இரவு அச்சம்

சமீபத்தில் மறைந்த என் தாத்தாவிற்கு பதினாறாம் நாள் திதி கொடுக்க நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். கோயில் வாசலிலிருந்த‌ பிச்சைக்காரர்கள் எங்களைப் பார்த்ததும் பெருங்குரலுலெடுத்து யாசிக்கத் தொடங்கினார்கள்.

நான் பேன்ட் பின்பாக்கெட்டை தடவுவதைப் பார்த்த என் மனைவி, திதி கொடுக்க வரும் போது இது போல் பிச்சை கேட்பவர்களுக்கு எதுவும் போடக்கூடாது என்று சொல்லி என்னைத்தடுத்தாள். நான் யோசித்து, "இதில் கல்யாணியும் சேர்த்தியா?" என்று கேட்க, கடுமையாக என்னை முறைத்தாள் என் தர்மபத்தினி.

கல்யாணி என்பது கோயிலிலிருக்கும் பதின்மூன்று வயதுப் பெண் யானை.

Comments

// "இதில் கல்யாணியும் சேர்த்தியா?" என்று கேட்க, கடுமையாக என்னை முறைத்தாள் என் தர்மபத்தினி.

கல்யாணி என்பது கோயிலிலிருக்கும் பதின்மூன்று வயதுப் பெண் யானை. //

மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்க வேண்டும். அனாவசியமான கேள்விகள் கேட்கப் படாது..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்