum pothu M.G road pakkam poo mattingala enna>>
:-)
@ ravi

One and half years back, i came to bangalore..
I wont go to MG road anymore on new year eve as I got married last year..
star said…
ungalin indha katturai padithu miga yemaatram adaindhen...kungumathi kavidhai ezhudhina adhey karthik dhan idhaiyum ezhudhinar ena namba mudiya villai...thavaru karu porulil illai..ungal mozhi nadaiyil...
Senthilmohan said…
//*வெள்ளைத்தாளோ மடிக்கணிணியோ அப்போது இருந்திருந்தால் எனது ஆகச்சிறந்த கவிதையை அப்போது நான் எழுதியிருக்கக்கூடும்.**/
Mobile இருந்ததல்லாவா? வடித்திருக்கலாமே குறுஞ்செய்தியாக.
@SenthilMohan K Appaji
உணர்ச்சிகளின் கொந்தளிப்பை சொற்சிக்கனத்தில் அடக்கிப் பார்ப்பது சிரமம் என்பதாலேயே செல்பேசியில் எழுதாமல் விட்டிருக்கலாம் என் இப்போது அனுமானிக்கிறேன்..
Anonymous said…
உங்களை போன்ற அறிவில் தகுதியுள்ளவரையோ (அல்லது) வேறு ஒரு அறிவுள்ள ஆணையோ அவள் தன்னை தொட விடாமல் நீங்கள் சாதாரணமானவன் என நம்பும் ஒருவனை தொடுவதால் வரும் இரக்கம் அது...அவளை தங்களின் metaphorராக உங்களை அறியாது கண்டு அவனை தங்களின் நலனிற்கு எதிரான ஒருவனாய்க் கண்டு அவள் மீது இரக்கம் கொள்வதாய் உங்கள் மீதே இரக்கம் கொண்டீர்கள்......


(நான் பெங்களூருவில் 1 மாத கால என் அண்ணனின் அரையில் பிடிஎம் சாலையில் இருந்தேன்...மடிவாலா ஏறியைக் கண்டேன்...போரமை ரசித்தேன்...ஹோசூருக்கும் கிரிஷ்ணகிரிக்கும் இடையே உள்ள சிங்கார மேட்டை பைக்கில் ஒருமுறை சென்று ரசிக்கவும்...)....d

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்